தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் -தேசிய கொடியேற்றி கலெக்டர் மரியாதை

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 77வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் மழை பெய்து கொண்டிருந்த பொழுதும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தார். பின்னர் மூவர்ண நிறத்தில் பலூன்களை பறக்க விட்டார். இன்று காலை முதல் மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது. இருப்பினும் திறந்தவெளி […]

77வது குடியரசு தின விழா- திருச்சி ரயில்வே ஸ்டேசனில் சோதனை

திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தியின் மேற்பார்வையில் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி ரயில் நிலைய நடைமேடை, பார்சல் அலுவலகம், ரயில் பயணிகளின் உடைமைகளை இன்று 24.1.2026 RPF காவல் ஆளினார்களோடு இணைந்து திருச்சி ரயில் நிலைய நடைமேடை அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய் பிரிவு காவலர்களோடு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை மெரினாவில் குடியரசு தின விழா முதற்கட்ட ஒத்திகை: முப்படை வீரர்கள் அணிவகுப்பு

நாட்டின் குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவிற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இந்த விழாவிற்கான முதற்கட்ட பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று […]

குடியரசு தின விழா: கூடலூர் தேயிலைத் தோட்டத் தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு

நாட்டின் 77-வது குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளார். இவ்விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மில்லிகுன்னு கிராமத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளி இந்திராணிக்கு, குடியரசு தின விழாவில் பங்கேற்குமாறு ஜனாதிபதி திரவுபதி முர்முவிடமிருந்து அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதம் வந்துள்ளது. நேற்று […]