திருச்சியில் கிரேன் மோதி கூலி தொழிலாளி சாவு
திருச்சி எடமலைப்பட்டி போதுஹெல்த் காலனி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (73 ) இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காந்தி மார்க்கெட் நான்கு ரோடு பகுதியில் கணேசன் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த கிரேன் வாகனம் கணேசன் மீது மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் […]