கார் ஓட்டப் பழகியபோது விபரீதம்: தெப்பக்குளத்தில் பாய்ந்த கார்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லல் பகுதியில் கார் ஓட்டப் பழகியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் தெப்பக்குளத்திற்குள் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லல் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், நேற்று தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் விட்டுவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கல்லல் தெப்பக்குளம் பகுதியில் கார் வந்தபோது, கணவரிடம் தனக்கு கார் ஓட்டக் கற்றுத்தருமாறு மனைவி கேட்டுள்ளார். இதையடுத்து, மனைவிக்குக் கணவர் கார் ஓட்டப் பயிற்சி அளித்துள்ளார். பயிற்சியின் போது, […]

காரைக்குடியில் ரூ.100 கோடியில் அரசு சட்டக் கல்லூரி- முதல்வர் திறந்து வைத்தார்

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக ஆட்சியிலும், கட்சியிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று மாலை சிவகங்கை மாவட்டத்திற்கு வந்துள்ளார். இன்று காலை அவர் காரைக்குடியில் புதிதாக கட்டப்பட்ட சட்டக்கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரியை திறந்து வைத்தார். சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை […]

காரைக்குடி அருகே பஸ் விபத்து- 11 பேர் பலி

சிவகங்கை : மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்பங்குடி பாலம் அருகே நேற்று நடந்த பயங்கர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடி நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், மதுரை நோக்கி சென்ற மற்றொரு அரசுப் பேருந்தும் அதிவேகத்தில் வந்ததால் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பெண்கள் உட்பட 11 பேர் பலியாகினர், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலர் அபாய நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். […]