எச்சரிக்கை பலகைக்கே சவால்: பெங்களூரு பூங்காவில் தடையை மீறி முத்தம் கொடுத்த தம்பதி

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் புகழ் பெற்ற கப்பன் பார்க் என்ற பெயரில் பூங்கா ஒன்று உள்ளது. காதலர் தின கொண்டாட்டத்தின்போது, நிறைய ஜோடிகள் இந்த பூங்காவுக்கு வந்து சென்றனர். அன்பையும், மகிழ்ச்சியையும் பரிமாறி கொண்டனர்.காதலர்கள் அன்பை பகிர்ந்து கொள்ளும் பகுதியாக இந்த பூங்கா உள்ளது. இருந்தபோதும், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சில விசயங்களை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்த பூங்காவுக்கு சமூக ஊடக பயன்பாட்டாளரான கியாதி ஸ்ரீ என்பவர் கணவர் ஷாபாஸ் அன்சார் என்பவருடன் சென்றுள்ளார். […]