திருமணப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஜார்க்கண்டில் 6 பேர் பலி; 80 பேர் காயம்
சத்தீஸ்கார் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 90 பேர், இன்று ஒரே பேருந்தில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜார்க்கண்ட் மாநிலம் லெட்கர் மாவட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். பேருந்து மஹடனிர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகமாகச் சென்ற பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 4 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ […]
கடும் குளிர் மற்றும் பனிமூட்டம்: ஜார்க்கண்டில் பள்ளிகளுக்கு 8-ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு
டெல்லி, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. விடிய விடிய நிலவும் பனிமூட்டம் மற்றும் உறையவைக்கும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலவி வரும் கடும் குளிர் மற்றும் அடர் பனிமூட்டம் காரணமாக, மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு […]