ஜனநாயகன் பட ரிலீஸில் சிக்கல்: தணிக்கை வழக்கில் ஜனவரி 9-ல் தீர்ப்பு
நடிகர் விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் 9-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரித் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நாளை மறுதினம் (ஜனவரி 9) தீர்ப்பளிக்க உள்ளது. சுமார் ரூ.500 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு முதலில் ‘யு/ஏ’ சான்று வழங்கத் தணிக்கை வாரியம் முடிவு செய்திருந்தது. ஆனால், திடீரென சில காட்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் புகார் வந்திருப்பதாகவும், […]