சொத்து குவிப்பு வழக்கு…அமைச்சர் பெரியகருப்பன் விடுதலை…

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியின்போது அறநிலையத்துறை அமைச்சராகவும், திருப்பத்தூர் எம்.எல்.ஏவாகவும் கே.ஆர்.பெரியகருப்பன், இருந்தார். அப்போது வருவாய்க்கு அதிகமாக ரூ.1.20 கோடி அளவில் சொத்து குவித்ததாக 2012 ஆம் ஆண்டு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் அவரது தாயார் கருப்பாயி அம்மாள், மனைவி பிரேமா, மகன் கோகுலகிருஷ்ணன், மைத்துனர் செந்தில்வேல் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. […]