வாளையார் சோதனையில் சிக்கிய 415 கிராம் தங்க மோதிரங்கள்: கேரள நகைக்கடை உரிமையாளர் கைது
தமிழக – கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில், முறையான ஆவணங்களின்றி கடத்தி வரப்பட்ட சுமார் 415 கிராம் தங்க மோதிரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவரைப் பிடித்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் காவல் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று வாளையார் சோதனைச் சாவடியில் வரும் […]