தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி விளையாட்டு திடலில் விளையாட்டு ஆணையம் கட்ட திட்டமிட்டுள்ள விளையாட்டு அரங்கத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு. கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் ஆறு ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு திடல் உள்ளது.இந்த விளையாட்டு திடலில் விளையாட்டு ஆணையம் புதிதாக விளையாட்டு அரங்கம் கட்ட திட்டமிட்டுள்ளது.அரசினர் கலைக் கல்லூரியில் மாணவர்கள் விளையாடும் வகையில் விளையாட்டு அரங்கம் அமைக்காமல் பொது இடத்தில் கட்ட வேண்டிய விளையாட்டு அரங்கத்தை, விளையாட்டு ஆணையம் அரசு […]

தைப்பூச திருவிழா.. சுவாமிமலை சுவாமிநாத கோவிலில் கொடியேற்றம்

முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலாக விளங்குவது கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயமாகும். இந்த ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று தைப்பூச திருவிழா.எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது .இதனை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.கொடியேற்றத்தை முன்னிட்டு வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்துருளினார். விழாவின் முக்கிய நிகழ்வாக எதிர்வரும் 31 […]

பயங்கர வெடி சத்தம்- குலுங்கிய கும்பகோணம்-பரபரப்பு

கும்பகோணம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் இன்று காலை 11 மணி அளவில் திடீரென வானத்தில் பலத்த வெடி சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக வதந்தி பரவியது. கும்பகோணம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் இந்த சத்தம் உணரப்பட்டது. உடனடியாக மாணவிகள் அனைவரும் வகுப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதி கல்லூரி விடுமுறை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் கல்லூரிக்குச் சென்றனர்.கல்லூரியில் […]

போலீஸ் எனக்கூறி டிரைவர்-கண்டக்டரை தாக்கிய சம்பவம்-பரபரப்பு

கும்பகோணம் மகாமக குளம் அருகே சற்று முன்பு சத்தமாக ஹாரன் அடித்துச் வந்த தனியார் மினி பேருந்தை வழிமறித்து உதவி ஆய்வாளர் தேர்வு எழுதிய இருவர் பயிற்சி பெற்று வரும் உதவி ஆய்வாளர் எனக் கூறி பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரை நடுரோட்டில் தாக்கியதால் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கும்பகோணம் அருகே மகாமக குளம் பகுதியில் சற்று முன்பு சத்தமாக ஹாரன் அடித்துக் கொண்டு வந்த தனியார் மினி பேருந்து ஒன்று வந்துள்ளது அதன் எதிரே […]

திருவையாறு-குடிநீர் கேட்டு சாலை மறியல்- வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே இலுப்பக்கோரை கிராமத்தில் சுமார் 200-குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நான்கு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையால் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த கிராமத்துக்கு செல்லும் குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டதாகவும்.. நான்கு மாதங்களுக்கு மேலாகி இலுப்பக்கோரை கிராமத்திற்கு குடிநீர் வசதி இல்லாமல், குடிநீர் எடுப்பதற்கு நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை குடிநீர் கேட்டு மனுக்கள் […]

கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்தை கண்டித்து அதிமுக போஸ்டர்

கும்பகோணம் என்றாலே மகாமகம் தான் நினைவுக்கு வரும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இப்படி ஆன்மிக தலமாக விளங்கும் கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு ரெயில் போக்குவரத்தை போல் பஸ் போக்குவரத்தும் வசதியாக இருப்பதற்காக கும்பகோணத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் வந்து செல்வதற்கு வசதியாக கும்பகோணம் மாநகரின் மையப்பகுதியில் […]

கும்பகோணம் அருகே இளைஞர் அடித்துக்கொலை… 3 பேர் கைது

கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி கீழ தெருவை சேர்ந்த புகழேந்தி (31) ஆன்லைன் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் வாகனத்தின் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இவர் கும்பகோணம் அருகே மருதநல்லூரில் ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்யும் போது ஒரு பெண்ணிடம் தொடர்பு ஏற்படுகிறது. அவரது தொலைபேசி எண்ணிற்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பிவந்துள்ளார். அந்தப் பெண் தனது கணவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இந்த தகவல் அறிந்ததும் அந்தப் பெண்ணின் கணவர் அந்தப் பெண் தகவல் தெரிவித்தது போல் […]

கும்பகோணத்தில் பணியை புறக்கணித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

தஞ்சாவூர் – கும்பகோணத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம். நீதிமன்றங்களில் உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகளை இ-ஃபைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் இ து நடைமுறைக்கு வந்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் […]

கும்பகோணம்- +1 மாணவர்கள் தாக்கி +2 மாணவன் பலி.. 15 மாணவர்கள் கைது

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரம் அறிஞா் அண்ணா மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 12-ஆம் வகுப்பு மாணவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிய 12-ஆம் வகுப்பு மாணவரை, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் மரக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த +2 மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்து, மாணவரை தாக்கிய 15 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து […]

வீட்டின் சுவர் இடிந்து இளம்பெண் பலி… கும்பகோணத்தில் பரிதாபம்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து கும்பகோணம் மற்றும் இதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று முன் தினம் இரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று இரவு கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி கிராமத்தில் வீட்டின் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வீட்டின் பக்கச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முத்துவேல்,இவரது மனைவி கீதா, இவர்களுக்கு மகள்கள் ரேணுகா மற்றும் கனிமொழி மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இந்த […]

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடிகர் ஜெயராம் சாமிதரிசனம்

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இன்றுகுடும்பத்துடன் சுவாமி தரிசனம். கோவில் யானை மங்கலத்திற்கு பழங்கள் வழங்கினார்.50 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பகோணத்திற்கு வருவது மகிழ்ச்சி என நெகழ்ச்சியுடன் ஜெயராம் தெரிவித்தார். பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இன்று மாலை கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்திற்கு குடும்பத்துடன் வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெயராம்,தனது அம்மாவின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள செருகுடி தான் .சிறு வயதில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில், […]