பெண் பலி- திருச்சி ஜெனட் மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் போராட்டம்
திருச்சி மாநகர் புத்தூர் நான்கு ரோடு பகுதியில் ஜெனட் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவத்திற்கு பெயர் பெற்ற மருத்துவமனையாகும். ஆகையால் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மகப்பேறு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி, நகர் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கும் ஜெயராணி என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. ஜெயராணிக்கு 6 வருடங்களாக குழந்தை இல்லாததாலும், அவரது வயிற்றில் கட்டி இருப்பதாலும் திருச்சி புத்தூர் […]
மலக்குடலை கிழித்த கத்தி-பெண் பலி.. திருச்சி ஜெனட் மருத்துவமனை முற்றுகை
திருச்சி தென்னூரில் உள்ள ஜெனட் மருத்துவமனையில் பிரசவ ஆபரேசன் போது பெண் பலியாகியுள்ளார். அறுவை சிகிச்சையின் போது மலக்குடலை கத்தி கிழித்து விட்டதால் ஒருவார காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆபரேசன் மூலம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் 7 நாட்கள் கழித்து தாய் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஜெனட் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.