பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மீண்டும் ஐபிஎல்

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை விளையாட அனுமதிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மைதானத்தில் 35,000 பார்வையாளர்கள் வரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் தொடங்குவதற்கு முன்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் அதன் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. பெங்களூருவின் அடையாளமாகத் திகழும் எம். சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை கர்நாடக அரசு தற்போது நீக்கியுள்ளது. இதன் மூலம், வரவிருக்கும் ஐபிஎல் […]