பிப்ரவரி 5-ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழகச் சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கி கடந்த 24-ஆம் தேதி நிறைவடைந்தது. தி.மு.க. அரசின் பதவிக்காலம் முடிந்து விரைவில் தேர்தல் வரவுள்ளதால், முழுமையான பட்ஜெட்டுக்குப் பதிலாக ‘இடைக்கால பட்ஜெட்’ தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை பிப்ரவரி 13 அல்லது 14-ஆம் தேதிகளில் தாக்கல் செய்ய அரசு ஆலோசித்து வருகிறது. ஒருவேளை தேதியில் மாற்றம் இருந்தால் பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, நான்கு நாட்கள் சபையை நடத்தவும் வாய்ப்புள்ளது. […]