ரயில் நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள செஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் இன்று காலை 5.30 மணியளவில், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை செல்வதற்காக தனது மனைவியுடன் காரில் ரயில் நிலையம் வந்தார். சரவணன் என்பவர் காரை ஓட்டி வந்தார். ரயில் நிலையத்தின் முன்புறம் கார் நின்றவுடன் கணேசனும், அவரது மனைவியும் இறங்கி ரயிலில் ஏறச் சென்றனர். டிரைவர் சரவணன் காரில் இருந்த உடைமைகளை எடுத்துச் சென்று ரயிலில் வைத்துவிட்டு, பாக்கியுள்ள பொருட்களை எடுப்பதற்காக காரை நோக்கி […]