100 நாள் வேலை உறுதி திட்டத்தை சின்னபின்னமாக்கும் ஒன்றிய அரசு…முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது; தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்! 100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்! இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை […]