இளம்பெண்ணை தாக்கி 2½ பவுன் நகை பறிப்பு… 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் பென்சிகர் மனைவி தமிழரசி (35). இவர் நேற்று மதியம் மணப்பாட்டில் இருந்து உடன்குடிக்கு உறவினர் சகாயசாமியுடன் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். உடன்குடி அருகே வந்து கொண்டிருந்தபோது, 2 வாலிபர்கள் திடீரென வழிமறித்து மொபட்டுடன் சேர்த்து கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் மொபட்டுடன் நிலைகுலைந்து கீழேவிழுந்து காயமடைந்த தமிழரசி கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். தமிழரசியும் உறவின பெண்ணும் அவர்களுடன் போராடினர். ஆனால் அந்த 2பேரும் […]