கேரளாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து…தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 21 பேர் காயம்
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். தமிழகத்தில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் தனியார் பேருந்தில் சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்றனர். அந்த பேருந்து கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குட்டிக்கானம் வழியாக சென்றபோது, வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. […]