அஜிதா விவகாரம்.. விஜய் கேட்டிருந்தால் பிரச்னை வந்திருக்காது.. சரத்குமார்
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, “தென்காசி தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? தேர்தல் அறிவிக்கப்பட்டு மாநில நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து எத்தனை இடத்தில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப் போகிறோம் என்று தெரிந்த பின்பு முடிவெடுக்கப்படும். மேலும், நான் நிற்பதை விட […]