தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் பட்ஜெட்”- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இன்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ““இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் மாண்புமிகு  தங்கம் தென்னரசு அவர்கள்! ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை […]

வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் நாடகமா?– இபிஎஸ் கேள்வி!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட்டை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இது வெற்று அறிவிப்புகள் மற்றும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனா மினுக்கி உரை” என்று குற்றம் சாட்டினார். உருப்படியாக எதுவும் இல்லை என்றும், மக்களை ஏமாற்றும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில், “2021 தேர்தலில் திமுக […]

வேலூரில் பிப்.23ம் தேதி விஜய் பிரசாரம்

சேலத்தைத் தொடர்ந்து வரும் 23ஆம் தேதி வேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அந்த பரப்பரைக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதில் சேலம் கூட்டம் போலவே சுமார் 5000 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்நிலையில் வேலூரில் விஜய் பிரச்சாரம் நடக்கும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார். பிரச்சார திடலில் பொதுமக்கள், தொண்டர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வாகன பார்க்கிங், பிரச்சாரத்திற்கு வந்து, செல்லும் வழி குறித்தும் […]

வேலூர்- மயான கொள்ளை திருவிழாவில் 60 அடி உயர தேர் சரிந்து விபத்து

வேலூர் மாவட்டத்தில் முக்கிய விழாக்களில் ஒன்றான மயான கொள்ளை விழா வேலூர் பாலாற்றங்கரையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் 10 ஊர்களில் இருந்து அம்மனை அலங்கரித்து தேரில் எடுத்து பாலாற்றுக்கு அழைத்து வந்து சூரையாடி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் சூரையாடல் முடிந்து நள்ளிரவு சுமார் 12 மணிக்கு காட்பாடி கழிஞ்சூரில் இருந்து வந்திருந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் பாலாற்றில் இருந்து சாலைக்கு இழுத்து வரும் போது திடீரென நிலைதடுமாறி பக்கவாட்டில் சாய்ந்தது. இதில் […]

இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய லெஜெண்ட் கடிதம்

பாக்., EX PM இம்ரான் கான் கண் பார்வை பாதிப்பால் சிறையில் அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கவும், மனிதாபிமான முறையில் சிறையில் நடத்தவும் பாக்., அரசுக்கு 14 கிரிக்கெட் ஜாம்பவான்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில், இந்தியாவின் கபில்தேவ், கவாஸ்கர், கிரேக் சேப்பல் (AUS), கிளைவ் லாயிட்(WI) உள்பட 14 கிரிக்கெட் வீரர் கையெழுத்திட்டுள்ளனர்.

அரசு ஆஸ்பத்திரியில் பிரசவங்களின் விகிதம்: தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம்

மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பை குறைக்கும் நோக்கத்தோடு மாநிலத்தில் 130 அவசரகால மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கருவுற்ற தாய்மார்களையும், பச்சிளஞ்சிசுக்களையும் பராமரிப்பதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாக செல்படுகிறது. அரசு மருத்துவமனையில் நிகழ்ந்திடும் பாதுகாப்பான பிரசவங்களில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதனால் மகப்பேறு இறப்பு விகிதம் ஆயிரம் சிசுக்களுக்கு 35 என்ற அளவிலும், சிசு இறப்பு விகிதம் ஆயிரம் சிசுக்களுக்கு 12 என்ற அளவிலும், தேசிய சராசரியைவிட மிகக் […]

மனுக்களில் அதிகரிக்கும் ஏ.ஐ. பயன்பாடு… சுப்ரீம் கோர்ட் கவலை

டில்லி: நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் அதிகரிக்கும் ஏ.ஐ. பயன்பாடு குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் நாகரத்னா, பாக்சி அமர்வு கவலை தெரிவித்துள்ளது. ஏ.ஐ. மூலம் போலியான வழக்கு தீர்ப்பு, நீதிபதியின் கருத்துகளை பயன்படுத்தி மனுக்கள் தயாரிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளது. ‘அண்மையில் மெர்சி வழக்கு என்று ஒரு வழக்கை மேற்கோள்காட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மெர்சி என்ற ஒரு வழக்கே கிடையாது, ஆனால் ஏ.ஐ. பயன்படுத்தி அப்படி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. சில […]

இபிஎஸ் உடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் சந்திப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் சந்தித்து பேசினார். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடத் தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வர உள்ளதாக இபிஎஸ் பேசியிருந்தார். இந்நிலையில் […]

FC புதுப்பிக்க 10 மடங்கு உயர்வு… 25ம் தேதி லாரிகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

தகுதி சான்றிதழை புதுப்பிக்க கட்டணம் 10 மடங்கு உயர்த்தியுள்ளதை கண்டித்து வரும் 25-ந் தேதி நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாமக்கல்லை அடுத்த வள்ளிபுரத்தில் இன்று (17-2-2026) நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் மாநில தலைவர் திரு தன்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரி மற்றும் பேருந்துகளுக்கு […]

ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை இருக்கு.. திருமா

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆட்சியில், அதிகாரம் கேட்க காங்கிரசுக்கு உரிமை இருக்கிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் பங்கு கோரிக்கையை எழுப்பக் கூடாது என்று இல்லை. பிரச்னை சுமுகமாக முடியும். கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என நம்புகிறேன். இருவரும் பேசி் சுமூக தீர்வு காண்பார்கள். காங்கிரசில் சிலர் கூறும் சொந்த கருத்துகளை பொருட்படுத்த தேவையில்லை. விசிக ஆட்சி அதிகார கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால் கைவிடவும் இல்லை. ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பதன் மூலம் திமுக கூட்டணியில் […]

கோவையுடன் போட்டிபோடும் கரூர்- தயாநிதி மாறன் எம்பி பெருமிதம்

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொழில் முனைவோர், சமூக சேகவர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற் சங்கங்களுடன் கலந்துரையாடல் கூட்டம் கோவை சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதி கூட்டரங்களில் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு […]

பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 20ம் தேதி வரை நடைபெறும் – சபாநாயகர்

இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவையின் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்? என்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிப்.20-ந்தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவை அமர்வில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியாக […]

முத்தரையருக்கு 10% இடபங்கீடு… தமிழர் தேசம் கோரிக்கை

தமிழர் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சங்கீதாஸ் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவரும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனருமான கே.கே. செல்வகுமார் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ் , மாநில இணை பொதுச் செயலாளர் கள்ளிக்குடி எம். ராஜேந்திரன், இளைஞர் அணி துரை குணசேகரன், மாநில செயலாளர்கள் கராத்தே செந்தில், […]

பல ஆண்டுகளாக எதிர்பார்த்தது இப்போ கிடைத்திருக்கு.. ரவிமோகன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். சமீபகாலமாக சர்ச்சையிலும், விமர்சனங்களிலும் சிக்கி தவித்த ரவி மோகன் தற்போது அதில் இருந்து மீண்டு வருகிறார். ஒருபக்கம் நெருக்கடி இருந்தாலும் திரைத்துறையில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வரும் ரவி மோகன் நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என பிசியாகவும் வலம் வருகிறார். மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்து வாழும் ரவி மோகன், மனைவியிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு […]

டாஸ்மாக் கடையை மூட கோரி- ஜெயங்கொண்டத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூரில் இரண்டு அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இரண்டு கடைகளும் வட வீக்கம் சாலையில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் செயல்படுவதால் கிராமத்தில் உள்ள கூலித் தொழிலாளிகள் மற்றும் இளைஞர்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கூறி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கடந்த இரண்டு வருட காலமாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டம் […]

பெண்களுக்கு ரூ.5000.. வரவேற்கிறேன்.. ஓபிஎஸ் பாராட்டு

சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும் போது, “தி.மு.க. அரசு, பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளது. இதனை வரவேற்கிறேன். மாறுபட்ட கருத்து கூறினால், தாய்மார்கள் கோபப் படுவார்கள்” என்றார். அப்போது. “தை மாதம் முடிந்து, மாசி மாதம் பிறந்து விட்டது.உங்கள் அரசியல் நிலைப்பாடு பற்றிய முக்கிய அறிவிப்பு எப்போது வரும்?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “பொறுமையாக இருங்கள். தை மாதத்தை விடமாட்டேன் என்கிறீர் […]

இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள், அரசு ஊழியர்களுக்கு TAPS –

தமிழ்நாடு அரசின் 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி வழங்க ஒன்றிய அரசு தொடர்ந்து மறுப்பதாகவும், தமிழ்நாடு எப்போதும் சந்திக்காத சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 16வது நிதிக்குழு அறிக்கை தமிழ்நாட்டுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாக நிதியமைச்சர் வருத்தம் தெரிவித்தார். நிதிப்பங்கீட்டில் 0.4% என்ற மிகக் குறைந்த உயர்வு […]

திருவண்ணாமலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை, குடும்பத்துடன் அண்ணாமலையார் கோவில் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து, பிரசாதம் வழங்கப்பட்டது.

134 படங்களின் பாடலை பயன்படுத்த இளையராஜாவுக்கு இடைக்கால தடை

1976ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் எனச் சரிகம நிறுவனம் டில்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது இளையராஜா இந்தப் பாடல்களைத் தனது சொந்தப் பாடல்கள் எனக் கூறி அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ் மற்றும் ஜியோசாவ்ன் போன்ற டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என வாதிட்டது.இந்த மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட் நீதிபதி துஷார் […]

சென்னையில் 2,119 கிலோ கஞ்சா தீ வைத்து அழித்தல்..

சென்னையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2,119 கிலோ கஞ்சா கூடுதல் கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் தீ வைத்து அழிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் எல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கையில் போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்ததாக 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்குகளில் […]

அரியலூர் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கல்

அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி ஆண்டுவிழா மற்றும் கலைத்திருவிழாவின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். இங்கு உங்களை பார்க்கும்போது எனது கல்லூரி நாட்கள் தான் நினைவுக்கு வருகிறது. உங்களைப் போன்றே நானும் பொறியியல் மாணவர் தான். நான் பொறியிய ல் பயின்ற காலத்தில், தமிழ்நாட்டில் 20 இன்ஜினியரிங் கல்லூரி தான் இருந்தது. இன்று உங்களுக்கு நுழைவுத் […]

விடியல் பயணம் மூலம் மகளிர் மாதந்தோறும் ரூ.888 சேமிப்பு- அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்​டுக்​கான இடைக்​கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் அவர் பேசியது, *மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவின் முன்னோடி திட்டமாக திகழ்கிறது. இந்த திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றுவதே இத்திட்டத்தின் வெற்றி. எதிர்வரும் மாதங்களிலும் தடையின்றி கிடைத்திடும் வகையில் அண்மையில் மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகையோடு கோடைகால சிறப்புத் தொகையும் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை செலுத்தும் போது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சி […]

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ‘கனமழை’ எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நேற்று (பிப். 16) காலை அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் பிப். 18 ஆம் […]

2வது நாளாக குறைந்த தங்கம் விலை

நாடுகளுக்கிடையேயான போர் பதட்டங்கள் போன்ற உலகளவிலான பல்வேறு காரணங்களால் தங்கம் விலை கடந்த ஆண்டு வரலாறு காணாத உயர்வை கண்டது. குறிப்பாக, ஆண்டின் இறுதிக்குள் ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்தை தாண்டும் என்று நிபுணர்கள் கணித்ததை போன்றே ஆண்டு இறுதியில் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தை தாண்டியது.அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு தொடக்கத்திலும் தங்கம் விலை விறுவிறுவென அதிகரித்துக்கொண்டே போனது. இதனிடையே, மத்திய பட்ஜெட் அறிவிப்பு மற்றும் அமெரிக்க வங்கி வட்டி விகித […]

புதுச்சேரியில் தவெகவுக்கு விசில்

சட்டமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். ஏற்கனவே தமிழ்நாட்டில் தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கியிருந்தது தேர்தல் ஆணையம். விஜயின் தவெக தனது முதல் தேர்தலிலேயே தமிழ்நாடு, புதுச்சேரியில் பொதுச்சின்னத்தில் களமிறங்குகிறது.   புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் பொதுசின்னமாக விசில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது. 

என்எம்பி மினிபியா -ஏக்வஸ் குழுமம் தமிழ்நாட்டில் ரூ.5980 கோடி முதலீடு- ஒப்பந்தம்

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: ஜப்பான் நாட்டை சேர்ந்த மினிபியா மிட்சுமி நிறுவனம், செமிகண்டக்டர் பொருட்கள், மோட்டார்கள், சென்சார்கள், மின் சாதனங்கள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் ஆகும். NMB மினிபியா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மினிபியா மிட்சுமி நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்நிறுவனம், 1,980 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 1,400 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், பல்வகை செயல்பாடுகளைக்கொண்ட செமிகண்டக்டர்கள் உயர் […]

ரம்ஜான் பண்டிகை-நோன்பு கஞ்சி தயாரிக்க பச்சரிசி வழங்க உத்தரவு

ரம்ஜானை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். 8,700 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும். பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்கப்படுவதன் மூலம் அரசுக்கு ரூ.20.88 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். பள்ளி வாசல்களுக்கு தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தேமுதிக விருப்ப மனு அளித்தவர்களுக்கு பிப்.20 முதல் நேர்காணல்

 தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் பிப்.20 முதல் நேர்காணல் நடைபெறும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பிப்.20 முதல் 22ம் தேதி வரை 3 நாள்கள் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

விஜயை மக்கள் ஏற்கமாட்டார்கள்.. ஆர்பி உதயகுமார்

யார் இறந்தாலும் பரவாயில்லை, தான்தான் முதலமைச்சர் என்று விஜய் பேசுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் ‘தன்னை பார்க்க வருபவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் நெரிசலில் 41 பேர் இறந்த நிலையிலும் நெஞ்சில் ஈரம் இல்லாமல் விஜய் பேசி வருகிறார். மக்கள் மீது யார் அக்கறை செலுத்துகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற முடியும்’ எனவும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஒழுங்கா தீர்ப்ப சொல்லனும்… நீதிபதியை நோக்கி அரிவாளை வீசியவர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்- தங்க முனீஸ்வரி தம்பதியினர். இவர்கள் மீது குடும்ப நல நீதிமன்றத்தில் ஜீவனாசம் வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில் இன்று வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு வருகை தந்த போது அங்கு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து பாலமுருகன் உள்ளே வீசி உள்ளார். அப்போது வழக்கறிஞர் அமரும் இடத்தில் […]

டாஸ்மாக் கடைகள் நாளை இயங்காது…குடிமகன்கள் ஷாக்

டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தம், ஒய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு சிஐடியு, ஏஐடிசி உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து நடத்துகின்றன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். அரசு இதுவரை அழைத்து பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் நாளை 17ம் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை […]

சென்னை-ஃபோரம் மாலில் திடீர் தீ… அலறி அடித்து ஓடிய மக்கள்

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ளது ஃபோரம் மால். இங்கு உணவகங்ள், தியேட்டர்கள் உள்ளிட்ட பல கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் ஃபோரம் மாலில் கீழ்த்தளத்தில் உள்ள உணவகத்தில் திடீரென தீ பற்றியது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரியப்பட்டது. அவர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒருபக்கம் ஃபோரம் மாலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் வெளியேற்றிவிட்டனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டிருக்கிறது..

கண்டனம் தெரிவித்த திரிஷா… வருத்தம் தெரிவித்தார் நயினார்..

தன்னை பற்றி கண்ணியக்குறைவாக பேசியதற்கு திரிஷா கண்டனம் தெரிவித்தநிலையில் நயினார் வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகை திரிஷா குறித்து தவறாக எதுவும் பேசவில்லை.. வாய் தவறி அந்த வார்த்தை வந்து விட்டது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் வருத்தம் தெரிவித்தார். அவர் பேட்டியில் கூறியதாவது.. யார் மனதும் புண்படும் விதத்தில் பேசியிருந்தால் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். வாய் தவறி அந்த வார்த்தை வந்து விட்டது. திரிஷா பற்றி பேசியதற்காக வானதி சீனிவாசன், அண்ணாமலை உள்ளிட்டோர் […]

முன்னோடி திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றுகிறது- லால்குடியில் உதயநிதி பேச்சு

திருச்சி மாவட்டம் லால்குடியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகத்தை இன்றுதுணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது:- திருச்சி மாவட்டத்திற்கும், விசேஷமாக லால்குடி தொகுதிக்கும் வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், இன்றைய நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு ஆகியோரை தந்த ஊர் லால்குடி.இன்னைக்கு நம்ம பள்ளி கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் அவர்களோட தொகுதி இது. இந்த தொகுதி மக்கள் மேல அவர்கள் எவ்வளவு […]

திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாடு பணிகள் மும்முரம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரம்மாண்ட மாநில மாநாடு மார்ச் 8-ந் தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற உள்ளது. திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்கிற தலைப்பில் மாநாடு மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. திருச்சி சிறுகனூரில் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். தற்போது இதற்கான பிரம்மாண்ட மேடை பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன. […]

மார்ச் -2 முதல் 26ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு… அமைச்சர் மகேஸ்

தமிழகத்தில் 2026ம் ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை 27,783 தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 8,27,475 மாணவர்கள் எழுத உள்ளனர். அதேபோல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இது குறித்த விரிவான தகவல்களைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 26,196 தனித்தேர்வர்கள் […]

நாளை தமிழக பட்ஜெட் 2026… மெகா அறிவிப்புகள்

2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் வரவுள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் வழக்கமான நிதி ஒதுக்கீடுகள் மட்டுமின்றி, மக்களைக் கவரும் பல முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுகிறது. 20-ம் தேதி 2026-27-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், 2025-26-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படுகின்றன. நாளை தொடங்கும் சட்டசபை கூட்டம் 20-ம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளது. இந்த […]

துணை முதல்வர் உதயநிதி புதுகை வருகை-உற்சாக வரவேற்பு

புதுக்கோட்டைக்கு வருகை தந்த தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று காலைபுதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் புதுக்கோட்டை சிப்காட் அருகில் வரவேற்றனர் . வரவேற்பு நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி, திமுக மருத்துவர் அணி மாநில இணைச்செயலாளர் அண்ணாமலைரகுபதி, சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,முன்னாள் எம்.எல்.ஏ.கவிதைப்பித்தன், பொன்துரை,தலைமை க்கழகபேச்சாளர் மதியழகன், மற்றும்மு.க.ராமகிருஷ்ணன்,மாலாராஜேந்திரதுரை, கே.எஸ்.சந்திரன், அசோக் பாண்டியன்,கோமாபுரம்சந்திரசேகரன், எம்.எம்.பாலு, வழக்கறிஞர் செல்லத்துரை மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பாபநாசம் அருகே திமுக சார்பில் சமுதாய வளைகாப்பு ..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு அணிவிக்கும் நிகழ்ச்சியில் தாய்மார்கள் சீர்வரிசை தட்டுகளை எடுத்துக் கொண்டு வருகை புரிந்தனர். பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை வழங்கி, கர்ப்பிணி தாய்மார்கள் ஆயிரம் நாட்கள் ஒவ்வொரு நாளும் குழந்தையினுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பெற்றெடுக்கக்கூடிய குழந்தைகள் நல்ல ஆரோக்கியமான பலமான […]

அரசு கல்லூரியில் 15.75 கோடியில் புதிய கட்டிட பணி.. VSB துவக்கி வைத்தார்

கரூர் அரசு கல்லூரியில் 15.75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைக்கும் பணி செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15.75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைக்கும் பணிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கல்லூரி மாணவ மாணவியருடன் இணைந்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், […]

2 மாதத்தில் ரூ. 9000- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் சமீபத்திய தொகை வழங்கலை பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார். “மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 பெற்ற பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தத் திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் பெரிய அதிர்ச்சியில் உள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார். தேர்தலை காரணம் காட்டி திட்டத்தை நிறுத்த முயன்றவர்களின் சூழ்ச்சியை முறியடித்து, முதலமைச்சர் ஒரே நேரத்தில் ரூ.5,000-ஐ மகளிரிடம் சேர்த்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறுகையில், “போன மாதம் மகளிர் […]

செல்வபெருந்தகை டில்லிக்கு அவசர பயணம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவசர பயணமாக டெல்லி செல்கிறார். கூட்டணி குறித்து பேச குழு அமைத்த பின்னர், இணக்கத்தை சிதைக்கும் வகையில் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து பேசி வரும் நிலையில் மாணிக்கம் தாகூருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் கடிதத்துடன் செல்வப்பெருந்தகை டெல்லி செல்கிறார்.

அடகு கடையின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை

கோவை சிங்காநல்லூர் வசந்தாமில் பகுதியில் ரமேஷ்குமார் என்பவர் மகாதேவ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடையின் பின் புறத்தில் அவரது வீடு உள்ளது.நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளித்த அவர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுள்ளார். நேற்றிரவு சுமார் 11 மணியளவில் கடையின் பின்புறமுள்ள ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 70 சவரன் தங்க நகை மற்றும் 20 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.கொள்ளை சம்பவம் […]

திமுக தேர்தல் அறிக்கையில் 6 அம்சங்களை சேர்க்க துரை வைகோ மனு

வரவிருக்கும் திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய 6 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருச்சி மதிமுக எம்பி துரை வைகோ எம்பி கனிமொழியிடம் வழங்கினார். எம்பி துரைவைகோ கூறியதாவது… இன்று (16.02.2026) திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், 2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுத் தலைவருமான மாண்புமிகு கனிமொழி எம்.பி. அவர்களை சந்தித்து, வரவிருக்கும் திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய ஆறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினேன். […]

NDA-வில் தேமுதிக இணையுமா? 1ம் தேதி பார்க்கலாம்-நயினார் பேட்டி

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். “விஜய்க்கு கொள்கை எதுவும் இல்லை. பேப்பரில் மட்டும்தான் எழுதி வைத்தால் எப்படி?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் NDA பொதுக்கூட்டத்திற்கு பந்தல் கால் நடப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார்.நயினார் நாகேந்திரன் தொடர்ந்து பேசுகையில், “யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” என்று தனது விமர்சனத்தை மென்மையாக்க முயன்றார். […]

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- குவியும் வாழ்த்துக்கள்

நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சுந்தரமூர்த்தி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக இந்தத் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ரோஷினி, தனது திருமணம் குறித்து எந்தத் தகவலையும் அதிகாரப்பூர்வமாகப் பகிராமல் ரகசியம் காத்தார். இருப்பினும், இந்தச் செய்தி அவர் நடித்த “பாரதி கண்ணம்மா” சீரியல் குழுவினர் மூலம் வெளியாகிவிட்டது. குறிப்பாக அந்த தொடரில் வில்லி வெண்பாவாக நடித்த ஃபரினா […]

அரிமளம் காமாட்சி அம்மன் கோவிலில் பால்குடம்- காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

அரிமளம் காமாட்சி அம்மன் ஆலயம் பால்குடம்,காவடிகளுடன் சிவராத்திரி திருவிழா தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் சத்திரம் ஸ்ரீகாமாட்சிஅம்மன்ஆலய மகாசிவராத்திரியை தொடர்ந்து அரிமளம் விளக்கியம்மன் கோவில் அருகில்உள்ள வினாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் ,காவடிகள்புறப்பட்டு உடுமலை சுப்பண்ணசுவாமிகள் வழிநடத்த சத்திரம் ஸ்ரீகாமாட்சிஅம்மன் ஆலயத்தை வந்தடைந்தது‌. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு அம்மன் வெள்ளிக்கரகத்துடன் சத்திரம்கிராமத்தைவளம் வரும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து அக்கினிச்சட்டி ஏந்தி கிராமத்தை வலம்வந்து பக்தர்களுக்கு குறி சொல்லும் நிகழ்வும்நடைபெற்றது. சிவன்ராத்திரிதிருவிழாவை […]

மனைவி -மாமியாரை இரும்பு ராடால் தாக்கி கொன்ற நபர் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே நிகழ்ந்துள்ள இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு இவ்வளவு கொடூரமான கொலைகளில் முடிந்திருப்பது வேதனையளிக்கிறது. திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த சிவா (30) என்பவருக்கும், அவரது மனைவி மீனா (25) என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இன்று காலை மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சிவா, […]

மனோகரன் தவெகவில் ஐக்கியம்.. அதிமுகவில் மேலும் அதிர்ச்சி

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான மனோகரனை கட்சியில் இணைத்து வரவேற்றுள்ளார். தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வான மனோகரன், விஜயை நேரில் சந்தித்து தவெகவில் இணைந்தார். விஜய் அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றார். மனோகரன் அதிமுகவில் நீண்டகாலமாக பணியாற்றியவர். வாசுதேவநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அக்கட்சியில் இருந்து விலகிய பின்னர், தற்போது தவெகவில் இணைந்துள்ளார். இவரது […]

25 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. காரைநகர் கடல் எல்லையில் மீனவர்கள் மீன்பிடித்தபோது எல்லை தாண்டியதாக 25 மீனவர்கள் அவர்களது 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு […]

தஞ்சை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் நாட்டியாஞ்சலி

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் ஆலயத்தில், சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி.. இசை நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே சக்கராபள்ளியில் அமைந்துள்ள தேவனாகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இசை நாட்டிய கலைஞர்களின் திருமுறை இன்னிசை, சிவதாண்டவம் புரவன்குறவஞ்சி, பரதநாட்டியம், யோகா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் […]

பிப்ரவரி 19,20ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு

வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,16-02-2026 முதல் 18-02-2026 : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட […]

தென்காசி அருகே இந்தியன் வங்கியில் தீ விபத்து

தென்காசி: சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜன்னல் வழியாக கரும்புகை வருவதைக் கண்டு காவல்துறையினருக்கும் தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகே இந்த விபத்து நடந்திருப்பதால், சிவராத்திரி இரவு முழுவதும் கோவிலுக்குச் சென்று வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,15,520க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.14,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.280க்கு விற்பனையாகிறது.

போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர் கைது

திருச்சி இபி ரோடு லூர்துசாமி பூங்கா அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது கமல நேரு பகுதியை சேர்ந்த காளிமுத்து (வயது 19) என்ற வாலிபர்போதை மாத்திரை விற்பனை செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட காளிமுத்துவிடமிருந்து போதை மாத்திரைகள் ஊசிகள் சலீம் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வள்ளலார் வழியில் திராவிட மாடல்”- முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் வள்ளலார் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பின்னர் அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் சன்மார்க்கிகளுக்கு விருதுகள் வழங்கினார். பின்னர் திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு “வள்ளலார் நெடுஞ்சாலை” என பெயர் சூட்டி பெயர்ப் பலகையை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழர்கள் முன் பெரியார் ஒரு கேள்வியை முன்வைத்தார்… வடநாட்டு சாமியார்களை போற்றும் தமிழனே வடலூர் வள்ளலார். எந்தவிதத்தில் தாழ்ந்தவர் என்று கேட்டார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் […]

கரூரில் ரசிகர்களுடன் ‘மை லார்ட்’ படக்குழுவினர் கொண்டாட்டம்

கரூரில் ரசிகர்களுடன் ‘மை லார்ட்’ படக்குழுவினர் கொண்டாட்டம் – இயக்குனர் ராஜு முருகன் தனது பிறந்த நாளை திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடினார். ராஜு முருகன் இயக்கத்தில், நடிகர் சசிக்குமார், நடிகை சைத்ரா ஆச்சார், ஆஷா சரத், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்துள்ள “மை லார்ட்” திரைப்படம் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம், அரசு ஆவணங்களில் உயிருடன் இருந்தும் ‘இறந்தவர்கள்’ என பதிவாகும் நபர்கள், தங்களது அடையாளத்தை மீட்டெடுக்கவும், தங்களுக்கு ஏற்பட்ட […]

விஜய் அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார்… அமைச்சர் மா.சு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறியாமையின் உச்சத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.6.64 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஐந்து புதிய மருத்துவக் கட்டிடங்கள் மற்றும் உயர்நிலை மருத்துவ கருவிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.2.44 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நவீன நீராவி சலவை கூடத்தையும், ரூ.1.20 கோடி செலவில் […]

அரியலூர்- தந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகன் கைது

ஆண்டிமடம் அருகே இருசக்கர வாகனம் தராத தந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வருகிறார்அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை.  இவரது மகன் மணிகண்டன். இவர் எப்போதும் தனது தந்தையிடம் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம். நேற்று இரவு இருசக்கர வாகனத்தை தருமாறு கேட்டு தந்தையிடம் வாக்குவாதத்தில் […]

தஞ்சையில் ரூ.56.41 கோடியில் சோழர் அருங்காட்சியகம்… முதல்வர் அடிக்கல்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 56 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டுதல்,சோழர்களின் மகத்தான பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில், சோழர் காலக் கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பாதுகாத்து எதிர்காலத் தலைமுறைகளுக்காக காட்சிப்படுத்தும் நோக்கில், 202324 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, தஞ்சாவூர், தமிழ்ப் […]

மீண்டும் சின்னசாமி ஸ்டேடியத்தில் RCB ஆட்டம்

ஆர்.சி.பி அணி மீண்டும் தனது சொந்த மண்ணான சின்னசாமி மைதானத்தில் விளையாடுவதற்கு கர்நாடக அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு பெங்களூரு அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றபோது, ரசிகர்கள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கடும் நெரிசல் மற்றும் துரதிர்ஷ்டவசமான சில உயிரிழப்புகள் காரணமாக இந்த மைதானம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மைதானம் திறக்கப்படுவது ஆர்.சி.பி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு விவகாரத்தில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள […]

இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு- பிப். 18 முதல் விண்ணபிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வை எழுத, பணியிலுள்ள ஆசிரியர்கள் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை https://trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள் ஒன்றை ஜூலை 4ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள் 2 ஜூலை 5ஆம் தேதியும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. […]

ரூ.31 லட்சம் வரதட்சணை- வாங்க மறுத்த இளைஞர்

ராஜஸ்தானின் ஆல்வார் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர், வரதட்சணையை வாங்க மறுத்து கவனம் ஈர்த்துள்ளார். அவரின் திருமண நாளில் மணப்பெண்ணின் தந்தை வரதட்சணையாக ₹31 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். இதை மறுத்த இளைஞரும் அவரின் தந்தையும், உங்கள் பெண்ணை கொடுத்ததே பெரிய பரிசு தான் எனக்கூறி அடையாளத்துக்காக ₹1 ரூபாய், ஒரு தேங்காய் மட்டும் பெற்றுக்கொண்டனர். இந்த இளைஞரை பாராட்டலாமே?

இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தார்…இன்ப அதிர்ச்சி

இறந்தவர் மீண்டும் திரும்பி வந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு சம்பவம் அசாமில் நடந்துள்ளது. மேகாலயா சுரங்க விபத்தில் தொழிலாளி ஷியாம் பாபு உயிரிழந்ததாகக் கருதி, ஒரு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் உடலை தகனம் செய்தனர். இந்நிலையில், 3 நாள்களுக்கு பிறகு ஷியாம் பாபு உயிருடன் வீடு திரும்பி குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போ, தகனம் செய்த உடல் யாருடையது? என்பது குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் சுற்றுலா மாளிகைக்கு முதல்வர் வருகை

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மகளிர் உரிமை தேவை ஐந்தாயிரம் பெற்றது மகிழ்ச்சியும் தமிழக முதல்வருக்கு இனிப்புகள் ஊட்டி சிறப்பாக வரவேற்பு அளித்த திருப்பத்தூர் பொதுமக்கள் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. […]

சொந்த மாவட்டத்தில் களம் இறங்கும் சீமான்?..

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் அரசியல் கட்சிகளின் மாநாடு, பொதுக்கூட்டம் என அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருச்சியில் மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாதக கட்சியின் மாநாட்டுக்கு சீமானின் தாயார் வீடு வீடாக சென்று அழைப்பு விடுத்துள்ள சம்பவம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் […]

சேலம் தவெக கூட்டத்தில் வாலிபர் பலி… சந்தேக மரணம் என வழக்கு

சேலம் :  மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் (தவெக / TVK) நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று (பிப்ரவரி 13, 2026) சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்றிய இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். கடுமையான வெயில் தாக்கம் இருந்த நிலையில், கூட்டத்தில் ஒரு நபர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நபர் சூரஜ் (37) என்பவர் ஆவார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் சேலத்தில் தங்கியிருந்தவர். கூட்டத்தில் வலிப்பு ஏற்பட்டு […]

48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

இந்தியப் பெருங்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் வறண்ட வானிலை நிலவிய நிலையில், 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக தஞ்சாவூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. […]

தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து- அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக ஈரோடு மண்டலம் சமூகவலைதள பிரிவு துணை தலைவர் பசுபதி செந்தில் என்பவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த பசுபதி செந்திலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, பசுபதி […]

ஜோலார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் திமுக வடக்கு மண்டல சார்பில் BLA2,BDA,BLC உள்ளிட்ட வாக்குச்சாவடிகுழு பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிருந்தாவனம் விரைவு ரயிலில் புறப்பட்டு மக்களோடு மக்களாக பயணித்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தார். அப்போது […]

கூடலூர் அருகே சுரங்கத்தில் தங்கம் தோண்டும் குழிகளை மூடிய வனத்துறை

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் தோண்டி கைவிடப்பட்ட தங்கச்சுரங்கத்தை இன்றும் மக்கள் சட்டவிரோதமாக தோண்டி தங்கம் எடுத்து வருகிறார்கள். தங்கம் தோண்டும் குழிகளை வனத்துறையினர் நேற்று மூடி டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகிறார்கள். நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது தேவாலா. இதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 150 ஆண்டுக்கு முன்பு ஆங்கிலேயேர் காலத்தில் தங்கச்சுரங்கங்கள் தோண்டப்பட்டன. போதிய வருவாய் இன்மை உள்ளிட்ட காரணங்களால் தங்கச்சுரங்கங்கள் கைவிடப்பட்டன. ஆனாலும், தற்போது வரை இந்த பகுதி மக்களின் தங்கம் […]

7 மணிக்கு மேல் no கடன் வசூல் Call! – ஆர்பிஐ அதிரடி

வங்கிக் கடனை வசூல் செய்யும் கலெக்‌ஷன் ஏஜென்டுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது அதன்படி; காலை 8 மணிக்கு முன்னாலும் இரவு 7 மணிக்கு பின்னாலும் கடனை திரும்பக் கேட்டு வாடிக்கையாளருக்கு கால் செய்ய கூடாது. கடன் பெற்றவரை தவிர அவர் வீட்டினர் யாரையும் தொடர்பு கொள்ளக் கூடாது. வாடிக்கையாளர் எங்கே வரச் சொல்கிறாரோ அங்குதான் அவரை சந்திக்க வேண்டும் கவுரவமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மிரட்டலோ […]

இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்கள்.. தலா ரூ.3 லட்சம்

திருவண்ணாமலை மாவட்டம், இளங்காடு கிராமத்தில் பழைய வீடை இடிக்கும்போது எதிர்பாராத விதமாக கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் பெற்றோருக்கு நிதியுதவியாக தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்கவும் அறிவித்துள்ளார்.

கரூர்- அதிகாரிகளை முற்றுகையிட்ட அதிமுகவினர் உட்பட 50 பேர் மீது வழக்கு

கரூர் மாவட்டம் ஆண்டான்கோவில் கிழக்கு, ரெயின்போ நகர் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் புதிய கட்டிவரும் வீட்டில்கட்டுமான பணிக்கும், அருகாமையில் தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதியுமின்றி சட்டவிரோதமாக பெருமளவில் ஆற்று மணல் கடத்தி வரப்பட்டு, அங்குள்ள காலி இடத்தில் கொட்டி வைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு புகார்கள் வந்தன. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், […]

எம்பி துரை வைகோ ஏற்பாடு- சவுதியில் இறந்த புதுகை வாலிபர் உடல் தமிழகம் வந்தது

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த அயலகத்தில் வேலை செய்து வந்த தேவராஜ் வேலு அங்கே திடீரென மரணமடைந்தார். இதுகுறித்து திருச்சி எம்பி மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில், அவரது உடலை தாயகம் கொண்டு வர உதவுவதற்காக உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் 11.02.2026 […]

முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் மமிதா பைஜூ…

மமிதா பைஜு நடித்த ‘பிரேமலு’, ‘ரெபல்’, ‘டியூட்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. தற்போது மிகவும் பிசியாக இருக்கிறார். விஜய்யுடன் ‘ஜன நாயகன்’, தனுஷுடன் ‘கர’, ‘சூர்யா 46’, விஷ்ணு விஷாலுடன் ‘இரண்டு வானம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள அவர், மலையாளத்தில் நிவின் பாலியை வைத்து ‘பிரேமலு’ என்ற படத்தின் இயக்குனர் கிரீஷ் ஏ.டி இயக்கும் ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் ‘ஜன நாயகன்’ படத்தின் இசை […]

ATM-மில் நிரப்ப ரூ.60 லட்சத்துடன் வந்த டிரைவர் ஓட்டம்-வழக்குப்பதிவு

ஐதாரபாத் அருகே திருமலகிரியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அஜித் குமார் என்பவர் டிரைவராக பணியாற்றி வந்தார். அவர் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப செல்லும் வாகனத்தை இயக்கி வந்தார். நேற்று முன்தினம் மதியம் அவர், வழக்கம்போல தனது அலுவலக குழுவினருடன் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக சென்று கொண்டிருந்தார். சில தனியார் வங்கி ஏ.டி.எம்.களில் அவர்கள் பணத்தை நிரப்பினர். மாலை 4.30 மணிக்கு கோபனபள்ளி பகுதிக்கு வந்தனர். பாதுகாவலர்கள் கொஞ்சம் பணத்துடன் ஒரு ஏ.டி.எம். எந்திரத்தை நிரப்பச் […]

புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் முடிந்த பீகாரிலும் இந்தப் பணிகள் நடைபெற்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த மாதம் 4 ஆம் தேதி முதல் இந்த சிறப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLO) இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். வாக்காளர்கள் பூர்த்தி செய்து அளித்த விண்ணப்பங்களை, […]

புல்வாமா தாக்குதலின் 7ம் ஆண்டு நினைவு நாள்- நினைவு கூர்ந்த பிரதமர்

புல்வாமா தாக்குதலின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்று (பிப்., 14) அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு இதே நாளில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த துயர சம்பவத்தில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். என் கணவர் சோர்வடையவே மாட்டார் – இந்த 1 தந்திரத்திற்கு நன்றிஅதிகமாக கற்கவும் இந்த சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. இந்நிலையில் […]

விபத்தில் 10 மாத குழந்தை மூளைச்சாவு- 5 பேருக்கு புதிய வாழ்வு

கேரளா-சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 10 மாதக் குழந்தை அலின் ஷெரின் ஆபிரஹாமின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. 5 பேருக்கு புதிய வாழ்வு கிடைக்கவுள்ளது. இதய வால்வு, கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவை தானம். இதன் மூலம் கேரளாவில் மிக இளம் வயதில் உடலுறுப்பு தானம் செய்த குழந்தை என்ற பெயர் கிடைத்துள்ளது.

கோவை-சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவி பலி- மறியல்-பரபரப்பு

கோவை மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோமேடு சரக்கு வாகன மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோ மீது சரக்கு ஆட்டோ ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் தனியார் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தால் மேலும் சில பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர் […]

நடிகர் மன்சூர் அலிகான் மகன் கார் மரத்தில் மோதி விபத்து

நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் சென்ற கார், சாலையோர மரத்தில் மோதி விபத்து. நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சென்னை ஹாடோஸ் சாலையில் இருந்து உத்தமர் காந்தி சாலை நோக்கி அதிவேகத்தில் சென்ற கார், வேகத்தடையில் ஏறி கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கவிழந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

கோவையில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் தீவிர சோதனை

கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் அரங்கேறிய குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்தனர் பலர் படுகாயம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து வருடம் தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெறும். அதில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு […]

கரூரில் மாநில அளவில் கபடி போட்டி.. பரிசு ரூ.5,23,168.. VSB பிரம்மாண்டம்

கரூரில் திமுக சார்பில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் பெண்களுக்கும, மாவட்ட அளவிலான ஆண்களுக்கும் மாபெரும் கபடி போட்டி. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வருகின்ற மார்ச் 1ம் தேதி 73ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் கரூர் மாவட் ட திமுக சார்பில் வெங்கமேடு பகுதியில் மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மாநில அளவில் […]

எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதுக்கி வைத்திருந்த 355 யுனிட் மணல் பறிமுதல்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த மணலை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர் புதிய வீடு கட்டி வருகிறார் அதற்காக அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆற்று மணலை கொட்டி வைத்திருந்ததாக விஏஓ அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து, நேற்று தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 320 யூனிட் ஆற்று மணலை பறிமுதல் செய்தனர். அதேபோல் […]

முதல் மனைவி இறந்து விட்டால்.. 2வது மனைவிக்கு ஓய்வுதியம் இல்லை-ஐகோர்ட் அதிரடி

திருச்சி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி 2007-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர் ராதாகிருஷ்ணன். இவரது முதல் மனைவி வசந்தா. இவர் உயிரோடு இருக்கும்போதே, ரேவதி என்பவரை 1992-ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் 2-வது திருமணம் செய்துகொண்டார். 2009-ம் ஆண்டு இரு மனைவிகளின் பெயர்களையும் குடும்ப ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என அவர் கொடுத்த கோரிக்கை மனுவை அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, ‘மனுதாரரின் முதல் […]

திருப்பத்தூரில் 2வது வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு.. திமுக ஏற்பாடு

• ’ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ என்பதை உறுதிசெய்யும் வகையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் இரண்டாவது பயிற்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. • திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல இரண்டாவது பயிற்சி மாநாடு இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடியில் நடைபெறுகிறது. • வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 15 கழக மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது • 47 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1.50 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். • திமுகவின் […]

தங்கம் விலை சரவனுக்கு ரூ.1280 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,16,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.280க்கு விற்பனையாகிறது.

சொல்லாததையும் செய்பவர் முதல்வர்” – அமைச்சர் ரகுபதி

எதிர்க்கட்சிகள் நீதிமன்ற வழக்குகள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை முடக்க நினைத்த சதியை உணர்ந்துதான் 5000 ரூபாயை முதலமைச்சர் முன்கூட்டியே வழங்கியுள்ளதாக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். ரகுபதி இதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தளத்தில், “பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையான 3,000 ரூபாயை மொத்தமாக வழங்கி, 1 கோடியே 32 லட்சம் பெண்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஓர் இன்ப அதிர்ச்சியைத் தந்துள்ளார். “2,000 […]

எகிப்திலிருந்து வெங்காயம் கொண்டு வந்தது நாங்கதான்- செல்லூர்

மதுரை அதிமுக அலுவலகத்தில் ஐடி விங் சார்பில் மொபைல் செயலியை மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. எகிப்திலிருந்து கொண்டு வந்தோம். வடஇந்தியாவில் இருந்து காய்கறிகளை கொண்டு வந்து மக்களுக்கு வழங்கினோம். தேர்தலுக்காக அமைப்பது தான் கூட்டணி. தற்போது திமுக கூட்டணி கட்சிகள் தாலி கட்டிய மனைவி போன்று உள்ளார்கள். தேர்தலில் மக்கள் தான் முடிவெடுப்பார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் […]

காவல்துறை சார்பில் ரூ.122.19 கோடி செலவில் புதிய கட்டிடத்திற்கு முதல்வர் அடிக்கல்

காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் ரூ.122.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, ரூ.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி, சிறந்த அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு கலைஞர் காவல் கோப்பையை வழங்கி, காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் பிரிவின் பயன்பாட்டிற்காக மொத்தம் 360 புதிய வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் […]

செய்தியாளரை அடிக்கப் பாய்ந்த தவெகவினரால் பரபரப்பு

சேலம் விஜய் கூட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய தவெக மாவட்ட செயலாளரிடம் பேட்டி எடுக்க முயன்ற நியூஸ் தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்தும் மயக்கமடைந்தவர்கள் விவரங்கள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களை தாக்கம் முற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நியூஸ் தமிழ் செய்திக்குழுவின் வாகனம் மீது ஏறி நின்று சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுப்பட்ட தவெகவினரால் பரபரப்பு […]

மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்…

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (38). கூலிதொழிலாளியான இவரது மனைவி அகிலா (28). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஏழு வயதில் பெண் குழந்தையும், இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அகிலாவின் நடத்தையின் மீது அன்பரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அன்பரசன் குடிப்பழக்கம் உள்ளவர். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் அகிலா தூங்கிக் கொண்டிருக்கும்போது கிரைண்டர் குளவி கல்லை எடுத்து அகிலாவின் தலையில் […]

மீண்டும் முதல்வர் ஆவார் மு.க.ஸ்டாலின்- வைகோ திட்டவட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது; இந்திய இறையாண்மையை அடகு வைப்பது போல, அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு கொத்தடிமையாக ஆக்கிவிட்டார் மோடி. இந்த குற்றச்சாட்டை மக்களவையில் பதிவு செய்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டை நான் அப்படியே வழிமொழிகிறேன். திராவிட இயக்கத்தை பாதுகாக்க, பாஜக பின்புல முயற்சியுடன் இந்துத்துவ, சனாதான சக்திகள் தமிழகத்தில் நுழைவதை வீழ்த்துவதற்கும் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வளர்த்த சமூக நீதியை நிலைநாட்டவும்தான் கடந்த 8 ஆண்டிற்கு […]

KLA இந்தியா நிறுவனம் சென்னையில் ஆராய்ச்சி, புத்தாக்க மையம்-ஒப்பந்தம்

ரூ.3,510 கோடி முதலீட்டு பொறுப்புறுதியுடன் அமெரிக்காவைச் சேர்ந்த KLA கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான KLA இந்தியா நிறுவனம் சென்னையில் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம் அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவாக அடைந்திடவும், பெருமளவிலான முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும், தமிழ்நாடு அரசு […]

ஏ.ஆர்.ரஹ்மான் ரூ. 2 கோடி செலுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பொன்னியின் செல்வன் 2 பட பாடல் வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீர ராஜ வீர பாடல், சிவ ஸ்துதி பாடலின் மெட்டு போல் உள்ளதாகக்கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டாகர் வாணி பாரம்பரியத்தின் இசை பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், பதிவாளரிடம் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடியை டெபாசிட் செய்ய உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கேவலமான தோல்வியை சந்திக்கும்- திண்டுக்கல் லியோனி

கன்னியாகுமரி மாவட்டம் கழுவன்திட்டையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பேசியதாவது: அனைத்து மதத்தினருக்கும் நன்மை செய்பவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மத வேறுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டில் திமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. கல்வியும், அறிவும் தான் பெண்களுக்கு நிரந்தர அழகு. திராவிட மாடல் அரசின் மிகபெரிய சாதனை பெண்களை படிக்க வைத்தது. இந்த ஆண்டு மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்தியாவிலேயே […]

விஜய் பரப்புரைக்கு பாஸ் வாங்கி சென்ற நபர் பலி

விஜய் கூட்டத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சுராஜ் பாஸ் வைத்திருந்தார். கடும் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்த சுராஜ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போகும் வழியிலேயே சுராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் சுராஜியின் உடல்.

மோடியை தன்மீது சவாரி செய்ய அதிமுக அனுமதித்ததால்- நீட் திணிப்பு

மோடியை தன்மீது சவாரி செய்ய அதிமுக அனுமதி அளித்ததன் காரணமாகவே நீட், உதய் மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தமிழகத்திற்குள் திணிக்கப்பட்டது: ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டின் கதவை திறந்து விட்டு, அதிகாரத்தை அடகு வைத்ததை திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் தாக்கு. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகில் மொழிப்போர் போராட்டத்தின் போது தனது இன்னுயிரை ஈந்த கீழப்பழுவூர் சின்னசாமியின் நினைவாக மூன்று கோடி மதிப்பில் கட்டப்பட்ட நினைவு அரங்கத்தை, தமிழ்நாடு […]

ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் மற்றும் மதன் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகர துணை காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி… இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டில்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பந்தயத்தின்(3 நிலை) இறுதி சுற்றில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (362 புள்ளி) புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.மற்ற இந்திய வீரர்களான நீரஜ் குமார் (361.8) வெள்ளிப்பதக்கமும், அகில் ஷியோரன் (343.5) வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதன் அணிகள் பிரிவில் இந்திய அணி 1,769 புள்ளிகள் குவித்து தங்கப்ப தக்கத்தை வென்றது. […]

டில்லியில் புதிய பிரதமர் அலுவலகம் திறப்பு…

டில்லியில் புதிய பிரதமர் அலுவலகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகிய வளாகங்களுக்கு புதிய பெயரை அறிமுகப்படுத்தி குடியிருப்பு வளாகத்தையும் திறந்து வைத்தார். பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகிய வளாகங்களுக்கு புதிய பெயரை அறிமுகப்படுத்தினார். பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகியவற்றைக் கொண்ட வளாகத்திற்கு பிரதமர் […]

கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் டாரஸ் லாரிகள் நுழைய தடை

நாளை மறுநாள் மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. இதனால் மாவட்டத்திற்குள் கனிமவள டாரஸ் கனரக லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர்.ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். இதில் ஒவ்வொரு 2 கி.மீ. தூரத்திற்கும் […]

விஜய் சேலம் கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி- 10பேருக்கு சிகிச்சை

சேலத்தில் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மஹாராஷ்டிராவை சேர்ந்த சுராஜ் (வயது37) என்பவர் பரப்புரை கூட்டத்தில் கடும் வெயிலில் மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுராஜ் பலியாகியுள்ளனர். வெயிலின் காரணமாக மயங்கி சுருண்டு விழுந்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. மேலும் 10 பேர் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சுராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

மகளிருக்கு ரூ.5000 வரவு..மனம் குளிர செய்யும் அறிவிப்பு…திருமா., பாராட்டு

மகளிருக்கு ரூ.5000 வரவு, எதிர்காலத்தில் உரிமைத் தொகையை ரூ.2000ஆக உயர்த்தும் முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம். இது மகளிரை மனம் குளிரச் செய்யும் அறிவிப்பு மட்டுமல்ல, கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அறிவிப்பாகும்’ என விசிக தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசால் இன்று அவர்களது வங்கிக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது. பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கான தொகை 3000, கோடைக்கால இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு உதவித்தொகை 2000 […]

அமித்ஷா வருகை- காரைக்காலில் டிரோன்கள் பறக்க தடை

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி காரைக்காலில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் இஷிட்டா ரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை- வனப் பகுதிக்குள் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்

கோவை, தடாகம் சுற்றுக்கு உட்பட்ட வன எல்லைப் பகுதியில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை தடாகம் அருகே வீரபாண்டி கிராமம், கொண்டனூர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 68). இவர் நேற்று (12.02.2026) மாலை தனது ஆடுகளை மேய்ப்பதற்காக வழக்கம் போல வன எல்லையை ஒட்டிய பகுதிக்குச் சென்று உள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் […]

தாறுமாறாக ஓடி பெட்டிக் கடைக்குள் புகுந்த மினி பஸ்..கோவையில் பரபரப்பு

கோவை, கணுவாய் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்து, அங்கு இருந்த பொதுமக்களையும், பயணிகளையும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை வரை செல்லும் மினி பேருந்து ஒன்றின் ஓட்டுநராகச் சிவராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இன்று காலை கணுவாய் பேருந்து நிலையத்தில் அந்தப் பேருந்து நிறுத்தப்பட்டு இருந்தது. ஓட்டுநர் சிவராஜ் பேருந்தில் இல்லாத நேரத்தில், அந்தப் பேருந்தின் நடத்துனருக்குத் திடீரென பேருந்தை ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் வந்து உள்ளது. […]

வரலாறு தெரியாமல் எடப்பாடி பேசுகிறார்…. செல்வபெருந்தகை பதிலடி

சென்னை : தமிழக அரசியலில் இருமொழிக் கொள்கை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “வரலாறு தெரியாமல் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி” என்று கூறிய அவர், இருமொழிக் கொள்கை ஜவஹர்லால் நேருவால் கொண்டுவரப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விவகாரம் திமுக – காங்கிரஸ் கூட்டணியின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.செல்வப்பெருந்தகை தனது பேட்டியில், “இருமொழிக் கொள்கை ஜவஹர்லால் […]

பெண்களின் உழைப்புக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த மரியாதை-செல்வப்பெருந்தகை

மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைத்ததற்கும், எதிர்காலத்தில் உரிமைத் தொகையை ரூ.2000ஆக உயர்த்தும் அறிவிப்பிற்கும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; மகளிர் குடும்பத் தலைவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை உயர்வு அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் 1.31 கோடி குடும்பங்கள் நேரடியாகப் பயன் பெற உள்ளன. விலைவாசி சுமையில் தவிக்கும் ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு இது உண்மையான நிவாரணமாக அமையும். பெண்களின் […]

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மீண்டும் ஐபிஎல்

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை விளையாட அனுமதிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மைதானத்தில் 35,000 பார்வையாளர்கள் வரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் தொடங்குவதற்கு முன்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் அதன் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. பெங்களூருவின் அடையாளமாகத் திகழும் எம். சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை கர்நாடக அரசு தற்போது நீக்கியுள்ளது. இதன் மூலம், வரவிருக்கும் ஐபிஎல் […]

கட்டடம் இடிந்து விழுந்து 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி..

திருவண்ணாமலை, வந்தவாசி அருகே கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இளங்காடு கிராமத்தில் முனியன் எனபவரின் வீட்டை சீரமைக்கும்போது கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இவர் அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டை இடித்து சீரமைப்பதற்கான பணி இன்று காலை நடைபெற்றது. அப்போது முனியனின் உறவினர் மகன்கள் அபினேஷ் மற்றும் முகேஷ் ஆகியோர் வீட்டின் அருகே இருந்துள்ளனர். அப்போது […]

திருவான்மியூர் கொலை வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து

2010ல் திருவான்மியூரில் ஏழுமலை என்பவர் கொலை வழக்கில் 9 பேரை விடுதலை செய்த கூடுதல் அமர்வு நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது . 2010ல் முன்விரோதம் காரணமாக திருவான்மியூரைச் சேர்ந்த ஏழுமலையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 16 பேரில் 5 பேர் உயிரிழந்ததால் 9 பேரை குற்றவாளி என ஐகோர்ட் அறிவித்துள்ளது . நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்டீபன்ராஜ், சந்துரு ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகாத […]

மகளிர் உரிமைத்தொகை முன்பணம் 5000-வரவேற்கதக்கது… ஜவாஹிருல்லா

மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக ரூ.5000 என்ற முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கையில் தெரிவித்ததாவது; ‘மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை’ பெறும் பெண்களுக்கு முன்பணமாக ரூ.5000 அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று காலையில் வரவு வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கை, பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான மற்றும் வரவேற்கத்தக்க முடிவாகும். வீட்டின் […]

தமிழக அரசின் 5000 அறிவிப்பு.. கரூரில் திமுக கொண்டாட்டம்

மகளிர் உரிமைத்தொகை ரூ 5 ஆயிரம் வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கரூரில் திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்… திமுக அரசின் மகத்தான திட்டமான மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில், இன்று ரூ 5 ஆயிரம் அரசு வங்கி கணக்கில் செலுத்தியது… இதனால் மகிழ்ச்சியில் திளைத்துள்ள கிராமப்புற மகளிர் தமிழ்நாடு முதல்வருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வருகின்றனர்.. இந்நிலையில், கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள […]

புதிய ஆய்வுகள் நடத்துவது காலத்தின் கட்டாயம்- எம்பி கனிமொழி

எகிப்து நாட்டில் பழமையான கல்வெட்டுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; எகிப்து நாட்டின் ‘மன்னர்களின் பள்ளத்தாக்கு’ பகுதியில் அமைந்துள்ள பிரமிடுகளில் உள்ள பழமையான கல்வெட்டுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பழந்தமிழர்களின் கடல் கடந்த பயணங்கள், பன்னாட்டு வணிகத் தொடர்பு மற்றும் உலகின் பிற நாகரிகங்களுடனான உறவு குறித்து மேலும் பல புதிய […]

தன் மகன் இறுதி சடங்கு… செல்போனில் பார்த்து கதறிய தந்தை

கர்நாடக மாநிலம் பெங்களூரு நெலமங்களா அருகே தியாமகொண்டலு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவரது மகன் சந்தன் குமார் ( 37). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் எல்.என்.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.இந்த நிலையில் அவர் டொராண்டோ நகரில் உள்ள வணிக வளாகத்திற்கு கடந்த 6- ந்தேதி இரவு காரில் சென்றுள்ளார். பின்னர் வாகன நிறுத்தும் இடத்திற்கு […]

பள்ளிக்கூடம் கட்டும் கும்பமேளா அழகி- குவியும் பாராட்டுக்கள்

இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார். இவரது அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்தது. யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறினார் அந்த பெண். அவரது தோற்றத்தை வைத்து அவருக்கு ‘மோனலிசா போஸ்லே’ என்று நெட்டிசன்கள் பெயர் சூட்டியுள்ளனர்.காந்தக் கண் அழகி என மிகவும் கொண்டாடப்பட்ட மோனலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது. சினிமாவுக்காக அவர் மும்பை […]

மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 – முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழக மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்.1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு […]

பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை… கணவன் கைது

சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாக பணியாற்றி வந்தார் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரி (வயது 29). இவருடைய கணவர் சிலம்பரசன்(32), ஆவடி சிறப்பு காவல்படை போலீஸ்காரராக வேலைபார்த்து வருகிறார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. போலீஸ் தம்பதியான இவர்கள், எழும்பூர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். திருமணத்துக்கு முன்பு புவனேஸ்வரி தனக்கு தெரிந்த ஒருவருக்கு ரூ,60 ஆயிரம் கடனாக […]

கோவை-ஆட்டோ பொருட்களை கொள்ளையடிக்கும் 4 பேர் கொண்ட கும்பல்

கோவை, மாநகரில் சமீபகாலமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத் திருட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஆட்டோக்களில் நூதன கொள்ளை அரங்கேறி உள்ளது. ஆட்டோவிலேயே வந்து, ஆள் இல்லாத ஆட்டோக்களை நோட்டமிட்டு அதில் உள்ள உதிரிப் பாகங்களைத் திருடிச் செல்லும் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலின் செயல் ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பி உள்ளது. கோவை, சிவானந்தா காலனி அருகே மேட்டுப்பாளையம் சாலை, புதுப்பாலம் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் கண்ணன் […]

திருட்டு மணல்… எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு!

கரூர், ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக ஆற்று மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்ததாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக பிரமுகர் தனபால் ஆகிய இருவர் மீதும் கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆண்டாங்கோவில் மந்தை அருகில் உள்ள அதிமுக பிரமுகர் தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள ஆற்று […]

மகளிருக்கு போனஸ்.. காலையிலேயே 5000.. ஸ்டாலின் மகிழ்ச்சி அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை தேர்தலைக் காரணம் காட்டி முடக்க பாஜக முயன்றது. அதை முறியடிக்கும் வகையில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக 3000 ரூபாயும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக 2000 ரூபாயும் சேர்த்து 5000 ரூபாயை இன்று காலையிலேயே 1.31 கோடி பெண்களுக்கு வழங்கியிருக்கிறது. • அசாமிலும் தமிழ்நாட்டைப்போல பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை பாஜக செயல்படுத்தி வருகிறது. அங்கு விரைவில் நடக்கும் முக்கியப் பண்டிகையை முன்வைத்து ஒரு சிறப்புத் தொகுப்பாக பாஜக அரசு […]

தங்கம்- வௌ்ளி விலை அதிரடி குறைவு

தங்கம் விலை கடந்த சில நாட்களாக நிலையாக இருந்த நிலையில், திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில், இன்று, சென்னையில் 22K தங்கத்தின் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.200 குறைந்து, ரூ.14,400க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,15,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து கிராமுக்கு ரூ.280க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ரூ.2,80,000க்கும் விற்பனையாகிறது.

சட்டமன்ற தேர்தலை வைத்து-வழக்கமான பணிகளை காவல்துறை தவிர்க்க கூடாது

சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி வழக்கமான பணிகளை காவல்துறை தவிர்க்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பைக் ரேஸ், வாகனங்களை அதிவேகமாக ஓட்டியதாக 4 பேர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்ட வழக்கில், போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளை கையாள மாதிரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அப்போது, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, […]

மோடியிடம் தமாகாவை அடகு வைத்த வாசன்- நாஞ்சில் சம்பத் தாக்கு

நெல்லை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: இஸ்லாமிய மக்களுக்கு பாஜ அரசு பல இன்னல்களை இழைத்துள்ளதை எதிர்த்து குரல் கொடுத்தவன் நான். கொள்கைக்காக மூப்பனார் துவக்கிய தமாகாவை ஜிகே வாசன் மோடியிடம் அடகு வைத்துவிட்டார். விஜயகாந்த் துவக்கிய தேமுதிகவை அவரது மனைவி பிரேமலதா கூறுபோட்டு விற்பனை செய்யத் தயாராகிவிட்டார். ஆனால் பாவம் வாங்கத்தான் ஆளில்லை. முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும்படியாக மாட்டிறைச்சி உண்ணக்கூடாது, மாட்டு […]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – தடை விதிக்க மறுப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் 22ம் தேதி நடக்க இருந்த தேர்தலுக்கு எதிராக 4 தயாரிப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். கடந்த முறை தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், இம்முறை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை மாற்ற விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 20 கல்குவாரிகளில் விதி மீறல்- டிரோனில் கண்டுபிடிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் 20 கல்குவாரிகளில் விதி மீறல் நடந்தது டிரோன் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட ஆய்வில் விதி மீறல் உறுதி செய்யப்பட்டால் 20 கல்குவாரிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குவாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

1.48 லட்சம் பேருக்கு வேலை வழங்கிடும் வகையில்…முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில், ரூ.36,968 கோடி முதலீட்டில் 60,823 பேருக்கு வேலை வழங்கிடும் வகையில் 71 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.31,934 கோடி முதலீட்டில் 82,664 பேருக்கு வேலை வழங்கிடும் வகையில் 52 முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும், 5,000 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்ற வகையில், 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், […]

ஆட்சியில் பங்கு…ஒத்துவராது… நெல்லையில் வைகோ

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்திற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என கூறியது 100 சதவீதம் சரியானது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, “திராவிட முன்னேற்றக் கழகம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்று 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னரும் திராவிட மாடல் ஆட்சியை ஆருயிர் சகோதரர் ஸ்டாலின் தொடர்வார். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என […]

ஊழல் புகார்.. GST ஆணையர் சஸ்பெண்ட்

 சென்னையில் ஊழல் புகாருக்கு ஆளான ஜி.எஸ்.டி. ஆணையர் மாணிக்கவேலை ஒன்றிய அரசு சஸ்பெண்ட் செய்தது. ஜி.எஸ்.டி. ஆணையர் மாணிக்கவேலுக்கு எதிராக ஒன்றிய நிதி அமைச்சகத்துக்கு புகார் வந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணிக்கவேல் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த ஒன்றிய அரசு பரிந்துரை செய்துள்ளது.

விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் – நயினார்

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஒரு மாதத்தில் துவங்கும், வியூகம் அமைப்பதற்கு இரண்டு மாதங்கள் தேவையில்லை, இரண்டு மணி நேரமே போதுமானது என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மோடி முகாம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. சத்துணவு, […]

திருச்செந்தூர் அருகே 50 ரூபாய் டாக்டர் காலமானார்

திருச்செந்தூர் அருகே 90வது வயதில் குறைந்த செலவில் மருத்துவம் பார்த்த மருத்துவர் காலமானார். திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி மெயின் பஜாரில் சுமார் 45 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி குறைந்த செலவில் மருத்துவம் பார்த்து வந்தவர் மருத்துவர் பொன்னையா. அரசு மருத்துவமனை , மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றிய போது ஆறுமுகநேரியில் கிளினிக் துவங்கினார். பல்வேறு மருத்துவமனைகளில் 50, 100, என மருத்துவ செலவு ஆன காலத்தில வெறும் ரூ10, ரூ.20க்கு உரிய மருந்துகளுடன் ஏழை […]

தென்கிழக்கு வங்கக்கடலில் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் பகுதியில், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றும், பிப்.14லும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்

திடீரென சென்னை -இலங்கை விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பு

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், போட்டிகளை காண்பதற்காக இந்தியாவிலிருந்து நிறையப்பேர் அங்கு விமானம் மூலம் செல்கின்றனர். இதனால் சென்னையில் இருந்து இலங்கை செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகின்றன. இதனிடையே வரும் 15ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியை காண்பதற்காக தற்போது சென்னையிலிருந்து இலங்கை […]

புதுகையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பொது வேலைநிறுத்த மறியல்

புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு ஒன்றிய பா.ஜ.க.மோடி அரசின் நாசகாரதொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத சட்டங்களை முறியடிப்போம் என முழக்கமிட்டுதொ.மு.ச., சில.டி.யூ,ஏ.ஐ.டி.யூ.சி,ஏ.ஐ.சி.சி.யூ.,எஸ்.கே.எம் ஆகிய தொழிற்சங்ககூட்டமைப்பின்சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலையில் அமர்ந்து நடைபெற்ற மறியல்போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர்அ.ரெத்தினம் (தொ.மு.ச. ), மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த.செல்வராஜ் (எஸ்.கே.எம்) ஆகியோர் தலைமை வகித்தனர். மறியல் போராட்டத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை சிறப்புரையாற்றினார். மறியல் போராட்டத்தில் ஏ.ஸ்ரீதர் ,முகமதலிசின்னா, (சி.ஐ.டி.யூ,) ப.ஜீவானந்தம் (ஏ.ஐ.டி.யூ.சி), கந்தசாமி (தொ.மு.ச.,) உள்ளிட்ட […]

எங்கள் சாதனைகளை, அடுத்து வரக்கூடிய ஆட்சியில் நாங்களே முறியடிப்போம் -உறுதி

சென்னை : தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்புரை ஆற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் என்றால் வளர்ச்சிக்கான மாடல்; திராவிட மாடல் என்றால் ரிசல்ட் கொடுக்கக்கூடிய மாடல்; திராவிட மாடல் என்றால் மக்கள் நன்மைக்காக இருக்கக்கூடிய மாடல். இதையெல்லாம் உலகுக்கு எடுத்துச்சொல்லக்கூடிய மாநாடுதான் இந்த ‘தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாடு’. தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலருக்கு, […]

2025ம் ஆண்டில் 15.65 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் மலேசியா பயணம்

மலேசியாவை சிறந்த சுற்றுலா இலக்காக மேம்படுத்தும் நோக்கில், டூரிசம் மலேசியா, மலேசியா சுற்றுலா பயண முகவர்கள் சங்கத்துடன் இணைந்து “விசிட் மலேசியா இயர் 2026“-ஐ பிரபலப்படுத்த, “சேல்ஸ் மிசன் 2026“ எனும் பயண ஊக்குவிப்பு நிகழ்ச்சி கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் மலேசியாவைச் சேர்ந்த 49 சுற்றுலா நிறுவனங்கள், கோவை மற்றும் கொங்குப் பகுதியில் உள்ள பல முக்கிய சுற்றுலா மற்றும் பயண வர்த்தக நிறுவனங்களும் கலந்து கொண்டன. இந்நிகழ்ச்சி, கொங்கு மண்டலத்துடன் […]

என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?இபிஎஸ் சவால்

சென்னையில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அங்கு கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இவ்வாறு அவர் பதிலளித்து பேசியதை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். எடப்பாடி பழனிசாமியின் பேச்சு விவரம்: ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைக்கும் பணியில் மும்முரமாக உள்ளது. அதிமுகவும் என்.டி.ஏ கூட்டணியை அமைத்து தேர்தலுக்கு தயாராகிவிட்டோம். ஏற்கனவே 185 தொகுதிகளில் எழுச்சிப்பயணத்தை முடித்துவிட்டேன். 2026ல் தமிழகத்தில் அதிமுகதான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். கருத்துக் கணிப்புகளின் […]

தேமுதிக விருப்பமனு.. கால அவகாசம் நீட்டிப்பு..

தேமுதிக விருப்ப மனு விநியோகம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையுடன் விருப்ப மனு விநியோகம் நிறைவடைய இருந்த நிலையில் 3 நாட்களக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி 15 மாலை 5 மணி வரை தேமுதிக விருப்பமனு அளிக்கலாம் என தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

79 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் எவ.வேலு

திருப்பத்தூரில் 79 கோடி மதிப்பீட்டில் 8கி.மி அளவில் புறவழி சாலை அமைக்க அடிக்கல் நாட்டிய அமைச்சர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டு பகுதியில் திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் நகருக்கு புறவழிச் சாலை 79 கோடி மதிப்பீட்டில் சுமார் 8.150 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணியை துவக்க விழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் […]

மத்திய அரசை கண்டித்து.. அனைத்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல்- கைது

கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் மத்திய மோடி அரசு தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கைவிடக் கோரி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் ‍, நூறாண்டு காலமாக போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகள் தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்பை திரும்ப பெற […]

ரவிமோகன்… நீ வந்த பிறகு என் உலகமே மாறிடுச்சு- கெனிஷா உருக்கம்

பிரபல பாடகியும் நடிகர் ரவிமோகனின் தோழியுமான கெனிஷா கடந்த 7ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரவிமோகன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கெனிஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-சின்ன வயதில் இருந்தே பல நேரங்களில் நான் ஒரு ஆளாக மதிக்கப்படவில்லை. என்னை எல்லோரும் ஒதுக்கி வைத்த மாதிரியே ஒரு உணர்வு. நான் பெருசா எதிர்பார்க்கிறேன் என நினைத்தார்கள். ஆனால் நான் எதிர்பார்த்தது ஒரு […]

அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி- ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி தரப்பை குறித்து கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். அவர் பேசியது பின்வருமாறு;“ஒரு கூட்டம் பொய் செல்வதையே அரசியலாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மனம் புண்படும்படி பேசி வருகின்றனர். என்னை மட்டும் அல்ல.. அரசியல் அனுபவம் கொண்ட ஜி.கே.மணியை வசைபாடுகின்றனர். கட்சிக்காக ஓயாமல் உழைத்தவர் ஜி.கே.மணி. அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட எதை, எதையோ பேசுகிறார்கள். அந்த கூட்டத்தை நாங்கள் கட்சியை விட்டு […]

கரூரில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேலம்பாடி, லிங்கமநாயக்கம்பட்டி, சாந்தப்பாடி, இனங்கனூர், சேந்தமங்கலம் மற்றும் ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி பணிகளை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ துவக்கி வைத்தார். தொடர்ந்து ஆண்டிப்பட்டி கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவ–மாணவிகளுக்கு நான்காவது முறையாக சுமார் 23 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி ஒன்றிய கழகச் செயலாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு […]

சேலத்தில் நாளை தவெக நிர்வாகிகள் கூட்டம்- நுழைவு சீட்டு இருப்பவர்களுக்கு அனுமதி

சேலத்தில் நாளை த.வெ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-“மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி […]

அதை நினைக்கும் போதே இப்பவும் கஷ்டமா இருக்கு- கண்ணீருடன் ஐஸ்வர்யா அர்ஜூன் பேச்சு

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். அதிரடியான திரைப்படங்களில் நடித்து ‘ஆக்ஷன் கிங்’ எனப் பெயர் பெற்ற இவர், நடிப்பது மட்டுமின்றி இயக்குநராகவும் பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார். “சேவகன்”, “ஜெய் ஹிந்த்”, “தாயின் மணிக்கொடி”, “வேதம்”, “ஏழுமலை”, “சொல்லிவிடவா” உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.6 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் “சீதா பயணம்” என்ற புதிய திரைப்படத்தை அர்ஜூன் இயக்கியுள்ளார். இதில் நிரஞ்சன் மற்றும் […]

2021-2025ல் பிரதமர் மோடியின் வௌிநாடு பயணத்திற்கு ரூ.462 கோடி செலவு

 பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாடு பயணங்களுக்கு 2021 -25 ஆண்டுகளில் ரூ.462 கோடி செலவாகியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக செலவுகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், கடந்த 2021 முதல் 2025ம் ஆண்டு வரை சுமார் ரூ.462 கோடி செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்துக்கு மட்டும் ரூ.74 கோடி செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்காக சராசரியாக ஆண்டுக்கு ரூ.115 […]

கோவை–கேரளா பேருந்து சேவை முடக்கம்

கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் அரசு பேருந்துகள் இன்று முழுமையாக இயக்கப்படவில்லை. நான்கு தொழிலாளர் சட்டங்களை நீக்கக் கோரி நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்திற்கு கேரள அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் முழு ஆதரவு அளித்துள்ளதால் இந்த சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தின் காரணமாக, தமிழ்நாடு–கேரளா எல்லைப்பகுதிகளில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் டெப்போவிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், கேரளாவின் பாலக்காடு, திருச்சூர், கோழிக்கோடு, திருவனந்தபுரம், எர்ணாகுளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு […]

முஸ்லிம் தம்பதியின் வளர்ப்பு மகனுக்கு இந்து முறைப்படி திருமணம்

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹுக்கேரி தாலுகாவில் உள்ள பஸ்தாவாடா கிரா மத்தை சேர்ந்தவர் மெகபூப். இவரது மனைவி நூர்ஜன். இந்த தம்பதி யின் பக்கத்து வீட்டில் தங்களது பெற்றோருடன் சோமசேகர் பூஜர், வசந்த் பூஜர் வசித்து வந்தனர்.20 ஆண்டுகளுக்கு மன்பு சோமசேகர்-வசந்த் ஆகியோரின் பெற்றோர் திடீரென உயிரிழந்தனர். அப்போது சோமசேகருக்கு 4 வயது, வசந்துக்கு 2 வயது ஆகும். ஆனால் அவர்களை குடும்பத்தினர் யாரும் வளர்க்க முன்வரவில்லை. இதனால் மெகபூப்-நூர்ஜன் தம்பதி மனிதநேயத்துடன் சோமசேகரையும், வசந்தையும் […]

மகா சிவராத்திரி- 3 நாட்களுக்கு சிறப்பு பஸ் இயக்கம்

மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, 12.02.2026 (வியாழக்கிழமை), 13.02.2026 (வெள்ளிக்கிழமை), 14.02.2026 (சனிக்கிழமை) மற்றும் 15.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும், இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் […]

பால் குடித்து கொண்டிருக்கும்போது மூச்சுத்திணறி 9 மாத குழந்தை பலி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரம் பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த சுனில்- சீதா தம்பதியினர் கனகம்மாசத்திரம் பஜார் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரித்திஷா என்ற ஒன்பது மாத பெண் குழந்தை இருந்தது. தாய் சீதா குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தபோது திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக பெற்றோர் குழந்தையை கனகம்மாசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த […]

குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வௌியீடு… டிஎன்பிஎஸ்சி

குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. குரூப்-2 பணியிடங்களுக்கான தாள்-II பொது அறிவு தேர்வு வரும் 22ம் தேதி முற்பகல் நடைபெற உள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

UNICEF – OECD இடையே தமிழ்நாடு அரசு முத்தரப்பு ஒப்பந்தம்!

தமிழ்நாடு அரசு, யூனிசெஃப் (UNICEF) புதுமை அலுவலகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) ஆகியவற்றுக்கிடையே செயலாற்றும் வகையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தந்த்தின் மூலம் தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் புதுமைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சியை நோக்கமாக கொண்ட ஆளுகைக்கான சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. ஜனவரி மாதம் 05ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரும், மாநில திட்டக் குழுவின் தலைவருமான மு.க. ஸ்டாலின், மற்றும் மாநிலத் திட்டக் குழுவின் அலுவல் சார் […]

கத்தரிக்காய் விலை கடும் வீழ்ச்சி..விவசாயிகள் கவலை

தென்காசி, ஆலங்குளத்தில் கத்திரிக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஜனவரியில் 40 கிலோ மூட்டை ரூ.3000 வரை விற்பனையான கத்திரிக்காய் தற்போது ரூ.300 வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கத்திரிக்காய் விளைச்சல் அதிகரித்தாலும் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கருப்பண்ணசாமிக்கு அரிவாள் காணிக்கை செலுத்திய அன்புமணி

மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் மற்றும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி கோவிலுக்கு 11 அடி நீள அரிவாளை காணிக்கையாக செலுத்திய அன்புமணி ராமதாஸ், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தங்களது கூட்டணி அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது […]

விதிமுறையை மீறினால் கடும் நடவடிக்கை.. தவெக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை

திருவண்ணாமலை : மாவட்டம், வந்தவாசி கிழக்கு பகுதியில் தமிழக வெற்றிக் கழக (தவெக) மாவட்ட செயலாளர் உதயகுமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தொண்டர்கள் 3 கிலோமீட்டர் தூரம் சாலை வலம் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நெரிசல் மிகுந்த பகுதியில் கிரேன் மூலம் உயரத்தில் ஏற்றி மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனால் சாலை போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் முழுமையாக பாதிக்கப்பட்டது.இந்த நிகழ்வால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் […]

இதற்கெல்லாம் பதில் சொல்வது எனக்கு அசிங்கம்”- ராமதாஸ்

இதற்கெல்லாம் பதில் சொல்வது எனக்கு அசிங்கம் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். ஜிகே மணி துரோகி என்று அன்புமணி விமர்சனம் குறித்த கேள்விக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இவ்வாறு பதிலளித்தார். திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர்,மருத்துவர் ராமதாஸ், “கூட்டணி தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை. முடிவு எடுக்கப்படும். முடிவு எடுப்போம். பேசிக் கொண்டிருக்கிறோம். டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணி தொடர்பாக, சில கட்சிகள் தொடர்பில் உள்ளனர் […]

மும்பை மாநகராட்சி மேயராக ரிது தாவ்டே போட்டியின்றி தேர்வு

நாட்டின் வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் முக்கிய நகராக மராட்டியத்தின் மும்பை இருக்கிறது. இந்நிலையில், மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, மும்பை மாநகராட்சி மேயராக ரிது தாவ்டே போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மும்பை மாநகராட்சியின் துணை மேயராக சஞ்சய் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதுபற்றி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, மும்பை மாநகராட்சி மேயராக ரிது தாவ்டேவும், துணை மேயராக சஞ்சய் காந்தியும் […]

விஜயுடன் திவாகரன் சந்திப்பால் பரபரப்பு- சசிகலா அதிரடி திட்டம்

தமிழ்நாட்டில் சட்டமன்ற பொது தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என விமர்சித்து வந்த அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன், திடீரென அதிமுக – பாஜ கூட்டணியில் சேர்ந்து விட்டார். ஓ.பன்னீர் செல்வமும் அதே கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளார். ஆனால் சசிகலா எந்த முடிவையும் எடுக்காமல் இருந்து வந்தார். அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை, ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும், ஒரு முக்கிய தலைவராக பார்க்கப்படுகிறார். சொத்து குவிப்பு […]

அறந்தாங்கி அருகே அரசு பஸ் மோதி 2 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள மணமேல்குடி பகுதியில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து, எதிர்பாராத விதமாகச் சாலையைக் கடக்க முயன்றவர்கள் மீது மோதியது. முருகன் (45) – இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெயர் தெரியாத மூதாட்டி – இவரும் பேருந்து மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். முதற்கட்ட தகவல்களின்படி, சாலையைக் கடக்க முயன்றபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி அவர்கள் மீது மோதியதாகத் தெரிகிறது. விபத்தில் பலியானவர்களின் […]

திண்டுக்கல்-புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு-காளை முட்டி வீரர் பலி

திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் அலங்காநல்லூரை சேர்ந்த பாலகுரு படுகாயம் அடைந்தார். உடனடியாக காயமடைந்த அவரை அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மீட்டு உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தப் போட்டியில் பாலகுரு தவிர, மாடு பிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மேலும் சிலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வழக்கமாக ஜல்லிக்கட்டு […]

ஆன்லைன் பைன் செல்லாது- எங்க மெஷின்ல தான் கட்டணும்- அடாவடி காவலர்

கோவை, கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே இன்று காலை போக்குவரத்து காவல் துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக தனது குடும்பத்தினரை சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்த ஓட்டுநர் ஒருவரை மறித்த போலீஸார், விதி மீறலுக்காக அபராதம் விதித்து உள்ளனர். அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்திக்கொள்கிறேன் என்று அந்த ஓட்டுநர் கண்ணியமாகச் சொல்ல, ஆத்திரம் அடைந்த ஒரு காவலர், “வாய மூடிட்டு போடா… கோபம் வந்துரும், நான் சொல்றத நீ கேக்குறியா […]

அரசியலும்- சினிமாவும் வேண்டாம்-விஜய் வௌிநாட்டிற்கு செல்லவுள்ளார்.. பி.டி.செல்வகுமார்

தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையனை போல ஊழல் செய்த போலி அரசியல்வாதிகள் ஓய்வெடுப்பதர்காக அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.அரசியலும் வேண்டாம் சினிமாவும் வேண்டாம் என்று வெளிநாட்டிற்கே தப்பி செல்ல உள்ளார் விஜய் என நாகர்கோவிலில் பி.டி செல்வகுமார் பேட்டியளித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி செல்வகுமார் அண்மையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு மாநில திமுக வர்த்தகர் அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]

தஞ்சை- மனைவி மீது தீ வைத்து கொன்ற கணவன் கைது

கபிஸ்தலத்தில் பொது மக்கள் அதிகம் கூடும் சாலையில் மனைவியின் மீது கடந்த 28-ஆம் தேதி டீசல் ஊற்றி கொளுத்திய கணவன்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி உயிரிழப்பு. கைது செய்யப்பட்ட கணவர்.. தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியில் வசிப்பவர் ராஜ்குமார் (40) இவரது மனைவி வினோதினி (34) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவி வினோதினி தனது கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் பாபநாசத்தில் […]

தஞ்சை.. 15ம் தேதி 8 தொகுதி இளைஞரணி திமுக நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு-

தஞ்சாவூரில் 8 தொகுதி இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு வரும் 15ந் தேதி நடைபெற உள்ளதையடுத்து மாநாடு பணிகள் தீவிரம் தஞ்சாவூரில் தஞ்சை மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு வரும் 15ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரத்தில் நடைபெற உள்ளது, இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொ ண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார், இதையடுத்து இன்று திருமலை சமுத்திரத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, […]

கூட்டணி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்” -மாணிக்கம் தாகூர்!

சென்னை முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணியில் ஆட்சி பங்கு கோரும் சிலரை மறைமுகமாக சாடியுள்ளார். “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, திமுக + காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலர் இது குறித்து பேசவும் தொடங்கியுள்ளார்கள். அந்த வகையில், நாடாளுமன்ற காங்., கொறடா மாணிக்கம் தாகூர் கூட்டணி ஆட்சியா? […]

காரைக்கால் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா- பந்தல்கால் நடும் விழா

உலக புகழ்பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மார்ச் 06 தேதி‌ காலை 08.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது. முன்னதாக பந்த காலுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. […]

அறிமுக நாயகன் படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு- பிப்.13ல் ”பூக்கி” ரிலீஸ்

விஜய் ஆண்டனி தனது நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப் படங்களைத் தந்துள்ளார். ஆனால், ‘பூக்கி’ அவருக்கு மிகவும் ஸ்பெஷல். காரணம், இப்படத்தின் மூலம் தனது அக்கா மகனான அஜய் தீஷனை (Ajay Dhishan) தமிழ் சினிமாவிற்குப் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். அஜய் தீஷன் ஏற்கனவே சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர் என்றாலும், ஒரு நாயகனாக அவருக்கு இதுதான் முதல் முறை. படத்தின் பாடல்களைத் தானே இசையமைத்ததுடன், படத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் செதுக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான […]

சென்னையில் சீமான் கைது

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பத்தாவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர்களாக அங்கீகரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்களை காலமுறை […]

நிலத்தகராறு..ஓய்வு எஸ்ஐ, 2 மனைவிகள் மீது தாக்குதல்.. பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ,ஜோலார்பேட்டை அடுத்த சின்னமூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவிகள் சித்ரா(50), குணவதி(52). பன்னீர்செல்வம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டின் எதிரே 11 சென்ட் நிலத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இடம் தங்களுக்கு சொந்தம் என்று அதே பகுதியை சேர்ந்த ரவியும் அவரது மகன் அருள்பிரசாத்தும்(32), பன்னீர்செல்வத்திடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் பன்னீர்செல்வம் ஜோலார்பேட்டை போலீசார் பாதுகாப்புடன் சில மாதங்களுக்கு முன் கற்களை […]

ஆரணி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து தம்பதி பலி

திருவண்ணாமலை, ஆரணி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் தம்பதி உயிரிழந்தார். மும்பையில் இருந்து நெல்லை செல்லும் தாதர் விரைவு ரயிலில் சிவகண்டன். மனைவி கலையாசி. 3 பெண் குழந்தைகள் சென்றனர். ஆரணி அருகே ரயில் சென்றபோது சிவகண்டன் கதவு முன்பு நின்று வேடிக்கை பார்த்தபோது தவறி விழுந்தார். கணவன் சிவகண்டனை காப்பாற்ற முயன்ற மனைவி கலையரசியும் ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.

தேமுதிக நிர்வாகியின் மிரட்டல் பேச்சு- பத்திரிக்கையாளர் சங்கம் கடும் கண்டனம்

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப்குமார், மாநிலப் பொருளாளர் இரா.ராம்ஜி ஆகியோர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் அம்பத்தூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி (திங்கட்கிழமை) நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, மேடையில் பேசிய விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த நிர்வாகி மாரி, “கோவம், […]

29 கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை; ஏற்பாடுகள் தீவிரம்

கோவை ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில், வரும் பிப். 15-ஆம் தேதி, சத்குருவின் முன்னிலையில் நடைபெறும் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழாவில் கேரள மாநில மக்களும் பங்கேற்கும் வகையில், கேரள மாநிலம் முழுவதும் உள்ள 29 கோயில்களில் இவ்விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதில் குறிப்பாக 12 கோயில்களில் பங்கேற்பாளர்களுக்கு ‘ருத்ராட்ச தீட்சை’ வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஆதியோகி முன்பு நடைபெறும் இந்த மஹாசிவராத்திரி விழா, […]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 18- அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வளர்ச்சித்துறை அலுவலர்களின் நியமனமான 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து 80-க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]

மணிப்பூரில் வன்முறை : 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிப்பு..!

மணிப்பூர், மாநிலத்தில் உக்ருல் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு லிட்டான் பகுதியில் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நாகா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு ஆயுதக்குழுக்கள் லிட்டான் சரேகாங் கிராமத்தில் பல வீடுகளுக்கு தீ வைத்தன. இதனால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின. வன்முறையால் பல குடும்பங்கள் பாதுகாப்பு கருதி அண்டை காங்போக்பி மாவட்டத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர்.இந்த வன்முறையால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஊரடங்கு […]

விசில் சின்னத்தால்- தூய்மைப் பணியாளரின் விசிலை பறித்த கவுன்சிலர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கி விட்டன. இந்த தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களம் காண உள்ளது. இதனிடையே, அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அண்மையில் விசில் சின்னத்தை ஒதுக்கியது. இதையடுத்து, தவெக பொதுக்கூட்டங்களிலும், பிரச்சாரத்திலும் அக்கட்சியினர் விசில் ஒலி எழுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தவெகவினரின் இந்த செயலை திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில்தான், சிவகங்கையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக, தமிழகம் […]

ஆட்சியில் பங்கு ஒத்து வராது- காங்கிரஸ்-க்கும் தெரியும்-முதல்வர் ஸ்டாலின்

ஆட்சியில் பங்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும், காங்கிரசிற்கும் தெரியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் ஆட்சியில் பங்கு குறித்து பேசி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் உடனான கூட்டணி உறுதியாக உள்ளது என்றும் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த திட்டமிட்ட சதி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

பாபநாசம் புதுமை புனித அந்தோணியார் தேர் திருவிழா..

வனத்தசின்னப்பர், ஆரோக்கியமாதா, அந்தோனியார் திருவுருவ சிலைக்கு சமனசு மாலை போடப்பட்டது.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதுமை புனித அந்தோணி யார் ஆலயத்தின் தேர்பவனி திருவிழா நடைபெற்றது. புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா திருப்பலி பாடல்கள் வாசிக்கப்பட்டு, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று நோய்நொடி இன்றி நீடூடிவாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. திருப்பலி வழிபாட்டில் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஏராளமான கிராமமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து […]

ஓட்டல், பேக்கரி கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு-

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா ஏரியூர் பேருந்து நிலையம், சோளப்பாடி பிரிவு ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் மேற்பார்வையில் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் குழுவினர், ஓட்டல்கள், பேக்கரி மற்றும் டீக்கடைகள், பாஸ்ட் புட் கடைகள், குளிர்பான கடைகள், மளிகை கடைகள், பெட்டிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது விதிமுறைகள் பின்பற்றாமலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட செயற்கை நிறமேற்றிகள் அதிகம் […]

இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி

இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பையில் நாளை நடைபெறும் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனவும், சஞ்சு சாம்சன் ஓப்பனராக களமிறங்க வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து இந்திய அணியுடன் டெல்லி வந்தடைந்த அபிஷேக் சர்மா, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது இல்லத்தில் வீரர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொண்டார். அந்தச் சமயத்தில் […]

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி… 2 பேர் பலி

சென்னை பெரம்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இதில் தற்கொலைக்கு முயன்ற 4 பேரில் 2 பேர் உயிரிழந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரணையில் ரெக்ஸி பியூலா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனவேதனை அடைந்த செபாஸ்டின் கேக்கில் விஷம் தடவி மனைவி, 2 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் […]

பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விறு விறு விற்பனை

பொள்ளாச்சி சந்தையில் நேற்று மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதன்மூலம், ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் நேற்று நடந்த சந்தை நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. மாடுகளை வாங்க கேரள வியாபாரிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால், விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. பெரும்பாலான […]

18 சடலங்களுக்கு இறுதி மரியாதை-எஸ்பியின் நெகிழ்ச்சி செயல்

அடையாளம் தெரியாத, யாரும் உரிமை கோராத 18 சடலங்களுக்கு இறுதி மரியாதை செய்து நல்லடக்கம் செய்யப்பட்டது தஞ்சாவூர் நகர பகுதிகளான கிழக்கு, மேற்கு, தெற்கு , மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கந்தர்வக்கோட்டை காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அடையாளம் தெரியாத மற்றும் இது நாள் வரை உரிமை கோராத ஆண்கள் சடலம் 16, பெண்கள் சடலம் 2 , மொத்தம் 18 சடலங்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் தஞ்சாவூர் வடக்கு வாசல் […]

நடு ரோட்டில் மோதிக்கொண்ட வடமாநில இளைஞர்கள்… பரபரப்பு

கோவை காந்திபுரத்தில் நடு ரோட்டில் வடமாநில இளைஞர்கள் மோதிக் கொண்ட காட்சிகள் வைரலாகி வருகின்றது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை நகரில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஏராளமான வட மாநில இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில்காந்திபுரம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் மோதிக்கொண்டனர். வடமாநில இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி ஒருவரை மற்ற வடமாநில இளைஞர்கள் தாக்கினர்.மாறி மாறி பெல்ட்டை […]

தொகுதி பங்கீடு… திமுகவின் திட்டம் என்ன?..

பிப்.22ல் தொகுதிப் பங்கீடு பேச்சை தொடங்கும் திமுக மார்ச் முதல் வாரத்திற்குள் முடிக்கத் திட்டம். போட்டி கடுமையாக உள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகள் கேட்டாலும் தாங்களே களம் காண திமுக முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் குழுவை அமைத்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவாரத்தை தொடங்கும் திமுக. தொடர் பரப்புரை, மாநாடு, சட்டமன்றத் தேர்தலால் பிப். 22ல் தொகுதிப் பங்கீடு பேச்சை தொடங்குவதாக அறிவித்த திமுக. தொகுதி நிலவரம், சாதக பாதகங்களை ஆய்வு செய்து கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை திமுக […]

மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி

கால் வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறிது நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது; கௌரவ அமைச்சர் துரை முருகன், 87 வயது, கால் வலி காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது, மேலும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழுவால் வார்டில் அனுமதிக்கப்படுகிறார். வலிக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, […]

திமுகவின் அடுத்தடுத்த 3 மாநாடுகள்

• காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் திமுகவின் பிரம்மாண்ட வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு நாளை நடைபெறுகிறது. மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. • இந்த மாநாட்டில் சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த திமுகவின் 15 கழக மாவட்டங்களில் உள்ள 49 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து சுமார் 1.70 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். • திமுக சார்பாக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA2), வாக்குச்சாவடி நிலை குழு உறுப்பினர்கள் (BLC), […]

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலையில் மீண்டும் சரிவு ஏற்படுமா அல்லது தற்போதைய சரிவை பயன்படுத்தி முதலீடு செய்ய வேண்டுமான என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. தங்கம் சுமார் 7% வீழ்ச்சியடைந்துள்ளது. வெள்ளி இன்னும் கடுமையாக சரிந்து 32% வரை இழப்பை சந்தித்துள்ளது. இந்த திடீர் வீழ்ச்சி முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை இரண்டு உலோகங்களும் சிறிய […]

பிப். 12ஆம் தேதி தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு

ஒன்றிய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து பிப்ரவரி 12 அன்று தொழிற் சங்க அமைப்புகள் நடத்தும் வேலைநிறுத்தத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிப்பதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய தொழிற்சங்கங்கள், தொழில்வாரி தொழிற்சங்கங்கள், துறை வாரியான தொழிற்சங்க சம்மேளனங்கள், விவசாய அமைப்புகள் இணைந்து ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத, ஜனநாயக விரோத மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து நடைபெறுகிற வேலை […]

செங்கோட்டையனின் நிலை யாருக்கும் வரக்கூடாது – திண்டுக்கல் சீனிவாசன்

தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தேமுதிகவின் கோரிக்கை தொடர்பாக மாநில அளவில் முடிவெடுக்க முடியவில்லை என்பதால் தேசிய தலைமை பேச்சுவார்த்தை நடத்துகிறது. தேமுதிக உடனான பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும் என அதிமுக, மாநில பாஜக எதிர்பார்க்கிறது. தேமுதிகவை பாஜக அழைத்தாலும், அதிமுக அழைத்தாலும் கூட்டணி எங்களுடன் தான். […]

இந்திய அணியின் வரப்பிரசாதம் சூர்யகுமார்- கம்பீர் பாராட்டு

டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கேப்டன் சூர்யகுமாரை பயிற்சியாளர் காம்பீர் பாராட்டியுள்ளார். இது குறித்து கம்பீர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த வடிவில் என்னுடைய வாழ்க்கையை அவர் மிகவும் எளிதாக்கிவிட்டார். அவர் ஒரு மிகச் சிறந்த அற்புதமான தலைவர் என்று நான் நினைக்கிறேன். களத்தில் அவர் என்ன செய்கிறார் என்பது குறித்தோ, ஒரு பேட்ஸ்மேனாக தனது ஷாட்களை அவர் எப்படி தேர்வு செய்கிறார் என்பது குறித்தோ நான் எதுவும் சொல்லவில்லை. அதையெல்லாம் கொஞ்சம் […]

ஸ்ரீதர் வேம்பு உடனான விவாகரத்து வழக்கு- மனைவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு உடனான விவாகரத்து வழக்கு தொடர்பாக அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். விவகாரத்து வழக்கில் இந்தியாவில் உள்ள சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்ய ஆணையரை நியமிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். கலிபோர்னியாவில் நடக்கும் விவகாரத்து வழக்கில் தனக்கு உதவ ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.தனபால், ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்டுள்ளார். […]

ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகள் இடமாற்றம்- உத்தரவு

ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள், சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் தேர்தல் வர உள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில தலைமைச் செயலாளர்களுக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சட்டம் – ஒழுங்கு நிலைமை சீராக பேணப்பட வேண்டும் என்பதற்காகவும், குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காகவும் முக்கிய நகரங்கள், மாவட்டங்களில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, ஒரே இடத்தில் […]

மணிப்பூர் மாநிலம் உக்ருவில் வன்முறை… மீண்டும் பதற்றம்

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சரேய்கோங் கிராமத்தில் ஆயுதக் குழுக்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆயுதக் குழுக்களின் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தால் டாங்குல் கிராம மக்கள் வெளியேறி வருகின்றனர். குக்கி – மெய்த்தி பிரிவினர் இடையே நீடிக்கும் வன்முறை காரணமாக வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதால் பதற்றம் நிலவியுள்ளது. தற்போது நடந்த வன்முறையில் 9 முதல் 10 வீடுகள் வரை தீக்கிரையானதாக அப்பகுதி மக்கள் தகவல் […]

கோவை-திருப்பூரில் நாளை முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம்

திருப்பூர்: கோவை, திருப்பூரில் நாளை முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம் என திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அறிவித்துள்ளார். கடந்த 3 வாரமாக நூல் விலை கிலோவுக்கு 30 ரூபாய் அளவுக்கு 20 சதவீதம் உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வால் விற்க முடியாமல் 100 கோடி ரூபாய் துணிகள் தேக்கமடைந்துள்ளது. விசைத்தறிக்கு பாவு நூல் கொடுத்து துணியாக நெய்து பெறும் ஜவுளி உற்பத்தியார்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கிவிட்டார் அன்புமணி… பாமக எம்எல்ஏ அருள்

சேலம்: பாமக இணை பொதுச் செயலாளர் அருள் எம்எல்ஏ சேலத்தில் இன்று, நிருபர்களிடம் கூறியதாவது: பொய்யை மட்டுமே வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் அன்புமணி கூட்டம், அதே பொய்யுடன் தேர்தல் ஆணையத்தையும் விலைக்கு வாங்கி உள்ளது. தேர்தல் ஆணையம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு போட்டதில் உள்நோக்கம் உள்ளது. பணத்தை கொடுத்தும், அதிகாரத்தை பயன்படுத்தியும் தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். எங்களிடம் உள்ள ஆவணங்களை வைத்து அன்புமணியை தலைவராக கூறுகிறோம் என்று தற்போது தேர்தல் ஆணையம் தான் […]

அஜித்குமார் கொலை வழக்கு.. நிகிதா கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

மதுரை, மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் பொய்ப் புகார் அளித்த நிகிதா மார்ச் 4ம் தேதி ஆஜராக மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன்கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருடியதாக தொடர்பாக தனிப்படை போலீசார் தாக்கி கொலை செய்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நான்கு தனிப்படை போலீஸ்காரர்கள் ஜாமீன் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் […]

8 வயது சிறுமியிடம் அத்துமீறல்- முதியவர் போக்சோவில் கைது

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சில்லி (எ) சின்னசாமி (81). இவர், 8 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கருவேலமரங்கள் நிறைந்த பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால், சிறுமி கூச்சலிட்டு அழுதுள்ளார். இதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அப்போது அவர்களைப் பார்த்த சின்னசாமி, அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், போலீசார் போக்சோவின் […]

குவைத்தில் சிக்கிய பெண்-12 மணி நேரத்தில் மீட்ட ஜோஸ் சார்லஸ்!

குவைத்தில் சிக்கியிருந்த தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜாவின் மனைவி சத்தியவாணி என்பவரை தனது துரித நடவடிக்கை மூலம் 12 மணி நேரத்தில் மீட்ட LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன், புதுச்சேரியில் இலட்சிய ஜனநாயக கட்சி (LJK) என்ற புதிய கட்சியை டிசம்பர் 2025-ல் தொடங்கினார். இவர் தனது ‘JCM மக்கள் மன்றம்’ மூலம் […]

இந்திய அணி கேப்டனுக்கு தன் ஜெர்சியை பரிசளித்த சச்சின்

16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது.பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, […]

கேசவ விநாயகம் மீது எந்த விமர்சனமும் இல்லை- தமிழிசை

தமிழ்நாடு பாஜகவின் அமைப்புப் பொதுச் செயலராக சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்து வந்த கேசவ விநாயகன் பொறுப்பில் இருந்து விடுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சி சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்தில் இன்று நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் , முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் “தமிழக பாஜகவில் மேற்கொள்ளப்படும் கட்சி ரீதியான மாற்றங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் […]

டி20- நமீபியா அணிக்கு எதிரான போட்டி- நெதர்லாந்த் அணி வெற்றி

டி20 உலகக்கோப்பை தொடரின் 10 வது லீக் போட்டியில் நெதர்லாந்து – நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய நமீபியா 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நெதர்லாந்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வருவாய் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10% பங்களிப்பை ரத்து செய்திட வேண்டும், கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உற்சவரம்பு 5% என்று குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25% என்றவாறு நிர்ணயம் செய்திட […]

வழக்கறிஞர் டூவீலரில் புகுந்த பாம்பு… திருச்சி கோர்ட்டில் பரபரப்பு

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வழக்கமான பரபரப்புடன் இன்று இயங்கியது.வழக்கறிஞர்கள் வழக்காடிகள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டு இருந்தனர். திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கணபதி தனது ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் நீதிமன்றத்திற்கு வந்தார்.காலையில் ஒன்பது முப்பது மணிக்கு புதிய நீதிமன்ற கட்டிடம் முன்பு தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கோர்ட்டுக்குள் சென்றார் 11 மணி அளவில் அவரது ஜூனியர் பதறி அடித்துக் கொண்டு அவரை பார்க்க ஓடோடி வந்தார். அப்போது தங்களது பைக் மீது மோட்டார் […]

நடிகர் ஜெயராம் நேரில் ஆஜராக மீண்டும் ED சம்மன்

கொச்சி: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பான பணமோசடி விசாரணைக்காக ஆஜராகும்படி நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை கேரள காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது. மேலும் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. சிறப்பு புலனாய்வு பிரிவு இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு வழக்குகளிலும் உண்ணிகிருஷ்ணன் போத்தி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முன்னாள் திருவிதாங்கூர் […]

‘ஜனநாயகன்’ சென்சார் விவகாரம் வழக்கு வாபஸ்- ஐகோர்ட் தள்ளுபடி

ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதையடுத்து ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி படத்தை தயாரித்த நிறுவனமான கேவிஎன் புரடெக்சன், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக தணிக்கை சான்று வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் […]

பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு… முதல்வர் பேச்சு

சென்னை: எனக்கு நன்றி சொல்லத் தேவையில்லை; உங்கள் அன்பின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்கிறேன். தேர்தல் பரப்புரை தொடங்குவதற்கு முன்பே தேர்தல் பரப்புரையை கல்லூரியிலேயே தொடங்கிவிட்டார்கள். சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். நானும் எம்.சி.சி. பழைய மாணவன்தான். சிறுபான்மையினருக்கான திட்டங்களை இல்லை என்று கூறாமல் நிறைவேற்றித் தருவதுதான் திராவிட மாடல் ஆட்சி. சிறுபான்மையினருக்கான எஞ்சியுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவோம். இந்த பாராட்டுவிழா எனக்கு கூடுதல் பொறுப்புணர்வை தருகிறது என […]

புதுகை-20 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 20 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய புதிய ஆட்டோக்களை முன்னாள் எம்பி. எம் எம். அப்துல்லா வழங்கினார். இந்நிகழ்வில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் தெய்வானை, மாநகர திமுக செயலாளர் ராஜேஷ் ,திமுக நிர்வாகிகள், மாநகராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (09.02.2026) வருவாய்த்துறை சார்பாக, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கிண்டி வட்டம், கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி மற்றும் அரசுப் பண்ணை, மடுவன்கரை சமுதாய கூடம் ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாக்களில் 158 நரிக்குறவர் பிரிவு பயனாளிகள் உட்பட்ட மொத்தம் 299 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- முதலமைச்சர் அவர்கள் மக்கள் நலனுக்காக […]

2 நாளில் 87 திட்டங்கள் துவக்கம்- கரூரை கலக்கி எடுக்கும் VSB

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 இடங்களில் ரூபாய்24.88 கோடி மதிப்பீட்டில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அருகில் தார் சாலை மற்றும் தார் சாலை மேம்படுத்தும் பணி கணேசா நகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி காமராஜ்புரம் கிழக்கு பகுதியில் தார் சாலை மேம்படுத்தும் பணி மேலும் பாரதி நகர் கோவை மெயின் ரோடு, அண்ணா […]

தவெகவுடன் கூட்டணி- ஜெ.வின் பிறந்த நாளன்று சசிகலா முக்கிய அறிவிப்பு

மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் உயிர் தோழியாக வலம் வந்தவர் சசிகலா. 30 ஆண்டுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நிழலாக தொடர்ந்த அவர், அ.தி.மு.க. உள்கட்சி விவகாரங்களையும் திரை மறைவில் இருந்து கவனித்து வந்தார்.அதனால், அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஜெயலலிதாவை ’அம்மாஎன்றும், சசிகலாவைசின்னம்மா’ என்றும் அழைத்து வந்தனர். 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில், அவரது நிழலாக வலம் வந்த சசிகலா, நிஜ அரசியலுக்குள் நுழைந்தார். 2017-ம் […]

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது- அமைச்சர் மா.சு

தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது; மக்களுக்கு பறவை காய்ச்சல் பரவவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் “முன்னெச்சரிக்கையாக ஆஃப் பாயில் சாப்பிடுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது. இறைச்சிகளை நன்கு வேகவைத்த பிறகே சாப்பிட வேண்டும். காகம், கோழி போன்ற பறவைகள் உயிரிழந்தால் அவற்றை ஆழமாக குழிதோண்டி புதைக்க வேண்டும்” எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

கரூரில் நாதக பொதுக்கூட்டம்.. தவெகவை சரமாரி விளாசிய சாட்டை துரைமுருகன்

கரூரில் 41 பேர் உயிரிழந்த அதே இடத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் – சாட்டை துரைமுருகன் தவெக மீது கடும் விமர்சனம். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் இளைஞர் பாசறை இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் […]

கோவையில் 40 சவரன் நகையுடன் சிக்கிய பலே திருடர்கள்

கோவையின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்கதையாகி வந்த வீடு புகுந்து திருடும் சம்பவங்களுக்கு, நடந்து வந்தது. இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் மணியக்காரர்பாளையம் – புதுப்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே தீவிர வாகனத் தணிக்கை மற்றும் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாகச் சுற்றித் திரிந்த இரண்டு நபர்களைத் தடுத்து நிறுத்தி, போலீஸார் தங்களது விசாரணை செய்தனர். போலீஸாரைக் கண்டதும் முன்னுக்குப் , பின் முரணாகப் பேசிய […]

50 நாட்களுக்கு பிறகே ஓடிடியில் படம் வர வேண்டும்… சரத்குமார் ஸ்பீச்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஆழி’. இந்த படத்தில் இந்திரந்த் ஜெகஜித், தேவிகா, வையாபுரி, தாமரை, பிர்லா போஸ், மைதிலி சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சஜித் கிருஷ்ணன் தயாரிப்பில், மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார்.சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சரத்குமார் பேசினார். அப்போது அவர்,“சினிமா படங்கள், ஓ.டி.டி. படங்கள் என நடிகர்கள் வித்தியாசம் பார்க்கக் கூடாது. எந்த ஊடகமாக இருந்தாலும், அதில் நடித்தால் சிறப்பான […]

இன்றுடன் SIR பணிகள் நிறைவு – இறுதி வாக்காளர் பட்டியல் தேதி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர சரிபார்ப்பு (Special Intensive Revision – SIR) பணிகள் இன்றுடன் (பிப்ரவரி 10) நிறைவடைகின்றன. இந்தப் பணிகள் காரணமாக மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதன்பிறகு தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி பெயர் சேர்ப்பு அல்லது நீக்கம் செய்ய முடியாது. சிறப்பு தீவிர சரிபார்ப்பு பணியின் போது வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 97.37 […]

சிதம்பரம் நடராஜர் கோவில்: சிவகாமி அம்மனுக்கு தங்கக் காசு மாலை காணிக்கை!

பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு அணிவிக்க சென்னையை சேர்ந்த பக்தர் சுப்ரமணியன் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பவுன் தங்க காசு மாலையை வழங்கினார். கோவிலில் உள்ள அவரது கட்டளை தீட்சிதரான ராமலிங்க தீட்சிதர் மூலம் காணிக்கையாக நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலர் சிவசுந்தர தீட்சிதரிடம் வழங்கினார்.இந்த காசு மாலை நேற்று காலை பூஜையின் போது சிவகாமி அம்மனுக்கு பொது தீட்சிதர்களால் அணிவிக்கப்பட்டது.

சிக்கிமில் மீண்டும் நிலநடுக்கம்: அதிகபட்சமாக 3.4 ஆக பதிவு

சிக்கிம் மாநிலம் நாம்சி பகுதியில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. அதிகாலை 2.32, 4.25, 5.38 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் முறையே 3.3, 3.4, 3.3 என பதிவானது. சிக்கிமில் நாம்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் 11 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

சட்டப்போராட்டத்திலிருந்து பின்வாங்கிய ”ஜனநாயகன்”

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கோரிய வழக்கை திரும்பப் பெற்றது தயாரிப்பு நிறுவனம். ஜனநாயகன் திரைப்படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. சென்சார் போர்டின் மறு ஆய்வுக் குழுவை அணுகியுள்ளதால், வழக்கை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டது.

குரூப் 2, 2 ஏ தேர்வு ரத்து… மார்ச் 15ம் தேதி தேர்வு நடைபெறும்

சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 1,188 காலிபணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ மெயின் தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று(08-02-2026) நடைபெற இருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற இருந்த குரூப்-2, 2ஏ மெயின் தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. பின்னர் வேறு தேதியில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், மறுதேர்வு […]

விருப்ப மனு பெற ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்…வெறிச்சோடிய தேமுதிக அலுவலகம்

சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க தேமுதிக நிர்வாகிகள் ஆர்வம் காட்டாததால் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வெறிச்சோடியது. தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வழங்கும் பணியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று முன் தினம் தொடங்கி வைத்தார்.  2 நாட்களாக விருப்ப மனுக்களை தொண்டர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க தேமுதிக நிர்வாகிகள் இன்று ஆர்வம் காட்டவில்லை. இதனால் சென்னை கோயம்பேட்டில் உள்ள […]

திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டம்

தமிழ்நாடு டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்ட நடவடிக்கை குழு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்ட குழு சார்பில் பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை டாஸ்மாக் பணியாளர்கள் 3 மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் 158 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் இன்று அடைக்கப்பட்டது. தொமுச தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒரு சிலர் கடைகளை திறந்து இருந்தனர். திடீரென டாஸ்மாக் கடைகள் […]

தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல்?

 2021 சட்டப்பேரவைத் தேர்தலை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தெரிவித்துள்ளார். கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் வாக்காளர் ஆதரவு வளர்ச்சி அடைந்து வருவதாகவும், இதை கருத்தில் கொண்டு அடுத்த தேர்தலை எதிர்கொள்ள கட்சியினர் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், தேர்தலை முன்னிட்டு கட்சியின் நிலைப்பாடு மற்றும் அமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார். அதே நேரத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள் தங்களை […]

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு…

பாமக வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ள நிலையில், அன்புமணி தரப்பிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் ஜி.கே.மணி மனு தாக்கல் செய்திருந்தார். ஜி.கே.மணியின் வழக்கில் அன்புமணிக்கு எதிராக உத்தரவு வந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையில், பாமக உரிமை கோரல் பிரச்சினை எழுவதற்கு முன்பே கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கல்குவாரிகள் செயல்பட தடை கோரிய வழக்கு- மதுரை கலெக்டர் பதிலளிக்க உத்தரவு

மதுரை மாவட்டம், கல்லாணை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கல்குவாரிகள் செயல்படத் தடை கோரிய வழக்கில் மதுரை ஆட்சியர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச் சூழல் பொறியாளர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. விதிகளை மீறிய குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லாணை சுப்பிரமணியன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை நாளை அடைப்பு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நடை நாளை அடைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் மகா சிவராத்திரி திருவிழா மூன்றாம் நாள் திருநாளை ஒட்டி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு சாமி புறப்பாடு உள்ளதை அடுத்து திருக்கோயில் நடை நாளை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நாளை அதிகாலை 2 மணிக்கு நடை திறந்து அதிகாலை 2:30 மணிக்கு முதல் மூன்று மணி வரை ஸ்படிலிங்க பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து பூஜை […]

தருமபுரி அருகே பட்டாசு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டி டேம் ரோடு பகுதியில் அசோக்குமார் மற்றும் சரவணன் என்பவர்களுக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை மற்றும் கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு மாசிலாமணி என்ற தொழிலாளி வழக்கம்போலப் பட்டாசு தயாரிப்பு மற்றும் இருப்பு வைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாகப் பட்டாசுகள் திடீரெனத் தீப்பற்றிப் பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின.இந்த விபத்தில் சிக்கிய தொழிலாளி மாசிலாமணி உடல் கருகிப் படுகாயமடைந்தார். விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

தஞ்சை அருகே வாழை நார்கள் பிரித்தெடுக்கும் பணிகள் தீவிரம்

காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது மழை குறுக்கிடுவதால் நஷ்டத்தை சந்திப்பதாக வேதனை தெரிவிக்கும் வாழை நார் பிரித்தெடுக்கும் தொழிலாளர்கள்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்றியுள்ள பகுதியிலான அய்யம்பேட்டை, இலுப்பகோரை, வீரமாங்குடி, கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழைத்தோட்டத்தில் வெட்டப்பட்ட வாழை மரங்களிலிருந்து வாழைநார்கள் பிரித்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வாழைத்தார் வெட்டும் பணிகள் முடிவடைந்ததும் வாழை தோட்ட உரிமையாளர்களிடம் இருந்து அந்த வயலை குத்தகைக்கு எடுத்து ஒவ்வொரு வாழை மரமாக வெட்டி எடுத்து, அதிலிருந்து நாரை உரித்து […]

அரியலூரில் தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம் துவக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திருவள்ளுர் மாவட்டம், போளிவாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்ச்சியின் காணொளிக்காட்சி நேரலை அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி, முருகன் திருமண மண்டபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து அரியலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா […]

மக்கள் குறைதீர் கூட்டம்-பொதுமக்களிடம் கத்தி-புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை: மக்கள் குறை தீர்ப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் எடுத்து வந்த கத்தி, புகையிலை பொருட்கள், ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வாரம்தோறும் திங்கட்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். இன்றைய தினம் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொள்வர். அதன்படி இன்றும் சோதனை செய்த பொழுது சில பொதுமக்கள் கத்தி, புகையிலை பொருட்கள், தீப்பெட்டி, பூச்சிக்கொல்லி, இருசக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் ரசாயன பொருட்கள், ஆகியவற்றை எடுத்து வந்துள்ளனர். பெண்கள் சிலர் […]

கோவை- வள்ளி கும்மி அரங்கேற்ற விழா- 5000 பெண்கள் நடனம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டி பகுதியில் உள்ள மைதானத்தில் காராள வம்சம் கலை சங்கதின் சார்பில் 5000 பெண்கள் கலந்து கொண்ட 100வது வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. பொள்ளாச்சி மக்கள் நல சங்கத்தின் நிறுவனர் நித்தியானந்தம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வள்ளி கும்மி நிகழ்ச்சியில் கோவை சிரவை ஆதீனம் குமரகுரு சுவாமிகள் கலந்து கொண்டார். இங்கு நடைபெற்ற இந்த வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சியில் ஒரே இடத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை […]

28 செம்பரி ஆடுகளை அடித்து கொன்ற மர்ம விலங்கு…பரபரப்பு

கோவை, பொள்ளாச்சி அடுத்த மஞ்ச நாயக்கனூர் அருகே சபரி ராஜ் என்பவர் தனியார் தோட்டத்தில் கடந்த பத்து வருடங்களாக தங்கவேல் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார் இவர் பகல் முழுவதும் செம்பரி ஆடுகளை மேய்த்து விட்டு மாலை ஆறு மணி அளவில் தோட்டத்து பட்டியில் கட்டி விடுவதும் மறுநாள் காலையில் ஆடுகளை மேய்ப்பதற்காக அவிழ்த்து விடுவதும் வழக்கமாக உள்ள நிலையில் இன்று காலை ஆறு மணி அளவில் ஆடுகளை மேய்ப்பதற்காக பட்டிக்குச் சென்று பார்க்கும் பொழுது அங்கு […]

கோவை- ஆட்டோ ஓட்டுநர்கள் அராஜகம்..முதிய தம்பதி மீது தாக்குதல்

கோவை, உக்கடம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் அராஜகம் : முதிய தம்பதி மீது தாக்குதல் – அதிர்ச்சி வீடியோ !!! தமிழகத்தின் தென்னிந்திய மான்செஸ்டர் எனப் போற்றப்படும் கோவையில், ஆட்டோ ஓட்டுநர்களின் அராஜகம் இப்போது எல்லை மீறிச் சென்று கொண்டு இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நகரின் மிக முக்கியமான மற்றும் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த உக்கடம் பேருந்து நிலையத்தில், இன்று காலை முதிய தம்பதி ஒருவரை ஆட்டோ ஓட்டுநர்கள் […]

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்… முதல்வருக்கு நன்றி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் தொடர்ச்சியாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி தூய்மை பணியாளர்கள் 291 பேருக்கான காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல், இட்லி, வடை, […]

ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதல்வர் திறந்து வைத்தார்

ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் சிப்காட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை அமைந்துள்ளது.டாடா கார் ஆலைக்கு கடந்த செப்டம்பர் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பணப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 9,000 கோடி முதலீடு செய்துள்ளது. ராணிப்பேட்டையில் முதல் கட்டமாக டாடா நிறுவனம் ரூ.914 கோடியில் தொழிற்சாலை […]

புதுகை அருகே வேன் கவிழ்ந்து விபத்து… 3 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயம்

 புதுக்கோட்டை அருகே வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3குழந்தைகள் உள்ளிட்ட 22 பேர் படுகாயம் அடைந்தனர்.சென்னை காஞ்சிபுரத்தை சேர்ந்த 22 பேர், நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு காரைக்குடி செல்வதற்காக நேற்று காலை சுற்றுலா வேனில் புறப்பட்டனர். இந்த வேனை காஞ்சிபுரத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் ஓட்டினார். தஞ்சாவூர்- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அரியாணிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பிற்பகல் 12 மணியளவில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓர பள்ளத்தில் […]

தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு.. அமைச்சர் முத்துசாமி

தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு தரப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற ஏஜென்சி நியமிக்கப்படவுள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பாக நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

அரசு பள்ளியில் பாம்பு கடித்து +1 மாணவன் பலி- சோகம்

திருவாரூர்- அரித்துவாரமங்கலம் அரசுப்பள்ளியில் பாம்பு கடித்து +1 மாணவன் சிவபிரகாஷ் உயிரிழந்தான். +1 மாணவன் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த முதன்மை கல்வி அலுவலர் சுகப்பிரியா உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் விசாரணை செய்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டது.

விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்?.. செல்லூர் கேள்வி

விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், “ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் விஜயை முதல்வர் ஆக்கலாம். எல்லோரும் தன்னை எம்.ஜி.ஆர். என சொல்லிக் கொள்ளலாம், மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தலுக்கு பின்னர் தவெக என்னவாக போகிறது என்பது இப்போதே தெரிகிறது,”என்றார்.

பறவை காய்ச்சல் பரவல்- பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்

சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்து கிடந்த நிலையில், அவற்றுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பறவைக் காய்ச்சல் எனும் (AH5N1) இன்ஃபுளுயன்சா என்பது பறவைகளுக்கு வரும் நோய். இது, பெரும்பாலும் காட்டில் வசிக்கும் பறவைகள் மத்தியில் பரவக்கூடிய ஒரு வைரஸ். ஆனாலும், வளர்ப்புக் கோழிகள், பிற பறவை மற்றும் விலங்குகளையும் இந்த வைரஸ் தாக்கும். இந்த வைரஸ்களால் மனிதர்களுக்கும் நோய் […]

ஜெயங்கொண்டம்- கேல் ரத்னா உலக சாதனை படைத்த மாணவர்கள்

ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் அருகே கேல் ரத்னா உலக சாதனைக்காக ஒரே நேரத்தில் சிலம்பம் உள்ளிட்ட நான்கு விளையாட்டுப் போட்டிகளை 40 நிமிடத்தில் விளையாடி சாதனை படைத்த மாணவர்கள்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தழுதாழைமேடு தனியார் மெட்ரிக் பள்ளியில் கேர்ள் ரத்னா உலக சாதனை நிகழ்வுக்காக தமிழர் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிக்கான சிலம்பம் மற்றும் தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ் வேலா சங்க நிறுவனர் ஞான சரவணவேல் ராஜ், இந்திரா பப்ளிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் […]

2 மகள்களை கொன்று தாய் தற்கொலை- உருக்கமான கடிதம்..பரிதாபம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சிவசங்கர், ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார். இவரது மனைவி பத்மா(32). இவர்கள் 2 பேரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். இவர்களது மகள்கள் தேஜாஸ்ரீ(7), லாஸ்யா(5). இந்நிலையில் சிவசங்கர் சரியாக வேலைக்கு செல்லவில்லையாம். இதனால் குடும்ப செலவுக்கு பணம் தரவில்லை என தெரிகிறது. இதனால் வேதனையடைந்த பத்மா, நேற்றுமுன்தினம் […]

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் கூட்டம் நடத்த அனுமதி கோரி, தவெக மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் ஆ.பாா்த்திபன் தலைமையில் த.வெ.க. நிர்வாகிகள், காவல் ஆணையர் அனில்குமார் கிரியிடம் கடந்த புதன்கிழமை மனு அளித்தனர். ஆனால், அரசு வழிகாட்டுதல்படி வழிமுறைகள் குறிப்பிடப்படவில்லை என்று தெரித்து அந்த மனு காவல் துறை சார்பில் நிராகரிக்கப்பட்டது. முன்னதாக, சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள காளிகவுண்டம்பாளையம் பகுதி திடலில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு […]

பெரம்பலூர் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த 616 காளைகள்- மல்லுக்கட்டிய 390 வீரர்கள்

பெரம்பலூர் பூலாம்பாடியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 616 காளைகள் சீறிப்பாய்ந்தன. அவற்றை அடக்க 390 வீரர்கள் மல்லுக்கட்டினர். 76 வீரர்கள் காயம் அடைந்தனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் அரசலூர், அன்னமங்கலம், விசுவக்குடி, பூலாம்பாடி, கள்ளப்பட்டி, சில்லக்குடி கொளத்தூர், தொண்டமாந்துறை ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு 2026ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்முறையாக நேற்று வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடி கிராமத்திலுள்ள மேற்குத்திடலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தப் போட்டிகளை […]

நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

டில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மற்றும் ஒன்பது முன்னணிப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மிரட்டல் கடிதத்தில், நாடாளுமன்றத்தைத் தகர்க்கப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, டில்லி காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகம் மற்றும் பள்ளிகளில் பாதுகாப்புப் படையினர் நடத்திய விரிவான சோதனையின் முடிவில், அங்கு வெடிபொருட்கள் எதுவும் […]

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்… VSB துவங்கி வைத்தார்

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதன் ஒரு பகுதியாக, கரூர் வையாபுரி நகர் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், ஆணையாளர் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். பின்னர் […]

சென்னையில் கடும் பனி- 40 விமான சேவை பாதிப்பு

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து கடுமையான பனிமூட்டம் நிலவுவியதால் சுமார் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர், ஐதராபாத், துபாய், புனே உள்ளிட்ட 7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு, கோவை, திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியிலிருந்து, கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலைய பகுதிகளிலும் கடுமையான மூடுபனி […]

தமிழ்நாட்டில் 2 கார் தொழிற்சாலைகள் திறப்பு-டிஆர்பிராஜா தகவல்

 6 மாத இடைவெளியில் தமிழ்நாட்டில் 2வது கார் தொழிற்சாலை திறக்கப்படுவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ஏற்கனவே வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை திறக்கப்பட்ட நிலையில் இன்று டாடா மோட்டார்ஸ் ஆலை திறக்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ், வின்பாஸ்ட் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 2 ஆண்டுக்குள் ஆலைகள் திறக்கப்படுகின்றன. இதுவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் வேகம்,”இவ்வாறு தெரிவித்தார்.

தெரு நாய்கள் கடித்து 35 ஆடுகள் பலி.. பரிதாபம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஞானிபாளையத்தில் தெரு நாய்கள் கடித்ததில் பழனிசாமி என்பவரின் 15 ஆடுகள் பலியாகின. சங்கரன்கோவில் அருகே ஆலடிப்பட்டி கிராமத்தில் நாய்கள் கடித்ததில் 20 ஆடுகள் உயிரிழந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தூய்மை பணியாளர்கள் உணவுத் திட்ட விரிவாக்கம் துவக்கம்

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. திருவள்ளூர் போளிவாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். 24 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள், 480 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1.50 லட்சம் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் 30,000 தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்து ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.15 உயர்ந்து ரூ.300க்கும் விற்பனையாகிறது.

ஜல்லி கற்களால் விபத்து-கூட்டி சுத்தம் செய்த இளைஞர்- பாராட்டு

அரியலூர் புறவழிச் சாலையில் சாலையில் கொட்டிக் கிடந்த ஜல்லிக் கற்களால் விபத்தில் சிக்கிய இளைஞரை கண்டு, பேருந்திலிருந்து கீழிறங்கி சாலையை பல மணி நேரம் கூட்டி சுத்தம் செய்த சென்னை இளைஞரின் மனிதாபிமானம் அனைவரின் பாராட்டுதலுக்குரியதாக அமைந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தைச் சுற்றி பல சிமெண்ட் ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை ஏற்றி வரும் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகளாலும், பெரம்பலூரில் உள்ள மலைகளில் இருந்து வீடு கட்டுவதற்கு தேவையான ஜல்லி ஏற்றி வரும் […]

அதிமுக-பாஜகவை விரட்ட..தமிழ் புலிகள் மாநாட்டில் VSB வேண்டுகோள்

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழ் புலிகள் கட்சியின் மாநில மாநாடு கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடங்கிபட்டி என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கரூர் தமிழ் புலிகள் மாநாட்டில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பேசியதாவது… இந்த மாநாடு வெறும் எழுச்சி மாநாடு மட்டுமல்ல, 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 234 […]

ஆந்திரா முன்னாள் முதல்வரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார். உறவினரின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, தனது சென்னை வந்துள்ளார். ஒய்.எஸ். சுனில் ரெட்டியின் (ஒய்.எஸ். ஜெகனின் தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் மகன்) மகன் சாஹிலின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருக்கிறார். சாஹில் மற்றும் […]

TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிட மாற்றம்!

TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வெங்கடப்பிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதன்மை தேர்வு 8ம் தேதி நேற்று (08.02.2026) நடைபெற இருந்தது. தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு நடைபெற இருந்தது. சென்னையில் 7 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், அரும்பாக்கம் மற்றும் நந்தனம் தேர்வு மையத்தில் குளறுபடி ஏற்பட்டது. அரும்பாக்கம் மையத்தில் தேர்வர்களுக்கான பதிவெண் இல்லை என்று கூறப்படுகிறது. […]

மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் சுரங்கப்பணிகள் நிறைவு… அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், வழித்தடம் 3ல் “நொய்யல்” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது. சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று […]

2026 நீட் நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு..!

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலமே மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் ஒரு முறை நடத்தி வருகிறது. அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு வரும் மே 3-ஆம் […]

வழித்தவறி சென்ற 2வயது குழந்தையை மீட்ட பெண் காவலர்

செங்கல்பட்டு: விளையாடும்போது வழிதவறிச் சென்ற 2 வயது பெண் குழந்தையை பெண் காவலர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே 2 வயது பெண் குழந்தை நேற்று முன்தினம் தனியாக நின்று அழுது கொண்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் லிவியா குழந்தையை மீட்டு ஆசுவாசப்படுத்தினார். பின்னர், மறைமலைநகர் காவல்துறையினர் மற்றும் சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தார். […]

நாதக-வுக்கு சிக்கல்…இந்திய குடியரசு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 2021 சட்டசபைத் தேர்தல் வரை கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின் போது நாதகவுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.இருப்பினும் மக்களவை தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி, 8.19 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி […]

இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்: விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய விவசாயிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார். “இந்திய விவசாய பொருட்களுக்கு அமெரிக்காவில் 0% வரி விதிக்கப்படும். அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட பொருட்களை இந்தியா அனுமதிக்கவில்லை. அமெரிக்க அரிசி, கோதுமை, சர்க்கரை, தினை, வாழைப்பழம், சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்களுக்கு வரிவிலக்கு இல்லை” என்று அவர் கூறினார். இதனால் இந்திய விவசாயிகளின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும் […]

பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவார்; திருக்குறளும் கூறுவார்- துணை முதல்வர் உதயநிதி

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதில், “எந்த அமைப்பு பலமும் கொள்கையும் இல்லாமல் வெற்றுக் கூச்சல் போடும் கூட்டத்தால் எந்த பயனும் இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தேர்தல் வர உள்ளதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவார்; திருக்குறளும் கூறுவார்.ஆனால் எப்போதும் மக்களோடு மக்களாக களத்தில் நிற்கும் தலைவர்தான் முதலமைச்சர் […]

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது

நெல்லை மேலப்பாளையத்தில் வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது செய்யப்பட்டார். மருத்துவ அலுவலர்கள் வலியுறுத்தியும் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அனுப்பவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்ததால் மருத்துவ அலுவலர் புகார் அளித்துள்ளார்.

சென்னையில் 474 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள்

சென்னையில் 474 இடங்களில் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் இலவச ஒப்பனை அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. வரும் ஜூன் இறுதிக்குள் மொத்தம் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் என்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் களஆய்வு மேற்கொண்டு பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை உயரும்…

தமிழகத்தில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 11ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் […]

நடந்து சென்றவரிடம் அரிவாள் முனையில் பணம் பறிக்க முயற்சி

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட திம்மராஜபுரம், கோட்டூர் பகுதியைச் சேர்ந்த காந்தி மகன் மாரியப்பன் (47), வண்ணாரப்பேட்டையில் ஒரு தனியார் ஓட்டல் எதிரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாஸ்கர்(37) என்பவர் மாரியப்பனை வழிமறித்து அவரது சட்டைப்பையில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதற்கு மாரியப்பன் எதிர்ப்பு தெரிவித்ததால், பாஸ்கர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரியப்பனை தாக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்து மாரியப்பன் […]

வெறும் 1 1/2 மணி நேரத்தில் ‘தவெக’ 10,000 விருப்ப மனுக்கள் விநியோகம்…

பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. தலைமை அலுவலககத்தில் நேற்று  விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. முதல் விருப்ப மனுவை கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் சார்பில் கட்சி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த், த.வெ.க. மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் ரூ.100 செலுத்தி தங்களது விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர். சென்னை உள்பட […]

கலைஞர் கனவு இல்லம் திட்டம் – தஞ்சை மாவட்ட கலெக்டர் அப்டேட்

கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் இலவச வீடு பெற விரும்புவோர் பிப்ரவரி 28-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு வீடு கட்டுவதற்கு அரசு சார்பில் ₹3.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்துடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) கழிப்பறை கட்ட கூடுதலாக ₹12,000 வரை நிதியுதவி மற்றும் வேலை நாட்களுக்கான ஊதியம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்: […]

புதுகை- பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம் , பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைபள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சண்முகம் வழிகாட்டுதலில்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் ஆலோசனையின்படி தமிழ்நாடு மது விலக்கு ஆயத்தீர்வுத்துறை மற்றும் புதுக்கோட்டை ரூரல் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன் (RDO) தொண்டு நிறுவனம் மூலமாக பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்கு அப்பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார்.ஆடிஒ தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் குழந்தைவேலு முன்னிலை வகித்தார். உதவி […]

2000 டன் நெல் மூட்டைகள் சேலத்திற்கு அனுப்பி வைப்பு

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட 2000 டன் நெல் மூட்டைகள், கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் சேலத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டன. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரவைக்காக இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீரர்

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப போட்டி டில்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்னபிள் பந்தயத்தில் இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் கலந்து கொண்டார். இதில் சிறப்பாக செயல்பட்ட ருத்ராங்ஷ் பட்டீல் 251.9 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். தங்கம் வென்ற ருத்ராங்ஷ் பட்டீலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

டூவீலரில் கடத்தி வரப்பட்ட டெட்டனேட்டர்கள் பறிமுதல்-2 பேர் கைது

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தாத்தூர் பிரிவு அருகே போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை தணிக்கை செய்ததில் அதில் உரிமம் மற்றும் அனுமதி இன்றி பாறையை உடைக்கும் வெடிபொருளான டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை அடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த சேலம் பகுதியைச் சேர்ந்த சிவா (40).செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (39) ஆகிய இருவரை கைது செய்த போலீசார் […]

5வது நாளாக அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

ஐந்தாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள்..! போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் கும்மி அடித்தும் ஒப்பாரி வைத்தும் கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்..! போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவை அதே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தயார் செய்து வருகின்றனர்..! பந்தல் அமைத்து சத்துணவு ஊழியர்கள் போராட்டம் மேற்கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பந்தல் திடீர் என்று சாய்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு […]

ஒன்றிய அரசை கண்டித்து- திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து பிப்ரவரி 12ம் தேதி மாநிலம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளன. இது தொடர்பான அறிவிப்பில், “ஓன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் – நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் – அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக […]

பாதிக்கப்பட்ட சிறுமியின் 30 வார காலக் கருவை கலைக்கலாம்- சுப்ரீம் கோர்ட் அனுமதி

கருவை கட்டாயமாக சுமக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மும்பையை சேர்ந்த சிறுமி ஒருவரின் 30 வார கருவை கலைக்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பெண்ணை அல்லது ஒரு சிறுமியை கட்டாயமாக கருவை சுமக்க உத்தரவிட முடியாது என சிறுமிக்கு 30 வார கருவை கலைக்க உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், குழந்தை பெற்றுக்கொள்ள பெண் விரும்பவில்லையெனில் கோர்ட் அதனைக் கட்டாயப்படுத்தக்கூடாது. விசாரணையின் போது சம்மந்தப்பட்ட சிறுமியின் […]

பிப்.,17-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக நெல்லையில் சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 26/1 கீழ் சட்டமன்ற பேரவையின் அடுத்தக்கூட்டத்தொடர் பிப்ரவரி 17-ந் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை வளாகத்தில் கூட்டியுள்ளேன். அன்றைய தினம் 2026-27 இடைக்கால நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் வாசிப்பார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 2026 பிப்ரவரி 20-ந் தேதி பேரவை விதி 193/1 கீழ் 2026-27 ஆம் […]

தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிழர் பாவாணர் வாழ்க

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் “தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; நானே மரமாக வளர்த்து வருகிறேன்” எனத் தம் தமிழ்ப்பணியை மதிப்பிட்டார் பாவாணர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தைத் தம் வாழ்நாள் கடமையாக எண்ணி உழைத்தார். இந்திய மொழிகளிலேயே வேறு எம்மொழிக்கும் இல்லாத சிறப்பாகத் தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிழர் பாவாணர் வாழ்க!”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் – டிரான்ஸ்பார்மரில் இருந்து காப்பர் கம்பிகள் திருட்டு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி துணை மின் நிலையத்துக்குட்பட்ட கொளக்காநத்தம்-சாத்தனூர் சாலையில் காட்டுப்பகுதியில் ஒரு டன் எடை கொண்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கிருந்து விவசாய வயல்களுக்கு மின் இணைப்பு செல்கிறது. இந்நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் இந்த டிரான்ஸ்பார்மரை இடித்து தள்ளி சேதப்படுத்தினர். இதனால் மின் இணைப்பு கூட்டானது. அதன்பின்னர் டிரான்ஸ்பார்மரிலிருந்த 75 கிலோ காப்பர் கம்பிகள், 225 லிட்டர் டிரான்ஸ்பர் ஆயிலை திருடி சென்று விட்டனர். தகவலறிந்து வந்த கொளக்காநத்தம் மின் வாரிய உதவி […]

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு- நடிகர் ஜெயராமுக்கு ED நோட்டீஸ்

 சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் சபரிமலை தங்க கவசங்களை வைத்து பூஜை நடத்தியதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது அரசியல் அல்ல, ஆர்வக்கோளாறு”-பாமக நிர்வாகி திலகபாமா!

சென்னை : பாமக நிர்வாகி திலகபாமா, தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) திரைத்துறையை நோக்கி பயணிக்கும் ஒரு ஆர்வக்கோளாறாகவே தான் பார்ப்பதாக தெரிவித்துள்ளார். “ரசிகர் கூட்டம் ஓட்டாக மாறாது” என்றும், விஜய்யின் வருகை தற்காலிக ஆர்வத்தை ஏற்படுத்தினாலும், அது நீண்டகால அரசியல் வெற்றியாக மாறுவதற்கு சாத்தியக்குறைவு என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். திரைப்பட ரசிகர்களின் ஆதரவு வாக்காக மாறுவதற்கு காலம் பிடிக்கும் என்றும், அது உடனடியாக நடக்காது என்றும் அவர் விளக்கினார். திலகபாமா மேலும் கூறுகையில், தவெக தேர்தலில் […]

ராமதாஸை இணைத்தால் திமுக கூட்டணியில் இருந்து விசிக வௌியேறுவோம்.. திருமா.,

சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இருப்பினும் திமுக கூட்டணியிலும் கருத்து வேறுபாடுகள் வரத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் பாமக ராமதாஸ் அணியை திமுக கூட்டணியில் இணைத்தால், விசிக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும். எங்கள் கொள்கையில் சமரசம் கிடையாது என்று திருமாவளவன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் தனியார் […]

பஸ்சில் பெண்ணிடம் ரூ. 1.90 லட்சம் பணம் மர்ம நபர் கைவரிசை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி சித்திரைகனி (40). இவர் நேற்று தனது குடும்ப தேவைக்காக அரசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகையை ரூ.1.90 லட்சத்துக்கு அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். பின்னர் அந்த பணத்தை துணிப்பையில் வைத்துக்கொண்டு திசையன்விளைக்கு புறப்பட்டார். உடன்குடியில் இருந்து திசையன்விளைக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறி சென்றார். அப்போது பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சித்திரைகனி நின்றவாறு பயணித்தார்.திசையன்விளைக்கு சென்றதும் பஸ்சில் இருந்து […]

இஸ்லாமாபாத் தாக்குதல் – இந்தியா கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதல் கடுமையான வெடிபொருள் கொண்ட தற்கொலைத் தீவிரவாதியால் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலின் போது மசூதியில் தொழுகைக்காக கூடியிருந்த பலர் பலியாகினர். இச்சம்பவம் பாகிஸ்தானில் பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் தீவிரமாக உள்ளதை மீண்டும் நிரூபித்துள்ளது.தாக்குதலுக்கு பொறுப்பேற்று இதுவரை எந்த அமைப்பும் அறிவிப்பு வெளியிடவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் அரசு இத்தாக்குதலுக்கு இந்தியாவை மறைமுகமாக குற்றம் சாட்டி […]

கரூர் மாற்று கட்சியினர் VSB முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

கரூரில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பலர் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நபர்கள், தாங்கள் சேர்ந்திருந்த கட்சிகளில் இருந்து விலகி, திமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆன செந்தில் பாலாஜி முன்னிலையில் இணைந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட திமுக முக்கிய […]

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியீடு

வாஷிங்டன்: இந்தியா மீதான வரிகள் குறைக்கப்பட்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா மீது விதித்த 25% அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து. இந்தியா மீண்டும் ரஷ்ய எண்ணெயை வாங்கினால் வரிகள் விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா மீது 50%ஆக இருந்த வரி தற்போது 18% குறைக்கப்பட்டது. இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையும் வெளியானது. இந்தியா-அமெரிக்கா வர்த்தக […]

பாக்யராஜுடன் சோனியா அகர்வால் நடிக்கும் புது படம்

சோனியா அகர்வால், கே.பாக்யராஜ், லிவிங்ஸ்டன், ஜோவிதா லிவிங்ஸ்டன், ‘அருவி’ மதன், அமுதவாணன், ஆதர்ஷ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ரபிக் பாட்சா முக்கிய கேரக்டரில் அறிமுகமாகும் படம், ‘டார்க் ஜெயண்ட்’. இதை கே.எஸ்.கிஷன் இயக்குகிறார். சங்கீத் மணிகோபால் ஒளிப்பதிவு செய்ய, விக்னேஷ் ராஜா இசை அமைக்கிறார். பயோவன் கிரியேஷனிசம் சார்பில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் லோகேஸ்வரன் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையத்திலும், சென்னையிலும் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது. மாறுபட்ட ஹாரர் திரில்லர் […]

அரியலூர்-காட்டுப்பன்றியை வேட்டையாடுவதாக தகவல்… வனக்காவலர் மீது தாக்குதல்

அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் ஊராட்சிக்குட்பட்ட மருதையாற்றின் அருகே, பழைய கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றியை, ஒரு கும்பல் வேட்டையாட முயல்வதாக கிடைத்த தகவலையடுத்து, வனத்துறை காவலர் விசுவநாதன் என்பவர் உடனடியாக இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்றுள்ளார். மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வந்த சூழலில், அதில் வேலை செய்த பணியாளர்கள் பொதுப்பணி துறையினர் மூலமாக, வனத்துறைக்கு காட்டுப்பன்றி பழைய கிணற்றில் விழுந்து கிடப்பதாக, தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரிலேயே விசுவநாதன் சம்பவ இடத்திற்கு […]

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிப்பு

தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதியன்று செய்தித்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.அதன்படி, 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான நடிகை எம்.என். ராஜம் அவர்கள், சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, 1949-ல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமான […]

தங்கம் விலை மேலும் உயர்வு

தமிழகத்தில் நேற்று (பிப்.06) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,250க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,000க்கும் விற்பனையானது.இந்நிலையில், இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.14,420க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360க்கும் விற்பனையாகிறது.மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.285க்கும் கிலோ வெள்ளி ரூ.5000 உயர்ந்து ரூ.285,000 க்கு விற்கப்படுகிறது.

கோவை அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டியானை.. போராடி மீட்பு

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கும் உட்பட்ட வில்லோனி மேல் டிவிஷன் பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய தண்ணீர் தொட்டியில் காலை 6 மணி அளவில் அவ் வழியே சென்ற குட்டி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவிய நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பதற்காக பிளம்பர் சென்றபோது யானை குட்டி கிணற்றில் விழுந்து கிடப்பதை கண்டுள்ளார் அருகில் இருந்த யானை அவரை துரத்தியதால் மயிரிழையில் உயிர் தப்பினார் தகவல் […]

கோயில் குடமுழுக்கு- யாருக்கும் முதல் மரியாதை கூடாது- ஐகோர்ட் அதிரடி

மதுரை: கோயில் குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாவட்டம் மேலப்பனங்காடி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில், முனியாண்டி சுவாமி கோயில், அருள்மிகு கருப்பசாமி கோயில், முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கை நடத்துவதற்காக முத்தரையர், மறவர், மற்றும் ஆதி திராவிடர் சமூக உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்க உத்தரவிட வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த […]

உபியில் SIR பணி- ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

உத்தரப்பிரதேசத்தில் SIR பணிகளை மேற்கொள்ள கால அவகாசம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தஞ்சை அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

தஞ்சாவூர் அருகே வல்லம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் அருகே வல்லத்தில் செயல்பட்டு வருகிறது அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இங்கு பயிலும் மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சிவசங்கரி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, செல்வக்குமார் ஆகியோர் மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர். இதில் வல்லம் பேரூர் நகர செயலாளர் டி.கே.எஸ்.ஜி. கல்யாணசுந்தரம், பெற்றோர் ஆசிரியர் சங்க […]

மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்வு

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,040 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற்பகலில் தங்கம் விலை ரூ.1,040 உயர்ந்தபோதிலும் நேற்றைய விலையை இன்று ரூ.560 குறைவு.

குடியரசு தலைவரின் உரைக்கு பிரதமர் பதிலுரை தராதது ஜனநாயக தலைக்குனிவு- திருமா.,

புதுடெல்லியிலிருந்து நேற்றிரவு ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் வந்திறங்கினார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றாமல் நிறைவேற்றப்பட்டு இருப்பது, இதுதான் முதன்முறை. மேலும், எதிர்க்கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவரை பேசவிடாமல் தடுத்து பதற்றத்தை உருவாக்கி, ஆளுங்கட்சியினர் மட்டுமே ஒன்றுகூடி அத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். குடியரசு தலைவரின் உரை தொடர்பான தீர்மானத்துக்கு பிரதமர் […]

சென்னை ஏர்போட்டில் உயர் ரக கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.23 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்தனர். தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் கடத்திவரப்பட்ட 23 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை பறிமுதல் செய்தது. பதப்படுத்தப்பட்ட உணவு பொருள், சாக்லெட் பாக்கெட்டுகளுக்குள் மறைத்து கடத்தி வந்த கஞ்சாவை சுங்கத்துறை கைப்பற்றினர். கஞ்சாவை கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த 6 இளைஞர்களை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு ரூ.15 கோடி மதிப்புள்ள 15 […]

இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்போம்-பெ.சண்முகம் ஸ்பீச்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளை (10 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகள்) கேட்க உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2021 தேர்தலில் கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், இம்முறை கணிசமான தொகுதிகளை எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். பெ.சண்முகம் மேலும் தெரிவித்ததாவது, “திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி இரட்டை இலக்க தொகுதிகளை கேட்கும். விரைவில் தொகுதிப் பங்கீடு […]

கோவை-மாரியம்மன் திருக்குட நன்னீராட்டு விழா… அன்னதானம் வழங்கல்

கோவை காசி நஞ்சேகவுண்டன் புதூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் ஆறு கால யாகங்கள் நடத்தி கோவில் கோபுரம், மற்றும் இராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் நடைபெற்றது. கோவை காசி நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில். இக்கோவிலில் விநாயகப் பெருமான், […]

ஜெயங்கொண்டம்.. ரூ. 25 கோடியில் அரசு மருத்துவமனை திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் மற்றும் ரூ.6.26 கோடி மதிப்பீட்டில் 20 முடிவுற்ற திட்டப்பணிகளையும்திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு வசதிகளுடன் கூடிய 100 படுக்கை வசதிகள் […]

கணவனை கொடூரமாக கொன்ற மனைவி-திருவாரூர் அருகே சம்பவம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பிப்ரவரி இரண்டாம் தேதி கீராந்தி பகுதியில் உள்ள வடிவாய்க்கால் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்  ரத்த காயங்களுடன் போலீசார் மீட்டனர். விசாரணையில் அவர், பொன்னிரை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததால் போலீசார் இது கொலையாக இருக்கலாம் என்று  தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இறந்த சுப்பிரமணியனின் இரண்டாவது மனைவி இந்திராவுக்கும், புஞ்சையூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் […]

WPL 2026-2வது கோப்பை…சாதனை படைத்த பெங்களூர் மகளிர் அணி!

பெங்களூர் முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) உரிமையாளர் விஜய் மல்லையா, RCB பெண்கள் அணி WPL 2026 தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். X (முன்பு ட்விட்டர்) தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்: “RCB பெண்கள் WPL அணிக்கு இதயத்திலிருந்து வாழ்த்துகள். தொடர்ச்சியாக இரண்டாவது சாம்பியன்ஷிப். நன்கு சம்பாதித்தது, நன்கு வென்றது. RCB ஆண்கள் அணிக்கும் இது உத்வேகமாக அமையும். அவர்களும் கோப்பையை தக்க வைத்துக்கொள்ளட்டும்.” இந்த வெற்றி RCB அணிக்கு […]

60 தொகுதி முதல் 70 தொகுதி வரை.. பிப். 14ம் தேதிக்குள் யாருடன் கூட்டணி- கிருஷ்ணசாமி

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, “மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களுடைய வாழ்வாதாரத்தை மாஞ்சோலையிலேயே நிலைநாட்டித் தர வேண்டும் எந்த காரணத்திற்காகவும் உங்களை வெளியேற்றக் கூடாது என்று சட்ட ரீதியாக போராடி வருகிறார்கள். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்து அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென தேசிய மனித உரிமை ஆணையமும் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தமிழ்நாடு அரசுக்கும் தலைமைச் […]

புதிய ”ட” வடிவ மேம்பாலம்… அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய ‘ட’ வடிவ மேம்பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். வரும் 16ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பாலத்தை திறந்து வைக்க உள்ளார் என தெரிவித்தார்.

விருதுநகரில் நாளை இளைஞரணி மண்டல மாநாடு… முதல்வர் அழைப்பு

திராவிட மாடல் கழகத்தை மீண்டும் இளைஞர்களிடம் ஒப்படைக்க இளைஞரணியை தொடங்கியுள்ளோம் என விருதுநகரில் திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு நாளை நடைபெறுவதை ஒட்டி முதலமைச்சர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‘1949ல் இளைஞர்களால் தொடங்கப்பட்ட கட்சிதான் திராவிட மாடல். திராவிட மாடல் கழகத்தை மீண்டும் இளைஞர்களிடம் ஒப்படைக்க இளைஞரணியை தொடங்கியுள்ளோம். திமுகவை வளர்த்த இளைஞர்கள்தான் தற்போது அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். எங்களுக்கு அடுத்தபடியாக திமுகவை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கின்ற பணியை உதயநிதி சிறப்பாக செய்கிறார். திமுக […]

அனைத்து கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17ம் தேதி வெளியிட உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த இறுதிக்கட்ட பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் தமிழ் சினிமா நடிகை உட்பட 9 பேர் கைது

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு வளசரவாக்கம் பகுதியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் நடத்திய விசாரணையில், முதலில் நெசப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (35) என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த போதைப்பொருளை கோபாலபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ்குமார் (31) என்பவர் வழங்கியதாக விக்னேஸ்வரன் தெரிவித்ததை அடுத்து, போலீசார் அவரையும் கைது செய்தனர். இதன்பின் போலீசாரின் தொடர் விசாரணையில், திரைப்பட நடிகை […]

40 கோடியில் குளித்தலை அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்வு-விழாவில் VSB பங்கேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 348 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்கள், நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடங்கள், இந்திய மற்றும் ஓமியோபதி பிரிவுக் கட்டடங்கள், நகர்ப்புற, கிராமப்புற மற்றும் பல்வேறு சுகாதார நிலையக் கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு மாவட்ட […]

மாம்பழம் சின்னம் எங்களுக்கு தான் சொந்தம்… ராமதாஸ் பேட்டி

செங்கல்பட்டு: மாம்பழச் சின்னம் எங்களுக்குதான் சொந்தம் என செங்கல்பட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். மேலும் ‘மாம்பழச் சின்னம் தொடர்பாக நீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவாகதான் தீர்ப்பு வெளியாகும்.கூட்டணி தொடர்பான பேச்சு நடந்துவருகிறது; விரைவில் நல்ல செய்தி வரும்’ எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் களத்திற்கு வந்தால், அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல – வெறும் ‘0’தான்- ஈபிஎஸ்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆனைக்கு அறம்’ என்றால் ‘குதிரைக்கு குர்ரம்’ என்று சொல்வதையும், ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்–கொட்டைப் பாக்கின் விலை சொல்வதையும்’ வாடிக்கையாகக் கொண்ட தமிழகத்தின் ‘பொம்மை முதலமைச்சர்’ மு.க.ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில்தான் ஸ்டிக்கர் ஒட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால், அரசியல் ரீதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளையும் கார்பன் காப்பி அடிக்கத் தொடங்கியிருப்பது, விலா நோக சிரிக்க வைக்கிறது.2021 தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் ஸ்டாலின் அளித்த […]

அதிமுக நிர்வாகி தலை துண்டித்து கொலை- மதுரையில் சம்பவம்

மதுரை சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 36). அ.தி.மு.க. பிரமுகரான இவருக்கு திருமணமாகி காவியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி அருகே டீக்கடை நடத்தி வருகிறார். தினமும் அதிகாலையில் இவரே கடை திறப்பது வழக்கம். அதன்படி செந்தில்குமார் இன்று காலை கடையை திறக்க சென்றார். அப்போது அங்கு வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமாரை […]

விரைவில் ”நந்தன் 2” பாகம் உருவாகும்

கடந்த ஆண்டு சசிகுமார், சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி நடிப்பில் இரா.சரவணன் எழுதி இயக்கி வெளியான படம், ‘நந்தன்’. இதில் வில்லனாக பாலாஜி சக்திவேல் நடித்திருந்தார். ஜிப்ரான் வைபோதா இசை அமைத்திருந்தார். இப்படம், பட்டியலின மக்கள் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும்போது சந்திக்கும் சிக்கல்களை அழுத்தமான காட்சிகளுடனும், அரசியல் வசனங்களுடனும் சொல்லியிருந்தது. இதனால் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், ‘நந்தன்’ படத்தின் 2ம் பாகம் உருவாகும் என்று இரா.சரவணன் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். […]

டில்லியில் ஆசிரியர்கள் பேரணி- தமிழக ஆசிரியர்கள் பங்கேற்பு

டெல்லியில் நடந்த ஆசியர்கள் கூட்டமைப்பின் பேரணியில் தமிழ்நாட்டில் இருந்து புதுகை மாவட்டம் அரிமழம் ஓணாங்குடி ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்க. விஜயலட்சுமி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

சென்னையில் பறவை காய்ச்சல் அலர்ட்… இறந்த பறவைகளை தொடாதீங்க

சென்னை : அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காக்களில் பறவைக் காய்ச்சல் H5N1 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த வைரஸ் பரவாமல் தடுக்க பல முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முதலாவதாக, காக்கள், கோழிகள் அல்லது வேறு பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தால் அவற்றை மனிதர்கள் வெறும் கையால் […]

பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் கைது!

மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள விஸ்வாஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சீத்தாராமன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி என்பவர் மோசடியான வழியில் தன்னை ஏமாற்றி 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான மனைகளை கிரையம் செய்ததாக மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து ஜெய்பாலாஜி மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அமைச்சரின் உதவியாளர் பொறுப்பிலிருந்து ஜெய்பாலாஜி விலகினார். இந்நிலையில் ஜெய்பாலாஜி மற்றும் அவரது […]

எடப்பாடி முரட்டு அடிமை – தஞ்சையில் உதயநிதி கிண்டல் பேச்சு

தஞ்சையில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் இல்ல திருமணத்தை தமிழ்நாடு துணை முதல் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.பின்னர் அவர் பேசியதாவது:- முதலமைச்சராகப் பொறுப்பேற்று போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான ‘விடியல் பயணத் திட்டம்’. ​அதேமாதிரி தாய்மார்கள் காலையில் எழுந்து பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளை அனுப்ப சிரமப்பட்ட பொழுது முதலமைச்சர் அறிவித்த திட்டம்தான் ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்’. பெண்கள், மகளிர் படிக்க வேண்டும், பள்ளிக்கூடம் படித்தால் போதாது. உயர்கல்வி படிக்க வேண்டும் […]

தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்… உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது X-தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது… தமிழ்நாட்டிற்காகவும் தமிழர் உரிமைக்காகவும் தியாகிகளையும் தீரர்களையும் வாரி வழங்கிய விருதுநகர் மண்ணில் நாளைய தினம் நடைபெற இருக்கிறது கழக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு!. கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்@mkstalin அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காத்துப் புதிய வரலாறு படைக்க, தென் மண்டல தீரர் படையே திரண்டு வாரீர்! கல்குறிச்சி […]

அனைவரும் கொண்டாடும் வகையில் தேர்தல் அறிக்கை அமையும்

விருதுநகர்: “எல்லாத் தரப்பு மக்களும் கொண்டாடும் வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை அமையும் என அதிமுக தேர்தல் அறிக்கை குறித்த கேள்விக்கு விருதுநகரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். திமுகவின் அறிவிப்புகளைதான் ஜெராக்ஸ் எடுத்து அதிமுக அறிவித்துள்ளது.

கரூர்- 2 போக்குவரத்து காவலர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் துயர சம்பவம்: இரண்டு போக்குவரத்து காவலர்கள் சிபிஐ விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு போக்குவரத்து காவலர்கள் மற்றும் […]

ஆஃப் பாயில், பச்சை முட்டை சாப்பிடுவதை தவிர்க்கவும்- சுகாதாரத்துறை அலர்ட்

சென்னை அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக காகங்கள் அதிகளவில் உயிரிழந்து வந்த நிலையில், அவற்றுக்கு வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்த காகங்களின் மாதிரிகளில் ஆய்வு செய்தபோது, அவற்றுக்கு ஹெச்5என்1 கிருமி (H5N1 வைரஸ்) தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது.அடையாறை சுற்றியுள்ள பகுதிகளில் காகங்கள் பறவை காய்ச்சலால் உயிரிழந்ததாக மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் உறுதி செய்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பறவை காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து […]

ரூ.1.50 கோடி அபராதம்… எதிர்த்து விஜய் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2015-16ம் நிதியாண்டில் ரூ.35.42 கோடி வருவாய் என விஜய் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தார். நடிகர் விஜய் வீட்டில் 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றபட்ட ஆவணங்களோடு வருவாய் ஒப்பிடப்பட்டது. புலி படத்திற்கு பெற்ற ரூ. 15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்த வருமான வரித்துறை. வருமானத்தை மறைத்ததாக விஜய்க்கு 2022ல் ஒரு கோடியே 50 லட்சம் […]

கரூர்- என்டிஏ கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு- பரபரப்பு

கரூரில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கரூர்–கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கரூர் சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் என்டிஏ கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில், […]

பெங்களூரு அருகே சுற்றுலா பஸ் தீ விபத்து..உயிர்தப்பிய 30 பயணிகள்

பெங்களூரு-துமகுரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா அருகே கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து மின்சாரக் கம்பியில் மோதி தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. பேருந்திலிருந்து 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.14,120க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280க்கும் விற்பனையாகிறது.

கிளாசிக் ஹிட் ‘பராசக்தி’ OTT ரிலீஸ் – பிப்.,7 ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

சென்னை : சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்  நடிப்பில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம், கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உணர்வு, ஹிந்தி திணிப்பு போராட்டம் குறித்த உணர்ச்சி காட்சிகள் நிறைந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், சென்சார் சான்றிதழ் பெறும் கட்டத்தில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் மற்றும் காட்சிகள் (குறிப்பாக இந்தி திணிப்பு தொடர்பானவை) சென்சார் தரப்பால் நீக்கப்பட்டன அல்லது மாற்றப்பட்டன. […]

தருமபுரி , திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் நான்கு நனைப்பிற்கும், ஒவ்வொரு நனைப்பும் முதல் மண்டலத்திற்கு ஐந்து நாட்களுக்கும், இரண்டாம் மண்டலத்திற்கு ஐந்து நாட்களுக்கும் ஆக 10 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் விட்டும் 5 நாட்கள் நிறுத்தியும் மொத்தம் 55 நாட்களுக்கு 06.02.2026 முதல் 01.04.2026 வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடவும் மீதமுள்ள நீரினை பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு திறந்து விடவும் அரசு ஆணையிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டம், […]

கட்சித் தலைவருக்கான தகுதியை விஜய் வளர்த்து கொள்ள வேண்டும்: நயினார் அட்வைஸ்

சேலம்: ஒரு கட்சி தலைவராக இருந்துக்கொண்டு, கட்சியினுடைய ஆண்டு விழாவில் ஆடுறது தான் விஜய்யின் கொள்கை என பாஜ தலைவர் சாடி உள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்று சொல்லக்கூடிய அளவுக்கு எங்கள் கூட்டணி வலுவாயிருக்கிறது. அண்ணாமலை தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியதற்கு உட்கட்சி பூசல் ஒன்றும் இல்லை. அவருடைய அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால் அடுத்த முறை நான் எல்லா நிகழ்ச்சிக்கும் போறேன்னு […]

அங்கன்வாடி பணியாளர்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை- அரசாணை வெளியீடு

தமிழகத்தில் அங்கன்வாடிகளில் பணிபுரியும் முதன்மை ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2-வது வாரமும், உதவியாளர்களுக்கு 3-ம் வாரமும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 4-வது வாரமும் என பயனாளிகளுக்கு உணவூட்டும் பணிகளுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில் கோடை விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இந்தாண்டு மே 1ம் முதல் மே 31ம் தேதி வரை ஒரு மாதத்திற்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த விடுமுறை காலங்களில் முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு […]

அவைக்கு வர பிரதமருக்கு துணிச்சல் இல்லை-பிரியங்கா காந்தி

அவைக்கு வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். சபாநாயகர் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர், “நேற்று அவையில் 3 பெண் எம்.பி.க்கள் இருக்கைக்கு முன்பு நின்றதால், உள்ளே வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை. சபாநாயகர் பின்னால் ஒளிந்து கொண்டு, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தாக்க முயற்சி என அபத்தமாக கூறுவதா?; பிரச்னைகள் குறித்து விவாதிக்க அரசு விரும்பவில்லை என்பதே உண்மை,”இவ்வாறு தெரிவித்தார்.

கரூரில் ரூ.6.90 கோடியில் பிரம்மாண்ட புதிய நூலகம்- VSB ஆய்வு

கரூரில், 6 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நூலக கட்டுமான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ரூபாய் 6 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பேட்டியளிக்கையில்; கரூர் […]

83 பேரை அரசு பணியாளராக உருவாக்கிய திருவாரூர் இன்ஸ்பெக்டர்

இன்ஸ்பெக்டரிடம் இலவச பயிற்சி பெற்ற 83 இளைஞர்கள், ராணுவம் & போலீஸுக்கு தேர்வாகியுள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறது. 2-ம் நிலை காவலராக பணியில் சேர்ந்த சதீஸ்குமார் தற்போது திருவாரூரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சுயமாக படித்து இந்நிலைக்கு உயர்ந்த அவர், இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்நிலையில் அவரிடம் பயிற்சி பெற்று தேர்வான 83 பேரையும் SP கருண் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

புதுகையில் நகர்புற நலவாழ்வு மையம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இன்று காணொளி காட்சி வாயிலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ4,778.75 கோடி செலவிலான 183 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 10 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் . அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தேர்வு நிலைப்பேரூராட்சி அமரகண்டான் வடகரையில் ரூ1.20கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்புற நல்வாழ்வு மையத்தினை திறந்து வைத்த நிகழ்ச்சியில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து […]

சீட்டு தராவிட்டால் கட்சி தாவுவேன்- அதிமுக ‘மாஜி’யை மிரட்டும் ஒன்றியம்

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 25க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதில், குத்தாலம் ஒன்றிய செயலாளர் விஜிகே.செந்தில் நாதனும் ஒருவர். இவர் ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்தவர். வரும் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்று இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறாராம். சீட் தராவிட்டால், கட்சி தாவுவேன் என்றும் மிரட்டுகிறாராம். அவசரப்படாதீங்க என்று ஓ.எஸ்.மணியன் அவரை, ஆறுதல்படுத்தி வருகிறாராம். இதுபற்றி மயிலாடுதுறை […]

விபத்தான வண்டியை எடுக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவலர்..

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த தேவன் மகன் சிரஞ்சீவி (24) என்பவரும் அவரது அண்ணனும் கடந்த 2 இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. எதிரே வந்த நபர் விபத்திற்கு பிறகு 3 நாட்கள் கழித்து இறந்து உள்ளார். அதன் பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகனத்தை வெளியில் எடுப்பதற்காக பாதிக்கப்பட்ட வாலிபர் சென்றுள்ளார். அவரிடம் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் ஒருவர் ஏற்கனவே பத்தாயிரம் […]

பிரதமர் மோடியை தாக்க எதிர்கட்சிகள் சதி… சபாநாயகர்

பிரதமர் மோடி மக்களவைக்கு வர வேண்டாம் என மக்களவை சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். சபாநாயகர் ஓம்பிர்லா கூறியதாவது… பிரதமர் மோடி மக்களவைக்கு வர வேண்டாம் என்றேன். நேற்று பிரதமர் மோடியை மக்களவைக்கு வர வேண்டாம் என்று நான்தான் கூறினேன். பிரதமரை தமிழக காங்கிரஸ் ஜோதிமணி உள்ளிட்ட எம்பிக்கள் முற்றுகையிட திட்டமிட்டிருந்ததாக ஓம்பிர்லா குற்றச்சாட்டியுள்ளார். பிரதமரை தாக்க எதிர்கட்சிகள் சதி என இவ்வாறு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் துவங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம், லத்துவாடியில் 89.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 2 இலட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட அதிநவீன பால்பண்ணை, சென்னை, அம்பத்தூரில் 11.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் ஆகிய முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். மேலும், பால் உற்பத்தியாளர்கள், பால் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களில் […]

தலைவர்களை சாடும்போது அமைதி- எடப்பாடி தலைதான் தொங்கியுள்ளது.. அமைச்சர் சேகர் பாபு பதிலடி

சென்னை புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் சாலையில் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டுவரும் கன்னிகாபுரம் விளையாட்டு மைதானத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர், முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், சி.எம்.டி.ஏ சிஇஓ சிவஞானம், சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக் மற்றும் பலர் இருந்தனர். இந்த ஆய்வின்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது; வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் 6000 […]

ஆரணியில் பாஜ., கூட்டத்தில் நிர்வாகிகள் கடும் வாக்குவாதம்…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஐடி விங் மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தை மாநில செயலாளர் சாய்பாபா தொடங்கி பேசினார். அப்போது, சட்டமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் உள்ள நிர்வாகிகள் பூத் வாரியாக தேர்தல் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் சதிஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென கூட்டத்திற்கு வந்து, […]

தேமுதிகவில் நாளை முதல் விருப்பமனு விநியோகம்

தேமுதிக சார்பில் நாளை முதல் பிப் 12ம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என பிரேமலதா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பொதுத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவுக்கு ரூ.15,000, தனித் தொகுதிக்கு ரூ.10,000 கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை பிப்.12ம் தேதி மாலை 5 […]

விவசாய உபகரணங்களுடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை- காங்., போராட்டம்

விவசாய உபகரணங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திடீர் போராட்டம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காந்தியின் பெயரை நீக்கி புதிய பெயருடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதை கண்டித்து, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியர் அலுவலக வாசலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாரியம்மாள் தலைமையில், […]

கரூர் அதிமுக நிர்வாகி VSB முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

மாநிலம் முன்னேற, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் மாவட்ட அதிமுக மருத்துவ அணிச் செயலாளர், மருத்துவர் தர்மேந்திரன் அக்கட்சியிலிருந்து விலகி, தன்னை இன்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார்.

தஞ்சையில் மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகளப் போட்டிகள்

தஞ்சாவூரில் மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகிய ஆகியவை இணைந்து 21 -வது மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் கடந்த 3-ம் தேதி மாலை தொடங்கியது.38 மாவட்டங்களிலிருந்து பார்வை […]

நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க அதிகாரம் உள்ளது- திருச்சி சிவா

நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க அதிகாரம் உள்ளது என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மல்லிகார்ஜுன கார்கே பேச்சுக்கு ஆளும் பாஜக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருச்சி சிவா கருத்து தெரிவித்துள்ளார். மாநிலங்களவை விதி 238ன் படி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரங்களையும் விவாதிக்கலாம். உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கலாம் என முன்னாள் மாநிலங்களவை தலைவர் தன்கர் உத்தரவிட்டுள்ளார். “தன்கர் வழங்கிய உத்தரவு இன்னும் நிலுவையில் உள்ளது, உத்தரவு ரத்தாகும் வரை […]

தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு:பிப். 11-ல் துணைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியத் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு வரும் 11-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழகம் வரும் துணைத் தேர்தல் ஆணையர், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் மற்றும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

கோடம்பாக்கத்தில் அரசு பஸ் மோதி 3 பேர் காயம்

சென்னை கோடம்பாக்கத்தில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் தப்பியோட்டம்.தப்பியோடிய அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனம். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் தரிசனம்

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் தன்னுடைய குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.இரு மகன்களான குகன் தாஸ் மற்றும் பவன் ஆகிய இருவருக்கும் மொட்டை அடித்து நேர்த்திக்கடனையும் செலுத்தி இருக்கிறார். சிவகார்த்திகேயன் உடன் அவரது மனைவி ஆர்த்தி மற்றும் மகள் ஆராதனாவும் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருச்செந்தூர் கோவில் கோபுரம் முன்பு சிவகார்த்திகேயன் பேமிலியாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரு மகன்களான குகன் தாஸ் மற்றும் பவன் ஆகிய இருவருக்கும் மொட்டை அடித்து நேர்த்திக்கடனையும் […]

கோவையில் இந்திய விமானப்படை தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை

கோவை சூலூர் பெரிய குளத்தில் இந்திய விமானப்படை தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை.. பேரிடர் காலங்களில் ஏற்படக் கூடிய தீ விபத்துகளை திறம்படக் கட்டுப்படுத்தும் நோக்கில், கோவை சூலூரில் அமைந்து உள்ள இந்திய விமானப்படைத் தளம் சார்பில் சிறப்பு தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக, தீ விபத்து நேரங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் நீர்நிலைகளில் இருந்து தண்ணீரை எடுத்துச் சென்று தீயை அணைக்கும் முறைகள் செய்முறைப்படுத்தப்பட்டன. இதற்காக, சூலூர் பெரிய குளத்திற்கு வந்த விமானப்படை […]

நினைவாற்றல் திறனில் கல்பாக்கம் மாணவன் உலக சாதனை- குவியும் பாராட்டு

திருக்கழுக்குன்றம், கல்பாக்கத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், அசாத்திய நினைவாற்றல் மற்றும் கற்கும் திறனுக்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, உலக சாதனை படைத்துள்ளான். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், மெய்யூர் பகுதியை சேர்ந்த முகமது அஜ்மல் – ரூபியாபானு என்ற தம்பதியின் மகன் எம்.முகமது ஷாரிக் (5). இச்சிறுவன், கல்பாக்கத்தில் செயல்படும் அணுசக்தி மத்திய பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். சிறு வயதிலிருந்தே இச்சிறுவன் நினைவாற்றல் மற்றும் விரைவாகப் பதிலளிக்கும் வேகம் கொண்டவனாக திகழ்ந்து வருகிறான். […]

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் துவங்கியது

 தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தற்போது சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் ஜனவரி 20ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் […]

நிகிதாவை கைதுசெய்ய வேண்டும்.. அஜித்குமார் தாயார்

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், நிகிதா, அஜித் மீது பொய் புகார் கொடுத்துள்ளார் என கூறியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஜித்குமாரின் தாயார், “என் மகன் மெது பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுளார். அஜித்தை அடித்து கொன்ற 5 காவலர்களும் வெளியே வரக்கூடாது” என கூறியுள்ளார்.

வாய்ப்பு கிடைத்தால் PM-ஐ மாத்திடுவேன்- நடிகர் கிஷோர்

தமிழில் பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் கிஷோர் தனது தனித்துவமான நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். கோலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான அவர்; பிரதமர் மோடி குறித்து பேசியிருக்கும் கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. கிஷோருக்கு தைரியம் அதிகம்தான் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். கன்னட திரையுலகத்தில் அறிமுகமாகி தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் படத்தில் நடித்தவர் கிஷோர். அவர் அப்படத்தில் ஏற்றிருந்த செல்வம் என்ற கதாபாத்திரம் கோலிவுட்டில் வந்த சிறந்த வில்லன்கள் கதாபாத்திரத்தில் ஒன்று. […]

மக்களவையில் தேர்தல் பிரசாரம் போல பேசுகிறார் – மோடியை சாடிய ஜெய்ராம் ரமேஷ்!

டில்லி பாராளுமன்ற Budget கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி தொடர்பாக பெரிய அரசியல் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முன்னாள் இந்திய ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய இன்னும் வெளியிடாத நினைவுக் குறிப்பை மேற்கோள் காட்ட முயன்றபோது அவைத் தலைவர் அதனை தடுத்ததாக கூறப்படுகிறது. பாராளுமன்ற விதிமுறைகளின்படி வெளியிடப்படாத ஆவணங்கள் அல்லது உறுதி செய்யப்படாத தகவல்களை அவையில் பயன்படுத்தக் கூடாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது இந்த […]

அரியலூரில் பரபரப்பை கிளப்பிய முட்டை போஸ்டர்

கடந்த ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவில்லை என திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இன்று அரியலூரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முட்டை என தலைப்பில் குறிப்பிட்டு அதன் கீழே முட்டை படத்தை அச்சிட்டு ‘பாஜக-அதிமுக ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி’ எனும் வாசகங்களுடன் அரியலூரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அரியலூர்- திருச்சி சாலை, அரியலூர் – […]

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

கரூரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார். கரூர் வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, பல் வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரியில் […]

தோல்வி பயத்தில் பேசுகிறார் ஈபிஎஸ்.. செங்கோட்டையன்

கோவை விமானநிலையத்தில் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது.. தோல்வி பயத்தால்தான் எடப்பாடி பழனிசாமி தினமும் ஒரு தேர்தல் அறிக்கையை வௌியிட்டு வருகிறார். தேர்தல் தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிவருகிறார் என்று இவ்வாறு தெரிவித்தார்.

தேமுதிக பிரேமலதா இந்த தொகுதியில் தான் போட்டியிட முடிவு

சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணியில் பங்கேற்று போட்டியிட முடிவு செய்து, தி.மு.க., அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது தே.மு.தி.க.. தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகள் 1 ராஜ்ய சபா சீட் தருவதாகவும், அ.தி.மு.க. கூட்டணியில் 8 தொகுதிகள் தருவதாகவும் தே.மு.தி.க.விடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கும் தே.மு.தி.க., அ.தி.மு.க.விடம் ஒரு ராஜ்ய சபா சீட், ஒரு மத்திய மந்திரி பதவியை கூடுதலாக கேட்கிறது. அதிக தொகுதிகளை தே.மு.தி.க. எதிர்பார்க்க காரணம், அக்கட்சியில் பலர் […]

துபாயில் மாஸ் காட்டும் நடிகர் கார்த்தியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

நடிகர் கார்த்தியின் திரைப்பயணம், இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான ‘பருத்தி வீரன்’ படத்துடன் துவங்கியது. முதல் படத்திலேயே மிகவும் கரடுமுரடான, மண்வாசனை நி றைந்த கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்த கார்த்தி, ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தி ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று, தன் நடிப்புத் திறனை தொடர்ந்து நிரூபித்தார். மேலும் விருமன், ‘பொன்னியின் […]

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு. ஸ்டாலின். தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கைவினைப் பொருட்கள், கைவினைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக கண்காட்சி. கைவினைத் தொழிலில் வாழ்க்கையை அர்ப்பணித்த 10 கைவினைஞர்களுக்கு “வாழும் கைவினைப் பொக்கிஷம்” விருதுகள்

பிப்.28ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்கிறார்

பிப்ரவரி 28ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019இல் அடிக்கல் நாட்டப்பட்டு 2024, மே 22இல் கட்டுமானப் பணிகள் துவங்கின. மதுரையில் ரூ.2021 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் முழு கட்டுமானப் பணியையும் பிப்ரவரி 2027க்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளன.

சென்னை-காகங்கள் இறப்பிற்கு பறவை காய்ச்சல் தான் காரணம்

சென்னை அடையாறில் காகங்கள் இறந்ததற்கு பறவைக் காய்ச்சல் காரணம் என தலைமை செயலருக்கு ஆராய்ச்சி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு கற்றியுள்ள பகுதிகளில் காகங்கள் திடீரென உயிரிழந்த நிலையில் சோதனை நடக்குப்பட்டது. காகங்கள் இறப்புக்கான காரணத்தை அறிய போபாலில் உள் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் சோதனை நடந்தது. இந்த நிலையில் தலைமை செயலருக்கு ஆராய்ச்சி நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், ” […]

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ 3.72 லட்சம் உண்டியல் காணிக்கை

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 3.72 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. அதுவும் தரிசன நேரமும் குறைந்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள்.அந்த வகையில் பிப்.3ம் தேதி மொத்தம் 69,389 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 20,247 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை […]

சிறுமிகளிடம் அத்துமீறல்… சிலம்ப ஆசிரியர் போக்சோவில் கைது

சென்னை நீலாங்கரையில் சிலம்ப ஆசிரியரே மாணவிகளிடம் இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கலைகளைக் கற்றுத் தரும் குருவின் இடத்திலிருந்து கொண்டு, பாதுகாப்பாகத் தன்னிடம் வந்த சிறுமிகளுக்குத் துரோகம் செய்த அந்த ஆசிரியர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீலாங்கரை பகுதியில் சிலம்பப் பயிற்சிப் பள்ளி நடத்தி வந்த திருநாவுக்கரசு (36) என்பவர், அங்கு பயிற்சிக்கு வந்த சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாகத் […]

எரிந்த நிலையில் ஆசிரியர் உடல் மீட்பு… சேலத்தில் பரபரப்பு

சேலம் பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகே வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமசாமி (80), இன்று காலை அவரது வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இன்று காலை ராமசாமியின் வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் உடல் கருகிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் வெளிக்கதவு தாழ்ப்பாள் போட்டுப் பூட்டப்பட்டிருந்தது. ஒருவேளை அவர் தற்கொலை செய்துகொண்டால் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், யாரோ […]

யு.பி.எஸ்.சி தேர்வுக்கு பிப்.24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

டில்லி: 933 யு.பி.எஸ்.சி. காலிப் பணியிடங்களுக்கு மே 24ல் முதல்நிலை தேர்வு, ஆக.21ல் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு பிப்.24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசை கண்டித்து பிப்.,12-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

மத்திய தொழிற்சங்கங்கள் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ. என்.டி.யூ.சி, எல்.பி.எப். உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை கண்டித்து போராட்டம் நடக்கிறது. தொழிலாளர் நலச் சட்டம் அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 4 ஆக சுருக்கி லேபர் கோடு என்று அமைக்கப்பட்டு சட்டங்கள் இருப்பதை கண்டிக்கும் வகையில் போராட்டத்தை தொழிலாளர்கள், விவசாயிகள் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.சுமார் 25 கோடி தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் […]

வாகனங்களை வழிமறித்து சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம்,  வேப்பனஹள்ளி அடுத்த யானைக்கால் தொட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்கின்ற இளைஞரின் பிறந்த நாளை, நேற்று மாலை வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிகுப்பம் கூட்ரோடு பகுதியில் அந்த வழியாக வந்த அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி மேல தாளங்கள் முழங்க , பட்டாசு சத்தத்துடன், சந்தோஷிற்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து சாலையின் நடுவில் டேபிள் போட்டு அதன் மீது கேக் வைத்து வெட்டி அவரின் நண்பர்கள் கொண்டாடி இருக்கிறார்கள். நீண்ட நேரமாக வாகனங்களுக்கு வழிவிடாமல் […]

பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

அதில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், முழுமையாக பொதுமக்களின் சேவைக்காக கட்டணமில்லா டயாலிசிஸ் மையம் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு மையம் ஒன்றை தொடங்கி வைத்தார். அதேபோல், பொழுதுபோக்கிற்காகவும் உடற்பயிற்சிக்காகவும் ஏரியை ஒட்டி விரிவான அளவில் ஒரு பூங்காவையும் திறந்து வைத்தார். தற்போது நாம் இருக்கும் இந்தக் கட்டடம், சென்னை மாநகராட்சியின் சார்பில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடக் கட்டடமாகும். இது சுமார் 14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. முழுமையாக குளிரூட்டப்பட்ட இந்த அரங்கில் 600 நபர்கள் அமர்ந்து […]

பொருளாதார சூறையாடலை அமெரிக்க நடத்த இந்தியாவின் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறார் மோடி 

வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடமிருந்து விவசாய பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யும் என்ற ஒன்றிய பாஜக அரசின் முடிவு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்கா உமியை நமக்கு கொடுத்துவிட்டு நம் நாட்டின் வளத்தை ஊதி ஊதி சாப்பிடப் போகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் அடிபணிந்து கிடக்கிறார் பிரதமர் மோடி என்று அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்; “நீ அரிசி கொண்டுவா நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் […]

அதிமுகவுடன் இணையும் தேமுதிக?- 14 இடங்கள் கேட்பதாக தகவல்

தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெறாத நிலையில், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈபிஎஸ் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கூட்டணியில் வருவதற்கு தேமுதிக 14 இடங்கள் கேட்பதாகவும் கூறப்படுகிறது. மரியாதை கிடைக்கும் இடத்திலேயே கூட்டணி அமைக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் கூறிவந்த நிலையில், இருதரப்பிலும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓரிரு நாளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்து தொகுதி உடன்படிக்கை […]

“ஓட்டையும், நாட்டையும் இந்த கமல் விற்கமாட்டான்”- ராஜ்யசாபாவில் கர்சித்த கமல்

மாநிலங்களவையில் குடியரசுலைவர் உரைக்கு நன்ற் தெரிவிக்கும் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய கமல்ஹாசன், “எனது அன்பு நண்பர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றி. நான் சினிமா என்னும் வழியில் தான் வந்திருக்கிறேன் தமிழ்நாட்டின் பரமக்குடி என்று சிறிய ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவன் நான். இந்தியா என்பது மாநிலங்களால் இணைந்த ஒரு நாடு. அதுதான் இந்திய அரசியல் சாசனமும் வகுத்துக் கொடுத்திருக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள […]

திருச்செந்தூரில் ஓபிஎஸ் மவுன விரதம்

தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மௌன விரதம் இருந்து வழிபாடு நடத்துவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானம் நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்துவிட்டு சென்றார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது எந்த கட்சியுடன் கூட்டணி குறித்து பேசாத நிலையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமானை தரிசனம் செய்து நாளை வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மௌன விரதம் இருப்பதற்காக சென்னையில் இருந்து இன்று மாலை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு […]

சென்னையில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3233 சார்பில் சென்னை, கே.கே. நகரில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’ நடைபெற்றது. ‘டீம் கேன்சர் கேர்’ (Team Cancer Care) அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், நகரின் அங்கீகரிக்கப்படாத நாயகர்களான 300-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மூலம் பயனடைந்தனர். தலை முதல் கால் வரை […]

கிராம ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு

கிராம ஊராட்சி தூய்மைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைக் காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் மாத ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த விரிவான அரசாணையை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,கிராம ஊராட்சிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் தூய்மைக் காவலர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் […]

திருப்பூரில் வங்கதேச நாட்டவர்கள் 5 பேர் கைது

திருப்பூர் மாநகராட்சியின் நல்லூர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்த வங்கதேச நாட்டவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சட்ட விரோதமாக இந்தியா வந்து கடந்த ஓராண்டாக திருப்பூரில் வேலை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான ஐந்து பேரும் சேலம் ஆத்தூரில் உள்ள முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து தூதரக ரீதியாக அவர்களின் நாட்டுக்கு திரும்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

16 வயது மாணவி மரணம்- பிரேத பரிசோதனையில் 4 மாத கர்ப்பம்

செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் தமிழ்ப்ரியா (16). இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் செயல்பட்டு வரும் ஒரு கிருஸ்தவ பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மாணவிக்கு மஞ்சள்காமாலை நோய் தொற்று இருந்ததாலும் மாணவிக்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததாலும் செங்கல்பட்டு அரசு மருத்துவர்களால் […]

ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் உற்பத்தி ஆலை- பிப்.9ம் தேதி முதல்வர் திறக்கிறார்

ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி தொழிற்சாலையை வரும் 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் குழுமம், 5 ஆண்டுகளில், ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இந்த தொழிற்சாலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்ய […]

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர் கல்வித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை ஆட்சியர் மு.அருணாஇன்று வழங்கினார். உடன்.மாநகராட்சிமேயர் திலகவதி செந்தில் , சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, துணை மேயர்எம்.லியாகத்தலி, மாமன்னர் கல்லூரி முதல்வர் பா.புவனேஸ்வரி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் […]

தனுஷ் படத்தில் இணைந்தார் மம்மூட்டி- ரசிகர்கள் உற்சாகம்

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு சிம்பு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். * ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனுஷின் ‘D55’ படத்தில் மம்மூட்டி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. *‘மண்டாடி’ படத்திற்காக கடலில் பயிற்சி எடுக்கும் வீடியோவை சூரி வெளியிட்டுள்ளார். *மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படம் ஒரே பாகமாக மட்டுமே வெளியாகும் என ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

வயிற்றில் 13 மாத கருவுடன் உயிரிழந்த பெண் யானை- கோவையில் சோகம்

கோவை, தொண்டாமுத்தூர் அருகே குப்பனூரில் தனியார் தோட்டத்தில் கடந்த வாரம் சேற்றில் சிக்கி மீட்கப்பட்ட பெண் யானை, தனது வயிற்றில் 13 மாத பெண் கருவுடன் உயிரிழந்த சம்பவம் இயற்கை வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை, மதுக்கரை வனச்சரகம் எட்டிமடை காப்புக்காடு பகுதியில் உயிரிழந்து கிடந்த 50 வயது பெண் யானையின் உடல், மாவட்ட வன அலுவலர் (DFO) ஜெயரா ஜ் தலைமையில் இன்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அந்த […]

சென்னை-திருச்சி-மதுரைக்கு விமான சேவை அதிகரிப்பு..

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் மதுரை இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்களை இயக்கி வந்தது. திருச்சிக்கு சென்னையில் இருந்து 6 விமானங்களும், திருச்சியிலிருந்து சென்னைக்கு 6 விமானங்களும் என மொத்தம் 12 சேவைகள் செயல்பட்டன. அதேபோல், சென்னையில் இருந்து மதுரைக்கு 8 விமானங்களும், மதுரையிலிருந்து சென்னைக்கு 8 விமானங்களும் என 16 ஏ.டி.ஆர். விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 15-ந்தேதி முதல் திருச்சி மற்றும் […]

மறியல் வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத அர்ஜூன் சம்பத்துக்கு வாரண்ட்

சேலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாததால் அர்ஜூன் சம்பத்துக்கு வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியின் சார்பில், கடந்த 2022ம் ஆண்டு சேலம் ஜங்சன் தலைமை தபால் நிலையம் முன்பாக போலீஸ் அனுமதியின்றி மறியல் போராட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் அர்ஜூன் சம்பத் உள்பட 22 பேரை சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 2வது நீதித்துறை […]

எச்.ராஜாவை சந்தித்து நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் சூழலில், சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சார்பில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்றி இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எச்.ராஜா, விவாதம் நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அவர் கீழே விழுந்து விடாமல், மேடையில் இருந்தவர்கள் உடனடியாக அவரை பிடித்து பாதுகாத்தனர். அதே […]

பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் மீது வழக்கு

கோவாவில் கடந்த 2025 நவம்பர் 28ம் தேதி நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளில், பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் கலந்துகொண்டார். அப்போது மேடையில் இருந்த அவர், ‘காந்தாரா’ படத்தின் இயக்குனரும், ஹீரோவுமான ரிஷப் ஷெட்டி முன்னிலையில், கடலோர கர்நாடக மக்களால் மதிக்கப்படும் பஞ்சுருளி மற்றும் குலிகா தெய்வங்களின் பாவனைகளை கேலி செய்ததாக கூறப்படுகிறது. மேலும், சவுண்டி தெய்வத்தை ‘பெண் பேய்’ என்று அவர் வர்ணித்ததாகவும், தெய்வீக கலைவடிவத்தை கிண்டல் செய்ய வேண்டாம் என்று […]

அஜித்குமார் மரணம் காவல் மரணம்- சிபிஐ

மதுரை, மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், அவர் நகை திருடியதாக நிகிதா அளித்தது பொய்ப் புகார். அவரது மரணம் காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது என கைதான காவலர்கள் ஜாமின் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு மீது சிபிஐ தரப்பு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை கொள்கை வடிவமைப்பாளர்களாக மாற்ற ‘என் கனவு-முதல்வர்

இளைஞர்களைக் கொள்கை வடிவமைப்பாளர்களாக மாற்ற ‘என் கனவு, என் எதிர்காலம்’ திட்டம்! இளைஞர்கள் தங்கள் கருத்துகளை பதிவுசெய்ய இளைஞர் கனவு தளத்தைத் தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு அரசு பொதுமக்களின் கனவுகளை நேரடியாக கேட்டு அவற்றின் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தும் நோக்குடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜனவரி 9 அன்று ‘உங்க கனவு சொல்லுங்க’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரடியாகச் சந்தித்து […]

அங்கன்வாடி கூட்டமைப்பின் சார்பில் சாலை மறியல் போரட்டம்- 200 பேர் கைது

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசே கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது. தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பின் சார்பில், வருவாய் கிராம உதவியாளருக்கு உள்ளது போல் பென்சன் ரூ 6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் ரூ 19,500/ சமையல் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலை […]

வெளிநாட்டிலிருந்து வருவோர் நகை கொண்டு வர அனுமதிக்கும் விதிகளில் திருத்தம்

வெளிநாடுகளில் இருந்து வருவோர் நகை கொண்டு வர அனுமதிக்கும் விதிகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016 முதல் நடைமுறையில் இருந்த பேக்கேஜ் விதிகள் மாற்றப்பட்டு 2026 பிப்ரவரி 2 முதல் சுங்கப் பேக்கேஜ் ஒழுங்குமுறை 2026 என்ற புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு ஆண்டிற்கு மேலாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்க நகைகளை வரி ஏதுமின்றி கொண்டு வருவதற்கான […]

4.57 லட்சம் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு கண்டோம்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய என் கனவு என் எதிர்காலம் திட்டத்தை திண்டிவனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தர். இந்த நிகழ்ச்சியில் 13,879 பயனாளிகளுக்கு ரூ.43.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது… ஒருகாலத்தில் திந்திரிவனம் என்று அழைக்கப்பட்டது தான் இன்றைய திண்டிவனம். திந்திரி என்றால் புளி என்று அர்த்தம். புளியமரங்கள் அதிகம் இருந்த காரணத்தால் அது காரண பெயராக வந்தது. சோழர்கள் காலத்திலும், பல்லவர்கள் காலத்திலும், நாயக்க மன்னர்கள் காலத்திலும் […]

ஜல்லிக்கட்டில் இறந்தால் ரூ.10 லட்சம்… அதிமுக வாக்குறுதி

சென்னை, ராயப்பேட்டையில் அதிமுக 2ம் கட்ட தேர்தல் அறிக்கையை வௌியிட்டார் எடப்பாடி பழனிசாமி- நிருபர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது.. சிறுபான்மையின மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். ரேசன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும். ஜல்லிக்கட்டில் உயிரிழக்கும் வீரர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டியில் பலத்த காயமடையும் வீரர்களுக்கு ரூ. 2லட்சம் வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோரின் […]

மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவு-முதல்வர் இரங்கல்

மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர்‌ ச.சீ. இராசகோபாலன். அவரது மறைவு கல்வித்துறைக்குப் பேரிழப்பு என முதல்வர் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆசிரியராக‌த் தமது கல்விப் பணியைத் தொடங்கிய‌ முனைவர் ச.சீ. இராசகோபாலன் தமிழ்நாடு அரசு முன்னெடுத்த சமச்சீர்க் கல்விக் குழுவின் […]

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, நாடாளுமன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த நிலையில், நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கவும், முடிவெடுக்கவும் அமைச்சரவை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த […]

கரூர்.. சிபிஐ விசாரணைக்கு 2 பேர் ஆஜர்

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு காவலர் ஒரு பொதுமக்கள் என 2 பேர் இன்று சிபிஐ விசாரணைக்காக தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு […]

கத்தாரில் திமுக அயலக அணியின் பொங்கல் விழா- உற்சாக வரவேற்பு

திமுக அயலக அணி சார்பில் நடைபெறவுள்ள பொங்கல் பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழகத்திலிருந்து வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்களுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்க சமூக ஆர்வலரும், மருத்துவருமான டாக்டர் இராஜமூர்த்தி ஜெயராமன் (Dr. Rajamoorthy Jayaraman), புதுக்கோட்டை மாவட்ட திமுக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் மு.க.முத்துக்கருப்பன் ஆகியோர் கத்தார் வருகை தந்துள்ளனர். கத்தார் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்களை, கத்தார் திமுக அயலக […]

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரிச் சட்டம்

1961-ம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்தை ஓரம் கட்டிவிட்டு, புதிய ‘வருமான வரிச் சட்டம் 2025’ நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்தார். இந்த மெகா மாற்றமானது மிகவும் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டு, வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அதிகாரப்பூர்வமாகச் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இதற்கான புதிய விதிகள் மற்றும் எளிமையாக்கப்பட்ட வரிப் படிவங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். இந்த புதிய ‘வருமான வரிச் சட்டம் 2025’ என்பது […]

தமிழ்நாட்டில் ரூ.1,300 கோடி முதலீடு செய்யும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம்

ராமநாதபுரம், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.1,300 கோடி அளவிற்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாலிநோக்க பகுதியில் உப்பு உற்பத்தி அலை அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தது முதலே மாநிலத்தில் மாபெரும் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தியும், அடுத்தடுத்து முதலீட்டு மாநாட்டை நடத்தியும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டை நோக்கி திராவிட மாடல் அரசு […]

8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்- முதல்வர் கண்டனம்

சீனா ஆக்கிரமிப்பு, அமெரிக்காவுடனான மோடியின் வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பேச அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளை கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? பாதுகாப்பு, பொருளாதாரம் தொடர்பாக எம்.பி.க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விளக்கம் தர ஒன்றிய அரசு தயாராக […]

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை பலி

கேரள – தமிழக எல்லையிலுள்ள வாளையார் வனப்பகுதியை ஒட்டியுள்ள ரயில் தண்டவாளத்தில் இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று அதிகாலை சுமார் 4:00 மணியளவில், வாளையார் – கஞ்சிக்கோடு இடையே உள்ள தண்டவாளத்தை ஒரு குட்டி யானை கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு விரைவு ரயில் யானையின் மீது பயங்கரமாக மோதியது. ரயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், அந்த 4 வயது ஆண் யானை தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்டு, […]

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் – காவல் நீட்டிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்களின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது, அவர்களது குடும்பத்தினரிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி, வெவ்வேறு தேதிகளில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றங்கள் சிறைக்காவலை நீட்டித்து இன்று (பிப்ரவரி 4, 2026) உத்தரவிட்டுள்ளன. சம்பவம்: கடந்த ஜனவரி 20-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களின் நீதிமன்றக் காவலை பிப்ரவரி […]

தூய்மை காவலர்களுக்கு ரூ. 6000 ஆக உயர்த்தி அரசாணை வௌியீடு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.417 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளையும் தூய்மையாக வைத்திருக்கும் வகையில் தூய்மைக்காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வீடுதோறும் திடக்கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து வருகின்றனர்.கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக்காவலர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்பட்டு வந் […]

மன்னிப்பு கேட்டார் பாடகர் வேல்முருகன்

சென்னை, பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 2 ஆம் தேதி நடைபெற்றது. விழாவில் நடந்த கலை நிகழ்ச்சியில், முருகன் பாடல், நாட்டுப்புற பாடல், தமிழக வெற்றிக் கழக பாடல் ஆகியவை பாடப்பட்டன. விஜயை வாழ்த்தி ஒரு பாடலை பாடகர் வேல்முருகன் பாடினார். அவர் பாடி முடித்ததும் மேடை ஏறிய விஜய், அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். அப்போது, பாடகர் வேல்முருகன், விஜய்யுக்கு அறுபடை வீடு முருகனின் படத்தை நிை பரிசாக வழங்கினார். விழாவில், […]

கல்வியாளர் முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் காலமானார்

தமிழ்நாட்டின் மூத்த கல்வியாளரும் ஆசிரியருமான முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் வயதுமூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னை கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு (பிப்.3) 11.54 மணிக்கு மருத்துவமனையில் காலமானார். கருணாநிதி முதல்வராக இருந்த போது சமச்சீர் கல்வி உருவாக்கிட அமைக்கப்பட்ட குழுவில் உறுப்பினராக இருந்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கியவர். வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் தரமான கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர்.அவரது மறைவு கல்வித்துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.

பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது மோதிய கார்- 5 பேர் கைது

சென்னை, எண்ணூர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்குள் அதிவேகமாக நுழைந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது பயங்கரமாக மோதியது. காரில் இருந்த 5 இளைஞர்களும் அதிக அளவில் மது அருந்தியிருந்தது போலீசாரின் முதற்கட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. போதையில் இருந்ததால் காரை நிலைதடுமாறி ஓட்டியுள்ளனர். மோதிய வேகத்தில் பெட்ரோல் மீட்டர் பாக்ஸ் அடியோடு பெயர்ந்து விழுந்தது. நல்வாய்ப்பாக, தானியங்கி பாதுகாப்பு வால்வுகள் செயல்பட்டதால் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு தீ […]

தாறுமாறாக ஓடிய கார்..பிரியாணி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு

புதுக்கோட்டை, அறந்தாங்கியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், பிரியாணி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 3 டூவீலர்கள் சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் இல்லை. கார் டிரைவர் வெங்கடேசன் மதுபோதையில் ஓட்டினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தர்ணாவில் ஈடுபட்ட சஸ்பெண்ட் அதிகாரிக்கு நெஞ்சுவலி- பரபரப்பு

திருப்பத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிர்வாக மேற்பார்வையாளர் தர்ணா ஈடுபட்டபோது நெஞ்சுவலி என கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் செயல்பட்டுவரும் மின்சார வாரிய அலுவலகத்தில் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்த சீனு என்பவரின் மகன் ரமேஷ் (46 ) என்பவர் நிர்வாக மேற்பார்வையாளராக பணிசெய்து வருகிறார். அதேபோல் அந்த அலுவலகத்தில் மேற்பார்வையாளர்களாக சதீஷ் மற்றும் பொறியாளர் மேற்பார்வையாளராக ஜெயின் உள்ள புதின் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த […]

மத்திய அரசின் பட்ஜெட்-ஐ விமர்சித்து தமிழகம் முழுவதும் ”முட்டை” போஸ்டர்கள்

ஒன்றிய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள். அல்வாவை தொடர்ந்து முட்டை போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 2026-27 ம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதாகவும், வேலையின்மை, பணவீக்கம், மாநில சுயாட்சி ஆகியவற்றைச் சரிசெய்யத் தவறிய ஒரு ஏமாற்றமான, மக்கள் விரோத பட்ஜெட் என்றும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இது ‘வளர்ச்சி’ என்ற போர்வையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளை மட்டுமே கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. தமிழகத்திற்கான ரயில்வே […]

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5040 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.50,40 உயர்ந்து ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,900க்கு விற்பனை. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.320 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதில் மனு!

சென்னை: எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளிக்கக்கோரிய மனு ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் பதிலை ஏற்று வழக்கை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முடிதிருத்தும் தொழிலாளியை அடித்து கொன்ற 2 பேர் -பரபரப்பு

பாபநாசம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்கள் சேர்ந்து முடி திருத்தும் தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே தேவன்குடி மீனவர் காலனி பகுதியில் வசித்து வருபவர் இளங்கோவன் (50) இவரது மனைவி சரிதா (45). இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்து வருகின்றனர். இளங்கோவன் முடி திருத்தம் செய்யும் பணி செய்து வருகிறார்.. தேவன்குடி அருகில் அமைந்துள்ள வீரமாங்குடி […]

தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை- இலங்கை கோர்ட்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. டிச.28ல் மண்டபம் மீனவர்கள் 3 பேர், ஜன.3ல் மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மண்டபம் மீனவர்கள் 2 பேரையும், மயிலாடுதுறை மீனவர்கள் 7 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 3 மீனவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் ரூ.40 லட்சம் அபராதம் விதித்து இலங்கை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தேவாலயத்துக்குள் புகுந்து கொலை.. மோசஸ்க்கு ஆயுள் தண்டனை

திருவள்ளூர், ஆவடி அருகே தேவாலயத்துக்குள் புகுந்து ஊழியரை கொன்ற வழக்கில் மோசஸ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2020ல் முன்விரோதம் காரணமாக தேவாலயத்துக்குள் புகுந்து ஈனோஸ் என்பவரை, மோசஸ் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். மோசஸ்க்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.10,000 அபராதம் விதித்து திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தஞ்சையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாவரலசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செபஸ்டின் போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் சுரேஷ்குமார், சதுணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் முருகையன், சத்துணவு பணியாளர் சங்க மாநில […]

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2560 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,920 உயர்ந்து, சவரன் ரூ.1,14,160க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.20 குறைந்திருந்த நிலையில் பிற்பகலில் ரூ.20 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதுச்சேரியில் 12ம் தேதி சட்டப்பேரவை கூட்ட தொடர்

புதுச்சேரி: 15வது புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடரின் மூன்றாவது பகுதி, 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவைக் கூடத்தில் கூடும் என சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கவர்னர் மதிப்பதில்லை… சபாநாயகர் பேட்டி

 இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை மதிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்று சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “இந்திய வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவே தீர்மானிக்கிறது. இது போன்ற மோசமான நிலை இதுவரை இருந்ததில்லை. பெட்ரோல், டீசலை யாரிடம் இந்தியா வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிக்கிறது?. இந்தியாவின் மோசமான வெளியுறவுக் கொள்கையால், இந்திய தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அண்டை நாடுகள் இந்தியாவுடன் இணக்கமாக இல்லை. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஆளுநர் R.N.ரவியின் செயல்பாடுகளை […]

7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-58 வயது நபர் போக்சோவில் கைது

திருச்சி காஜா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் ( 58). சம்பவத்தன்று இவரது வீட்டில் பேரன், பேத்திகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது உறவினர் ஒருவரது 7 வயது பெண் குழந்தையும் விளையாடுவதற்காக அங்கு வந்தது. அப்போது ஸ்டீபன் ராஜ் அந்த 7 வயது குழந்தையை தனியாக தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த அந்தகுழந்தையின் தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது பற்றி […]

ஒவ்வொரு குடும்பத்துக்கும் திமுக அரசால் ஒரு நன்மை- அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணா அவர்கள் இந்த நாட்டின் மிகப்பெரிய மாற்றத்திற்கும், தமிழ் மொழி மற்றும் தமிழ்நாடு பெரிய அளவில் வருவதற்கு அடித்தளமிட்டு சென்றார். அதற்கு பின்னால் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டை வளர்த்தார். தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த கொள்கைகளை கடைப்பிடித்து இன்றைக்கு இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில், தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம் மட்டும் அல்ல, இந்தியாவிற்கே முன்னுதாரணமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் […]

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்திற்கு இந்திரா காந்தி பெயர்

சென்னை: திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார். புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது

CBSE 10,12-ம்வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9, 2026 வரை நடைபெற உள்ளன.10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக வரும் 17ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் பரிக்ஷா சங்கம் என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களின் உள்ளீட்டு அடையாளங்களை பதிவிட்டு மாணவர்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் […]

6ம் தேதி முதல் தவெக விருப்ப மனு பெறலாம்..

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது. இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு […]

புதுகையில் தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு மரியாதை

சுப்பிரமணியபுரத்தில் தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு நினைவஞ்சலி.  புதுக்கோட்டை பிப் 04-தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அறந்தாங்கி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் புதுக்கோட்டை தெற்குமாவட்ட செயலாளர் ஏ.சசிகுமார்  தலைமையில்    அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பெரி.கலைஞர்  அறந்தாங்கி தொகுதி பொறுப்பாளர் மாவட்ட அவைத் தலைவர் ஆவுடையார் கோவில் வி. மணிமுத்து , ஆலங்குடி தொகுதி பொறுப்பாளர் பழ.நேதாஜி சீனிவாசன், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் ஏ. […]

கன்னிவாடியில் கட்டப்பட்ட அணையை இடிக்க கூடாது.. ஐகோர்ட்

மதுரை -திண்டுக்கல் கன்னிவாடி மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அணையில் உள்ள தண்ணீரால் வனவிலங்குகள் பயன்பெற்று வருவதால் அணையை இடிக்கக் கூடாது. வனத்துறையால் அணை சேதப்படுத்தப்பட்டிருப்பின் அதை மீண்டும் வனத்துறையே சீரமைத்து தர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கு செல்லும் மனிதர்கள்- நாசா

நாசாவின் அறிவிப்புப்படி, பிப்.6-ம் தேதி 4 விண்வெளி வீரர்களுடன் இந்த விண்கலம் விண்ணில் பாய்கிறது. 1972-ல் அப்பல்லோ திட்டம் முடிவுக்கு வந்த பிறகு, நிலவை நோக்கிச் செல்லும் முதல் மனிதப் பயணம் இதுவாகும். ஜனவரி 31 முதல் பிப்ரவரி 14 வரை இதற்கான ‘லான்ச் விண்டோ’ திறந்திருக்கும். வானிலை மாற்றங்கள் காரணமாக பிப்.6 அன்று ஏவ முடியாவிட்டால், பிப்.7, 8, 10 மற்றும் 11 ஆகிய தேதிகள் மாற்றுத் தேதிகளாக (Backup dates) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 10 […]

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது ஏன்..? அமைச்சர் ரகுபதி விளக்கம்

தேர்தல் நடக்கும் மாநிலங்களை கவருவதற்காக பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. எவ்வளவு அறிவிப்புகளைச் செய்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு வாக்கு விழாது என்பதை தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள் என தமிழக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “வழக்கமாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சமயத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் மாநிலங்கள் கொண்டாடக்கூடிய அம்சங்கள் இருக்கும். ஆனால், மத்திய பா.ஜ.க. […]

அரசு பஸ் மோதி டூவீலரில் சென்ற நபர் பலி- திருச்சியில் சம்பவம்

திருச்சி நம்பர்-1 டோல்கேட்டில் இருந்து லால்குடி செல்லும் சாலையில், மேலவாளாடி பகுதியில் லால்குடி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த அரசு பேருந்து இன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நம்பர்1 டோல்கேட் போலீசார் வழக்குபதிவ செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்ணாவின் நினைவு தினம்- திருப்பத்தூரில் திமுக அமைதி பேரணி

பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இந்த அமைதி பேரணி திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள கலைஞர் திருவுருவ சிலையில் இருந்து புதுப்பேட்டை சாலையில் அமைந்துள்ள அண்ணா திருவுருவ சிலைக்குதிருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் […]

அரசியலில் நான் யாரையும் எதிரியாக பார்ப்பதில்லை- முதல்வர்

முதல்வர் ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கொளத்தூர் தொகுதியில் பல்வேறு முடிவுற்ற பணிகளை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6 புதிய ரேஷன் கடைகள், ரத்தி சுத்திகரிப்பு நிலையம், மறுவாழ்வு மையம் ஆகியவற்றை ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து கொளத்தூரில் நடந்து சென்று மக்களையும் சந்தித்தார்.அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் பல்வேறு தரப்பு மக்களும் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனால் ஸ்டாலின் மட்டுமல்லாமல் அவருடன் இருந்த நிர்வாகிகளும் […]

குப்பையில் கிடைத்த 45 பவுன்- துப்புரவு பணியாளரின் நேர்மை-தங்க செயின் வழங்கிய ரஜினி

சென்னையின் பரபரப்பான தி.நகர் பகுதியில், அன்றாடம் போலவே தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணின் நேர்மை, இன்று தமிழகமே பேசும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. மனிதநேயத்துடன் நேர்மையாக செயல்பட்ட தூய்மை பணியாளர் பத்மாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் மறக்க முடியாத பரிசு கொடுத்திருக்கிறார். பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணிபுரியும் பத்மா, குப்பையோடு கிடந்த ஒரு கவருக்குள் 45 பவுன் தங்க நகைகள் இருப்பதை கண்டுபிடித்தபோதும், அதை சொந்தமாக வைத்துக்கொள்ளாமல் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம், […]

விஜய் தன் சம்பளத்தை வௌிப்படையா கூறுவாரா?ஜெயக்குமார் கேள்வி

அதிமுகவை விமர்சிக்கும் விஜய் தனது சம்பளம் எவ்வளவு என வெளிப்படையாக கூறுவாரா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ‘விஜய் வாங்கும் சம்பளத்தில் “கறுப்பு” அதிகம்; “வெள்ளை” குறைவு. ஆதவ் அர்ஜூனாவின் லாட்டரி பணத்தில்தான் தான் தவெக கட்சியே நடக்கிறது.  யார் யாரையும் விமர்சனம் செய்ய வேண்டும் என்று விவஸ்த்தை இல்லை.விஜய் இப்படி மேடையில் நடனமாடியதால் கரூரில் இறந்த 41 பேரின் குடும்பம் எவ்வளவு வேதனைப்படும்’ எனவும் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

விசிகவினரின் வாகனத்தை மறித்து பாமக இளைஞர்கள் ரகளை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி கிராமத்தில் மறைந்த முன்னாள் ஜெயங்கொண்டம் எம்எல்ஏவும், வன்னியர் சங்க தலைவருமான குரு பிறந்தநாள் விழாவை வன்னியர் ஜெயந்தி விழாவாக மாவீரன் மஞ்சள் படையினர் வருடம் தோறும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு 65 ஆவது பிறந்தநாள் விழா குருவின் சமாதியில் கொண்டாடப்பட்டது. இதற்காக ஆயிரக்கணக்கில் மாவீரன் மஞ்சள் படை ,வன்னியர் சங்கத்தினர், ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் என ஏராளமானோர் வந்து […]

கட்சி தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை திடீர் விலகல்!

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக – பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெக வும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். தவெக தலைவர் விஜய் நேற்று பாஜக மற்றும் திமுகவை ஓட்டை என்ஜின் டப்பா என்ஜின் என்று விமர்சித்தார். இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, விஜய்யிடம் என்ஜினே இல்லை என்றவர், திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி என்றும் கூறியுள்ளார். மேலும், தந்தையின் […]

பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்… முதல்வர் ஸ்டாலின்

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நீண்டகாலக் கோரிக்கைகளான மெட்ரோ ரயில் நிதி, கல்வி நிதி (₹3,548 கோடி) மற்றும் பேரிடர் நிவாரண நிதி ஆகியவை மீண்டும் ஒருமுறை நிராகரிக்கப்பட்டுள்ளன. “இந்தத் துரோகத்தை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்; வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என முதலமைச்சர் எச்சரித்துள்ளார். தமிழக அரசு ‘தேசிய கல்விக் கொள்கை’ மற்றும் ‘மூன்று மொழிக் கொள்கையை’ ஏற்காததால், கல்விக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி […]

அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தலையில் அதிமுகவினர் புகழஞ்சலி செலுத்தினர். அதிமுக நிர்வாகிகள் பலர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மீது சென்னை கொடுங்கையூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி பூங்காவில் புகுந்து அரசின் உடைமைகளை சேதப்படுத்தியதாக உதவி பொறியாளர் புகார் அளித்துள்ளார். உதவி பொறியாளர் சத்யன் புகாரை அடுத்து ராஜேஷ் மீது அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி சுற்றுச்சுவரில் டூவீலர் மோதி 2 வாலிபர்கள் பலி..பரிதாபம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி காவல் நிலையம் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து பள்ளிச் சுவரில் மோதி உயிரிழந்தனர். நாமக்கல் அருகே உள்ள மறவாபாளையத்தைச் சேர்ந்த பிரவீன் (19) மற்றும் அவரது நண்பர் கார்த்தி (19). இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். பரமத்தி காவல் நிலையம் அருகே […]

ஸ்கேட்டிங் பயிற்சிகளுக்கு தரமான தளம் அமைத்து தர வேண்டும்.. கோரிக்கை

ஸ்கேட்டிங் பயிற்சிகளுக்கு தமிழக அரசு தரமான தளம் அமைத்து தரவேண்டும் – தமிழக ஏரோஸ்கெட்டோபால்ஸ்கேட்டிங் சங்கத் தலைவர் கோரிக்கை மஹாராஷ்டிரா மாநிலம் சீரடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதி இரண்டு நாட்கள் 11 ஆவது தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி நடைபெற்றது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழக அணி சார்பில் திருச்சி, சிவகங்கை, நாமக்கல், […]

ஆயுதப்படை பெண் போலிசின் கணவர் போக்சோவில் கைது

சென்னை பாண்டி பஜாரில் பள்ளிக்கு நடந்து சென்ற 15 வயது மாணவியிடம் செல்போன் நம்பரை கேட்டு தொந்தரவு செய்த பெண் காவலரின் கணவர் பூபாலனை(33) தேனாம்பேட்டை மகளிர் போலீஸ் போக்சோவின் கீழ் கைது செய்தனர். வீட்டின் மொட்டை மாடியில் நின்று பறக்கும் முத்தம் கொடுத்து மாணவிக்கு பெண் காவலரின் கணவர் தொந்தரவு கொடுத்துள்ளார்.

அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும் என்றும், தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பொதுமக்களை நடுங்க வைக்கும் அளவுக்கு குளிர் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக அதிகாலை வேளையில் பனிமூட்டம் அதிகரித்து வருவதால் குளிர் அதிகமாக உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே மழை விட்டிருந்த நிலையில், மீண்டும் மழை தொடங்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் […]

விஜய் ஊழல்வாதியா இல்லையா?- திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி

 விஜய் ஊழல்வாதியா இல்லையா? நீங்கள் வாங்கும் சம்பளம் நியாயமானதா? என்று திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார். அதிமுகவை ஊழல் கட்சி என மீண்டும் கூறிய விஜய்க்கு திண்டுக்கல் சீனிவாசன் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் பேசிய அவர், “அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய், செங்கோட்டையனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். தான் ஊழல்வாதி இல்லை என்பதை விஜய் நிரூபித்துவிட்டு அதிமுகவை ஊழல்வாதி என சொல்லட்டும்,” இவ்வாறு தெரிவித்தார்.

திருமண நிதி உதவியாக 82 பயனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கிய VSB

திருமண நிதி உதவியாக 82 பயனாளிகளுக்கு தங்க நாணயம் செந்தில் பாலாஜி வழங்கினார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு 234 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் ஸ்மார்ட்போன் பேட்டரி வீல் சேர் தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அதனை தொடர்ந்து 2025-2026 நிதி ஆண்டிற்கான திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 82 பயனாளிகளுக்கு தங்க நாணயத்தை […]

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய VSB

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 234 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், ஸ்மார்ட்போன், பேட்டரி வீல் சேர், தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் […]

பிடிக்காதவர்கள் டிவிட்டரில் என்னை பின் தொடர வேண்டாம் – சேரன் அதிரடி!

இதுதொடர்பாக நடிகரும் திரைப்பட இயக்குனருமான சேரன் வெளியிட்டுள்ள பதிவில், “பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்.. வாழ்க்கைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு விளிம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த “திருமணம்” திரைப்படம் தேர்வுகுழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது.அரசிற்கு வரி கட்டி வாக்களித்து நாங்களும் இந்த சமூகத்தின் வாக்காளர்கள் என்ற […]

நெல்லையில் இளம்பெண் ஆணவ கொலை?- காதலன் புகார்

நெல்லை பேட்டை அன்னதான விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பட்சிராஜன். இவரது மகள் சிவமதி (வயது 19). இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சிவமதி மாற்று சமூகத்தைச் சார்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் இவர்களது குடும்பத்தினருக்கு தெரிய வந்திருக்கிறது. சிவமதி குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வாலிபரையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இருந்த போதிலும் இருவரும் காதலை கைவிடாததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சிவமதி […]

செங்கோட்டையன் ஒரு செல்லாக் காசு- செல்லூர் ராஜூ

மதுரை பைக்காரா பகுதியில் புதிய நியாய விலைக்கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முல்லை பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக மக்களுக்கு வந்து சேரும். முதல்வர் திறந்து வைத்த பிறகு கூட இதுவரைக்கும் 30 சதவீத வாடுகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. முறையாக வழங்கப்படவில்லை. திட்டம் தொடங்கியும் மக்களுக்கு பயனில்லாமல் உள்ளது.முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது. பாஜக- அதிமுக […]

கருகிய நெற் பயிர்களுடன் தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியல்

தண்ணீர் இல்லாமல் பயிர் கருகி வருவதால் 10 நாட்களுக்கு தடையில்லாமல் தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கருகிய நெற் பயிர்களுடன் தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆகிய நான்கு ஆறுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் கல்லணை கால்வாய் பாசனத்திற்கு உட்பட்ட ஆலங்குடி வண்ணாரப்பேட்டை எட்டாம் நம்பர் கரம்பை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 750 […]

பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை திடீர் சாவு-ஸ்ரீரங்கத்தில் பரிதாபம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் சின்னைய ம பாளையம் ,ஆலமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்,கடந்த 50 நாட்களுக்கு முன்பு இவரது மனைவிக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மதுஷா என பெயரிட்டு இருந்தனர். இந்நிலையில் மதுஷா பிறந்து 40 நாட்கள் கடந்த நிலையில் அவருக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. பிறகு குழந்தை, மனைவியுடன் சுரேஷ் திருவரங்கம் சன்னதி தெருவில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் […]

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண் கைது

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தீபன் ராஜ் இவரது மனைவி சகுந்தலா (43). இவர் தனது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக உறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.பிறகு சகுந்தலாவை ஜாமினில் விடுதலை செய்தனர்.

விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும் – விஜய் ஸ்பீச்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 3ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இந்த விழா நடைபெற்றது. விழாவில் தலைவர் விஜய் உரையாற்றியபோது, “இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும் பயணம்” என்று உணர்ச்சிபூர்வமாகக் குறிப்பிட்டார். தொண்டர்களின் அர்ப்பணிப்பும், மக்களின் நம்பிக்கையும் தான் இந்த பயணத்தை இயல்பு தாண்டி வெற்றிகரமாக்கியுள்ளதாக அவர் […]

திருப்பூர்- ஒடிசா- கட்டிட பணியாளரின் சைக்கிள் பயணம்

திருப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக கட்டிட பணிகளில் ஈடுபட்டு வந்த ராகவன் என்னும் நபர் தனது சொந்த மாநிலமான ஒடிசா செல்ல தீர்மானித்தார். நண்பர் ஒருவர் கேரளாவில் இருப்பதால் அவரைப் பார்த்துவிட்டு புறப்படும் வேளையில் சைக்கிளில் செல்ல முடிவு செய்தார். இதனை அடுத்து கேரளாவில் சாதாரண சைக்கிளை வாங்கிய ராகவன் தேசிய கொடிகளை கட்டி புறப்பட்டார். பொள்ளாச்சி வழியே தேசிய கொடியுடன் சென்ற ராகவனை பொதுமக்கள் ஆச்சிரியத்துடன் கண்டு உற்சாகப்படுத்தினர். இது குறித்து ராகவன் கூறும் பொழுது.. […]

கழக அரசின் சாதனைகளை விளக்கி அமைச்சர் எஸ்.ரகுபதி பிரச்சாரம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி காரையூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி பூத் வாரியாக கழக அரசின் சாதனைகளை மகளிர் அணியினருடன் இயற்கை வளங்கள் துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.ரகுபதிவீடுவீடாக சென்று மக்களிடம் விளக்கி கூறினார். அமைச்சருடன் திமுக மகளிர் அணியினர், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுகை திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டையில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் மாணவர் கழகம் சார்பில் பாராமெடிக்கல்படிப்புகளிலும் நீட்தேர்வை திணிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் நே.குட்டிவீரமணி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் மாங்காடு மணியரசன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அறிவொளி,துணைத்தலைவர் எஸ்.கண்ணன் மற்றும் அரசுஇளங்கோ, வீரப்பன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்.

சுற்றுலா பயணிகளுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான இடம்- முதல்வர்

பயணங்கள் புத்தகம் இல்லாத வகுப்பறை என சுற்றுலா உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை மாமல்லபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சுற்றுலா உச்சி மாநாட்டில் முதலமைச்சர் உரையாற்றுகையில்; பயணங்கள் புத்தகம் இல்லாத வகுப்பறை. சுற்றுலா மாநாடு முதல்முறையாக தமிழ்நாட்டில் நடப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் சேர்க்கிறது. brihade hotel […]

புத்த மதத்தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது

68வது கிராமி விருது விழா லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இன்று நடந்தது.இந்த நிகழ்ச்சியில், திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆடியோ புத்தகம் பிரிவில் ‘மெடிடேஷன்ஸ்: தி ரிப்ளெக்ஷன்ஸ் ஆப் ஹிஸ் ஹோலினஸ் தி தலாய் லாமா’ (Meditations: The Reflections of His Holiness the Dalai Lama) என்ற ஆல்பத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது. தலாய் லாமாவின் போதனைகளுக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாக இந்த கிராமி விருது […]

குளித்தலை அருகே தனியார் பஸ்-மினி பஸ் மோதி விபத்து.. 28 பேர் காயம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குளித்தலை – மணப்பாறை சாலை வை.புதூர் பகுதியில், இரும்பூதிப்பட்டி பகுதியில் இருந்து குளித்தலை நோக்கி வந்த மினி பேருந்தும், குளித்தலையில் இருந்து பஞ்சப்பட்டி வழியாக கரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கர்ப்பிணி பெண், 18 பெண்கள் 10 ஆண்கள் என 28 பேர் காயமடைந்துள்ளனர்.அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு […]

இனி இந்தச் சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்சாலை”- முதல்வர் அறிவிப்பு

வள்ளலார் தினத்​தையொட்டி நேற்று தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: வள்ளலார் பிறந்​த​நாள் தனிப்​பெரும் கருணை நாள்; ஓராண்டு தொடர் கொண்​டாட்​ட​மாக வள்ளலார் முப்​பெரும் விழா; வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்​லம் புனரமைப்பு என வள்​ளலாரின் புகழைப் போற்​று​வதன் தொடர்ச்​சி​யாக, அயல் நாட்​டினரிட​மும் வள்​ளலாரின் உயரிய கருத்​துகளை கொண்டு சேர்க்க, வரும் பிப்​ர​வரி 15-ம் தேதி சென்னை கீழ்ப்​பாக்​கம் ஏகாம்​பர​நாதர் பள்ளி வளாகத்​தில் ‘அனைத்​துலக வள்ளலார் மாநாடு 2026’ நடத்​தப்​படும். மேலும், வள்ளலார் நெறி​யாளர்​களின் […]

திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில்,உங்களில் ஒருவனான என்னுடைய இந்தப் பயணத்திற்கும் ஓயாத உழைப்பிற்கும் உந்து விசையாக இருப்பவர்கள் அண்ணாவும், கலைஞரும், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட கழகத்தின் முன்னோடிகள்தான். அதனால்தான் எதிர்ப்புகளையும் வஞ்சகத்தையும் எதிர்கொள்ளும் போராட்டமாகவே முதலமைச்சர் பொறுப்பை அனுபவித்தபடி, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உழைத்து வருகிறேன். உடன்பிறப்புகளான உங்களின் ஆதரவே என்னுடைய வலிமை. 1967-ல் தொடங்கி, 2026-ல் இன்று நடைபெறுகிற திராவிட மாடல் அரசு வரை, அண்ணா வகுத்துத் தந்த திராவிடப் […]

‘மாம்பழம்’ யாருக்கு? 3 வாரங்களில் பதிலளிக்க ஆணை

பாமக தலைமை அலுவலக முகவரி மாற்றம், மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு ஒதுக்கியது தொடர்பாக 3 வாரத்திற்குள் ECI பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அன்புமணிக்கு சின்னம் ஒதுக்கியதை ரத்து செய்யக்கோரி ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் இந்த பரபரப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அன்புமணி தரப்புக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கரூர்- 2 காவலர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமுற்று சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவலர்கள் தற்போது […]

லித்தியம் பேட்டரி – சூரிய சக்தி உபகரணங்களுக்கு வரி விலக்கு

2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் பேட்டரிகளுக்கான லித்தியம் – அயன் செல்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மூலதனப் பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளுக்கான லித்தியம் -அயன் செல்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்ற பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மின்சார வாகனம் மற்றும் […]

பழனியில் 10ம் தேதி ஆர்ப்பாட்டம்… அண்ணாமலை தகவல்

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று (பிப்.01) பழனி கோயிலுக்கு காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தைப்பூச திருவிழா நம் தமிழினத்திற்கு நெருக்கமான விழா. தமிழக மக்கள் மகிழ்ச்சியோடு வாழவும், கட்சி மூத்த தலைவர் எச்.ராஜா நலம் பெறவும் முருகப்பெருமானிடம் வேண்டுதல் வைத்திருக்கிறேன். நம் நாட்டின் மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை உட்கட்டமைப்பிற்கு மட்டும் ரூ.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் அடுத்த கட்டம் செல்வதற்கான சென்னை-பெங்களூரு, சென்னை-ஐதராபாத் […]

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

கரூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் 678 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இதில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் – 148 பேர், வெண்ணைமலை அரசு தொழில்நுட்பக் கல்லூரி – 80 பேர், சிஎஸ்ஐ தொழில்நுட்பக் கல்லூரி – 8 பேர், கோடங்கிபட்டி ச க்தி நர்சிங் பெண்கள் […]

மத்திய அரசு பட்ஜெட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது-வைகோ கருத்து

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை குறைக்காதது – மக்கள் மீதான சுமையை குறைக்க மத்திய அரசு விரும்பவில்லை என்பவரை காட்டுகிறது – வைகோ விமர்சனம் சுங்க வரியை குறைத்து இருப்பது மட்டும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது – வைகோ கருத்து சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தனிப் பெரும்பான்மை பெற்று மீண்டும், ஆட்சி அமைக்கும் : தொகுதி பங்கீடு முடிந்ததும் சீட்டு பங்கீடு முடிவுகள் எடுக்கப்படும் – வைகோ பேட்டி கோவை […]

குடிமகனின் விபரீத பைக் சாகசம்- கோவையில் அலப்பறை

கோவையின் அடையாளமாகத் திகழும் அவிநாசி சாலை ஜி.டி. நாயுடு (GD Naidu) மேம்பாலத்தில், மது போதையில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ​கோவை, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.1 கி.மீ நீளத்திற்குத் தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலமாக இது கட்டப்பட்டு உள்ளது. இந்தப் பாலத்தில் விபத்துக்களைத் தவிர்க்கக் காவல் துறையினர் அதிநவீன வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் […]

வெள்ளியில் பெரியார் அறிவுலகம் மினியச்சர்- கோவை கலைஞர் அசத்தல்

7 கிராம் வெள்ளியில் பெரியார் அறிவுலகம் மினியச்சர் செய்து அசத்தி உள்ளார் கோவையை சேர்ந்த கலைஞர் UMT ராஜா. கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பில் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடியில் 8 தளங்களுடன் கூடிய பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு வருகிறது. நூலகம் மற்றும் அறிவுசார் மையமாக இந்த கட்டிடம் அமைக்கப்பட்டு வருகிறது. தேர்தலுக்குள் கட்டுமான பணிகள் முடித்து திறந்து வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பிப்ரவரி மாதம் கட்டிடம் திறக்கப்படும் […]

எடப்பாடியை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்-அமைச்சர் கே.என்.நேரு

தஞ்சையில் இன்று தி.மு.க முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-எடப்பாடி பழனிச்சாமி சொல்வதை எல்லாம் மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.பெண்களுக்கான ஏராளமான நல்ல திட்டங்களை நமது முதலமைச்சர் மு .க. ஸ்டாலின். செயல்படுத்தியுள்ளார். எந்த ஆட்சிலும் நடைபெறாத அளவுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செய்து சாதனை படைத்துள்ளார். நான் ஏற்கனவே சொன்னது போல 2006, 2016-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என்று அனைவருக்கும் தெரியும். […]

அதிமுகவை எடப்பாடி அடகு வைத்துவிட்டார்.. அமைச்சர் சிவசங்கர்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு வரவேற்கத்தக்க எந்த விஷயமும் இல்லாவிட்டாலும், வழக்குக்கு பயந்து அதனை வரவேற்று அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி அடகு வைத்து விட்டார்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் காட்டம். அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர், அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர்ருமான எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். பின்னர் புதிதாக கட்சியில் இணைந்து கொண்டவர்களை வரவேற்று பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்… தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டினுடைய […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.950 குறைவு

ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவே தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகவும் இருக்கிறது. அதேபோல், நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பிலும், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.2024-ம் ஆண்டு […]

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு: வணிகர்கள் அதிர்ச்சி

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, பாரத், இந்துஸ்தான் மற்றும் இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில், இன்று பிப்ரவரி 1-ம் தேதி வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பின்படி, சென்னையில் வணிக […]

நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விடுமுறை

தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 1, 2026) தைப்பூசம் மற்றும் வள்ளலார் (வடலூர் இராமலிங்கர்) நினைவு தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் செயல்படும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள், கிளப்புகள் மற்றும் ஹோட்டல் பார்கள் (FL1 முதல் FL11 வரை) அனைத்துக்கும் இந்த விடுமுறை பொருந்தும். இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ள […]

உலகின் நம்பர் 1வீராங்கனையை வீழ்த்தி ஆஸி சாம்பியன் பட்டம் பெற்ற ரைபகினா

உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்காவை வீழ்த்தி ரைபகினா ஆஸி. சாம்பியன் பட்டத்தை வென்றார். ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றார் எலினா ரைபகினா. 2023 ஆஸி. ஓபனில் இறுதிப் போட்டியில் சபலென்காவிடம் தோற்ற நிலையில் 2026ல் வென்று ரைபகினா சாதனை படைத்தார்.

ஒரே நாளில் 85,000 குறைந்த வெள்ளி விலை-அப்போ தங்கம்..?

2025 ம் ஆண்டை போலவே 2026ம் ஆண்டும் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் தான் இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி ஒரு சவரன் விலை விரைவில் ரூ. 2 லட்சத்தை தொட வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். தங்கம் விலை நேற்று (ஜன 30) கிராமுக்கு ரூ. 950 குறைந்து ரூ. 15,850க்கு விற்பனையான நிலையில், இரண்டாவது நாளாக இன்று மீண்டும் கிராமுக்கு ரூ. 950 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று […]

வினோத திருவிழா- சாணி நீரில் ஊறவைத்த கட்டையால் அடி வாங்கும் பக்தர்கள்

ஆந்திரா-ஒடிசா எல்லையில் உள்ள போண்டக்கட்டி மற்றும் ஆந்திரா ஹால் ஆகிய பழங்குடியின கிராமங்களில், ஆண்டுதோறும் வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வினோதத் திருவிழா நடைபெறுகிறது. இதற்காக நான்கு நாட்களுக்கு முன்பே மரக்கட்டைகளை வெட்டி, அவற்றை மாட்டுச் சாணத்தில் ஊறவைக்கின்றனர். திருவிழா நாளன்று, அந்தச் சாணக் கட்டைகளால் வாலிபர்கள் சிரித்தபடியே ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கிக் கொள்கின்றனர். இந்த விசித்திரமான சடங்கைக் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி உற்சாகமாக வேடிக்கை பார்க்கின்றனர். இந்தத் திருவிழாவில் தாக்குதலுக்கு உள்ளாகி […]

புதுகை- நாட்டுபடகு வலையில் சிக்கிய 7.5 கிலோவில் கொடுவாமீன்

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி மீனவரின் நாட்டுப்படகு வலையில் கொடுவாமீன் ஒன்று சிக்கியது. அதன் எடை 7.5 கிலோவாம். அதனை அந்த மீனவர் கிலோ ரூ. 550வீதம் ரூ. 4,100 க்கு மீன் சந்தையில் விற்றுள்ளார். நாட்டுப் படகு மீனவர் வலையில் இவ்வளவு பெரிய மீன் பிடிபடுவது மிக அரிது என கூறப்பட்டது.

பிப்.6ம் தேதி ரூ. 360 கோடியில் பல்வேறு புதிய மருத்துவ கட்டிடம் திறப்பு- அமைச்சர் மாசு தகவல்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார். முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,அமைச்சர்கள் கே என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர்தொடங்கி வைத்து முகாமின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவம் சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, மருத்துவக்கல்லூரி முதல்வர் குமாரவேல், மருத்துவம் மற்றும் ஊரக […]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர கொன்னு குவிச்சிங்களே-செங்ஸ் கேள்வி

த.வெ.க ஒருங்கிணைப்புக் குழு தலைவர்  கே.ஏ. செங்கோட்டையன் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தி.மு.க-விற்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும் வாதங்களுக்கு மாறாக, அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை வாக்கு வங்கியில் பலவீனமாகவே இருப்பதாக அவர் விமர்சித்தார்.  பாரதப் பிரதமர் வரும்போது கூட அ.தி.மு.க தலைவர்களின் புகைப்படங்கள் பின்னால் இடம்பெறாதது ஏன்..?சொந்த முகத்திற்காக மக்கள் அவருக்கு ஓட்டுப் போடும் அளவிற்கு அவர் செல்வாக்கு பெற்றவரா […]

சமயபுரம் மாரியம்மன் கோவில் நடையடைப்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கொள்ளிடம் வடதிருக்காவேரியில் மாரியம்மன் தீர்த்தவாரி கண்டருள செல்வதால், நாளை (பிப்.1) மாலை 3:30 மணிக்கு நடை சாத்தப்பட்டு, நாளை மறுதினம் (பிப்.2) காலை 5:30 மணிக்கு வழக்கம் போல நடை திறக்கப்பட்டு, மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும் என, கோவில் இணை ஆணையர் சூரியநாராயணன் தெரிவித்துள்ளார்.

பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் பலி-பரிதாபம்

விருதுநகர், காரியாபட்டி அருகே முடுக்கன்குளத்தில் பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் உயிரிழந்துள்ளது. கூட்டமாக சென்று கொண்டிருந்த மாடுகள் மீது பால் டேங்கர் லாரி தாறுமாறாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 7 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 5க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயமடைந்துள்ளது.

புதுகை- பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை

.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் அபர்ணா ,இவரது கணவர் கலை ராஜன் இவர்பு புதுக்கோட்டையில் கம்யூட்டர் சென்டர் வைத்துள்ளார். இவர்களது வீடு புதுக்கோட்டை கம்பன் நகர் பகுதியில் உள்ளது.இருவரும் நேற்று பணிக்கு சென்று விட்டனர். வீட்டில் கலைராஜன் தாயார் தமிழ்செல்வி வயது 65, இவர் மட்டும் இருந்துள்ளார். இவர் வீட்டின் பின்புறம் வேலைபார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.அப்போது வீட்டினுள் சத்தம் கேட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து வீட்டினுள் தமிழ்செல்வி பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு கிடந்தது அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மகன், […]

ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து..!

விசிக நிர்வாகிகளுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, ஏர்போர்ட் மூர்த்தி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தது. இதனைத் தொடர்ந்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கூறி சென்னை மாநகர காவல் ஆணையர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஏர்போர்ட் மூர்த்தியின் மனைவி ஜெய்குமாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய […]

கோவை- 2 மணி நேரமாக வீணாகும் அத்திக்கடவு குடிநீர்

கோவையில் 2 மணி நேரமாக வீணாகும் அத்திக்கடவு குடிநீர் – நடுரோட்டில் பீய்ச்சி அடிக்கும் தண்ணீர் – இலவசமாக ‘வாட்டர் சர்வீஸ்’ செய்த வாகன ஓட்டிகள் !!! கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட விளாங்குறிச்சி விநாயகர் கோவில் பகுதியில், அத்திக்கடவு குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்துத் தகவல் கொடுத்தும் பல மணி நேரமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு. கோவை, விளாங்குறிச்சி பிரதான […]

விஜயை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதி இல்லை -செங்ஸ்., பேட்டி

தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து தெளிவான கருத்துகளை வெளியிட்டார். “விஜய் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை. சட்டமன்றத் தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டி” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதிமுக இயக்கம் தற்போது எடப்பாடி சொல்வது போன்ற நிலையில் இல்லை என்றும், போட்டி திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேயே என்றும் அவர் […]

அரசியலுக்கு வந்த பிறகு முதல் முறையாக பேட்டி கொடுத்த விஜய்!

தவெக தலைவர் நடிகர் விஜய், NDTV-க்கு அளித்த முதல் தேசிய ஊடக பேட்டியில் தனது அரசியல் எண்ணங்களையும், திட்டங்களையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், அந்த வலியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை என்றும் அவர் உருக்கமாகக் கூறினார். “இதுபோன்று நடைபெறும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்த விஜய், அரசியலில் தான் கிங் மேக்கராக இருக்க விரும்பவில்லை என்றும், தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் உறுதியாகக் கூறினார். […]

ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியை பிடிக்காது- முதல்வர் உரை

முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்தார். இன்று காலயில் கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடியில் கட்டப்பட்டுள்ள வேளாண் கல்லூரியை திறந்து வைத்தார். புதிய பல்நோக்கு அரங்கத்தையும் திறந்து வைத்தார், திறந்து வைத்த பல்நோக்கு அரங்கத்துக்கு சி.சுப்பிரமணியன் பெயரை சூட்டினார். பின்னர் கழனிவாசல் பகுதியில் ரூ.100.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சட்டக் கல்லூரியை திறந்து வைத்தார். சட்டக்கல்லூரி வளாகத்தில் நடக்கும் விழாவில் 28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். காரைக்குடியில் அரசு நலத்திட்ட […]

36 பேர் கொண்ட மாநில சட்ட பாதுகாப்பு குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு’-வை நியமித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தவெக இணைப்பொதுச்செயலாளர் CTR. நிர்மல் குமார், பொருளாளர் வெங்கடராமணன் உள்ளிட்ட 36 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும். இந்நிலையில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு’, பின்வரும் வகையில் […]

சிறை படத்திற்கு இணையான துல்கர் சல்மானின் ”சல்யூட்”

வார கடைசியில் “ஏதாவது வேற மாதிரி படம் பார்க்கலாமே”ன்னு யோசிக்கிறீங்களா? அப்படின்னா, சோனி லைவில் இருக்குற துல்கர் சல்மான் நடித்த ‘சல்யூட்’ ஒரு நல்ல தேர்வு தான். இது வழக்கமான போலீஸ் படம் மாதிரி சண்டை, ஹீரோ எலிவேஷன் எல்லாம் இல்லாம, ஒரு போலீஸ் அதிகாரி மனசுக்குள்ள என்ன நடக்குது என்பதைக் காட்டுற படம்.சல்யூட் கதைஅரவிந்த் கருணாகரன் (துல்கர் சல்மான்) நேர்மையான போலீஸ் ஆபீசர். அண்ணனை பார்த்து தான் போலீஸ் ஆகணும்னு கனவு காண்றவன். ஆனால் ஒரு […]

தஞ்சையில் களைகட்டும் ஹாட்பாக்ஸ் அரசியல்-அதிமுக துவங்கியது

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுகவினர் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். திமுக எப்படி கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறதோ, அதுபோல் இம்முறை அதிமுக டெல்டா மண்டலத்தில் சில தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக இயங்கி வருகிறது. ஏனென்றால் தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 20 தொகுதிகளில் 17 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. அதிமுகவின் காமராஜ், ஓ.எஸ்.மணியன் மற்றும் வைத்திலிங்கம் […]

காரைக்குடியில் ரூ.100 கோடியில் அரசு சட்டக் கல்லூரி- முதல்வர் திறந்து வைத்தார்

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக ஆட்சியிலும், கட்சியிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று மாலை சிவகங்கை மாவட்டத்திற்கு வந்துள்ளார். இன்று காலை அவர் காரைக்குடியில் புதிதாக கட்டப்பட்ட சட்டக்கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரியை திறந்து வைத்தார். சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை […]

மார்ச் 30ம் தேதி- தமிழ்நாடு, புதுவை பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல்

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் மார்ச் 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பார் கவுன்சில் தேர்தல் மூலம் மொத்தமாக 25 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்தல் அதிகாரிகளாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராஜீவ் சக்தேர், கே.என்.பாஷா, மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலை தங்க திருட்டு வழக்கில் 2 மணி நேர விசாரணை- நடிகர் ஜெயராமின் வாக்குமூலம் என்ன?

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் என்ன மாதிரியான தகவல்களை தெரிவித்தார் என்பதை பார்ப்போம். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரக பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசியபோது 4.5 கிலோ தங்கம் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதாவது 42.8 கிலோ எடை இருந்த தங்கம், சென்னையில் செப்பனிடப்பட்டு திரும்ப ஒப்படைக்கும் போது 38 கிலோவாக குறைந்தது. […]

ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல்ஒன்றிய பட்ஜெட்

நாடாளுமன்றத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது அரிய சம்பவம் என்பதால் இந்திய அரசியல் வட்டாரங்களிலும், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முன்பு 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, அப்போதைய மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா ஞாயிற்றுக்கிழமை அன்று பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதற்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது மீண்டும் அதேபோன்ற சூழல் உருவாகியுள்ளது. 2026–27 நிதியாண்டிற்கான மத்திய […]

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வௌியீடு

நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகள் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வை 4.25 லட்சம் பேர் எழுதினர். தேர்ச்சி பெற்றவர்கள் பிப்.2 முதல் தகுதிச் சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

குளித்தலை குவாரியில் நடந்தது என்ன?..எம்எல்ஏ பழனியாண்டி தரப்பு விளக்கம்

கரூர் மாவட்டம் , குளித்தலை அடுத்த அய்யர்மலையில் எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தாமான குவாரி உள்ளது. இந்த குவாரிக்கு செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் திருச்சி செய்தியாளர் கதிரவன் மற்றும் கேமராமேன் செபாஸ்டியன் ஆகியோர் தாக்கப்பட்டதாக செய்தி வௌியாகியது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் எம்எல்ஏ தரப்பு விளக்கம் வௌியிட்டுள்ளது. பத்திரிகையாளர்களை தாக்கினாரா ஸ்ரீரங்கம் MLA திரு.பழனியாண்டி??? எம்எல்ஏவின் குவாரிக்கு நியூஸ் தமிழ் செய்தியாளர் செபஸ்டினும் கதிரவனும் சென்றதன் காரணம் என்ன?? இவரை இயக்கியவர் யார்?? நெல்லை […]

சிறுமி கர்ப்பம்… தஞ்சையில் 7 பேர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் முறைகேடாக நடந்து கொண்ட 7 பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இந்த சிறுமிக்கு கடந்த 2022ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அப்பு (எ) எஸ்.சுரேந்தர் பாண்டியன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து சுரேந்தர்பாண்டியன் அந்த சிறுமியிடம் முறைகேடாக நடந்துள்ளார். பின்னர் […]

கோரவிபத்து- சமயபுரம் பாதயாத்திரை சென்ற 4 பக்தர்கள் பலி

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை நேரத்தில் நடந்த இந்த துயர விபத்தில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மலர்க்கொடி, விஜயலட்சுமி, சசிகலா ஆகியோரும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்.சென்னையைச் சேர்ந்த கெளதம் என்பவர் அதிவேகமாக ஓட்டிவந்த கார் மோதியதில் இந்த […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ஒரு கிராம் ரூ.14,900-க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.350க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 55,000 விலை குறைந்து ரூ.3,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அரசு பஸ்சில் கடத்திய ரூ.10 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல்..

கேரளாவில் இருந்து கோவையை நோக்கி வந்த தமிழக அரசு பேருந்தை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். கேரளாவில் இருந்து வரும் பயணிகள் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் கொண்டு வரப்படுகின்றதா? என்று சோதனை நடந்தது. அப்போது, அதில் ஒரு நபர் சந்தேகப்படும் வகையில், பெரிய பேக்குடன் அமர்ந்திருந்தார். அந்த பேக்கை திறந்து போலீசார் சோதனை செய்தபோது அதில் தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது. போலீசார் விசாரணையில், தங்க கட்டிகளை கடத்தி வந்தது கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த […]

தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் சர்ச்சை – இந்தியா, EU-வை சாடிய அமெரிக்கா!

வாஷிங்டன் : இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது உலக வர்த்தக வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஒப்பந்தம் இரு பெரும் பொருளாதார சக்திகளை இணைத்து புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஸ்காட் பெசன்ட் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை தனது நலன்களுக்கு எதிரானதாக பார்க்கிறது என்பது அவரது கருத்தில் தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஸ்காட் […]

தலையில் தையல் போட்ட சமையல் ஊழியர்- புதுகை ஜிஎச்-ன் அவலம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி உள்ள அரசு மருத்துவமனை ஒரு தாலுகா மருத்துவமனை. ஆலங்குடி மற்றும் அந்த சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறையாக இருந்து வருகிறது நீண்ட நாட்களாக இந்த மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களையும் செவிலியர்களையும் நியமிக்க வேண்டும் என கோரிக்கையும் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபரை சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற […]

விஜய் திட்டமிடாமல் சென்றதால் தான் கரூரில் 41 பேர் பலி– இபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு விஜய் திட்டமிடாமல் சென்றதே காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார். “விஜய் திட்டமிடாமல் சென்றதால் தான் கரூரில் 41 பேர் உயிரிழந்தனர்” என்று தெரிவித்த எடப்பாடி, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்காத விஜய் எப்படி நல்ல தலைவராக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். விஜய் சிறந்த நடிகர் என்று ஒப்புக்கொண்ட எடப்பாடி, “விஜய் […]

ரூ.1,100 கோடியில் நலத்திட்டங்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

கோவை கொடிசியா (CODISSIA) வளாகத்தில் இன்று நடைபெற்ற முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360 (International Textile Summit 360) நிகழ்வில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஜவுளித் தொழிலை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தமிழகத்தில் இருந்து ஜவுளி ஏற்றுமதியில் முத்திரை பதித்த நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ‘சிறந்த ஏற்றுமதியாளர் விருதுகள்’ வழங்கப்பட்டன. இதில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் என 5 பிரிவுகளில் […]

கேன்டீன் வளாகத்தில் பெண் பலாத்காரம்… 3 பேர் கைது

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேன்டீன், வளாகத்தில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேன்டீனில் பணிபுரிந்த பெண்ணை உரிமையாளர் உள்ளிட்ட மூவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குணசேகரன், கார்த்திகேயன், முத்துச்செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் நாளையுடன் நிறைவு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் நாளையுடன் (ஜன. 30) முடிகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் இதுவரை 16.02 லட்சம் பேர் மனு அளித்துள்ளனர். எஸ்ஐஆர் பணிகளுக்கு பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர். 6.41 கோடியாக இருந்த தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை எஸ்ஐஆர் பணிக்கு பின் 5.43 கோடியாக குறைந்தது. ஜன.18ஆம் தேதியுடன் முடிவடைந்த பெயர் சேர்ப்பு பணியை ஜன. 30 வரை நீட்டித்து […]

11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பனிமூட்டம் இருக்கும்

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவித்த்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு. ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

அதிமுகவில் ஓபிஎஸ்க்கு இடமில்லை-மீண்டும் மீண்டும் ஈபிஎஸ் அடம்

அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக காலையில் ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில் சேலத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஓபிஎஸ் அதிமுகவில் இடம் இல்லை என்று கூறியுள்ளார். சேலம் ஓமலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியில் கூறியதாவது.. ஓபிஎஸ்க்கு அதிமுகவில் இடமில்லை என்பது பொதுச்செயலாளர் முடிவு அல்ல, பொதுக்குழுவின் முடிவு. அதிமுக பொதுக்குழுவில் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். ஓபிஎஸ்-ஐ நான் நீக்கவில்லை.. நீக்கியது பொதுக்குழு. விஜய் சிறந்த நடிகர். ஆனால் சிறந்த அரசியல்வாதி அல்ல. ஓபிஎஸ் […]

15 லட்சம் முறைகேடு- வங்கி மேனேஜர் தற்கொலை- திருச்சி க்ரைம்

தனியார் பொறியியல் கல்லூரி மாணவன் திடீர் மாயம் திருச்சி பொன்னகர் 6 -வது குறுக்கு சாலையைச் சேர்ந்த சீதாலட்சுமி (46), ராஜேந்திரன் தம்பதி. இவர்களது மகன் ஹரிஹரசுதன் (19).. திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி செல்வதாக கூறிவிட்டு சென்ற ஹரிஹரசுதன் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை இது குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிந்து மாணவனை தேடி வருகின்றனர். […]

துப்பாக்கி காட்டி மிரட்டிய அதிமுக நிர்வாகி கைது

நெல்லிக்குப்பம் அருகே செம்மண் குவாரி விவகாரத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்தனர். துப்பாக்கியுடன் தகராறில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில், அதிமுக நிர்வாகி கைது செய்யபட்டார். துப்பாக்கி காட்டி தகராறில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி கோபால் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

புதிய யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

ஜாதி, மத ரீதியிலான பாகுபாட்டை தடுத்து, சம வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் உயர் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. ஜன.14ம் தேதி இந்த விதிகள், யுஜிசி இணையதளத்தில் வெளியானது.யுஜிசியின் இந்த புதிய விதிமுறைகள், தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறி மாணவர்கள் தரப்பில் கடும் எழுந்தது. விதிகளை திரும்ப பெற வலியுறுத்தி டில்லி, லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந் நிலையில், எந்த பாகுபாடும் இருக்காது, […]

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் உடல் தகனம்

பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக விமானத்தில் நேற்று காலை பயணம் செய்தார். அவருடன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், 2 விமானிகள் மற்றும் விமான ஊழியர் ஒருவர் என மொத்தம் 5 பேர் பயணித்தனர்.பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவார் மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். அஜித் பவாரின் இறுதிச் சடங்கு இன்று முழு […]

அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் “அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ரூ.21.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருமண மாளிகையில் 10 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.

விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண்- தன் தந்தையுடன் பேசிய கடைசி உரையாடல்

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரை ஏற்றிச் சென்ற சார்ட்டர்டு லியர்ஜெட் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானதில், இரண்டு இளம் பெண்கள், கேபின் குழு உறுப்பினர் பிங்கி மாலி, 29, மற்றும் பைலட்டுகள் கேப்டன் சுமித் கபூர், கேப்டன் ஷாம்பவி பதக் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே, பிங்கி மாலிக்கும் அவரது தந்தை ஷிவ்குமார் மாலிக்கும் இடையிலான இறுதி உரையாடல் வெளிவந்துள்ளது.அதில் அவர் நாளை தந்தையிடம் பேசுவதாக உறுதியளித்தார். மும்பையின் வோர்லியில் வசிக்கும் பிங்கி […]

ரசிகர்களை கவர்ந்த சசிகுமார் பட ட்ரைலர் -எந்த படம் தெரியுமா

ராஜூ முருகன் எழுதி இயக்கியுள்ள ‘மை லார்ட்’ என்ற படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே.ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குனர் கோபி நயினார், எழுத்தாளர் வசுமித்ர நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைக்க, சத்யராஜ் நடராஜன் எடிட்டிங் செய்துள்ளார். முனி பால்ராஜ் அரங்கம் அமைக்க, எம்.ஷெரீஃப் நடனப் பயிற்சி அளித்துள்ளார். பி.சி ஸ்டண்ட் குழு சண்டைக் காட்சி அமைத்துள்ளது. அம்பேத்குமார் வழங்க, ஒலிம்பியா மூவிஸ் சார்பில் […]

மாஞ்சோலை தேயிலை தோட்ட குடியிருப்புகளை 7 நாட்களுக்குள் காலி செய்ய நிறுவனம் நோட்டீஸ்

மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த தேயிலைத் தோட்ட நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தியை நிறுத்தியது. எனவே அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. இருப்பினும் தாங்கள் அங்கேயே வசிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மலைப்பகுதியிலேயே தங்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அங்குள்ள மக்கள் வலியுறுத்தி வருவதோடு, மலையிலிருந்து கீழே இறங்க மறுத்து வருகின்றனர். அதே சமயம் தேயிலை தோட்டம் மூடப்பட்டுள்ளதாலும், […]

தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட்டாகும். இதன் மூலம் ஒரே பிரதமரின் கீழ் தொடர்ச்சியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைக்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், பிரதமர் மோடியின் 2-வது மற்றும் 3-வது ஆட்சிக்காலங்களில் […]

UGC விதிகளில் புதிய மாற்றம்- முதல்வர் ஸ்டாலின் பதிவு!

UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள் 2026 தாமதமான நடவடிக்கையாக இருந்தாலும், பாகுபாடு மற்றும் அக்கறையின்மையால் சீரழிந்த உயர்கல்வி அமைப்பை சீரமைக்கும் வரவேற்கத்தக்க முயற்சியாக உள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விதிகள் சமூகத்தில் ஆழமான பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, குறிப்பாக பட்டியல், பழங்குடி மாணவர்களுக்கு எதிரான அநீதிகளை குறைக்கும் வகையில்.பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள், குறிப்பாக பட்டியல் மற்றும் பழங்குடி மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. தென்னிந்திய […]

ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறிய பெண்-காப்பாற்றிய ரயில்வே போலீஸ்

அரியலூர் ரயில் நிலையத்தில் இன்று காலை விழுப்புரத்திலிருந்து, திருச்சி வந்த MEMU ரயில் வந்து நின்று பின் புறப்பட்டு செல்லத் தொடங்கியது. அப்போது பெண் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் ஏறிச் செல்ல முயன்றார். ரயில்வே தண்டவாளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே தலைமை காவலர் செந்தில் பெண் பயணி நிலை (காப்பாற்றிய தலைமை காவலர்) தடுமாறி கீழே விழுவதை கண்டு திடீரென ஓடிச் சென்று தாங்கி அவரை ரயிலில் உள்ளே ஏற்றி விட்டார். இந்த சிசிடிவி […]

125 நாட்கள் வேலை உத்தரவாதம் அல்ல- ஒரு மாயை…ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

125 நாட்கள் வேலை என்பது உத்தரவாதம் அல்ல; அது ஒரு மாயை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில், “விக்சித் பாரத்-ஜி ராம் ஜி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தத்தின் மூலம், கிராமப்புறத்தில் 125 நாட்கள் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்” என்று குறிப்பிட்டார். தவறு, மாண்புமிகு குடியரசுத் தலைவரே! சமீபத்திய ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக […]

சோழன் மழலை மொழி வித்தகர் பட்டம் பெற்ற 7வயது கோவை மாணவி

சோழன் மழலை மொழி வித்தகர் பட்டத்தைப் பெற்ற ஏழு வயது மாணவி கோவையைச் சேர்ந்த செல்லின் கிறிஸ்டி ஏழு வயதேயான மாணவி செல்லின் கிறிஸ்டிதமிழின் 50 பக்தி மற்றும் இலக்கியப் பாடல்களை 50 நிமிடங்களுக்குள் ஒப்புவித்த அதே வேலை தமிழ் மொழிக்குள் பயன்பாட்டில் இருக்கும் நூறு வேற்று மொழிச் சொற்களை அடையாளப்படுத்தியுள்ளார். இவருடைய இந்த முயற்சியை உலக சாதனையாகப் பதிவு செய்கிறது சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம். உலகில் இன்று வாழும் மொழிகளில் முதல் மொழியான […]

அதிக கட்டணம் வசூல்.. தனியார் பஸ்சை வழிமறித்து வக்கீல் போராட்டம்

கோவை மாநகரில் இயக்கப்படும் தனியார் நகர பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நகர பேருந்து ஒன்றில் காந்திபுரம் பகுதியில் இருந்து உக்கடம் வரை அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.ஆனால் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று […]

ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி விழுக்காடு குறைத்து அரசாணை வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET), தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் விழுக்காடு 5% குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்குக் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 50% அல்லது 75 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 40% அல்லது 60 மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி தேர்வு எழுதியவர்களுக்கும், மேலும் ஆசிரியர்களாகத் தொடர்வதற்குத் தகுதித் தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.

இன்று முதல் பிப்.,3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்

வானிலை மையம் வெயிட்ட அறிவிப்பில், 29-01-2026 முதல் 30-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 31-01-2026 முதல் 02-02-2026 வரை: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 03-02-2026: தமிழகம், புதுவை மற்றும காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்: இன்று வானம் […]

திடீர் பிரேக் பழுதானதால் சாலை தடுப்பில் மோதி அரசு பஸ் விபத்து

செங்கல்பட்டு அருகே ஜிஎஸ்டி சாலை மேம்பாலத்தில் சென்றபோது பிரேக் பழுதானதால் சாலை தடுப்பில் மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுனரின் சாதூரிய செயலால் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி நேற்றுமுன்தினம் மதியம் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த பேருந்து செங்கல்பட்டு அருகே இருங்குன்றம்பள்ளி ஜிஎஸ்டி சாலை மேம்பாலத்தில் சென்றபோது, டிரைவர் பிரேக் அடித்தார். ஆனால் திடீரென பிரேக் பழுதான […]

விருத்தாசலம்- தென் அமெரிக்க மாப்பிள்ளையை கரம் பிடித்த தமிழ் பெண்

அரியலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகாவை சேர்ந்த மருத்துவர் வந்தனாவிற்கும் தென் அமெரிக்கா ஈகுவடாரை சேர்த்த மருத்துவர் ஆண்ட்ரஸ் ஆகியோருக்கு விருத்தாசலத்தில் இன்று தமிழ் மரபு படி திருமணம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தெற்கு பெரியார் நகரில் வசிப்பவர் பாரதி சத்தியபாமா தம்பதியினர். இவர்களின் இளைய மகள் வந்தனா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக(MBBS) பயிற்சி முடித்து அமெரிக்காவில் உள்ள ரெட்கெர்ஸ் யுனிவர்சிட்டியில் பொது மருத்துவ துறையில் பட்ட மேற்படிப்பு (MD) முடித்துள்ளார். தற்பொழுது அமெரிக்காவில் […]

பாஜ., ஆட்சியில் மாணவர் தற்கொலை அதிகரித்துள்ளது-முதல்வர்

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்குள் மாணவர் தற்கொலைகள் அதிகரித்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு வைத்துள்ளார். UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள், 2026 தாமதமான நடவடிக்கை என்றாலும், பாகுபாட்டிலும், நிறுவனங்களின் அக்கறையின்மையிலும் தோய்ந்துபோன உயர்கல்வி அமைப்பினைச் சீர்ப்படுத்துவதை நோக்கிய வரவேற்கத்தக்க நகர்வாகும். ஒன்றிய அளவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள், குறிப்பாகப் பட்டியல், பழங்குடியின மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்திருப்பது கண்கூடு. மேலும், தென்னிந்திய மாநிலங்கள் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.9,520 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.1190 உயர்ந்து ரூ.16,800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்துள்ளது ரூ.425க்கு விற்பனையாகிறது

திருவப்பூர் கும்பாபிஷேக விழாவில் இலவச மருத்துவ முகாம்

புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை  மற்றும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. சங்கத் தலைவர்  கண.மோகன் ராஜா தலைமை வகித்தார்.அனைவரையும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் ஏஆர். முகமது அப்துல்லா வரவேற்றார். நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் புதுக்கோட்டை ச.பாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமினை துவக்கி வைத்தார்.  சுபலட்சுமி முகாம் […]

பாராமதியில் விபத்து- விமானத்தில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை

அஜித் பவார் சென்ற விமானத்தை இயக்கிய விமானி சுமித் கபூர் மிகவும் அனுபவமிக்கவர் என்று விமான நிறுவன அதிபர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “அஜித் பவார் சென்ற விமானத்தை தரையிறக்கியது விமானி சுமித் கபூர் எடுத்த முடிவுதான். முதலில் ஓடுபாதை எண் 29ல் தரையிறக்க முயன்றார், இயலாததால் ஓடுபாதை எண் 11ல் தரையிறக்கினார். விமானம் நன்றாக பராமரிக்கப்பட்டு வந்தது; அதில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

காங்கிரசை பிரித்து தவெகவில் சேர்க்க சிலருக்கு ஆசை- துரை வைகோ

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரித்து தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பலர் ஈடுபட்டு வருகின்றனர், அவர்களுடைய ஆசை அதுவாக தான் உள்ளது அந்த ஆசை நிறைவேறாது என்பது தான் எனது கருத்து என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “இரண்டு மேம்பாலங்கள் விரைவில் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.முதல் கட்டமாக திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு வரைபடங்கள் […]

தமிழ்நாட்டில் தற்போது 8713 துணை சுகாதார நிலையங்கள்… அமைச்சர் மாசு

தமிழ்நாட்டில் தற்போது 8,713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 50 இடங்களில் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுக்கு முன் இருந்ததை விட 2 மடங்கு அதிகமாக மக்கள் அரசு மருத்துவமனைகளை பயன்படுத்துகின்றன என விக்கிரவாண்டியில் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டை நாளை அறிவிக்கிறார் ஓபிஎஸ்?

பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் தனது இல்லத்தில் தங்கியிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ‌.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு புறப்படும் முன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். அதற்கு பொறுமையாக இருங்கள் என்று மட்டும் பதலளித்து விட்டு ஓபிஎஸ் புறப்பட்டு சென்றார். இதனிடையே நாளை பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ் ஆலோசனைக் நடத்த உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து சென்னை சென்று அங்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிறகு தனது […]

விருத்தாசலம்-தென் அமெரிக்கா மாப்பிள்ளையை கரம் பிடித்த தமிழ் பெண்

அரியலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகாவை சேர்ந்த மருத்துவர் வந்தனாவிற்கும் தென் அமெரிக்கா ஈகுவடாரை சேர்த்த மருத்துவர் ஆண்ட்ரஸ் ஆகியோருக்கு விருத்தாசலத்தில் இன்று தமிழ் மரபு படி திருமணம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தெற்கு பெரியார் நகரில் வசிப்பவர் பாரதி சத்தியபாமா தம்பதியினர். இவர்களின் இளைய மகள் வந்தனா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக(MBBS) பயிற்சி முடித்து அமெரிக்காவில் உள்ள ரெட்கெர்ஸ் யுனிவர்சிட்டியில் பொது மருத்துவ துறையில் பட்ட மேற்படிப்பு (MD) முடித்துள்ளார். தற்பொழுது அமெரிக்காவில் […]

விருதுநகர் எம்பி தேர்தலில் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டேன் – விஜயபிரபாகரன் ஓபன் டாக்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் வந்த மகன் விஜயபிரபாகரன் பேசுகையில், ‘‘சிவகாசி எனக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இங்கே எம்பி தேர்தலில் 60 நாள் தங்கி பிரசாரம் செய்துள்ளேன். சிவகாசி மக்கள் இப்போதும் என்னை அன்பாக வரவேற்பதை காண முடிகிறது. தேர்தலில் வேண்டும் என்றால் நான் தோல்வி அடைந்திருக்கலாம். எம்பி தேர்தலில் கடுமையாக உழைத்தோம். இது மக்களாகிய உங்களுக்கு தெரியும். யார் வெற்றி பெற்றார் என்றும் தெரியும். எம்பி […]

முடி திருத்தும் தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம் வேண்டும்- எம்பி கனிமொழியிடம் மனு

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்க திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் தலைமையில் குழுவினர் தி.மு.க. தேர்தல் அறிக்கை கருத்து கேட்டு கூட்டத்தில் கனிமொழி எம்.பி.யிடம் ஒரு மனு அளித்தனர். அதில் பி.சி.ஆர். சட்டம் போன்று முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும். மேலும் விவசாயம் நெசவு தொழிலுக்கு அளிப்பது போன்று முடி திருத்தும் சிறு கடைகளுக்கு மின் கட்டண சலுகை அளிப்பதோடு, முடி திருத்தும் கடைகளுக்கு உரிமம் பெற சிறு கடைகளுக்கு […]

ஆட்சிக்கு வந்து 4000 கோயில்களில் குடமுழுக்கு- முதல்வர் பெருமிதம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில் குடமுழுக்குகள்! ஆயிரமாவது குடமுழுக்கு – மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோவில் (2023) 2 ஆயிரமாவது குடமுழுக்கு – மயிலாடுதுறை – கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவில் (2024)3 ஆயிரமாவது குடமுழுக்கு – நாகை – திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோவில் (2025) 4 ஆயிரமாவது குடமுழுக்கு – இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோவிலில்… இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் […]

ஒரு மாத குழந்தை விற்பனை.. பெற்றோர் உட்பட 8 பேர் கைது

சென்னை காசிமேட்டில் ஒரு மாத ஆண் குழந்தையை ரூ.3.80 லட்சத்திற்கு விற்பனை செய்த பெற்றோர் உட்பட 8 பேர் போலீசார் கைது செய்தனர். குழந்தையை விற்பனை செய்த திலகவதி – சகாயராஜ் தம்பதி தனக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளதால் விற்பனை செய்ய முடிவெடுத்ததாக வாக்குமூலம். மீட்கப்பட்ட குழந்தை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் 6 பாம்புகள் மீட்பு

குன்னூர் அருகே பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் 6 பாம்புகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள் பிடித்ததால் மாணவிகள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை பகுதியில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியின் பின்புறம் குடியிருப்புகளும், புதர்மண்டிய செடிகளும் அதிகளவில் உள்ளதால் அப்பகுதியில் சாரை, கட்டுவிரியன் உட்பட பலவகை பாம்புகள் பள்ளி வளாகத்தில் சுற்றி திரிவதும், அதனை கண்டு மாணவிகள் அலறி […]

சாதிய, மதவாத கட்சிகள் உள்ள கூட்டணியில் இருக்க மாட்டோம்- திருமா உறுதி

விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன், பாமகவுடன் கூட்டணி தொடர்பான விவகாரத்தில் மீண்டும் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக NDA கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாஸ் தலைமையிலான பாமக திமுக கூட்டணியில் இணையலாம் என்ற தகவல்கள் வெளியானதால் எழுந்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். சாதிய, மதவாத கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்ற விசிகவின் கொள்கையில் உறுதியாக உள்ளதாகக் கூறிய திருமாவளவன், இந்த நிலைப்பாட்டில் மாறினால் தனது நம்பகத்தன்மை பாதிக்கப்படும் […]

புழல் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த ரவுடி மீண்டும் கைது

புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த ரவுடி சிறை வாயிலில் மீண்டும் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறைக்குள் இரு தரப்பாக மோதலில் ஈடுபட்ட கொலை முயற்சி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதூர் அப்புவுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில் வெளியே வந்தார். ஜாமினில் வந்த ரவுடி புதூர் அப்புவை சிறையில் நடந்த மோதல் வழக்கில் போலீசார் சிறை வாயிலில் வைத்து கைது செய்தனர்.

அஜித் பவார் மறைவு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அஜித் பவார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த திடீர் துயரம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகக் கூறிய பிரதமர், அஜித் பவாரின் மறைவு மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று வருத்தம் வெளிப்படுத்தினார். அரசியல் எல்லைகளைத் தாண்டி அஜித் பவார் மக்களுடன் நெருக்கமாக இருந்த தலைவர் என்று அவர் நினைவுகூர்ந்தார்.அஜித் பவார் ஒரு உண்மையான மக்கள் தலைவராகவும், மகாராஷ்டிரா மக்களின் […]

டி20 உலககோப்பை..பிப்.4ம் தேதி இந்தியா-தென்னாப்பிரிக்கா பயிற்சி ஆட்டம்

2026ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கு, டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு தங்களின் பலம் மற்றும் பலவீனங்களைச் சோதித்துப் பார்க்க இது ஒரு முக்கியமான வாய்ப்பாக அமையும். இந்த போட்டி வரும் பிப்ரவரி 4-ம் தேதி, நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டில் மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 7:00 […]

கனிமொழி- ராகுல் காந்தி டில்லியில் இன்று சந்திப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி அமைத்து பாமக, தாவக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி அரசியலுக்கு ஆயத்தமாக உள்ளது. ஆனால் வலுவான கூட்டணி என்று சொல்லி வந்த திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற முழகத்தை முன் வைத்துள்ளனர்.இது திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலின் போது உருவான இந்தியா கூட்டணி தொடர்கிறது […]

ஏடிஜிபி மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

சென்னை ஏடிஜிபி ஜெயராம் மீதான சஸ்பென்ட் உத்தரவை தமிழக உள்துறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆள் கடத்தலுக்கு கார் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் ஏடிஜிபி ஜெயராம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். துறை ரீதியிலான விசாரணை நடந்தது வந்தது. இந்த நிலையில் தற்போது அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு உள்துறை உத்தரவிட்டுள்ளது. பணியிடம் ஒதுக்கப்படாமல் உள்ள நிலையில் ஜெயராமுக்கு இந்த வாரம் பணியிடம் ஒதுக்கி உத்தரவு பிறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற […]

லாரிக்கு ரூ.1000 கட்டாய வசூல்…. கோவையில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்

கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றி வரும் டிப்பர் லாரிகளை ஒரு கும்பல் வழி மறித்து, யூனிட்டுக்கு ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை சட்ட விரோத வசூலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் கட்டிடப் பணிகளுக்காகச் செங்கல், மணல் மற்றும் ஜல்லி போன்ற பொருட்களைக் கொண்டு செல்ல அரசு முறையாக அனுமதிச் சீட்டு (Pass) வழங்கி வருகிறது. இந்நிலையில், மலுமிச்சம்பட்டி சாலையில் லாரிகளை வழிமறித்த ஒரு கும்பல், “அரசு […]

கரூர் கற்பக விநாயகர் கோவில் பாலமுருகனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

கரூர் கற்பக விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு தை மாத கிருத்திகை முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரம். தை மாத கிருத்திகை முன்னிட்டு இன்று பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலமுருகனுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி […]

திருச்சியில் குடிநீர் வழங்கும் திட்டம்-அமைச்சர் மகேஸ் பார்வை

திருச்சி கம்பரசம்பேட்டை நீர்உந்து நிலையத்தில் ஆய்வு – பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தினை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. புதிதாக இணைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்துதல் திருச்சி மாநகராட்சியுடன் 2011ல் சேர்க்கப்பட்ட திருவெறும்பூர் பேரூராட்சி, பாப்பாகுறிச்சி ஊராட்சி, எல்லக்குடி ஊராட்சி, கீழகல்கண்டார் கோட்டை ஊராட்சி மற்றும் ஆலத்தூர் ஊராட்சி, ஆகிய பகுதிகள் அடங்கிய 5 பழைய வார்டு (61, 62, 63, 64 மற்றும் 65) பகுதிவாழ் பொதுமக்களுக்கு CPHEEOன் […]

தங்கம் விலை வரலாறு காணாத விலை உயர்வு

நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள், தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 15,025 ரூபாய்க்கும், சவரன், 1,20,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 375 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 65 ரூபாய் குறைந்து, 14,960 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 520 ரூபாய் சரிவடைந்து, 1,19,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது.அதேசமயம், வெள்ளி கிராமுக்கு, 12 ரூபாய் உயர்ந்து, 387 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, […]

வெறி நாய் கடித்து 4 பேருக்கு சிகிச்சை-துண்டான கைவிரல் -கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இறைச்சி கடைகள் மற்றும் குப்பை கழிவுகள் இருக்கும் இடங்களில் அதிகம் காணப்படும் தெரு நாய்கள் அவ்வப்போதே வெறி பிடித்து சாலையில் செல்பவர்களை துரத்தி, துரத்தி கடித்து வருகின்றன. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று குளித்தலை பாரதி நகரை சேர்ந்த சௌராபானு […]

தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்

எந்த அழுத்தத்திற்கும் அடிபணிகிறவன் நான் இல்லை என்று முழங்கிய எங்கள் தலைவரை பார்த்து அமைச்சர் நேருவுக்கு ஏன் ஆத்திரம்? என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றவர்தான் இன்றைக்கு வீர வசனம் பேசுகிறார் என அமைச்சர் நேரு தவெக தலைவர் விஜய்யை சாடிய நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில், “தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்..! எந்த […]

இந்தியாவிற்கே ரோல் மாடல் அரசு திராவிடல் மாடல் அரசு … உதயநிதி பேச்சு

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் (TNWESafe) சார்பில் நடைபெறும் இரண்டு நாள் உலக மகளிர் உச்சி மாநாடு – 2026ல் ஆற்றிய வரவேற்புரை:- தமிழ்நாட்டு மகளிரினுடைய வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதை உறுதி செய்ய 5 ஆயிரம் கோடி ரூபாயில் Tamil Nadu WE Safe திட்டத்தை இன்றைய […]

தஞ்சையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

இந்திய வங்கிகள் சங்கத்துடன் கையெழுத்து இடம்பெற்ற 12-வது இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் 9 -வது கூட்டு குறிப்பில் வாரம் 5 நாட்கள் வேலை முறை ஒப்பந்தத்தை ஊழியர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கத்துடன் இணைந்து ஒப்புதல் பெறப்பட்டது, இந்திய வங்கிகள் சங்கம் மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் பெற அனுப்பப்பட்ட வகையில் இது வரை செயலுக்கு நடைமுறைபடுத்தப்படவில்லை. இந்த 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் […]

வெறிநாய் கடித்து…மூதாட்டியின் கை விரல் துண்டானது

கரூர், குளித்தலை உழவர் சந்தை அருகே சௌரா பானு (65) என்பவரை வெறி நாய் கடித்ததில் அவரின் கை விரல் துண்டானது. மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். தெரு நாயைப் பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டபுள் எஞ்சின் அல்ல- டப்பா எஞ்சின்”- NDA கூட்டணிக்கு எதிராக போஸ்டர்

கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி செய்யும் டபுள் எஞ்சின் என வலியுறுத்திப் பேசினார். பிரதமரின் இந்த கருத்துக்கு அரசியல் ரீதியாகப் பல்வேறு விவாதங்கள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், கரூர் மாநகரின் முக்கியப் பகுதிகளான பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம் மற்றும் மனோகரா சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தச் சுவரொட்டியில் ரயில் எஞ்சின் மீது பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக […]

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தால் தமிழ் மொழி காக்கப்பட்டது.. திருமா.,

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தால் தமிழ் மொழி காக்கப்பட்டது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் ‘இந்தி படித்திருந்தால் நாமும் மோடியின் வித்தைக்கு மயங்கி இருப்போம். இந்தியை தாய் மொழியாகக் கொண்ட பலர் தமிழ்நாட்டில் வேலைக்கு வருகிறார்கள். தமிழ்நாட்டில் மோடி வித்தை எடுபடாமல் போனதற்கு நாம் இந்தி படிக்காததுதான் காரணம்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும்- எம்பி கனிமொழி

தஞ்சையில் கனிமொழி எம்.பி. தலைமையில் இன்று தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட தி.மு.க சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி அனைத்து தரப்பினரிடம் கருத்துகளை கேட்டு அறிந்து மனு வாங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க தேர்தல் அறிக்கையை உருவாக்குவதற்காக, தேர்தல் அறிக்கை குழுவை தலைவர் […]

முகம் தெரியாதவர்களுக்கு ஏன் பதில் அளிக்கனும்- நடிகை ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனா அளித்த பேட்டியில், “என்னைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் வரும்போது, நண்பர்கள் ‘நீங்கள் ஏன் பதில் சொல்லவில்லை?’ என்று கேட்கிறார்கள். டிரோல் செய்பவர்களுக்கு பதில் சொல்வதால் எந்த பயனும் இல்லை. பொய்களைப் பரப்புவோர் தொடர்ந்து அதையே செய்து கொண்டிருப்பார்கள். மக்கள் தங்களுக்கு பிடித்ததை மட்டுமே கேட்க விரும்புகிறார்கள். பொய்யான வதந்திகளைப் பார்த்து, ‘இது உண்மையில்லை’ என்று நான் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும்? வதந்திகளை பரப்புவோருக்கு பதிலளித்தால், அவர்களை ஊக்குவிப்பதுபோல ஆகிவிடும். அதை நான் […]

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு…நாளை 14 மதுகடைகள் மூட உத்தரவு

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை 14 மதுக்கடைகளை மூட உத்தரவு அளித்துள்ளார். மன்னார்குடி நகரப்பகுதியில் உள்ள 14 மதுபானக்கடைகளை மூட திருவாரூர் எஸ்.பி., உத்தரவு அளித்துள்ளார். பிரசித்திப்பெற்ற மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. மன்னார்குடி உள்ளிட்ட 3 தாலுகாக்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்தார்

சென்னையில் 5 வழித்தடங்களில் ‘பிங்க் பேருந்துகள்’ சேவை

உலக மகளிர் உச்சி மாநாடு 2026-னை தொடங்கி வைத்து, TNWESafe திட்டத்தையும், மகளிருக்கான பல்வேறு வாகன சேவைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (27.01.2026) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் இரண்டு நாள் உலக மகளிர் உச்சி மாநாடு 2026-னை தொடங்கி வைத்து, TNWESafe திட்டத்தையும் தொடங்கி வைத்தார்கள். […]

தேர்தல் பிரச்சாரத்தை பிப்ரவரியில் துவக்குகிறது திமுக

திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தேர்தல் பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. 20 நட்சத்திர பேச்சாளர்கள், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வார்கள்; ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒவ்வொரு பொதுக்கூட்டம் நடத்த பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்த்தியுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு தலைகுனியாது என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் […]

ரயில்வே ஊழியர் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை- திருச்சி க்ரைம்

ரயில்வே ஊழியர் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர்சதீஷ்குமார் (39), தெற்கு ரயில்வேவில் தண்டவாள பராமரிப்பாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.நேற்று அதிகாலை வேலை காரணமாக திருச்சி ரயில்வே ஜங்ஷனில் பராமரிப்பு அறைக்கு வந்தார். வேலைக்கு ஆட்கள் வந்த போது சதீஷ்குமார் அசைவின்றி கிடந்தார். தொடர்ந்து சதீஷ்குமார் மர்மமான முறையில் இறந்தது தெரியவந்தது. இது குறித்து கன்டோன்மென்ட் போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு […]

கூட்டணி குறித்து பேசினால்..டில்லியிலிருந்து வந்துவிடுகிறார்கள்-செங்ஸ்., பேட்டி

யாருடன் கூட்டணி எனப் பேசினாலே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள் என்று தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன்,” தவெகவுடன் கூட்டணிக்கு வர வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நினைத்தார். சூழ்நிலை காரணமாக டிடிவி தினகரனால் எங்கள் கூட்டணிக்கு வர முடியவில்லை. தினகரனுக்கு ஏற்பட்ட சூழ்நிலை குறித்து என்னால் கூற இயலாது, எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். டிடிவி தினகரன் ஒரு நாளுக்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார். […]

5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

கோவை: வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதை வலியுறுத்தி கோவையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை இரண்டு நாட்கள் விடுமுறை என்பதை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் அரசு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். எல்ஐசி, ஆர்பிஐ போன்ற மத்திய அரசு நிறுவனங்களுக்கு வாரத்தில் சனி மற்றும் […]

தேர்தலில் போட்டியில்லை…என் தனி விருப்பம்.. டிடிவி பேட்டி

தவெகவுக்கு நான் வருவேன் என்று செங்கோட்டையன் நம்பினார் என டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு எடுத்தது என்று தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்தார். செங்கோட்டையன் என்னை அழைத்த போது நட்பின் காரணமாக உடனடியாக நான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை” என தவெகவுடன் கூட்டணி வைக்கத்தான் டிடிவி தினகரன் விரும்பினார் என செங்கோட்டையன் கூறிய நிலையில் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார். மேலும் டெல்லிக்கு நான் சென்ற போது கூட செங்கோட்டையன் ஏன் […]

பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் வளரமுடியாது- முதல்வர்

சென்னை நந்தம்பாக்கத்தில் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், பிங்க் பேருந்துகள், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கான வாகனங்கள் மற்றும் பிங்க் ஆட்டோக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியாவில் முதன்முறையாக, உலக வங்கியின் உதவியுடன் தமிழ்நாட்டின் அனைத்து வயது பெண்களையும் உள்ளடக்கிய,’தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு’ திட்டத்தை (TNWESafe) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் அரியலூர், பெரம்பலூர், தருமபுரி மாவட்டங்களில் 14 […]

காருக்கு முன்பு ஆக்ரோஷமாக நின்ற கரடி- பரபரப்பு

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பஜாரில் காருக்கு முன்னால் கரடி டிரைவரை தாக்குவது போல் ஆக்ரோஷமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றபுற பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. பெரும்பாலும் இரவு நேரங்களில் நடமாடும் கரடிகள் கடைகள், பூட்டி கிடக்கும் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைப்பதும், பொருட்களை நாசம் செய்வதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மஞ்சூர் பஜார் பகுதியில் உலா வந்த இரண்டு கரடிகள் சாலையோரம் இருந்த குப்பை […]

நேரடியாக பேசினால் பதிலடி-விஜய் பேச்சுக்கு ஜெயக்குமார் பதில்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், அதிமுகவை “ஊழல் சக்தி” என்று நேரடியாக விமர்சித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக ஐடி விங் உடனடியாக பதிலடி கொடுத்து, “நடிகர் விஜய் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி” என்று கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில், அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், விஜய்யின் விமர்சனத்தை நேரடியாக எதிர்கொள்ளாமல் மழுப்பலான பதிலை அளித்துள்ளார். இது அதிமுகவின் உள் சூழலை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன. ஜெயக்குமார் […]

ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் 5 செல்போன்களை மர்ம நபர்கள் கைவரிசை

கோவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமானோர் உள் நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் 10க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையில் உள்ளது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வரை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது இதில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மகாலிங்கம் மற்றும் ஓட்டுநர் ஜெயக்குமார் இருவரும் ஓய்வறையில் தங்கி இருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் உள்ளே புகுந்த நிலையில் அவர்களுடைய இரண்டு மொபைல் போன்கள் மற்றும் […]

அரசு பஸ்சில் பெண்களிடம் ரகளை- ரத்த வௌ்ளத்தில் கிடந்த ஆசாமி

கோவை அரசுப் பேருந்துகளில் போதை ஆசாமிகளின் ரகளைகளும், பயணிகளின் பாதுகாப்பும் பெரும் கேள்விக்குறியாகி வரும் நிலையில், இன்று காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பெண்களை போதையில் ஆபாசமாக திட்டி தர்ம அடி கொடுத்த ஆசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரத்தக் காயங்களுடன் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ​கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கோவைபுதூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், முன்பக்கப் படிக்கட்டில் ஏறிய சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், […]

பட்டுக்கோட்டை அருகே மாணிக்கவாசகர் கோயில் கும்பாபிஷேகம்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் அமைந்துள்ள சின்ன ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி. மாணிக்கவாசகர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற 28ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுவதை ஒட்டி பெண்கள் ஒரே சீருடையில் மாரியம்மன் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்தது முளைப்பாரி விழாவில் மேளத்தாலங்குடன் குதிரை ஆட்டம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது பின்னர் முளைப்பாரி கோவிலில் அருகில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான […]

35 ஆண்டுக்கு பின் முன்னாள் மாணவ-மாணவிகளின் திருச்சியில் சந்திப்பு நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய படைகலன் தொழிற்சாலை வளாகத்தில் படைகலன் தொழிற்சாலை உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1991 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் ஒன்று கூடிய முன்னாள் மாணவ மாணவிகள் தாங்கள் படித்த வகுப்பறைக்கு சென்று அமர்ந்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் […]

பத்திரப்பதிவில் அசல் ஆவணம் கட்டாயம்.. மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

பத்திரப்பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அந்த மசோதாவில், பத்திரப்பதிவு செய்யப்படும் சொத்து மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டாவை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், சொத்து அடமானத்தில் இருந்தால் அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அசல் ஆவணங்கள் தொலைந்து போயிருந்தால், காவல்துறையில் புகாரளித்து ‘கண்டறியமுடியவில்லை’ என்ற சான்றிதழ் பெற வேண்டும் […]

பராமரிப்பு பணி- ரயில் சேவையில் மாற்றம்

சென்னை புறநகர் பகுதியில் இன்று (27ம் தேதி) 5 மெமு ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியளவிலும் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் – கூடூர் இடையிலான தாடா மற்றும் சூலூர்பேட்டை ரயில் நிலையங்களில் தண்டவாள பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் இன்று (27ம் தேதி) அதிகாலை 12.50 மணி முதல் காலை 8.50 மணி வரை நடைபெறுகிறது. இதன்காரமாக, மூர்மார்க்கெட் – சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை – நெல்லூர், […]

பெரம்பலூர் அருகே போலீசார் என்கவுன்டரில் பிரபல ரவுடி பலி…

பெரம்பலூர் அருகே போலீசார் நடத்திய என்கவுன்டரில் மதுரையைச் சேர்ந்த ரவுடி அழகுராஜ் உயிரிழந்தார். போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த ரவுடி அழகுராஜ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். ரவுடி வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்ப அழைத்துச் சென்றபோது போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினார்.

மனைவியின் கழுத்தை நெறித்து கொன்ற கணவன் கைது

நெல்லை மாவட்டம் மானூர் குப்பண்ணா புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி வயது 25. இவர் ராமையன்பட்டி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்த பாக்கியத்தாய் வயது 23 என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததிலிருந்து இருவருக்கும் மாறி மாறி கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்தோணி தனது மனைவி பாக்கியத்தாயிடம் உனது அப்பா வீட்டிற்கு […]

முன்னாள் காங்., எம்எல்ஏ சுந்தரம் காலமானார்…

1996-2001, 2006-2011 ஆண்டுகளில் காரைக்குடி தொகுதி காங்., MLA-வாக இருந்த இருந்தவர் சுந்தரம். இவர் தனியார் ஹாஸ்பிடலுக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாராதவிதமாக காரில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிகிச்சை அளித்தும், அது பலனளிக்காததால் ஹாஸ்பிடலில் உயிரிழந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறனர்.

திராவிடத்தை காப்பாற்ற திமுக பக்கம்..வைத்தியலிங்கம் நெகிழ்ச்சி

ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர முக்கிய ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். இவர் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ. பன்னீர்செல்வத்தின்அமைப்பிலிருந்து விலகி முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதற்காக வைத்திலிங்கம் தனது ஒரத்தநாடு சட்டமன்ற எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் . இதையடுத்து தஞ்சை செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்று வரும் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் தனது ஆதரவாளர்கள் 10, 000-க்கும் மேற்பட்டோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைக்கும் […]

டெல்டா மண்டல மகளிர் மாநாட்டில் சுட சுட மட்டன் பிரியாணி

தஞ்சையில் நடைபெறும் திமுக வின் டெல்டா மண்டல மகளிர் மாநாட்டிற்கு வருகை தரும் பெண்களுக்கு வழங்க மட்டன் பிரியாணி சிக்கன் 65 தனி தனியாக ஹாட் பாக்ஸ்களில் பேக் செய்யப்படுகிறது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாலை நடைபெறுகிறது. இதில் தஞ்சை திருச்சி திருவாரூர் நாகை புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் கடலூர் மயிலாடுதுறை உள்பட 15 மாவட்டங்களை சேர்ந்த 46 சட்டமன்ற தொகுதியிலிருந்து ஒரு லட்சத்து […]

திருவாரூர் மாவட்டத்திற்கு 28ம் தேதி உள்ளூர் விடுமுறை

மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. தற்போது கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் முயற்சியால் 4 ராஜகோபுரங்களை புதுப்பிக்க நிதி ஒதுக்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோவிலில் குடமுழுக்கு திருப்பணிக்கு பாலாலயம் நடைபெற்று திருப்பணி தொடங்கியது.அதனை தொடர்ந்து ராஜகோபுரங்களை புதுப்பிக்கும் பணிகள் உள்ளிட்ட மற்ற திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று முடிவடைந்துள்ளது. அரசு நிதி மற்றும் கொடையாளர் […]

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் வட்டம், உடையநாச்சி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (45 வயது) என்பவர் 24.1.2026 அன்று இரவு கட்டடப் பணி நடந்து கொண்டிருந்த அவரது வீட்டிற்கு மின்விளக்குப் போட முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் […]

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 26-01-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27-01-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 26-01-2026 மற்றும் 27-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச […]

நடிகர் என்பதால் கூட்டம் கூடுகிறது… செல்லூர் ராஜூ

நடிகர் என்ற முகத்தை வைத்து வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். நடிகர் என்பதால் கூட்டம் கூடுகிறது. நடிகர் என்ற மாஸ் மட்டுமே எடப்பாடிக்கு இல்லையே தவிர, மக்கள் எங்களுக்காக கூடுகிறார்கள்; விஜய் அறையில் உட்கார்ந்து அரசியல் செய்கிறார், களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை..டிடிவி

 தேனியில் அளித்த சிறப்பு பேட்டியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் தனிப்பட்ட முறையில் போட்டியிடப் போவதில்லை என்று தெளிவாகத் தெரிவித்தார். “என்னுடன் இருப்பவர்களை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்” என்று கூறிய அவர், அவர்களை அமைச்சரவையில் பார்க்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகவும் வெளிப்படுத்தினார். இருப்பினும், அமைச்சரவை பதவிக்காக எவருக்கும் அழுத்தம் கொடுக்க மாட்டேன் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அமமுகவின் […]

சீண்டிய விஜய்-பதிலடி கொடுத்த அதிமுக!

சென்னை, மாமல்லபுரத்தில் நேற்று (ஜனவரி 25, 2026) தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இக்கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் தயாரிப்புகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. தொகுதி அமைப்பு வலுப்படுத்துதல், பிரசார உத்திகள், கட்சி நிர்வாகிகளின் பணிகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, தேர்தல் பணியாளர்கள் பயிற்சி ஆகியவை முக்கிய அஜெண்டாவாக இருந்தன. கூட்டத்தில் மாநில அளவிலான முக்கிய […]

ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து- தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு

குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் தேநீர் விருந்து அளிப்பார். அதில், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள், அரசு அதிகாரிகள், முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர். கவர்னராக ரவி பொறுப்பேற்றது முதல், அவருக்கும், தி.மு.க., அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சட்டசபையில் உரையாற்றாமல், கவர்னர் ரவி வெளிநடப்பு செய்தார். எனவே, கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று நடக்கும் தேநீர் விருந்தை […]

புதுகை- சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆட்சியர் மு.அருணா தேசிய கொடியினை ஏற்றிவைத்து சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் களை வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர். புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆட்சியர் மு.அருணா தேசிய கொடியினை ஏற்றிவைத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்குபொன்னாடை அணிவித்து கெளரவித்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், […]

எந்த கொள்கையை விஜய் முன்னிறுத்தி இருக்கிறார்-சுப வீரபாண்டியன் கேள்வி

கோவை, பொள்ளாச்சியில் இன்று கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் பல்லடம் ரோடு பகுதியில் நடைபெற்றது.இதில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையைச் தலைவர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மேலும் நடிகர் வாசு விக்ரம் உள்ளிட்ட கழக பேச்சாளர்கள் பலர் கலந்து கொண்டனர் .மேடையில் பேசிய சுப வீரபாண்டியன் பராசக்தி படத்தில் மொழிப்போர் தியாகிகள் குறித்து திரைப்படத்தில் சித்தரித்தது குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்தார்.மேலும் மொழிப்போர் தியாகிகளின் உறவினர்களையும் மொழிப்போருக்காக […]

தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்திய கோவை கலெக்டர்

நாட்டின் 77-வது குடியரசு  தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர்,பிரதமர்,மாநில முதல்வர்கள் அரசு உயர் அதிகாரிகள் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார்.அதனை தொடர்ந்து அலங்கார ஊர்தியில் சென்று காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்டு குழந்தைகளுடன் இணைந்து மூவண்ண பலூன்களை பறக்கவிட்டார்.பின்னர் காவல் துறை அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். இதில் கோவையில் […]

வைத்தி., ஆதாரவாளர்கள் 10 ஆயிரம் பேர் இன்று திமுகவில் இணைகின்றனர்

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தலைமையில் 10 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடக்கிறது. சுமார் 5 ஏக்கரில் இதற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தலைமையில் பத்தாயிரம் பேர் திமுகவில் இணைகின்றனர். .அதிமுகவில் உள்ள மற்ற அதிர்ச்சியாளர்களையும் திமுகவில் இணைக்கும் பணியில் வைத்திலிங்கம் மும்முரமாக இறங்கி உள்ளாராம். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் யூனியன் சேர்மன் ஆழி […]

இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம்- உதயநிதி பேச்சு

சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் திருவொற்றியூர் பெரியார் நகரில் நேற்று நடந்தது.மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு வரவேற்றார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவர் பேசியதாவது: உலக வரலாற்றில் தாய்மொழியை காக்க நூற்றுக்கணக்கானோர் உயிரை தியாகம் செய்த வரலாறு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் மட்டுமே […]

குடியரசு தின விழாவில் அண்ணா பதக்கம் விருது வழங்கிய முதல்வர்

இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னியில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து குடியரசு தினத்தையொட்டி பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள், விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். குடியரசு நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய விருதுகள்:வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்புத்துறை ஓட்டுனர் சங்கர் […]

புதுகையில் தேசிய கொடியை ஏற்றி கலெக்டர் மரியாதை

புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில்மாவட்ட ஆட்சியர் மு.அருணா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.15,025க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.375க்கு விற்பனை செய்யப்படுகிறது

77 வது குடியரசு தின விழா…அரியலூரில் தேசிய கொடி ஏற்றி மரியாதை

இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தின விழா நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.பின்னர் திறந்த ஜீப்பில் சென்று, மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா சாஸ்திரி ஆகியோர் காவல் துறையின் அணிவகுப்பை பார்வையிட்டனர். மேலும் உலகெங்கும் சமாதானம் நிலவ வெண்புறாக்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு- உச்ச பிரமாண்ட ஏற்பாடுகள்-ஹைலைட்ஸ்

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு இன்று திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. 46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1,50,000 லட்சம் மகளிர் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். 📌3000+ பேருந்து வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்துடன் 120 ஏக்கர் அளவில் நிகழ்ச்சி நடைபெறும் திடல் அமைந்துள்ளது. 📌ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் அமர்வதற்கு என்று தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதை […]

மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது

மலையாள நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் ஷிபு சோரனுக்கு பத்ம பூஷன் விருதும், மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திர சிங் தியோலுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

61,000 பேருக்கு மத்திய அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கிய பிரதமர்

நாடு முழுவதும் 61,000 பேருக்கு ஒன்றிய அரசுப் பணிகளுக்கான நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படும் ‘ரோஸ்கர் மேளா’ எனப்படும் வேலைவாய்ப்பு திருவிழா திட்டம் 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, தகுதியான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இதுவரை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் நாடு முழுவதும் 11 […]

முதல்வருக்கு நன்றி தெரிவித்த சத்துணவு-அங்கன்வாடி பணியாளர்கள்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.1.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றுகையில்; சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும்; பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்றும்,குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் இரண்டாயிரம் […]

சென்னை- இயற்கை ஓவியக் கண்காட்சியினை துவக்கி வைத்தார் நடிகர் சிவகுமார்

இயற்கை ஓவிய கண்காட்சியை துவக்கி வைத்தார் ஓவியக் கலைஞரும் நடிகருமான சிவக்குமார் சென்னையில் உள்ள லலித் கலா அகாடமியில் ஏழு நாட்கள் நடைபெறும் (சித்திர தேரோட்டம் என்ற தலைப்பில்) இயற்கை ஓவியக் கண்காட்சியினை பிரபல ஓவியரும், அன்னை காமாட்சி இசை கல்லூரியின் முதல்வரும் வெங்கடாசலபதி மற்றும் திரைப்பட நடிகரும் ஓவியக் கலைஞருமான சிவகுமார் துவக்கி வைத்தார். புகழ்பெற்ற ஓவியர்கள் வசுமதி, முருகேசன், அன்னபூர்ணா,ரங்கராஜன் கலைஞர்கள் வரைந்த ஓவியங்கள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியானது 22 ஆம் […]

பெரம்பலூர்- போலீஸ் வாகனம் மீது நாட்டுவெடிகுண்டு வீச்சு-2 காவலர்கள் காயம்

பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இதில் காவலர்கள் விக்னேஷ்குமார், மாரிமுத்து பாண்டி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் 2 பேர் புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.மதுரையில் பழிக்குப் பழியாக 22 ஆண்டுகளில் 21 கொலைகள் நடந்த நிலையில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. ரவுடி வௌ்ளை […]

ஊட்டியில் கஞ்சா விற்ற காவலர் கைது

நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த குரூஸ் (26) என்ற இளைஞர் கடந்த 21ம் தேதி உதகையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். விற்பனை செய்ய எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்படுகிறது என போலீசார் குரூஸிடம் நடத்திய விசாரணையில் உதகை நகர போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வரும் நசீர் அகமது(26) என்பவரிடம் வாங்கியதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தான் கஞ்சா விற்பது தொடர்பான விஷயம் காவல்துறையினருக்கு தெரிந்து விட்டதால் காவலர் நசீர் […]

ரூ.10 லட்சத்தில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் துவக்கம்

பஞ்சாபில் அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் என 850+ மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவசமாக சிகிச்சைப் பெறலாம். இது அனைத்துவித மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்கும் பொருந்தும் என்றும், 65 லட்சம் குடும்பங்கள் இதனால் பயன்பெறுவர் என்றும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

கால்பந்து விளையாடிய கல்லூரி மாணவி மயங்கி விழுந்து பலி

சேலம்: அரசு கலைக்கல்லூரியில் கால்பந்து விளையாடிய மாணவி, மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சி வடசென்னிமலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் ஒரு மணியளவில், கல்லூரி மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி கணினி அறிவியல் படிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் […]

ரூ.50,000 செலுத்தி மநீம விருப்ப மனு பெறலாம்

கமல் தலைமையில் நடந்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகக்குழு செயற்குழுக் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம். பொதுச்செயலர் அருணாச்சலம் உள்ளிட்ட ஐவர் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்தது மநீம. ரூ. 50,000 செலுத்தி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு வௌியிட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி 5 பேர் கொண்ட பணிக்குழுவை நியமித்தது மநீம கூட்டத்தில் தீர்மானம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மாற்றங்களை கண்டித்து மநீம கூட்டத்தில் தீர்மானம். […]

ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் 2வது மாநில மாநாட்டில் தீர்மானம்

ஒன்றிய அரசு ஓய்வூதியர்களுக்கு எதிரான நிதி திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கரூரில் நடைபெற்றதமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் 2வது மாநில மாநாட்டில் தீர்மானம். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் 2வது மாநில மாநாடு கரூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநிலத்தலைவர் கோ.முரளிதரன் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் ந.பர்வதராஜன் செயல் அறிக்கை வாசித்தார். மேலும் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து […]

எனக்கு யாரும் போட்டி இல்லை- சீமான் ஓபன் டாக்!

 நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை தாம்பரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். தமிழக அரசியல் களத்தில் நடக்கும் கூட்டணி மாற்றங்கள், கொள்கை அடிப்படையில் இல்லை என்றும், சீட்டுகள் மட்டுமே இலக்கு என்றும் கடுமையாக விமர்சித்தார்.“எனக்கும் என் கொள்கைக்கும் யாருமே போட்டி இல்லை. ஒருவர் இருமொழி கொள்கை என்பார், ஒருவருக்கு கொள்கை என்றால் என்னவென்றே தெரியாது. கூட்டணி அமைப்பவர்களுக்கு கொள்கை இல்லை, சீட்டுகள் மட்டுமே இலக்கு” என்று சீமான் கூறினார். தற்போது நடக்கும் கூட்டணி […]

பெண் குழந்தைகளுக்கான திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி இராணி யார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தேசிய பெண்குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் , சட்டங்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர் மு.அருணா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.உடன் மாவட்ட சமூகநல அலுவலர் மே.சியாமளா, மாவட்ட திட்ட அலுவலர் க.ந.கோகுலப்பிரியா மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், வட்டாட்சியர் செந்தில்நாயகி, துணைவட்டாட்சியர் லெட்சுமணன் மற்றும் அரசு அலுவலர்கள் […]

ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு 1600 உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்நத நிலையில் மேலும் 1040 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரே நாளில் சவரன் ரூ. 1600 உயர்ந்துள்ளது. தங்கம் ஒரு கிராம் 130 உயர்ந்து ரூ.14,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு- மெரினா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகிற 26.01.2026 அன்று இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர் சென்னை, காமராஜர் சாலை – வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், காவல் இணை ஆணையாளர்களின் […]

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறப் புதிய நடைமுறை- தமிழக அரசு அரசாணை

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பாஸ் போர்ட் சேவா கேந்திரங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், பின்னர் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு ஊழியர்கள் கடிதம் அனுப்ப வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியிடம் தடையில்லா சான்றிதழ் கிடைத்ததும் வெளிநாட்டிற்கு அரசு ஊழியர் பயணம் செல்ல முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் அரசு ஊழியர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு, அரசின் அனுமதி பெறாமல் அங்கு வேலை […]

வேலூரில் 27-ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்- எடப்பாடி அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அரசு தலைமை மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படவில்லை. தற்போதுள்ள பழைய மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள்; மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாத காரணத்தாலும்; போதிய கட்டட வசதி இல்லாத காரணத்தாலும், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமலும், கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க […]

ரோந்து பணிக்காக போலீசாருக்கு நவீன கேமரா பொருத்தப்பட்ட 9 டூவீலர்கள்

தர்மபுரி மாவட்டத்தில், ரோந்து பணியை தீவிரப்படுத்தும் விதமாக, ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு நவீன கேமரா பொருத்தப்பட்ட 9 டூவீலர்களை எஸ்பி மகேஸ்வரன் வழங்கினார்.தர்மபுரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும், போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்க, புதியதாக பொதுமக்கள் வசதிக்காகவும், ரோந்து பணியை தீவிரப்படுத்தும் நோக்கத்தோடும், மொபைல் டேட்டா டெர்மினல் (எம்டிடீ) டிவைஸ் பொருத்தப்பட்ட நவீன தொழில்நுட்படம் அடங்கிய, 9 இருசக்கர வாகனங்கள் […]

700 விமான சேவைகள் ரத்து செய்தது இண்டிகோ

 விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவை அடுத்து இண்டிகோ 700 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. டி.ஜி.சி.ஏ. உத்தரவை தொடர்ந்து 717 உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் காலி செய்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தால் கைவிடப்பட்ட விமான சேவைகள் 2026 ஜனவரி-மார்ச் காலத்துக்கு உட்பட்டது. இண்டிகோ கைவிட்ட உள்நாட்டு சேவைகளை பெற மற்ற விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது

4 மாவட்டங்களில் இன்று கமழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் இன்று (ஜன.24) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது

பகுதிநேர டீச்சர்களுக்கு சிறப்பு மதிப்பெண்- முதல்வர் ஸ்டாலின்

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்போது பகுதிநேர ஆசிரியர்களின் பணிக் காலத்தை அடிப்படையாக கொண்டு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ₹15,000, மே மாதம் கோடை விடுமுறையின்போது ₹10,000 ஊதியம் வழங்கப்படும் என அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார். ஆனாலும், பணி நிரந்தர வாக்குறுதியை நிறைவேற்ற கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம்- ஐகோர்ட்டில் அரசு உறுதி

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று ஐகோர்ட்டில் அரசு உறுதி அளித்துள்ளது. 28 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் 3 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் பாதி அளவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் இனி அவகாசம் வழங்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நடப்பாண்டில் 2 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த திட்டம்

நடப்பாண்டில் இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டு ஜூலை மாதம் நடத்தப்படும். நடப்பு ஆண்டுக்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.

பாஜக-வை எதிர்க்க விஜய் அச்சப்படுகிறார்..திருமா., சாடல்

விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “நீங்கள் இன்னும் தேர்தலுக்கே வரவில்லை. அதற்குள் இவ்வளவு பயந்தால் எப்படி? எதிர்காலத்தில் எப்படி அரசியல் செய்யப்போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் பாஜகவையோ மோடி அரசையோ வெளிப்படையாக எதிர்க்க தயாராக இல்லை என்றும், அச்சம் காரணமாக அவர்கள் கூட்டணியில் இணைந்தால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் எச்சரித்துள்ளார். திருமாவளவன் மேலும் கூறுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலரும் என்றால் அதற்குப் பொருள் […]

தேனிக்கள் கொட்டி மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்

ஜோலார்பேட்டை அருகே தேனீக்கள் கொட்டியதில் மாணவர்கள் உட்பட 12 பேர் காயம் அடைந்தனர். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 15 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

கோவையில் பிசியோதெரபிஸ்ட்-ஐ காரில் கடத்திய கும்பல்-G-Pay மூலம் சிக்கிய 3 பேர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் அன்பரசு. இவரது மகன் நவீன் சக்கரவர்த்தி (23). இவர் பிசியோதெரபிஸ்ட் படித்து உள்ளார். தற்போது நவீன் சக்கரவர்த்தி கோவை சாய்பாபா காலனியில் பாலசுப்ரமணியம் தெருவில் தற்போது வசித்து வருகிறார். அங்கு இருந்து தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிசியோதெரபிஸ்தாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 21ம் தேதி நவீன் சக்கரவர்த்தி அவரது நண்பர் பிரதீப் ஆகியோர் சாய்பாபா காலனி, பகுதியில் உள்ள ஹோட்டல் முன்பு என்று […]

ஓபிஎஸ் ஷாக்- அதிமுகவில் இணைகிறார் மாநிலங்களவை எம்.பி தர்மர்

மாநிலங்களவை எம்.பி தர்மர் இன்று மாலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைகிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறார் ஆர்.தர்மர்.அ.தி.மு.க. ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். என இரு அணிகளாகப் பிரிந்திருந்தபோது, இவர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் நின்றார். ஆர்.தர்மருக்கு கடந்த முறை ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த நவாஸ்கனி, தி.மு.க. கூட்டணியில் மக்களவை எம்.பி.யாக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஆர்.தர்மர், அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.யாக வருவது […]

தமிழ்நாட்டில் NDA கூட்டணி முழு வடிவம் பெறவில்லை- பிரேமலதா

தற்போது வரை தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி முழு வடிவம் பெறவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் வகையில் தேமுதிக நல்ல முடிவை அறிவிக்கும். என்.டி.ஏ.வுடன் இன்னும் பல கட்சிகள் பேசிக்கொண்டு இருக்கின்றன, இறுதியாகவில்லை என்பதுதான் உண்மை. கூட்டணி அமைக்க இன்னும் நேரம் இருக்கிறது; தேமுதிக என்ற குழந்தைக்கு ஒரு தாயாக எனது கடமையைச் செய்வேன்”, என்று இவ்வாறு தெரிவித்தார்.

கலைஞர் கனவு இல்லம்-தமிழக அரசின் அதிரடி அறிவிப்புகள்

“தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரையாற்றினார். அதில், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். முதல்வர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் இதோ…” தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. 5 ஆண்டுகள் கடந்த நிலையில், நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். விடியலை அனைத்து வீடுகளும் பார்க்கின்றன. 2 லட்சம் பேருக்கு கலைஞர் இல்லம் வீடு கட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு […]

28ம் தேதி புதுகை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. மங்கள இசை

புதுக்கோட்டை மாவட்டம், மாநகராட்சி பிரசித்திபெற்ற திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 28.1.2026 காலை 9.45 மணியளவில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று பிள்ளையார் பட்டி பிச்சை குருக்கள் மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, தனபூஜை ஆகிய பரிகார பூஜைகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் கும்பாபிஷேக விழா கமிட்டியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருத்தணியில் அதிநவீன பேருந்து நிலையம்.. கட்டும் பணிகள் மும்முரம்

சுற்றுலா நகரமாக விளங்கும் திருத்தணிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ரயில், பேருந்து, கார், வேன், இருசக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதனால், நகர முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதோடு, அண்ணா பேருந்து நிலையத்தில் இட நெருக்கடியால், பேருந்துகள் நிறுத்த முடியாத நிலையில் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். முருகப்பெருமானை தரிசிக்க வருகை தரும் பக்தர்கள் மற்றும் திருத்தணி சுற்று வட்டாரங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் […]

எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு இருக்கும்… முதல்வர் நம்பிக்கை

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். அதில், “அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் பின்னடைவை சந்தித்து மோசமான நிலையை அடைந்திருந்தது. இடியாப்ப சிக்கல் என்ற சூழலில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும்,” இவ்வாறு தெரிவித்தார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை

இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை அபராதத்துடன் நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த டிச.23ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை படையால் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கும் தலா ரூ.44,500 [இந்திய மதிப்பு] இலங்கை மன்னார் நீதிமன்றம் அபராதம் விதித்தது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு

 ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,16,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.355க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 உயர்ந்து ரூ. 3,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டிரம்ப் 50% வரி விதித்தது குறித்து பிரதமர் மோடி கருத்து கூறவில்லை…ராகுல் கண்டனம்

இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 50% வரி விதித்தது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காததற்கு ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்களை அமெரிக்காவின் 50% வரி விதிப்பு, நிலையற்ற தன்மை பெரிதும் பாதிக்கிறது. அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு மோடி தீர்வும் கொடுக்கவில்லை; வாய் திறக்கவும் இல்லை என்று ராகுல் விமர்சித்துள்ளார். 4.5 கோடி வேலை இழப்பு, லட்சக்கணக்கான தொழில்கள் பாதிப்பு ஏற்பட்டும் பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. “மோடி! நீங்கள்தான் இதற்கு பொறுப்பு; இந்த […]

ஜனநாயகன் விவகாரம்-27ம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் வரும் ஜனவரி 27ம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ஜன.27ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்று தர தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து சென்சார் போர்டு வழக்கு தொடர்ந்துள்ளது.

திமுக அரசு ஒரு பூஜ்ஜிய அரசு- அன்புமணி கடும் தாக்கு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். அவருடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஐஜேகேவின் பாரிவேந்தர், தமாகாவின் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் ஜெகன்மூர்த்தி […]

கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை”- கிருஷ்ணசாமி

கோவையில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் கூட்டணி குறித்த தகவல்களிக்கு விளக்கம் தந்தார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் , ஒரு சில கருத்துகளை தெளிவுபடுத்தவே இந்த சந்திப்பு என தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஆண்டு, சட்டமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பவும்,ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவும் திட்டமிடும் என தெரிவித்த அவர், மதுரை மாநாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வியூகத்தை அமைத்துள்ளோம் என […]

காதலை கண்டித்த கல்லூரி நிர்வாகம்- மாணவி தற்கொலை

சிவகாசி மேற்கு பகுதி ஆசாரி காலனி 5-வது தெருவில் வசிப்பவர் முருகேஸ்வரி ( வயது 44 ). தனியார் மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் பாண்டியராஜன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு உடல் நலம் குன்றி உயிரிழந்தார். இவர்களது மகள் சோலை ராணி( வயது 19) சிவகாசியிலிருந்து திருப்பிலிபுத்தூர் செல்லும் சாலையிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரி மாணவர் ஒருவரை சோலை ராணி காதலித்து வந்ததாகவும், இதனை […]

100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டம்… முதல்வர் தனித்தீர்மானம் நிறைவேற்றம்

100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.அதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆதரித்து பேசினர். தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம்;மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், 2005-ன்படி, கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை (Right to Work) நிலைநாட்டப்பட வேண்டுமென்றும், மக்களின் வேலைக்கான தேவைக்கேற்பவும் மகாத்மா காந்தி […]

சிறுவன் கொலை-கடத்தல் கும்பல் தலைவன் சுட்டுக்கொலை

சித்திரக்கூடத்தில் 13 வயது சிறுவன் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் பர்கர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அசோக் கேசர்வானியின் 13 வயது மகன் ஆயுஷ், நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டிய நிலையில், இதுகுறித்து சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த கடத்தல்காரர்கள், போலீசாரிடம் சிக்கிவிடுவோம் […]

கறிக்கோழி வளர்ப்பு போராட்டம் -சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்

கறிக்கோழி வளர்ப்பு போராட்டம் குறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்போர் தங்களுக்கு வளர்ப்பு கூலியை உயர்த்தி தரக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பெரிய நிறுவனங்கள் கோழிக்குஞ்சுகளை விவசாயிகளிடம் கொடுத்து வளர்த்து 45 நாட்களுக்குப் பின் திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள். இதற்காக ஒரு கிலோ கோழிக்கு ரூ.6.50 கூலியாக கொடுக்கிறார்கள். இந்த கூலியை 20 ரூபாயாக உயர்த்தி தரும்படி பல்வேறு மாவட்டங்களில் கறிக்கோழி வளர்ப்பு உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்த […]

மஞ்சள் ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ.1400 அதிகரிப்பு

ஈரோட்டில் புது மஞ்சள் வரத்து காரணமாக ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ. 1,400 அதிகரித்துள்ளது. மஞ்சள் ஒரு குவிண்டால் நேற்று ரூ.16,456க்கு விற்பனையான நிலையில் ஒரே நாளில் ரூ.1,400 அதிகரித்து ரூ. 17,899க்கு விற்பனையாகி வருகிறது

3 யானைகளை பீடத்திடமே திரும்ப ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவு உறுதி

காஞ்சிபுரம் காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளை பீடத்திடமே திரும்ப ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து வனத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட். யானைகளின் உடல்நிலை குறித்த அறிக்கையை ஆய்வு செய்த பிறகு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்றும் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்.

புதுகை கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மு அருணா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,இணை இயக்குநர் (வேளாண்மை) மு.சங்கரலெட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்ம.தீபாசங்கரி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மு.க.பாரதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமா, மாவட்ட வன அலுவலர்எஸ். கணேசலிங்கம் , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்த. நந்தகுமார் , விவசாயிகள் சங்கபிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து!

 கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு அம்மாநில அரசு விதித்திருந்த தடையை ரத்து செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம். இருசக்கர வாகனங்களை ஒப்பந்த வாகனங்களாக பதிவு செய்ய அனுமதி அளித்தும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் Ola, Uber, Rapido போன்ற நிறுவனங்கள் மீண்டும் தங்களது சேவையைத் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அனுமதி பெறாத ‘மாம்பழம்’ சின்னத்தை மேடையில் பயன்படுத்துவதா?- ராமதாஸ் சாடல்

அனுமதி பெறாத ‘மாம்பழம்’ சின்னத்தை மேடையில் பயன்படுத்துவதா? பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பிரச்சாரத் தொடக்க விழாவில், நான் நிறுவிய பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாற்றுச் சின்னமான ‘மாம்பழம்’ சின்னம் மேடையின் பின்னணியில் பயன்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தற்போது பாட்டாளி மக்கள் […]

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

தேமுதிக, தவெக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறதா..? சரத்குமார் மழுப்பல் பதில்

சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டம் தொடர்பாக நேற்று வரை பியூஷ் கோயலை, பாஜகவின் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து நேரில் சந்தித்து வந்தனர். அந்த வகையில், நடிகரும், பாஜகவை சேர்ந்த நிர்வாகியுமான சரத்குமார் பியூஸ் கோயலை நேரில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், கட்சித் தலைமை உத்தரவிடுவதை நிறைவேற்ற தயாராக இருப்பதாக கூறினார். அவர் பேசுகையில், “பாரதிய ஜனதா […]

தைப்பூச திருவிழா.. சுவாமிமலை சுவாமிநாத கோவிலில் கொடியேற்றம்

முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலாக விளங்குவது கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயமாகும். இந்த ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று தைப்பூச திருவிழா.எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது .இதனை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.கொடியேற்றத்தை முன்னிட்டு வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்துருளினார். விழாவின் முக்கிய நிகழ்வாக எதிர்வரும் 31 […]

திருட்டுபோன 100 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த தஞ்சை எஸ்பி

தஞ்சையில் தொலைந்துபோன, திருட்டு போன 10 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஒப்படைத்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், தமிழ் பல்கலைகழகம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் பொதுமக்களிடமும் இருந்து வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்கள் குறித்து காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டன. காவல்துறையினர் நவீன தொழிநுட்பம் மூலம் ஐ.எம்.ஈ எண் மூலம் செல்போன் பயன்படுத்தி வந்தவர்களிடம் இருந்து மீட்டு, செல்போன் […]

ரூ.19.83 லட்சம் நூதன மோசடி- மர்மநபருக்கு வலைவீச்சு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ரூ.19.83 லட்சத்தை மோசடி செய்த மர்மநபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் கே.வேலவன் (34). 8ம் வகுப்பு வரை படித்த இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரது டெலிகிராம் செயலிக்கு கடந்த 04.01.2026ல் கவிதா என்ற பெயரில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் ஆன்லைன் […]

சிறந்த தேர்தல் மாவட்டமாக தஞ்சை தேர்வு.. கலெக்டருக்கு 25ம் தேதி விருது

சிறந்த தேர்தல் மாவட்டமாக தஞ்சை தேர்வு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜகத்துக்கு 25ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் விருது வழங்குகிறது தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது இதில் சிறந்த தேர்தல் மாவட்டங்கள் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் விருது வழங்கி கௌரவிக்கிறது அதன்படி இந்த ஆண்டு விருது பெறும் 14 மாவட்டங்கள் அதிகாரிகளின் பெயர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது இதில் தேர்தல்களின் தொழில்நுட்பத்தை திறமைப்பட பயன்படுத்துதல் […]

யாருடன் கூட்டணி… தை முடிவதற்குள் அறிவிப்பேன்- ஓபிஎஸ்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தை மாதம் முடிவதற்குள் முடிவு அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2 நாட்களில் சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசித்து தனது முடிவை சென்னையில் அறிவிப்பேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்

இன்றைய தமிழக சட்டசபை கேள்வி நேரத்தின் போது, குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், கும்பகோணத்தில் நவகிரக சுற்றுலா பேருந்து மற்றும் சென்னையில் ‘சென்னை உலா’ சுற்றுலா பேருந்து வசதி ஆகியவை தொடங்கப்பட்டுள்ளது. இது போன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.

தேர்தல் சீசனில் மட்டும் மோடியின் சீன்.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி பேச்சுகள், தொகுதிப் பங்கீடு உடன்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்தநிலையில் தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே? என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது X-தளப்பதிவில் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது.. தேர்தல் சீசன் […]

இரட்டை இலை தொடர்பான மனுக்கள் பரிசீலனையில் உள்ளன- தேர்தல் ஆணையம்

அதிமுக தலைமை விவகாரம், இரட்டை இலை தொடர்பான மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இரட்டை இலை அதிமுக பெயர், கொடி பயன்படுத்துவது தொடர்பாக பலரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

500 போட்டியில் சாதனை படைத்த பேட்மிண்டன் பி.வி.சிந்து

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் தனது 500-வது வெற்றியைப் பதிவு செய்து புதிய வரலாறு படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில், டென்மார்க்கின் லைன் கியர்ஸ்பெல்ட்டை எதிர்கொண்ட சிந்து, தொடக்கம் முதலே நிதானமாகவும் துல்லியமாகவும் விளையாடி 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம், சர்வதேச மகளிர் ஒற்றையர் பிரிவில் 500 வெற்றிகளைக் குவித்த […]

அமமுகவை 8 ஆண்டுகாலம் வளர்த்ததற்கு அர்த்தமே இல்லை… மாணிக்கராஜா பேட்டி

அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து டி.டி.வி. தினகரன் நீக்கினார். அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் S.V.S.P.மாணிக்கராஜாவை நீக்கி டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அமமுக அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மாணிக்கராஜா நீக்கியுள்ளார்.ஆன்லைன் சந்தா மேலும் இது குறித்து டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், […]

காவல் நிலையம் முன்பு வாலிபர் தற்கொலை முயற்சி -பரபரப்பு

சமூகவலைதளங்களில் இழிவான பதிவு – மன உளைச்சலில் விஷம் குடித்த வாலிபர் – நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன்பு டீசல் ஊற்றி தற்கொலை முயற்சி திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தியின் மகன் மோகன்ராஜ் (27) என்பவர், தன்னை சமூக ஆர்வலராக காட்டிக் கொண்டு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சிலர், மோகன்ராஜ் சமூக ஆர்வலர் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் […]

அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும்… தஞ்சையில் எம்பி கனிமொழி பேட்டி

உடன்பாடே இல்லாதவர்கள் இணைந்து கூட்டணி உருவாக்கினால் அது எப்படி வெற்றி பெறும். அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும் என்ற கவலை எங்கள் எல்லோருக்கும் உள்ளது என தஞ்சையில் கனிமொழி பேட்டி. தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வருகிற 26 ஆம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை […]

விசில் ஊதி என்ன பயன்?- பிரவீன் சக்ரவர்த்திக்கு மீண்டும் காங். நிர்வாகி கண்டனம்

காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தொடர்ந்து தவெகவையும் அதன் தலைவர் விஜயையும் பாராட்டி பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரவீன் சக்ரவர்த்தியின் இந்த செயல்பாடு தமிழக காங்கிரசில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், தேர்தல் ஆணையம் தவெக-வுக்கு ‘விசில்’ சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பிலிருந்து பிரவீன் சக்ரவர்த்தி தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு காங்கிரசின் முன்னாள் மாவட்ட […]

லப்பர் பந்து வெற்றிக்கு பிறகு தினேஷ் நடிக்கும் படம்…

யசோ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் சத்யா முரளி கிருஷ்ணன் தயாரிக்க, இரட்டை வேடங்களில் தினேஷ் நடித்துள்ள கமர்ஷியல் படம், ‘கருப்பு பல்சர்’. இது வரும் 30ம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குனர் ராஜேஷ்.எம் படங்களில் உதவி இயக்குனராகவும், திரைக்கதை அமைப்பிலும் பணியாற்றிய முரளி கிரிஷ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மதுரையில் கருப்பு காளையுடன் வசிக்கும் ஒரு இளைஞன், சென்னையில் பல்சருடன் வாழும் ஒரு இளைஞன், திடீரென்று நேரில் சந்திக்கும்போது ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அதை எப்படி […]

அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா திமுகவில் இணைந்தார்

அ.ம.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரனான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக துணைப் பொதுச்செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இந்நிலையில் […]

மார்க்கெட் -பேருந்து நிலையப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தேனி, பெரியகுளம் நகரின் முக்கிய வீதிகளான மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்திருந்த கடைகள் அகற்றப்பட்டது. இனியும் ஆக்கிரமிப்பு செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் -ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 10 வீரர்கள் பலி

ஜம்மு-காஷ்மீரின் தோடா என்ற இடத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். 17 வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பதேர்வாஹ்-சம்பா சாலையில் ராணுவ வாகனம் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து என தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம் உருக்குலைந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

நாம் பணிய மாட்டோம், துணிந்து நிற்போம்-முதல்வர் ஸ்டாலின் மடல்

வீரவணக்கம்… வெற்றி முழக்கம்! என்ற தலைப்பில் நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- ‘செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை’ என்று நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை, இந்தி ஆதிக்கத்திடமிருந்து காத்திடப் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய உணர்ச்சிமிக்க கவிதை வரிகள்தான் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் ஊர்வலப் பாட்டாக ஒலித்தது. அப்போது, 14 வயது பள்ளி மாணவனாக இருந்த நம் […]

மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…புதுகையில் சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் தெற்கு ஊராட்சி பூக்காரன் குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயசுந்தரம் (65). இவரது மனைவி அன்னகொடி. இவர்களுக்கு சொக்கலிங்கம், வேலு, விஜயராகவன் ஆகிய மூன்று மகன்களும் ரேணுகாதேவி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் விஜயசுந்தரம் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் உள்ள மரத்தில் மாடு ஒன்று கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்திற்கு விஜய சுந்தரத்தின் மகன் வேலு வந்துள்ளார். இதனை அடுத்து […]

முள்ளகாடு கிராமத்தில் கடல்நீரை நன்னிராக்கும் திட்ட பணி-முதல்வர் அடிக்கல்..

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் தொழில் பூங்கா மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு முள்ளக்காடு கிராமத்தில் 2292.38 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முழுவதும் பரவலான தொழில் வளர்ச்சியை உருவாக்கி பொருளாதாரத்தை […]

போதையில் அட்ராசிட்டி-3 சக்கரத்துடன் ஓடிய சொகுசு கார்

கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர், மது போதையில் தனது சொகுசு காரை கோவையிலிருந்து காரமடை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் கார் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க இடதுபுற சக்கரம் கழன்று விழுந்தது. ஆனால், போதையில் இருந்த செந்தில் சக்கரம் கழன்றதைக் கூட உணராமல், 3 சக்கரங்களுடன் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் காரை ஓட்டிச் சென்றுள்ளார். தண்ணீர் பந்தல் பேருந்து நிறுத்தம் அருகே […]

தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுச்சின்னம் கோரி த.வெ.க. விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டத்தில் 24 ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் 24ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா – புதிய நீதிக்கட்சி இணைந்ததாக அறிவிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜி.கே.வாசனின் த.மா.கா மற்றும் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். நேற்று எடப்பாடி இல்லாமலேயே டி.டி.வி. தினகரனை கூட்டணியில் சேர்த்தார் பியூஷ் கோயல். கூட்டணிக்கு எடப்பாடி தலைமை வகித்தாலும் அவரை ஓரங்கட்டி விட்டு புதிய கட்சிகளை பாஜகவே சேர்த்து வருகிறது. கூட்டணியில் கட்சிகள் சேரும் நிகழ்ச்சிகள் எதிலும் எடப்பாடி பழனிசாமி இல்லாததால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்திர விடுதியில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுடன் ஜி.கே.வாசன் சந்தித்தனர்.

பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை துவங்கி வைத்தார் முதல்வர்

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் ரூ. 167 கோடியே 9 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தற்போதைய மந்தைவெளி பேருந்து பணிமனை மற்றும் முனையத்தில் ஒருங்கினைந்த பன்முக போக்குவரத்து மற்றும் வணிக வளாகத்திற்கான கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சார்பில் 60 கோடி […]

சென்னையிலிருந்து சிங்கப்பூர்-டில்லி செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்

சென்னையில் இருந்து சிங்கப்பூர், டெல்லி, மும்பை செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம். 6 விமானங்கள் இன்று திடீரென 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். நிர்வாக காரணங்களால் ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணம் என்று கூறினாலும் போதிய விமானிகள் இல்லாததால் விமானங்கள் இயக்க தாமதம் என தகவல்.

மத்தியில் பாஜக ஆட்சி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும் – ஈபிஎஸ்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது , தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். நாளை பிரதமர் பங்கேற்கும் கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மத்தியில் பாஜக ஆட்சி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும். நாங்கள் ஆட்சியமைத்தபின், தமிழ்நாடு இதுவரை அடையாத உயரங்களை அடையும். தமிழக அரசு […]

நெருங்கும் 2026 தேர்தல்- இபிஎஸ் வீட்டில் அரசியல் விருந்து

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முக்கிய நகர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) மற்றும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இடையே சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பு தொகுதி பங்கீடு, கூட்டணி உத்திகள், தேர்தல் தயாரிப்பு ஆகியவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டது. பாஜகவின் மேலிட தலைமையின் ஆதரவுடன் அதிமுகவின் தலைமை தொடர்ந்து கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் இபிஎஸ் […]

மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதி கவர்னருக்கு இல்லை- அமைச்சர் கோவி.செழியன் காட்டம்

தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் கொச்சைப்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை கெடுக்கும் வகையிலும் தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரான செயலில் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயர்கல்வியில் உயர்ந்து நிற்கும் நேரத்தில் பொய்யைப் […]

4 நாட்கள் வங்கி சேவை முடங்கும் அபாயம்.

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 27ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. கோரிக்கையை நிறைவேற்ற சம்மதித்தால் நாள்தோறும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணி செய்வதாகவும் ஒப்புதல். வரும் 24ம் தேதி 4வது சனிக்கிழமை, 25ம் தேதி ஞாயிறு, 26ம் தேதி குடியரசு தின விடுமுறை, அதற்கு அடுத்த நாளான 27ல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் 4 நாட்கள் வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பல்கோரியா அதிபர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

ஐரோப்பிய நாடான பல்கோரியா அதிபர் ரூமென் ராதேவ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பொருளாதார நெருக்கடி, ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் அதிகரித்த நிலையில் பல்கேரியா அதிபர் பதவி விலககியுள்ளார். பல்கேரியாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் மத்திய-வலதுசாரி அரசுக்கு எதிராக, கடந்த மாதம் மிகப்பெரிய ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டங்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து வந்த அதிபா் ராதேவ், இப்போது முறைப்படி பதவியில் இருந்து விலகியுள்ளார். பல்கேரியாவில் கம்யூனிஸ ஆட்சி மறைந்து ஜனநாயகம் […]

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியின் 16 வயது மகள், ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரத்தில், செல்போனில் அதிக நேரம் செலவழித்த அந்த சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். சுமார் 5 மாதங்களுக்கு முன்பு, ஓடும் மின்சார ரெயிலில் வைத்து அந்த சிறுவன், சிறுமிக்கு […]

மின் இணைப்பு இல்லை- புதிய நெல் கொள்முதல் நிலையத்தில் கிடக்கும் நெல்மணிகள்

புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் கொள்முதல் செய்வதில் தாமதம் இரண்டு நாட்களுக்கு மேலாக காத்திருக்கும் விவசாயிகள். தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா தாலடி சாகுபடி சுமார் மூன்று லட்சம் ஏக்கரில் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சம்பா அறுவடை பணிகள் மாவட்ட முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்கு சென்று கொண்டுள்ள நிலையில் தஞ்சாவூர் அருகே வேங்கராயன் குடிக்காடு […]

தமிழ்நாட்டில் சிக்குன்குனியா பரவல்- சுகாதாரத் துறை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தேனி, தென்காசியில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் டெங்கு, சிக்குன்குனியாவுக்கு என பிரத்தியேக வார்டுகளை அமைக்க உத்தரவு. எலிசா பரிசோதனைகளை மேற்கொள் தேவையான உபகரணங்களை கையிருப்பு வைத்திருக்க அறிவுறுத்தல். நடமாடும் மருத்துவ விரைவு குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் வீடுதோறும் கொசு உற்பத்தியை […]

இந்தியா – வங்கதேசம் இடையேயான கங்கை நதிநீர் பகிர்வு- ஒப்பந்த பணி துவக்கம்

இந்தியா – வங்கதேசம் இடையேயான கங்கை நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா – வங்கதேசம் இடையேயான நீர் பகிர்வை உறுதி செய்யும் இந்த ஒப்பந்தம், சுமார் 63 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை உள்ளடக்கி உள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியிலிருந்து அகற்றிய ஒரு கிளர்ச்சியைத் தொடர்ந்து நிலவும் பதட்டமான உறவுகளுக்கு மத்தியில், இருதரப்பு உறவுகளைச் சோதிக்கக்கூடிய ஒரு முக்கியமான நீர் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகளைத் தொடங்கும் விதமாக, இந்தியா […]

வைத்திலிங்கத்தின் இந்த முடிவு துரதிருஷ்டவசமானது… சசிகலா

கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது என சசிகலா தெரிவித்துள்ளார். பிரதான கட்சியான அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடாதது தவறு- சசிகலா இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.வைத்திலிங்கம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். இதனை அவரோடு […]

பிரதமர் 100 முறை வந்தாலும்.. தமிழ்நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள்… செல்வபெருந்தகை

பிரதமர் மோடி ஒருமுறை அல்ல, 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். NDAவில் டிடிவி இணைந்தது குறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில்,”NDA கூட்டணி இயற்கைக்கு முரண்பாடான கூட்டணி. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அந்த கூட்டணியை ஏற்க மாட்டார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.

ரூ.3.80 லட்சத்துக்கு ஒரு மாத ஆண் குழந்தை விற்பனை

சென்னை காசிமேடு பவர் குப்பம் இரண்டாவது பிளாக் சேர்ந்த திலகவதி (25). இவரது கணவர் சகாயராஜ் இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வயதில் சர்வேஷ், ஏழு வயதில் பிரியா, இரண்டு வயதில் கிருத்திவிக் என மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் உள்ள அரசு மருத்துவமனையில் திலகவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் பிறந்த குழந்தையை விற்பனை செய்து விடலாம் என […]

புதுகையில் காமராஜர் சிலைக்கு பெனட் அந்தோணி ராஜ் மரியாதை

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் அறிவிக்கப்பட்டுள்ள பெனட் அந்தோணி ராஜ் புதுக்கோட்டை காமராஜர் புரத்தில் உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் முன்னாள் மாவட்ட தலைவர்கள் முருகேசன் ,ராமசுப்புராம், மற்றும் துரைதிவ்வியநாதன்,சூர்யாபழனியப்பன்,மதன் கண்ணன் மற்றும் ஏராளமான காங்கிரசார் உள்ளனர்.

சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் சுஹாசினி நடிக்கும் “அனந்தா”

தற்போது புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது. வடநாட்டு தொழிலதிபர் ஜெகபதி பாபு ஓய்வின்றி உழைக்கிறார். மனைவி ஸ்ரீரஞ்சனி ஏற்படுத்திய சோகத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் கடவுளை வெறுக்கிறார். நடனக்கலைஞர் அபிராமி வெங்கடாசலத்துக்கு காலில் அடிபட்டு, நடன நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் தவிக்கிறார். இதனால், அவரது தந்தை ‘தலைவாசல்’ விஜய் கடவுளை திட்டுகிறார். மரணப்படுக்கையில் இருக்கும் தனது மகனை காப்பாற்ற முடியாது என்று டாக்டர் கைவிரித்த நிலையில், அவனது உயிரை காப்பாற்ற சுஹாசினி துடிக்கிறார். அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கிய வீட்டில் இருவர் […]

டெங்கு காய்ச்சல்..கல்லூரி மாணவி பலி

சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியில் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி இயஙகி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டஙகள் மற்றும் மாநிலஙகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் தங்கி படித்து வந்த பாலகாடு பகுதியை சேர்ந்த மாணவி சரண்யா சில நாட்களாக காய்ச்சலால பாதிக்கபட்டு வந்தவர் மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார் ,நேற்று அதிக அளவில் காய்சலால் மாணவி பாதிக்கபட்டதால் கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கபட்டார். […]

மீண்டும் இணைந்த கரங்கள்… அண்ணாமலை ‘X’ பதிவு.

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X- தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது என்ற செய்தி, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அமமுக பொதுச்செயலாளர், அன்பு அண்ணன் டிடிவி தினகரனுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் டிடிவி தினகரனின் ஆழ்ந்த அரசியல் அனுபவமும், தேர்ந்த வியூகங்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் […]

தமிழகத்தில் 23ம் தேதி மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 21-01-2026 மற்றும் 22-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 23-01-2026: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:24 மணி […]

சமையல் மாஸ்டர் குடிபோதையில் வெட்டிக் கொலை- கோவையில் சம்பவம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் மதுபானக்கூடம் கேட்டின் முன்பு சுரேஷ் என்பவரை தமிழ்ச்செல்வன் என்பவர் குடிபோதையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட சின்னமத்தம் பாளையம் பகுதியில் Spartan Sports Recreation Club FL 2 மதுபான கூடம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஒன்னிபாளையம், கோகுலம் காலனியைச் சேர்ந்த […]

தாலிக்கு தங்கம்- திருமண நிதியுதவியை வழங்கிய அமைச்சர் டிஆர்பி ராஜா

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 24 பயனாளிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ரூ.33 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன், பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

டிரம்ப் பயணித்த விமானத்தில் திடீர் கோளாறு..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் விமானமான ஏர் ஃபோர்ஸ் சுவிட்சர்லாந்திற்குப் புறப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்தில் வாஷிங்டன் ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் தளத்திற்குத் திரும்பியது. விமானம் புறப்பட்ட பிறகு, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்த பணியாளர்கள் “ஒரு சிறிய மின்சாரக் கோளாறை” கண்டறிந்ததாகவும், மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தைத் திருப்புவது என முடிவு செய்யப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தொடர்ந்து அதிபர் டிரம்ப் மற்றொரு விமானமான ஏர் ஃபோர்ஸ் சி-32 விமானத்தில் தனது பயனத்தை […]

தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை.. ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இன்று (21-01-2026) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் , ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (21-01-2026) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இரண்டு […]

ஒரே நாளில் ரூ.4,120 வரை உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 450-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்திருந்தது. பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.290-ம், சவரனுக்கு ரூ.2,320-ம் அதிகரித்தது. ஆக நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.450-ம், சவரனுக்கு ரூ.3,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 […]

சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி

சென்னையில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். பல்லாவரத்தில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது மோதியது. லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த கோகுல்ராஜ், தனாய் மண்டல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை பள்ளிக்கரணை அருகே லாரி மோதியதில் டூவீலரில் சென்ற அருணாச்சலம் (51) என்பவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மெட்ரோவில் டிக்கெட் இன்றி பயணித்த இளைஞரால் ரயில் நிறுத்தம்

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் வழக்கம்போலப் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், டிக்கெட் ஸ்கேனிங் பகுதிக்கு வந்து டிக்கெட் ஏதுமின்றி உள்ளே நுழைய முயன்றுள்ளார். அங்கிருந்த ஊழியர்கள் அவரைத் தடுத்தபோது, “எனக்கு நேரமாகிறது, என்னை விடுங்கள்” என்று கூறிவிட்டு, டிக்கெட் கவுண்டரைத் தாண்டிக் குதித்து வேகமாக ஓடி பிளாட்பாரத்தில் தயாராக நின்றிருந்த மெட்ரோ ரயிலுக்குள் ஏறி தரையில் அமர்ந்து கொண்டார்.அந்த இளைஞரின் விசித்திரமான செயலால் அதிர்ச்சியடைந்த மெட்ரோ […]

தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்த பிரேமலதா

மதுரையில் எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறைக்கு பிரேமலதா பாராட்டு தெரிவித்துள்ளார்.சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”தவறை சுட்டிக்காட்டியதால் மதுரையில் எல்ஐசி அலுவலகத்தில் மேலாளர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். மேலாளர் கல்யாணியை உடன் பணியாற்றியவரே கொன்றதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். தீ விபத்து என நாடகமாடிய நிலையில் கொலை என்பதை கண்டுபிடித்த தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டுக்கள், “இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

தஞ்சையில் அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

தஞ்சையில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையன் களைப்பு போக சாகவாசமாக அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. நான்கு கடைகளிலும் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள R.R. நகரில் அழகு நிலையம் லேப்டாப் விற்பனை நிலையம் உள்ளிட்ட அடுத்தடுத்த நான்கு கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த திருடன் ரிதம் ஹோம் தியேட்டர் […]

கபிஸ்தலம் அருகே ஆற்றிலிருந்து ஆண் குழந்தை சடலம் மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் அருகே இளங்கார்குடி கிராமம் அமைந்துள்ளது.. இந்த கிராமபகுதியில் காவிரி ஆற்றிலிருந்து அரசலாறு பிரிவு பகுதி அமைந்துள்ளது.. இந்நிலையில் அரசலாற்றின் பழைய கதவனை அருகில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் பொழுதுபோக்கிற்காக மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் அரசலாற்றில் குழந்தை ஒன்று மிதந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. உடனடியாக காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து […]

கரூர்- காங்., கட்சியின் புதிய தலைவர் காமராஜர் சிலைக்கு மரியாதை

கரூரில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ரமேஷ் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்கும் நோக்கில், 71 புதிய மாவட்டத் தலைவர்களை நியமித்து அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் உத்தரவிட்டார். இதில் கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராகப் பொறுப்பேற்ற ரமேஷ், இன்று மாவட்ட நிர்வாகிகளுடன் கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானாவில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை […]

மேட்டூர் அணையில் நீரின் அளவு வினாடிக்கு 24 கனஅடியாக நீடிப்பு

 மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 24 கனஅடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.17 அடியாக சரிவு; நீர் இருப்பு 59.995 டி.எம்.சி.யாக உள்ளது.

நகர்புற குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர்

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஏழுகிணறு பகுதியில் நவீன வசதிகளுடன் ரூ.147 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு, அங்குள்ள குழந்தைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.

கரூர்- 4 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு நான்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐக்கு மாற்றப்பட்டு சிபிஐ அதிகாரிகள் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தங்கி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தின் போது பாதுகாப்பு […]

தமிழக சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

தமிழக சட்டசபை 2-வது நாளாக மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கு.பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். தொடர்ந்து, மறைந்த தொழிலதிபர் அருணாசலம் வெள்ளையன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், முன்னாள் மக்களவை தலைவர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் மறைவுக்கும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் மு.அப்பாவு வாசித்து […]

ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவின் செயல்பாடு சிறந்ததாக இல்லை- வைத்திலிங்கம்

திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேட்டியில் கூறியதாவது.. ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவின் செயல்பாடு சிறந்ததாக இல்லை.அதிமுகவில் இல்லாவிட்டாலும் அண்ணாவின் தாய்க்கழகத்தில் இணைந்துள்ளேன். திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைத்திலிங்கம், “முதலமைச்சர் செயல்பாட்டை தமிழ்நாட்டு மக்கள் போற்றுகிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் மனதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். திமுகதான் தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுகிறது,”தேர்தல் நெருங்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் முடிவு எடுக்க தாமதம் ஆகிறது என்று இவ்வாறு தெரிவித்தார். கடந்த […]

அதிமுக-பாஜக கூட்டணியில் இணைகிறார் டிடிவி

அமமுக டிடிவி தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..ஜெயலலிதா ஆட்சி அமைய ஓரணியில் திரள்கிறோம். எங்களுக்குள் பங்காளி சண்டைதான். விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை. ஓரணியில் திரண்டு தமிழ்நாட்டில் மக்களாட்சி அமைய உறுதுணையாக இருப்போம். என்னதான் இருந்தாலும் இது பங்காளிச் சண்டைதான். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்று இவ்வாறு தெரிவித்தார். நாளை மறுநாள் பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ள நிலையில் கூட்டணியில் இணையும் டிடிவி தினகரன். பிரதமர் மோடியின் […]

பஸ்-டூவீலர் மோதி கோர விபத்து-கைகுழந்தை உட்பட 3 பேர் பலி

கரூர் மாவட்டம் லாலாபேட்டை மேம்பாலம் அருகே, கரூர்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து நிகழ்ந்தது. கரூரைச் சேர்ந்த தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் பேருந்து, பணியாளர்களை ஏற்றிக்கொண்டு குளித்தலை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அதே நேரத்தில், குளித்தலை அருகே பரளி கிராமத்தைச் சேர்ந்த விஜய் – சௌந்தர்யா தம்பதியர், அவர்களின் ஒரு வயது பெண் குழந்தை சன்மதியுடன் இருசக்கர வாகனத்தில் கரூர் மாவட்டம் புலியூரில் உள்ள மனைவியின் தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த தனியார் பேருந்து அதிவேகமாகவும், […]

நடுரோட்டில் கஞ்சா போதையில் வாலிபரை கொடூரமாக தாக்கிய கும்பல்

கோவை, கணபதி, பாரதி நகரில், கஞ்சா போதையில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒரு வாலிபரை கொடூரமாகத் தாக்கிய சம்பவத்தின் அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல். கடந்த சில ஆண்டுகளாகவே கோவை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர் ‘ஆபரேஷன் கஞ்சா’ உள்ளிட்ட பல்வேறு அதிரடி வேட்டைகளை நடத்தி வந்தாலும், போதை […]

திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்து சமீபத்தில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். அதேபோல், பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று குரல் எழுப்பி அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வந்த செங்கோட்டையன், ஆரம்ப காலக்கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தங்களை த.வெ.க.வில் ஐக்கியமாக்கி கொண்டனர். இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்து தி.மு.க.வில் இன்று முதல்வர் […]

ராமேஷ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. விசைப் படகுடன் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை, நடுக்கடலில் விசாரணை நடத்தி வருகிறது.

தேர்தல் ஆயத்தப் பணிக்காக தமிழகம் வரும் ராகுல், பிரியங்கா

சென்னை இராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனத்திற்குப் பிறகு நடைபெற்ற முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆக்கப் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், […]

புதுகை- சத்துணவு ஊழியர்கள் 700 பேருக்கு மேல் கைது

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத் தலைநகரான புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜகோபாலன் மாவட்ட பொருளாளர் பிச்சை முத்து, மாநில மேனாள் பொதுச்செயலாளர் மலர்விழி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாங்க ஊழியர்களாக பணி புரியும் மற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் […]

கார்-பங்களா தரோம்னு சொல்லுவாங்க- யாராலும் முடியாது-சிவி சண்முகம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் எம்.ஜி.ஆர் 109 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்  அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பேசிய  சி.வி.சண்முகம், எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டார். மேலும் பேசிய சி.வி.சண்முகம் , இன்று புது புதுசா வருகின்றவர்கள் எல்லாம், கருப்பு எம்.ஜி.ஆர், குள்ள எம்.ஜி.ஆர் என்று சொல்லிக்கொண்டு வருகின்றனர். ஆனால் எம்.ஜி.ஆர் என்றால் நம் சத்துணவு திட்டத்தை கொண்டுவந்த எம்.ஜி.ஆர் தான் பதலடி கொடுத்தார். இன்று தேர்தல் வாக்குறுதியில் […]

திருச்செந்தூரில் ட்ரோன்-கேமரா பறக்க விட-ரீல்ஸ் எடுக்க தடை

திருச்செந்தூரில் ட்ரோன் கேமரா பறக்க விட மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் விளங்கி வருகிறது. கடலோரம் அமைந்துள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் தினம் தோறும் கோவிலுக்கு வருகை தந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கோவிலில் அனுமதி இன்றி கோவிலின் மேல் மற்றும் கோவில் வளாகத்தில் ட்ரோன் பறக்க விடபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவில் நிர்வாகம் அதிரடியாக […]

புதிய உச்சம் தொட்ட தங்கம்- ஒரு சவரன் ரூ.1.11லட்சம்

ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 450 உயர்ந்துள்ளது தங்கம். தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,11,200- புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூபாய் 450 உயர்ந்து 13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரா ஆளுநர்?- திக வீரமணி கருத்து

எதிர்கட்சி தலைவரா ஆளுநர்?தமிழ்நாடு ஆளுநரின் ‘சட்டம் மற்றும் மரபு’ மீறல்!திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது… தமிழ்நாட்டின் அடாவடி ஆளுநர் – அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்த பதவிப் பிரமாணத்தை (Article 159) ஒவ்வொரு முறையும் மீறி – ஆட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் போல் நடந்து கொள்கிறார். தி.மு.க. அரசிற்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இப்போதே தொடங்கி வைத்து செயல்பட்டுள்ளார். மகா மகா வெட்கக் கேடு! ‘வெளிநடப்புக்கென்றே ஓர் ஆளுநரா?’ […]

மழையால் சாலை சேதம்- சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு

சென்னை, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க ரூ.1,000 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் அதனை தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் மாநில முழுவதும் பரவலான பாதிப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்தன. தற்காலிக நடவடிக்கையாக உள்ளாட்சி நிர்வாகங்கள் கல். மண், ஜல்லிகளை கொட்டி சாலைகளை சீரமைத்தன. ஆனால் […]

புதுகையில் புதிய மின்மாற்றி… எம்எல்ஏ துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாநகரம் 39வது வட்டம் அரிமழம் சாலை அந்தோணியார் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றினை மக்களின்பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா துவக்கி வைத்தார். நிகழ்வில் மாநகர உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, பால்ராஜ். மாநகர திமுக அமைப்பாளர் ராஜேஸ், வட்ட திமுக செயலாளர் அண்ணாதுரை ,இளைஞர் அணி கருணாநிதி, தெய்வானை மற்றும் பகுதி மக்கள் பலர் பங்கேற்றனர்.

பாஜ., புதிய தலைவர் நிதின் நபினுக்கு டிடிவி வாழ்த்து

பாஜகவின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா கடந்த 2020 ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றார். பாஜகவில் தலைவர் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிந்தபோதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.இந்த சூழலில், 12-வது தேசியத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 20-ம் தேதி (இன்று) நடைபெற்றது. இதற்கான வேட்புமனுக்கள் நேற்று பெறப்பட்டன. வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், நிதின் நபினை தவிர வேறு யாரும் வேட்புமனு […]

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு முதுகுவலி.. டாக்டர்கள் அறிவுறுத்தல்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு முதுகுவலி. 3 நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், இன்று ஜிப்மர் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவ்வாதுமலையில் மின்சாரம் தாக்கி கருகிய இளைஞர்

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு அடுத்த புங்கம்பட்டு நாடு, கோவிலூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சுரேஷ் (25) உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் மளிகை பொருட்கள் வாங்க பேலூரில் இருந்து கிலானூர் பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர். அப்போது மேட்டில் இருந்து பள்ளத்தில் இறங்குவதற்காக 11 கிலோ வாட் மின்சாரம் செல்ல கூடிய இரும்பு கம்பத்தை தாங்கிப் பிடித்து இறங்கியுள்ளார். அப்போது இரும்பு மின்சார கம்பத்தில் மின்சார வயர் பீங்கான் உடைந்து இரும்பு கம்பத்தில் நேரடியாக […]

பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பு

பா.ஜ., தேசிய தலைவராக, 2020 ஜனவரியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா நியமிக்கப்பட்டார். அக்கட்சியின் விதிகளின் படி, தேசிய தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். 2023ல் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், 2024 லோக்சபா தேர்தலையொட்டி நீட்டிக்கப்பட்டது. தற்போது வரை, பா.ஜ.,வுக்கு புதிய தேசிய தலைவர் நியமிக்கப் படவில்லை. இந்நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல், டில்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், 37 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்துமே, […]

சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஐந்தாண்டு பணி முடிந்த சமையல் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் 9000 ரூபாய் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி […]

கரூர் சம்பவம்-9 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக இன்று 1 உதவி காவல் ஆய்வாளர், 2 பெண் காவலர்கள்,2 ஆண் காவலர்கள், 2 ஊர்காவலர் படையினர் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர் என 9 பேர் விசாரணைக்கு ஆஜர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் […]

உணவு டெலிவரி ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்..! பயங்கரம்

சென்னை வேளச்சேரி நேரு நகரில் உள்ள ஏ.எல்.முதலியார் தெருவில் உணவு டெலிவரி செய்ய வந்த இளைஞர் ஒருவரை, இரண்டு பேர் சேர்ந்து பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும், அதனை வீடியோவாக எடுத்து, அதனை சமூக வலைத்தளத்திலும் ரீல்ஸாக பதிவிட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞரை, கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெட்டுப்பட்டவர் எழுந்து ஓட முடியாமல், படுத்தவாறே […]

ஆளுநரின் உரை புறக்கணிப்பு- ஒரு திட்டமிட்ட செயல்- அமைச்சர் ரகுபதி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விரிவான விளக்கம் அளித்துள்ளார். சென்னை செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதிலிருந்து தொகுக்கப்பட்ட முக்கியத் தகவல்கள் பின்வருமாறு: ஆளுநரின் உரை புறக்கணிப்பு: ஒரு திட்டமிட்ட செயல்சட்டசபையில் ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்தது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டினார். தேர்தல் ஆண்டு என்பதால், தமிழக அரசின் மீது குறைகளைக் கண்டுபிடித்து அரசியல் செய்ய […]

கோவை-குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு- போக்குவரத்து பாதிப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானி ஆற்றில் இருந்து குடி தண்ணீர் எடுத்து கோவை மாநகர் மற்றும் அதன் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது இதற்காக பவானி ஆற்றில் இருந்து கோவை பெரியநாயக்கன்பாளையம்,துடியலூர் வரை சாலை ஓரத்தில் ராட்சத குழாய்கள் அமைக்கபட்டுள்ளது.இந்த நிலையில் அந்த குழாயில் அமைந்துள்ள வீரபாண்டி பகுதியில் சாலை நடுவே திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாய் ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குழாய் உடைப்பை ஏற்பட்ட இடத்தில் சாலையில் பள்ளம் […]

கல்லூரி மாணவி கூட்டுபலாத்கார வழக்கு- செல்போன் உரையாடல்-முழு ஆய்வறிக்கை தாக்கல்

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு : செல்ஃபோன் உரையாடல் தடையவியல் நிபுணர்களின் முழு ஆய்வறிக்கை – மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் !!! கோவை, பீளமேடு சர்வதேச விமான நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் காரில் இருந்த கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த சகோதரர்கள் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் அவர்களது […]

சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை கிராமம், தென்பென்ணை ஆற்றில் நேற்று (19.01.2026) இரவு சுமார் 7.30 மணியளவில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவின்போது பலூன்களை நிரப்பும் கேஸ் சிலிண்டர் (Hydrogen Gas Cylinder) எதிர்பாராதவிதமாக வெடித்ததில் திருவண்ணாமலை மாவட்டம், வெங்காயவேலூர், இனாம்காரியந்தல் கிராமத்தைச் […]

ஆண்டின் துவக்கத்தில் கவர்னர் உரை நடைமுறையை விலக்க நடவடிக்கை எடுக்கப்படும்-முதல்வர் அதிரடி

ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க இருந்தது. அதன்படி இன்று காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆனால் நிகழ்ச்சி தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கவில்லை என கூறி கடந்த 2 ஆண்டுகளைப் போலவே, உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என […]

பிரவீன் சக்ரவர்த்திக்கு காங்., நிர்வாகி சிவராஜ சேகரன் ‘பளார்

முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் , கவுன்சிலருமான சிவராஜசேகரன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது…. புதிய மாவட்டத்தலைவர்களை பிரவின் சக்கரவர்த்தி வாழ்த்தியதை நானும் வழிமொழிகிறேன்.அதே சமயம் ஏற்கனவே பல ஆண்டுகளாக இயக்கப்பணியாற்றிய மாவட்டத்தலைவர்களின் உழைப்பை உதாசினப்படுத்தும் வகையில் வெளியிட்ட கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். மற்ற எந்தக்கட்சிக்கும் அடிபனியாமல்,சுயமரியாதை மற்றும் தன்னாபிமானத்துடன் கட்சியை வலுப்படுத்த கவனமாகத் தேரந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்தது எதன் அடிப்படையில்?இப்பணிகளில் பிரவின் ஆற்றிய பங்கென்ன? என்று அவரே தெளிவிபடுத்த வேண்டும்.தமிழக காங்கிரஸில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் […]

பேரவையில் இருந்து வௌியேறிய கவர்னர்

தமிழ்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.ரவி வெளியேறினார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக தேசிய கீதம் முதலில் பாட சொன்னதற்கு மறுத்ததால் ஆளுநர் வெளிநடப்பு செய்தார். மேலும் பேரவையில் இருந்து அதிமுக பாஜக உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்துள்ளனர். இந்த நிலையில் 2025 அரசியலமைப்பு சட்டத்தை மீறியதுடன், தமிழ்நாட்டு மக்களை ஆளுநர் அவமதித்ததாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல-முதல்வர்

ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும் என சட்டப்பேரவையில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஆளுநர் ஏற்கனவே நடந்துகொண்டது போலவே மீண்டும் நடந்து கொண்டது வருத்தத்துக்குரியது. ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என முதல்வர் கூறினார்.

ரூ. 525 கோடியில் கலைஞர் ”பன்னாட்டு மாநாடு மையம்”… முதல்வர் ஆய்வு

சென்னை, முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் அமைக்கப்பட்டு வரும் ‘கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்’ கட்டுமானப் பணிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது குறித்த காலத்தில் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.525 கோடியில் அமைக்கப்பட்டு வரும் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்தின் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், […]

குறைந்த பட்ஜெட்டில் பெரிய வசூலை ஈட்டிய ”TTT” படம்

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் மூன்று முக்கிய படங்கள் வெளியாகின. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘பராசக்தி’, கார்த்தி, நடிப்பில் வெளியான ‘வா வாத்தியார்’ மற்றும் ஜீவா நடிப்பில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ ஆகிய படங்கள் பொங்கல் வெளியீட்டில் நேரடியாக மோதின. ஜனவரி 18 வரையிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல் அடிப்படையில் இந்த மூன்று படங்களின் நிலவரம் இப்போது தெளிவாகத் தெரிகிறது. முதலிடத்தில் இருப்பது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’. 8 நாட்களில் தோராயமாக ரூ.76 கோடி […]

மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்களில் திடீர் சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு

மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மற்றவர்கள் அமர்வதை தடுக்க திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேர்ந்த வழக்கறிஞர் வி பி ஆர் மேனன் என்பவர் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில், ஒவ்வொரு மெட்ரோ ரயிலிலும் ஒரு முழு பெட்டியும் பெண்களுக்கு ஒதுக்கப்படுவது போல, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே என போதுமான எண்ணிக்கையில் இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். […]

மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தான் முதல்வர்-அமைச்சர் சேகர்பாபு

சென்னை திரு.வி.க .நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் சந்திரயோகி சமாதி சாலையில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம் இறுதி கட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வகையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு மண்டபங்களை கட்டி வருகிறோம். அந்த வகையில் திரு.வி.நகர் பகுதியில் […]

சிவகங்கை-மஞ்சுவிரட்டில் 126 பேர் காயம்

 சிவகங்கை அருகே கண்டுப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் இதுவரை 126 பேர் காயம் அடைந்தனர். இதில் 30 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுகை.. மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பா.சூரியபிரபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

சொத்தை பிரித்து தர மறுத்த தாயை கொன்ற மகன்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டா வடமலபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரின் மனைவி பேச்சியம்மாள்(70). இவருக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளது அனைவருக்கும் திருமணமாகிய நிலையில் பேச்சியம்மாள், அதே கிராமத்தில் தனியாக வசித்துக்கொண்டு விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் காணாமல் போன மூதாட்டி பேச்சியம்மாளை அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தேடிவந்த நிலையில், […]

ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு எடப்பாடிக்கு எதிராக மனு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி மனு அளித்துள்ளார். கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதிலளிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை விலகியது… இந்திய வானிலை மையம்

வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவில் இருந்து விலகியதாக வானிலை மையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை விடைபெற்றது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் கடந்த அக்டோபர் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

25வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்… குண்டுக்கட்டாக கைது

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதியில் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 5-ந்தேதி முதல் பள்ளிகள் திறந்தநிலையிலும், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை விட்டபாடில்லை.பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டப்படவில்லை.ஆசிரியர்களின் இந்த போராட்டம் தொடர்பாக தொடக்கக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்தது. அதாவது, பணிக்கு வராமல் போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அரசு எச்சரித்து […]

புதுகை காங்.,வடக்கு மாவட்ட தலைவர் நியமனம்

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் (வடக்கு) மாவட்ட தலைவராக DD. பெனட் அந்தோணி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு. செல்வப் பெருந்தகையை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.

தவறான குற்றச்சாட்டால் உயிரை விட்ட நபர்?..கேரளாவில் சோகம்

கேரளா : மாநிலத்தில் பேருந்தில் பயணித்தபோது ஒரு இளம்பெண் (ஷிம்ஜிதா முஸ்தபா) தன்னிடம் ஒரு ஆண் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். அந்த வீடியோவில் அப்பெண் அந்த ஆணை “creep” (குற்றவாளி போன்றவர்) என்று அழைத்து, பாலியல் சீண்டல் செய்ததாகக் குற்றஞ்சாட்டினார். இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் குற்றஞ்சாட்டப்பட்டவர் 42 வயதான தீபக் என்பவர் ஆவார். அவர் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். வீடியோ வைரலான பிறகு சமூக […]

கழிவறையில் பெண் போலீஸை வீடியோ எடுத்த எஸ்ஐ கைது

வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெண் காவலர்களின் கழிவறையில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த எஸ்ஐகைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், நேற்று முன்தினம் CM ஸ்டாலினின் பாதுகாப்பிற்காக சென்ற பெண் காவலர்களுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட பரமக்குடி SI முத்துப்பாண்டி, தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். காக்க வேண்டிய போலீஸே இப்படியா? என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

கரூர் விவகாரம்- குற்றப்பத்திரிக்கையில் விஜய் பெயர் சேர்ப்பு?

கரூர் துயர சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணித்து வரும் நிலையில், சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் இரண்டு முறை விசாரணை நடத்தியுள்ளனர். முதல் விசாரணை ஜனவரி 12-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அப்போது 7 மணி […]

வெற்று விளம்பரத்தையும்- அறிவிப்பையும் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை – சேகர்பாபு!

சென்னையில் இன்று (ஜனவரி 19) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும் திமுக நிர்வாகியுமான சேகர்பாபு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) அறிவித்த முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை கடுமையாக விமர்சித்தார். எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் அறிவித்த வாக்குறுதிகள் வெற்று விளம்பரங்களே என்று கூறிய சேகர்பாபு, இவை மக்களை ஏமாற்றும் திட்டங்கள் என்று சாடினார். திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்த அவர், மக்கள் அரசின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருவதால், போலி அறிவிப்புகளுக்கு செவி […]

பிரிந்து சென்றவர்களை சேர்க்க பாஜக முயற்சி செய்வது தவறில்லை

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்-ஐ சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பது பாஜகவின் பெருந்தன்மையை காட்டுகிறது. பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க பாஜக முயற்சி செய்வது தவறில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

புதுகை-புதிய தார்சாலை அமைக்கும் பணி-அமைச்சர்கள் அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டத்திக்காடு மற்றும்கரு.வடதெரு பகுதிகளில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் புதுக்கோட்டை நெடுஞ்சாலை (நபார்டு )கிராம சாலைகள் மூலம் புதிதாக அமைக்கப்படவுள்ள தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ஆகியோர் அடிக்கல் நாட்டினர். உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மற்றும் த.சந்திரசேகரன்,தல.பாஞ்சாலன்,மு.க.ராமகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் உள்ளனர்.

திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளது.. முதல்வர் பெருமிதம்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் அடைந்தார். 1967 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தபோது 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. நீர்நிலைகளை சுற்றி குடியிருப்புகள் அமைவது பழந்தமிழரின் மரபு. சென்னையில் வளர்ந்து வரும் பகுதிகளுக்காக நாம் செய்த பணிகளில் வரலாற்றில் இந்நிகழ்வு இடம்பெறும் என முதல்வர் கூறினார்.

சூனியக்காரி வேடத்தில் படத்தில் நடிக்கும் வடிவுக்கரசி

ஹீரோயின்கள் மட்டும்தான் தங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட ேகரக்டர்களில் நடிப்பார்களா என்ன! குணச்சித்திர நடிகைகள் கூட கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து, அதில் கதையின் நாயகியாக நடிப்பார்கள் என்பதை சமீபத்தில் நிரூபித்தவர், திரைக்கு வந்த ‘அங்கம்மாள்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்திருந்த கீதா கைலாசம். இதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கதையின் நாயகியாக ராதிகா நடித்துள்ள படம், ‘தாய்கிழவி’. இதில் அவர் பவுனுத்தாயி என்ற கேரக்டரில் நடிக்கிறார். தற்போது அவர்கள் வரிசையில் சீனியர் நடிகை வடிவுக்கரசி இணைந்துள்ளார். […]

நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் அடிக்கல்

செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது. நீர்வளத்துறை சார்பில் ரூ.342.60 கோடி மதிப்பில் மாமல்லன் நீர்த்தேக்கம் கட்டப்படவுள்ளது. 4,375 ஏக்கர் பரப்பளவில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேமிக்கும் வகையில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைகிறது.

சிபிஐ முன்பு தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று 2-வது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார். இதற்காக தனி விமானத்தில் நேற்றே அவர் டில்லி சென்றார். கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, […]

கரூர் சம்பவம்- 10 பேரிடம் சிபிஐ தீவிர விசாரணை

கரூர் துயர சம்பவம்: கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிபிஐ விசாரணைக்காக 3 பெண் உதவி காவல் ஆய்வாளர்கள்,1 ஆண் உதவி காவலர் ஆய்வாளர், மற்றும் காவலர்கள், ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஒருவர் என 10 பேர் ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கு சம்பந்தமான […]

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தொடங்கியது. கணக்கீட்டு படிவங்கள் பெறும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சமாக குறைந்தது.இதையடுத்து, இறந்தவர்கள் தவிர்த்து மீதமுள்ளவர்களில் தகுதியான வாக்காளர்கள் மற்றும் […]

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்கள்-ஆசிரியர்கள்-வௌியில் நிறுத்தம்

பொங்கல் பண்டிகை முடிந்து, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இன்று வழக்கம் போல் திறக்கப்பட்டது. மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள் தமிழ் தாய் வாழ்த்துடன் பிரேயர் செய்ய கூடினர். பள்ளி தொடங்கியதையடுத்து பள்ளியின் கேட் மூடப்பட்டது. தாமதமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள் வெளியில் நிருந்தப்பட்டனர். மேலும் பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்களும், மாணவர்களுடன் வெளியில் நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து பிரேயர் முடிந்ததும் மாணவர்களும், ஆசிரியர்களும், இனி தாமதமாக பள்ளிக்கு வரக்கூடாது […]

கூவம் ஆற்றிலிருந்து 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மீட்பு

சென்னை, கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கிராமத்தின் வழியாக செல்லும் கூவம் ஆற்றில் 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகளை அப்பகுதி இளைஞர்கள் மீட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (30). இவர் நேற்று காலை பிஞ்சிவாக்கம் கிராமம் வழியாக செல்லும் கூவம் ஆற்றங்கரையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் ஆற்றில் இறங்கியுள்ளார். அங்கு ஏராளமான கற்சிலைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சிடையந்த அவர், […]

200 திருக்குறளை வாசித்து வியப்பில் ஆழ்த்திய 3ம் வகுப்பு மாணவி

கபிஸ்தலம் அருகே 10-ஆண்டுகளுக்கு மேலாக குற்ற நடவடிக்கை இல்லாத கிராமம்.. ஒரே நேரத்தில் 200-திருக்குறளை தொடர்ந்து வாசித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அரசு நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி. கிராமமே விழாக்கோலம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊ ராட்சியில் குடிகாடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 3-ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.. இந்நிலையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஓட்டப்பந்தயம், ஸ்லோசைக்கிள், செங்கல் தூக்குதல், […]

எல்கை பந்தயம்.. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கிய VSB

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட திமுக சார்பில் பாரம்பரிய குதிரை வண்டி எல்கை பந்தயம் சிறப்பாக நடத்தப்பட்டன. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 73- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் காலை நேரத்தில் மாட்டுவண்டி போட்டிகள் நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து நேற்று மாலை கரூர் வாங்கல் சாலையில் உள்ள அரசு காலணி பகுதியில் குதிரை வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியை கரூர் […]

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பபு- கால அவகாசம் நாளையுடன் நிறைவு

தமிழகத்​தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​களை தொடர்ந்து வெளி​யிடப்​பட்ட வரைவு வாக்​காளர் பட்​டியலில் 97.37 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டன. இதன்படி, உயிரிழந்த வாக்​காளர்​கள் 26,95,672 பேர், இடம்​பெயர்ந்​தோர் மற்​றும் குறிப்​பிட்ட முகவரி​யில் வசிக்​காத 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்​காளர்​கள் 3,98,278 பேர் என மொத்​தம் 97 லட்​சத்து 37 ஆயிரத்து 831 வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கடிச.19ம் தேதி முதல் ஜன 18ம் […]

பலூனை விழுங்கிய 7மாத குழந்தை பலி… பரிதாபம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தரவா நாயகன் பேட்டை பகுதியில், விளையாட வாங்கித் தந்த பலூன் ஏழு மாதக் குழந்தையின் உயிரைப் பறித்த எமனாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலவா நாயக்கன் பேட்டை இப்பகுதியைச் சேர்ந்த ஏழுமலை – 29 சந்தியா – 23 தம்பதியினர் செங்கல் சூளைத் தொழிலாளர்களாகப் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கவிப்பிரியா (3 வயது) மற்றும் ரேணுகா (7 மாதம்) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். […]

மாணவியை வன்கொடுமை செய்து கொன்ற காதலன்-அதிர்ச்சி சம்பவம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நீலம்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவியும் அதே பள்ளியில் + 2 படித்து வந்த 16 வயது சிறுவனும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, சிறுமி நேற்று முன் தினம் காலை பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர், மாலை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு […]

யாருடன் கூட்டணி? “உரியவர்கள் அறிவிப்பார்கள்”- டிடிவி பதில்!

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட பல மாநகராட்சிகளுக்கான தேர்தல் நாளை (ஜனவரி 15) நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தலைவர்களின் முக்கிய கூட்டம் வரும் ஜனவரி 23ஆம் தேதி மதுராந்தகம் அருகே நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கூட்டணியில் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும், கூட்டணியில் இடம்பெறுபவர்கள் யார் என்பது அப்போது தெரியவரும் என்றும் பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கூட்டத்தை முன்னிட்டு மதுராந்தகத்தில் பிரதமர் மோடியை […]

தமிழ்நாட்டில் ”அல்மான்ட் கிட் சிரப்” மருந்து விற்பனைக்கு தடை

பீகார் மாநிலம், ஹாஜிபூர் வைஷாலியில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் நிறுவன தயாரிப்பான, ‘அல்மான்ட் கிட் சிரப்’ மருந்தில், சிறுநீரகங்களைப் பாதிக்கும் ‘எத்திலீன் கிளைகோல்’ அதிகளவு இருப்பது தெரியவந்தது. கொல்கத்தாவின் கிழக்கு மண்டலத்தின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறை, அல்மான்ட் கிட் சிரப்பை தடை செய்து, அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் கடிதம் அனுப்பியது.இதையடுத்து, தெலங்கானாவில் இம்மருந்து விற்பனை செய்ய உடனடியாக தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலும் […]

நான் இருப்பதே திமுக மறந்துவிட்டது.. சசிகலா பரபரப்பு ஸ்பீச்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்தநாளில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினேன். அவர் முதல்வராக இருந்தபோது மக்களுக்காக பாடுபட்டவர். ஏழை குழந்தைகளுக்காக சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர். ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ரேஷன் அரிசி உள்ளிட்டவற்றை வழங்கினார். அதற்கு முன்பு தனியார் நிறுவனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு பிறகுதான் ரேஷன் கடைகளை அரசு ஏற்று நடத்தியது. தேர்தலில் […]

கால்வாய்க்குள் லாரி கவிழ்ந்து 14 பேர் பலி-பாகிஸ்தானில் சோகம்

பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரை சேர்ந்த குடும்பத்தினர், உறவினர்கள் 23 பேர் நேற்று மாலை பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க லாரியில் புறப்பட்டனர். இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் சர்கோதா மாவட்டம் கோட் மாமின் பகுதியில் உள்ள பாலத்தின் மேல் இன்று அதிகாலை சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் தடுப்புகளில் மோதி கால்வாய்க்குள் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் லாரியில் பயணித்த 6 குழந்தைகள் உள்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே […]

கவின் – சாண்டி காம்போவில் புதிய படம்

பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இவர்களது நட்பு மற்றும் காமெடிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. அந்த காம்போ தற்போது பெரிய திரையில் ஒரு படத்திற்காக இணையவுள்ளனர். கவின் நடிக்கும் புதிய படத்தில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக வீடியோவுடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ஒரு முழுநீள காமெடி மற்றும் எமோஷனல் கலந்த கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவின் மற்றும் சாண்டி இடையேயான கெமிஸ்ட்ரியை மையமாக வைத்துத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. […]

பாம்பை வைத்து பொங்கல்- காஞ்சிபுரத்தில் விநோதம்

காஞ்சிபுரம், சாத்தணஞ்சேரியில் இருளர் மக்கள் நல்ல பாம்பை பிடித்து பொங்கல் வைக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். பொங்கலுக்கு 4 நாள்களுக்கு முன்பே பாம்பை பிடித்து, பானையில் அடைத்து வைத்து அதற்கு பூஜை செய்கின்றனர். பின்னர் காணும் பொங்கல் அன்று கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பாம்பை எடுத்துச் சென்று, கற்பூர ஆரத்தி காட்டி வீட்டு வாசலில் படம் எடுக்கச் செய்யும் விநோத வழிபாடு நடந்து வருகிறது.

அனுமன் சிலையை சுற்றி-சுற்றி வந்த நாய்- பக்தர்கள் வழிபாடு

உத்தர பிரதேசத்தின் நாகினா பகுதியில் நந்த்பூர் கிராமத்தில் பழமையான அனுமன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில், கிராமவாசிகள் சாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், தெரு நாய் ஒன்று அனுமன் சிலையை சுற்றி, சுற்றி வந்துள்ளது. அதுவும் இடதுபுறத்தில் சுற்றி வந்துள்ளது. பல மணிநேரம் இதுபோன்று நடந்துள்ளது. சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் நீண்ட நேரம் இது நீடித்துள்ளது. இதனை கவனித்த கிராமவாசிகள் சிலர் பரபரப்பாக பேசி கொண்டனர். இதன்பின்னர் 2 நாள் கழித்து […]

சிவகங்கை-மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 68 பேர் காயம்

சிவகங்கை மாவட்டம், சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 68 பேர் காயம் அடைந்துள்ளனர். காளைகள் முட்டியதில் 68 பேர் காயமடைந்த நிலையில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை- திமுக சார்பில் கும்மி பாடலுடன் பொங்கல்-கோலாகலம்

சென்னை திருவொற்றியூர் தொகுதி திமுக சார்பில், சமத்துவ பொங்கல், மாட்டுப் பொங்கல் விழா கே.வி.கே. குப்பம் மீனவ கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு கே.பி.சங்கர் எம்எல்ஏ தலைமை வகித்தார். கிராமத்தின் கோயிலான படவேட்டம்மன் ஆலய வாசல் முன்பு ஏராளமான பெண்கள் செங்கரும்புடன் 3 பானைகளில் புத்தரிசியுடன் பொங்கல் வைத்து, ‘‘பொங்கலோ பொங்கல்’’ என கோஷங்கள் எழுப்பி சூரியனுக்கு படையலிட்டு வழிபட்டனர். இதன்பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பாரம்பரிய நிகழ்வான மீனவ பெண்கள் […]

பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம்

ராமநாதபுரம் பரமக்குடியில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மணிமண்டபத்தில் இமானுவேல் சேகரனின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரனின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

குடும்ப தகராறு- குழந்தையுடன் டூவீலரில் சென்ற தந்தை-மகள் காயம்

விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (28). இவர் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா (22). காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு அதிதி (2) என்ற பெண் குழந்தை உள்ளது. வேளச்சேரி அடுத்த சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில், மாணிக்கம் தினமும் குடித்துவிட்டுவந்து குடும்பத்தில் பிரச்னை செய்துள்ளார். இதனால் அவர் குடியை மறக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த […]

இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தார் பிரதமர்

மால்டாவிற்கு வருகை தரும் பிரதமர், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துதல், வளர்ச்சியை வேகப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ரூ. 3,250 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மால்டா நகர் ரயில் நிலையத்திற்கு வருகை தரும் பிரதமர், அங்கு ஹவுரா – குவஹாத்தி (காமாக்யா) இடையே, தூங்கும் வசதிகொண்ட இந்தியாவின் முதலாவது வந்தே பாரத் ரயிலை மால்டா நகர் ரயில் […]

காணும் பொங்கல்.. 16ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

காணும் பொங்கலையொட்டி சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்படுவர். 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும். பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை.. முதல்வர் ஸ்டாலின்

மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் கண்டுகளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வீரத்தமிழர்களின் அடையாளமான இவ்விளையாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். திராவிட மாடல் ஆட்சியில், வீரம் விளைந்த மதுரை மண்ணில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் மற்றும் தமிழர்களின் அடையாளமாக இந்த வீர விளையாட்டிற்கு, எருது விடும் அரங்கம் கட்டிக்கொடுத்திருக்கிறோம். இப்போது ஜல்லிக்கட்டை பார்க்க முதல்வராக வந்திருக்கும் நான், ஏதாவது அறிவிப்பை வெளியிட்டு சென்றால் தான் அனைவருக்கும் திருப்தியாக […]

போகி புகை- பனிமூட்டம்.. சென்னையில் 9 விமானங்கள் ரத்து

இன்று அதிகாலை முதல் போகிப் புகையுடன் இணைந்த அடர் பனிமூட்டம் நிலவியதால், ஓடுதளத்தின் பார்வைத்திறன் சுமார் 300 மீட்டராகக் குறைந்தது. இதன் காரணமாகப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகச் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை வரை 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 5 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரவேண்டிய 4 விமானங்கள் அடங்கும். குறிப்பாகப் மும்பை, டெல்லி, புனே, கோவை மற்றும் கொச்சி ஆகிய நகரங்களுக்கான சேவைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் […]

பொங்கல் பண்டிகை- 2 நாளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் இந்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டது போலவே, முதல் இரண்டு நாட்களில் மட்டும் டாஸ்மாக் நிர்வாகம் பெரும் வருவாயைப் பெற்றுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதோ:🍾 பொங்கல் மது விற்பனை 2026: முக்கியப் புள்ளி விவரங்கள் கடந்த இரண்டு நாட்களில் (போகி மற்றும் தைப்பொங்கல்) தமிழகம் முழுவதும் உள்ள 4,829 டாஸ்மாக் கடைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மனமகிழ் மன்றங்கள் மூலம் ரூ.518 கோடிக்கு மதுபானங்கள் […]

ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம்-இபிஎஸ்!

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி 17) தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 2026 […]

ஈரான்: 800 பேரின் மரண தண்டனை ரத்து – டிரம்ப் வரவேற்பு

ஈரானில் சமீபகாலமாக அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 800 போராட்டக்காரர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஈரான் அரசு ரத்து செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் பாராட்டு மற்றும் கருத்து:அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஈரானில் நேற்று நிறைவேற்றப்பட இருந்த 800-க்கும் மேற்பட்டோரின் தூக்கு தண்டனையை அந்நாட்டுத் தலைமை ரத்து செய்துள்ளது. இந்த முடிவை நான் பெரிதும் மதிக்கிறேன். நன்றி!” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, […]

யூடியூபர் சங்கர் விவகாரம்… ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணையை தொடரலாம்

யூடியூபர் சங்கர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,‘‘யூடியூப் சங்கர் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் காவல்துறை விரைந்து விசாரணை நடத்தி ஆறு மாதங்களில் முடித்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யூடியூபர் சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சங்கர் […]

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 பேர் காயம்!

மதுரை : மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் இந்த பாரம்பரிய வீர விளையாட்டில் ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். காலை 10 மணி நிலவரப்படி போட்டியில் ஏற்பட்ட காயங்களால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் 8 மாடுபிடி வீரர்கள், 4 மாட்டு உரிமையாளர்கள், 4 பார்வையாளர்கள் ஆகியோர் அடங்குவர். மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 4 பேரும் காயமடைந்துள்ளனர். இவர்களில் 6 […]

தேர்தல் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பேன் – ஓபிஎஸ்

 மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி 17) தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் “மக்கள் திலகம் வாழ்க” என்ற முழக்கங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆரை “அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை தொண்டர்களுக்கான […]

மகாராஷ்டிராவில் 25 மாநகராட்சிகளை கைப்பற்றிய பாஜக

மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, நவி மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் படி, கடந்த வியாழக்கிழமை அனைத்து மாநகரங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மும்பையில் 52.94 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, நேற்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை முதலே மும்பையில் பாஜ-சிவசேனா கூட்டணி முன்னிலை வகித்தது. மும்பை மட்டுமல்லாது புனே, தானே, நாக்பூர் போன்ற பிற […]

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கண்டுகளிக்கும் முதல்வர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். அலங்காநல்லூரில் அமைக்கப்பட்ட மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார். மாடுபிடி வீரர்களுக்கு தங்க மோதிரத்தை அணிவித்து வருகிறார்.

எம்ஜிஆரின் புகழைப் போற்றுவோம்- ஆதவ் அர்ஜுனா புகழஞ்சலி

ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:கொடிய வறுமையும், நெடிய சவால்களும் வாழ்வை சூழ்ந்தபோதும் கொண்ட லட்சியத்தைக் கைவிடாமல் சரித்திர நாயகராகப் புகழ்பெற்றவர். மக்கள் கலைஞராக இருந்து மக்களின் தலைவராக எழுச்சி கண்டவர். சத்துணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, ஏழை மாணவர்களின் பசியைப் போக்கி புரட்சி கண்டவர். பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அரசின் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியவர். பரம்பரை பரம்பரையாக ஒருசிலரிடம் இருந்த கிராம உள்ளூர் நிர்வாகத்தை மாற்றி, ‘கிராம நிர்வாக அலுவலர்’ (VAO) என்ற அரசு அலுவலர்களை […]

VSB தலைமையில் ஆர்.டி மலை ஜல்லிக்கட்டு…750 காளைகள் பங்கேற்பு

குளித்தலை அருகே ராஜண்டார் மலையில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது இதில் 750 காளைகள் பங்கேற்க உள்ளனர் மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ராஜண்டார் மலையில் இன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது இதில் 750 காளைகள் கலந்து கொள்ள உள்ளன மாடுபிடி வீரர்கள் சுமார் 500 மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் முதல் சுற்றில் 100 நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன அதன் ஏற்பாடாக மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது பலத்த […]

எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்க எப்போதும் பாடுபடுவோம் – பிரதமர்

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது.தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழக காங்.,நிர்வாகிகளுடன் சோனியா, ராகுல் ஆலோசனை

தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். அதன் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்க எடுக்க உள்ளதாக கூறப்படுவதால் காங்கிரசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரது பேச்சு கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், அவை தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்ச்சனங்கள் எழுந்து வருகிறது. இதுபோன்ற பேச்சுக்களை காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் காங்கிரசார் […]

242 ஆன்லைன் கேமிங்- சூதாட்ட இணையதளங்கள் முடக்கம்

 சட்டவிரோதமாக இயங்கி வந்த 242 ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்ட இணையதளங்களை முடக்கி ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் நிதி மற்றும் சமூகத் தீங்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய ஆன்லைன் கேமிங் சட்டத்தின்கீழ், இதுவரை 7,800 தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

தஞ்சை-கல்லணையில் கரிகாலசோழன் சிலைக்கு மரியாதை

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் கரிகாலசோழன் சிலைக்கு மாலை அணிவித்து படையலிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லணை, சோழ மன்னன் கரிகாலனால் சுமார் கி.பி. 150-ல் கட்டப்பட்டது. இது காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உலகின் பழமையான மற்றும் இன்றும் பயன்பாட்டில் உள்ள நீர்த்தடுப்பணைகளில் ஒன்றாகும், மணல் அடித்தளத்தில் கட்டப்பட்ட இதன் நுட்பமான அமைப்பு, தமிழர் பொறியியல் திறனுக்குச் சான்றாகும்; இதன் மூலம் தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் விவசாய நிலங்கள் பாசன […]

மக்கள் மனங்களில் நீங்காமல் நிலைத்தவர் எம்ஜிஆர்- எடப்பாடி கடிதம்

எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாளில் அதிமுகவை ஆட்சி பீடத்தில் அமர வைக்க உறுதி ஏற்போம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: அதிமுகவை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள். இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களில் இருந்து நீங்காமல் நிலைத்த புகழோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர். தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக, தமிழ் நாட்டிற்காக, தன்னையே அர்ப்பணித்து, தமிழர்களை தலைநிமிர வைப்பதற்கும்; அநீதியை அழித்து, நீதியை நிலைநாட்டுவதற்கும் அவர் […]

மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரைக்கு வருகை தர உள்ளார். மதுரை அலங்காநல்லூரில நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். இதனையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

உயிருக்கு போராடிய மூதாட்டி- உதவிக்கரம் நீட்டிய சமூக ஆர்வலர்

கரூர், சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள காந்திநகர் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க சந்திரா என்ற வயதான பெண்மணி வசித்து வந்தார். இவருக்கு உறவினர்கள் இருந்தும்,முறையான கவனிப்பு இன்றி திக்கற்ற நிலையில் கைவிடப்பட்டுள்ளார். கடந்த நான்கு மாதங்களாக போதிய உணவு இல்லாமலும், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும் எழுந்து நடக்கக் கூட முடியாத சூழலில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்தச் சோகமான நிலை‌ குறித்து அப்பகுதி பொதுமக்கள் கரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாக்கியராஜ், […]

போகி பண்டிகை- வீட்டை கொளுத்திய போதை ஆசாமி.. நடந்தது என்ன?

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் இரண்டாவது வீதியில் வசித்து வருபவர் செந்தில் மற்றும் சுதா தம்பதியினர். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் செந்தில் மனைவி சுதாவிடம் அவ்வப்போது மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் செந்திலுடன் வாழ பிடிக்காத சுதா பிரிந்து செல்வதாக கூறி வந்துள்ளார். ஆட்டோ ஓட்டுனராக உள்ள செந்தில் இன்று வேலைக்கு செல்லாமல் காலையிலேயே மீண்டும் வீட்டில் மனைவி சுதாவிடம் தகராறு செய்துள்ளார். தகராறு ஒரு […]

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் 07.01.2026 முதல் 31.01.2026 வரையிலான அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் 07.01.2026 முதல் 31.01.2026 வரையிலான அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் நடைபெறும் என […]

ஒரே நாடு ஒரே தேர்தல் – தமிழக அரசுக்கு வந்த திடீர் கடிதம்

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு தனது கருத்தை தெரிவிக்க கோரி ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான சாத்திய கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இதுதொடர்பான வரைவு மசோதாவை தயாரித்து […]

விஜய்க்கு மக்கள் ஆதரவு இருக்கு..ஆனா?.. வாக்காக மாறாது.. கார்த்திக் சிதம்பரம்

எந்த ஒரு நியாயமான கோரிக்கைக்கும் ராகுல் காந்தி ஆதரவு தெரிவிப்பார் என்றும் அதன் அடிப்படையிலேயே ஜனநாயகன் திரைப்படம் குறித்து நடிகர் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்துள்ளார் என கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், விஜய்க்கு மக்களின் ஆதரவு இருக்கிறது ஆனால் அந்த ஆதரவு வாக்காகவோ அந்த வாக்கு தொகுதிகளை வெற்றி பெறும் வகையிலோ அமையும் என்பதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்….. கோவை விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். […]

தமிழகத்தில் வாக்குபதிவு இயந்திரங்களின் சரிபாரப்பு பணி நிறைவு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தேர்தலில் பயன்படுத்தபட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணி கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி தொடங்கியது. மாவட்டங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பெல் நிறுவன பொறியாளர்கள் இந்தப்பணியை மேற்கொண்டனர்.சுமார் 30 நாட்களுக்கு மேல் நடைபெற்ற பணிகள் நேற்றுடன் ( ஜன 13) நிறைவுடைந்துள்ளது. […]

புதுகை- கல்லூரியில் சமத்துவ பொங்கல்- அமைச்சர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்ஆகியோர் இன்றைய தினம் துவக்கி வைத்து பொதுமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கலிட்டனர். உடன் மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , சட்டமன்ற உறுப்பினர்கள் வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், துணை மேயர் […]

விஜயை சாதரணமாக எடை போடவில்லை… அண்ணாமலை

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தவெக தலைவர் விஜய்யை சாதாரணமாக எடை போடவில்லை. அவர் ஒரு சினிமா ஸ்டார். மாஸ் இருக்கிற ஸ்டார். திமுக வேண்டாம் என நினைத்தால் யார் வேண்டும் என்பதை விஜய் தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் களத்தில் யாரையும் சாதாரணமாக எடை போட வேண்டாம். பொங்கல் விழாவில் சிவகார்த்திகேயன் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது உள்ள நான்கு முனை போட்டி இருமுனை போட்டியாக மாறும். சிவகார்த்திகேயன் பராசக்தியிலும் நடித்திருக்கிறார். அமரன் படத்திலும் நடித்தார். கதை […]

பட்டுக்கோட்டை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல்

பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டையில் திமுக சார்பாக திராவிட சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது விழா முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ஒன்றிய செயலாளர் பார்த்திபன் சமத்துவ பொங்கல் விழாவி ற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார் சமத்துவ பொங்கல் விழாவில் 109 பொங்கல் பானை வைத்து பெண்கள் பொங்கலிட்டனர். பின்னர் சாமி கும்பிட்டனர் கிறிஸ்தவ மத போதகர் இஸ்லாமிய பெண்மணி ஆகியோர் தீபாரதனை காட்டினர் அதோடு அனைவரும் பொங்கல் சாப்பிட்டனர் பொங்கல் […]

சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காக பாடல் எழுதிய எம்பி கனிமொழி

சென்னையில் கலாச்சாரத் திருவிழாவான ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ இன்று தொடங்குவது கலை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விழாவின் சிறப்பம்சங்கள் இதோ: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று மாலை இந்த விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார். கனிமொழி எம்.பி. எழுதிய பாடல்: இவ்விழாவிற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் ‘வானமில்லை பூமியில்லை’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புப் பாடலை எழுதியுள்ளார். நாட்டுப்புறக் கலைகள், பாரம்பரிய இசை மற்றும் உணவுகளை […]

பூக்களின் விலை உயர்வால்-எதிர்பார்த்த வியாபாரம் இல்லை

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கரும்பு, மஞ்சள், பூக்கள் காய்கறிகள் என இறுதி கட்ட வியாபாரத்தில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளதால், பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.‌ முல்லை 2,000 ரூபாய், ஜாதி 2,000 ரூபாய், காக்கரட்டான் 1,500 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் பன்னீர் ரோஸ் 400 ரூபாய், செவ்வந்தி 50 முதல் 100 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. இதனால் […]

அரசு பள்ளியில் ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தெற்கு இரயில்வேயின் மரியாதைக்குரிய ஆய்வாளர் ஜெனரல் மற்றும் முதன்மைப் பாதுகாப்பு ஆணையர் கே. அருள் ஜோதி அவர்களின் அறிவுறுத்தல்களின்படியும், திருச்சி முதுநிலை பாதுகாப்பு ஆணையர் பிரசாந்த் யாதவின் வழிகாட்டுதலின் கீழும், தஞ்சாவூர் அதிகார வரம்பிற்குட்பட்ட இரயில் தண்டவாளங்களுக்கு அருகில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் இரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.அதன்படி, பி. சரவண குமார், ஆய்வாளர்/இரயில்வே பாதுகாப்புப் படை/தஞ்சாவூர் மற்றும் கே. ஸ்ரீனிவாஸ் நாயக், உதவி ஆய்வாளர்/இரயில்வே பாதுகாப்புப் படை/தஞ்சாவூர் ஆகியோர் புதலூர், பூண்டி மற்றும் சாலியமங்கலம் […]

தஞ்சை பெரிய கோவிலில் தரைதளம் அமைக்கும் பணி

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை சார்பில் தரைதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோயில் கோபுரத்துக்கு அதிர்வு ஏற்படாதபடி தொழிலாளர்கள் உளி, சுத்தியலால், பழைய தரைதளத்தை அகற்றி வருகின்றனர். உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து, கோயிலில் உள்ள கல்வெட்டுகளும், சிற்பங்களையும் பார்த்து வியந்து செல்கின்றனர்.இந்நிலையில் கோயிலின் உள்பிரகாரத்தில் பல இடங்களிலும் மழைநீர் தேங்கியதால், சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாமலும், […]

டைரக்டர் மாரி செல்வராஜ்-க்கு பெரியார் விருது-தமிழக அரசு அறிவிப்பு

இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 17ல் பெரியார் திடலில் நடைபெறும் பொங்கல் விழாவில் விருதுகளை கி.வீரமணி வழங்கவுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 32 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் கலை. இலக்கியம். அறிவியல், சமூகப்பணி, விளையாட்டு, சூழலியல்.. தொழில். கல்வி போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பெருமக்களுக்கு ‘பெரியார் விருது’ வழங்கிச் […]

புதுகை-தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் /ஊராட்சி ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவினை ஆட்சியர் மு.அருணாதலைமையில்இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இன்றுதுவக்கி வைத்து பொதுமக்களுடன் இணைந்து சமத்துவபொங்கலிட்டு தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் வேஷ்டி,சேலைகளைவழங்கினர். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் வை.முத்துராஜா,எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்பா. ஜெயசுதா, செய்தி மக்கள் தொடர்பு […]

மும்பையில் கால் வைத்தால் வெட்டுவோம்”-அண்ணாமலைக்கு மிரட்டல்! சீமான் பதில்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை மீது ராஜ் தாக்கரே கடுமையான வன்முறை மிரட்டலை விடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “மும்பைக்கு வந்தால் காலை வெட்டுவோம்” என்று ராஜ் தாக்கரே பகிரங்கமாகக் கூறியது, தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, தமிழ் மக்களிடையேயும் கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இந்த வன்முறை பேச்சை கடுமையாகக் கண்டித்துள்ளார். “ராஜ் தாக்கரேவின் வன்முறை […]

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15,000– மகேஸ் அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களுடன் இன்று காலை 11 மணியளவில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த மாதம் முதல் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், பகுதிநேர ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகளான ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் ஆகியவை குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 12,500 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக […]

சிபிஐ விசாரணைக்கு ஆஜரான சுகாதாரத்துறை அதிகாரிகள் -காவலர்கள்

கரூர் துயரச் சம்பவம்-சிபிஐ விசாரணைக்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட 12க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐக்கு மாற்றப்பட்டு கடந்த அக்டோபர் மாத முதல் சிபிஐ அதிகாரிகள் கரூர் […]

தமிழ் மக்களுடன் பொங்கல் விழா கொண்டாடுவதை பாக்கியமாக கருதுகிறேன்- பிரதமர்

தமிழ் மக்களுடன் பொங்கல் விழா கொண்டாடுவதை பாக்கியமாக கருதுகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் பொங்கல் விழா இன்று காலை தொடங்கியது. இந்த […]

இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் மகேஸ் பேச்சுவார்த்தை

சென்னையில் இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.15,000ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதியம் உயர்வு வழங்கி ரூ.15,000ஆக ஊதியம் தரப்படும். பொங்கல் பண்டிகையை இடைநிலை ஆசிரியர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காக இடைக்கால நிவாரணமாக ஊதியம் உயர்ந்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நிச்சியம் நிறைவேற்றப்படும் […]

அரசு ஊழியர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய முதல்வர்

சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்களுடன் சமத்துவ பொங்கல் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். பொங்கல் விழாவில் அவர் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி கொண்டு இருக்கிறோம். எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி, சமத்துவ நிலையை அனைவரும் அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு, திமுக அரசு பணியாற்றி கொண்டு இருக்கிறது நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் சேர்ந்து தான் உழைத்து கொண்டு இருக்கிறீர்கள். தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி […]

குன்னூரில் மினி பஸ் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மினி பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் மினி பேருந்து ஓட்டுநரை தாக்கியதாகக் கூறி மினி பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். னியார் மினி பேருந்து ஓட்டுநர் ஒருவர் மர்ம நபர்களால் அல்லது குறிப்பிட்ட சிலரால் தாக்கப்பட்டதே இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஓட்டுநர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி ஓட்டுநர்கள் […]

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்- பக்தர்களுக்கு கட்டுப்பாடு

கேரளா: சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தையொட்டி பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மண்டல மகர ஜோதி தரிசனம் இன்று மாலை நடைபெற உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு மகர பல்லாண்டு பூஜையும் நடைபெறுகிறது. இதனை அடுத்து சபரி மலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட மலைப்பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். சுமார் 4 லட்சத்துக்கு மேலான பக்தர்கள் சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை காண தேவசம்போடு அறிவித்த நிலையில் தற்போது பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சந்தன பேழையை ஊர்வலமாக […]

கரூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா..கோலாகலம்

கரூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழாவில் மேயர் மற்றும் ஆணையர் உற்சாகமாக கும்மியடித்துக் கொண்டாட்டம். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. கரூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தின் முன்பாக நடைபெற்ற இந்த விழாவில், மாநகராட்சி மேயர்,மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வண்ணக் […]

பொங்கல் பண்டிகை- 1 கிலோ மல்லி ரூ.6000 விற்பனை

பூக்கள் வரத்து குறைவு மற்றும் பொங்கலை முன்னிட்டு மல்லிகை, முல்லை, செவ்வந்தி பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. 1 கிலோ மல்லிகை பூ ரூ.6000க்கும், 1 கிலோ முல்லைப்பூ ரூ.3000க்கும், 1 கிலோ ஜாதிப்பூ ரூ.1500க்கும் விற்பனையாகின்றன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் போகி பண்டிகை கோலாகலம்

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தை பொங்கலை வரவேற்கும் விதமாக, அனைத்து வீடுகளிலும் பழைய பொருட்கள் மற்றும் துணிகளை எரித்து, வீடுகளை சுத்தம் செய்து மக்கள் போகி பண்டிகையை பாரம்பரிய முறையில் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் போகி பண்டிகை என்பது மார்கழி மாதத்தின் நிறைவு நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் துவக்க நாளாக போகி பண்டிகை கருதப்படுகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியைப் போல, “பழைய கழிதலும், புதியன புகுதலும்” என்பதே […]

திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு போகி தீயிட்டு கொண்டாட்டம்.!

திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. போகி பண்டிகை விவசாயத்தின் கடவுளிடம் ஆசி பெறுவதற்கான நாளாக கருதப்படுகிறது. அறுவடை திருநாளின் ஆரம்ப நாளாகவும் இந்த நாள் நாட்டின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் துவக்கமாக கொண்டாடப்படுவது போகிப் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள், வீட்டை சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களை தீயிட்டு எரிக்கும் நாள் போகிப் பண்டிகை ஆகும். இதனை பழையன பழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையாக முன்னோர்கள் கூறி […]

அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை- ஈரானை தாக்கினால்

ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி வருகிறார். போராடும் மக்கள் பாதிக்கப்பட்டால், ஈரான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். எனினும், உங்களுடைய சொந்த விவகாரங்களில் கவனம் செலுத்துங்கள் என ஈரான் தலைவர் காமேனி கூறினார்.இதனை தொடர்ந்து, ஈரானுடன் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நாடுகளின் வர்த்தகம் பாதிக்கப்படும் வகையில், அந்நாட்டுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு […]

கோவையில் பொங்கல் விழா… கலெக்டர் நடனம்

பொங்கல் விழாவை ஒட்டி மாவட்ட ஆட்சியர் நடனம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது முன்னதாக அலுவலர்கள் செய்த கலர் பொடி கோலங்களுக்கு மதிப்பெண் அளித்தார். பின்னர் கயிறு இழுக்கும் போட்டியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினார் இந்த போட்டியில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் அலுவலர்கள் கயிறு இழுத்து முதலாவதாக வெற்றி பெற்றனர் பின்னர் பெண் அலுவலர்கள் கயிறு இழுத்து அடுத்ததாக வெற்றி பெற்றார்கள் இதனை […]

பொங்கல் பண்டிகை.. அரசு பஸ்சில் 6.90 லட்சம் பேர் பயணம்

தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பொங்கல் திருநாள் . தமிழ் நாடு மட்டுமின்றி உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்கள் இந்நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். அதன் படி இந்த ஆண்டு நாளை (ஜன.14) போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து நாளை மறுதினம் (ஜன.15) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதன் பின்னர் வெள்ளிக்கிழமை (ஜன.16) மாட்டுப்பொங்கல், உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த மூன்று நாளும் அரசு விடுமுறையாகும். மேலும் சனி, ஞாயிறு என அடுத்தடுத்து 5 தினங்கள் விடுமுறை வருகிறது. […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,240-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280-க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.307க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 15,000 விலை உயர்ந்து ரூ.3,07,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எச்.ராஜாவுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி

பெரம்பூர், ஓட்டேரி செல்லப்பா தெருவில், ‘’சிங்கார சென்னை 2.0’’ திட்ட நிதியின் கீழ் 4 கோடியே 58 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி பணிகளை துவக்கிவைத்தார். இதில், சென்னை மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக் கலந்துகொண்டனர். இதையடுத்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது; […]

காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன்..

சேலம்: ஏற்காடு தனியார் காட்டேஜிக்கு பேஸ்புக் காதலியை அழைத்து சென்று உல்லாசமாக இருந்து விட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காடு தனியார் பள்ளியின் பின்புறம் உள்ள தனியார் காட்டேஜில், ஒரு அறையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என நேற்றிரவு ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார், அந்த காட்டேஜிக்கு சென்று, குறிப்பிடப்பட்ட அந்த அறையை திறந்து பார்த்தனர். அங்கு, அரை நிர்வாண நிலையில் […]

ஆண்களை விட பெண்கள் மிகவும் திறமையானவர்கள்- உதகையில் ராகுல் பேச்சு

உதகை- ஆண்களை விட பெண்கள் மிகவும் திறமையானவர்கள், தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெண்கள் இன்னும் பலதுறைகளில் பெரும் பங்களிப்பை வழங்க வேண்டும். எனது பாட்டி இந்திரா காந்தியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பள்ளி பருவத்தில் நான் மிகவும் குறும்புக்கார சிறுவனாக இருந்தேன். விடுதியில் தங்கி படித்தாலும் மகிழ்ச்சியாக இருந்தேன்; ஆனால் மகிழ்ச்சியாக இல்லை என பெற்றோரிடம் கூறினேன். பெற்றோரை அடிக்கடி வர வைப்பதற்காக நான் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறினேன். […]

14 லட்சம் குடும்பம் இன்னும் பொங்கல் பரிசு வாங்கவில்லை

தமிழகம் முழுவதும் இன்று நண்பகல் வரை 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 லட்சம் குடும்பங்களுக்கு நாளையும் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்பினை […]

மீண்டும் விஜய் CBI விசாரணைக்கு ஆஜாராவார்! .. நிர்மல்குமார்

ஜனநாயகன் திரைப்படம் குறித்து யார் யார் ஆதரவு தெரிவித்தார்களோ அனைவருக்கும் தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் நன்றி தெரிவித்துள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டமானது அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. கரூர் பிரச்சார  கூட்டத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதனை ஏற்று நேற்றயை தினம் […]

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா- கோலாகலம்

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா – பாரினர்ஸ் மாணவர்களுடன் கோலாகல கொண்டாட்டம் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா தமிழக முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் கல்லூரியின் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொங்கலிட்டு, “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கல்லூரியில் பயிலும் வெளிநாட்டு (பாரினர்ஸ்) மாணவ, மாணவிகளும் தமிழர்களின் […]

அரியலூர்- அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து விளையாட்டு போட்டிகள் நடத்தி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 15ம் தேதி கொண்டாடப்படும் நிலைகள் அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பொங்கல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்திக் கொண்டாடி மகிழ்கின்றனர். அரியலூர் அரசு கலைக் கல்லூரி சுற்றுச்சூழல் துறை சார்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் வேஷ்டி மட்டும் புடவைகள் […]

புதுகை-சமத்துவ பொங்கல் விழா நடத்த கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

வழக்கம் போல இந்த ஆண்டும் புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடத்த வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் திங்கள்கிழமை கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய அரசு மன்னர் கல்லூரில் அனைத்துத் துறைகளின் சார்பிலும் தனித்தனியாக சமத்துவப் பொங்கல் விழா நடத்துவது வழக்கம். ஆனால், கல்லூரி நிர்வாகம் இந்த ஆண்டு பெங்கல் விழா நடத்துவதற்கு மறுப்புத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சமத்துவப் […]

பொங்கல் பண்டிகை.. திருச்சியிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருச்சியிலிருந்து, ஆயிரத்து 732 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு பஸ்களில் பயணிகள் எளிதாக பயணம் செய்யும் வகையில், திருச்சி மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், சென்னை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், பழனி, தஞ்சாவூர் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய வழித்தடங்களில் திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்திலிருந்து 12ம்தேதி (நேற்று) முதல் 15ம்தேதி அதிகாலை வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களும், […]

வீடு தீப்பிடித்து 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

திருச்சி உறையூர் கீழ புது பாய்க்கார தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி வயது (45. ) இவர் குடும்பத்துடன் கல்லணைக்கு சென்றுள்ளார். அன்று மாலை அவரது மகன் தனலட்சுமியை தொடர்பு கொண்டு வீட்டில் மின்கசிவு காரணமாக தீ பிடித்ததாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பத்தில் வீட்டிலிருந்து மின்சாதன பொருட்கள் , பேங்க் பாஸ்புக் , டிசி போன்ற ஆவணங்கள் உள்ளிட்ட 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து […]

சென்னையிலிருந்து தென்காசிக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கம்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து தென்காசிக்கு இன்று இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06072) இயக்கப்படுகிறது. 8 தூங்கும் வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என மொத்தம் 18 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, […]

ஊர்க்காவல் படைக்கு தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (13.1.2026) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில், தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட 50 திருநங்கையர்களுக்கு ஊர்க்காவல்படை உறுப்பினர் நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 திருநங்கையர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினார். 2025-2026-ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களால், திருநங்கையருக்கு உரிய விழிப்புணர்வையும், வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பையும் வழங்குவதன் மூலம் அவர்களுடைய கண்ணியமான வாழ்வினை உறுதி செய்திட முடியும் […]

ஜனநாயகன் படத்திற்கு ராகுல் ஆதரவு

விஜய் தனது ஜனநாயகன் படன் தான் கடைசி என்றும் , அதன் பிறகு முழு நேர அரசியல் பணியில் ஈடுப்பட போவதாக அறிவித்தார். இந்த சூழலில், ஜன நாயகன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. தவெக தலைவர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாகியது. ஏற்கெனவே இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து, விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இப்படி […]

தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடும் புகைமூட்டம்..சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து..

நாளை அதிகாலை மற்றும் காலை நேரங்களில் நிலவக்கூடும் கடுமையான புகைமூட்டம் காரணமாக, பார்வைத்திறன் குறையும் என்பதால் கீழ்க்கண்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன: சென்னையில் இருந்து பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் அந்தமான் செல்ல வேண்டிய அதிகாலை நேர விமானங்கள். பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லியில் இருந்து அதிகாலையில் சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள். ரத்து செய்யப்படாத பிற 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் (சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சேவைகள்) 1 மணிநேரம் முதல் 3 மணிநேரம் […]

அதிமுக-பாஜகவுடன் கூட்டணியில் இணைய டிடிவிக்கு தயக்கம்..

அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தயக்கம் காட்டி வருகிறார். அதிமுக-பாஜக கூட்டணியில் இணையும்படி தினகரனுக்கு பாஜக மேலிடம் அழுத்தம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மேலிட அழுத்தத்தால் டெல்லி சென்று அமித் ஷாவை டிடிவி தினகரன் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று திரும்பிய மறுநாளே அமித் ஷா -தினகரன் சந்திப்பு நடந்துள்ளது. தினகரனை கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடம் ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அமமுக கூட்டணியில் […]

போதை ஆசாமி அடாவடி-அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்

கோவையில் மது போதையில் பேருந்து ஏறி நபர் ஒருவர் பேருந்து நிற்காத நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என அடம் பிடித்து நடத்துனரை தாக்கிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை, காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை சோமனூர் நோக்கி தடம் எண் 90 என்ற எண் கொண்ட அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் ஒரு நபர் மதுபோதையில் ஏறி உள்ளார். பேருந்து லட்சுமி […]

விஜயை ஒப்பந்தம் செய்ய பாஜக முயற்சி – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

கோவை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ அவர்கள் கூடலூர் ராகுல் காந்தி வருகை முன்னிட்டு கோவை விமான நிலையம் வந்தடைந்தார் அவருக்கு கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் விஜயகுமார் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாநில மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு சால்வை அனைத்தும் பூங்கொத்து கொடுத்தும் அவரை உற்சாகமாக வரவேற்றினர் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, கோவையில் […]

கார் மோதி 2 விவசாயிகள் பலி- பரிதாபம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வாகரை பகுதியில், அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு முதிய விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். வாகரை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வேலுச்சாமி (62) மற்றும் கருப்புசாமி (62). சம்பவம்: இவர்கள் இருவரும் இன்று மதியம் ஒரு வேலையாகத் தங்களது இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம் – தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று, எதிர்பாராத விதமாக இவர்களது […]

படம் இயக்க ஒரு கதை தயாராய் இருக்கு

ரவி மோகன் நடித்த ‘கோமாளி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், பிரதீப் ரங்கநாதன். அடுத்ததாக, ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்தார். இதை தொடர்ந்து ‘டிராகன்’, ‘டியூட்’ ஆகிய படங்களில் நடித்தார். இப்படங்கள் வெற்றிபெற்றுள்ள நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரது ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த நிலையில், ‘நடிகராக மட்டும் இருப்பதை விரும்புகிறீர்களா? மீண்டும் படம் இயக்க விரும்பவில்லையா?’ என்று […]

கரூர் சம்பவம்.. 19ம் தேதி விஜயிடம் மீண்டும் விசாரணை?

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக 19ம் தேதி விஜயை மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதியன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், கடந்த […]

எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்ய தடை-ஐகோர்ட் அதிரடி

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில், பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, திமுக எம்.பி. தங்க தமிழ்செல்வன் மற்றும் ஊடகவியலாளர் செந்தில் வேல் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது ஏற்பட்ட கருத்து மோதலை தொடர்ந்து, பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ் ஜி.சூர்யா மீது செந்தில் வேல் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் பாட்டில், கத்தி மற்றும் ஆயுதங்கள் எடுத்து வந்து கடுமையாக தாக்கினர். இதில் […]

முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழகம் முழுவதும் காண முடிகிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் […]

”ஜனநாயகன்” விவகாரம்.. ஜன.15ல் விசாரணை

 விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜனவரி.15ல் விசாரணைக்கு வருகிறது. ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்று விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்துக்கு தற்போது வரை சென்சார் சான்று தரப்படவில்லை. தனி நீதிபதி ஆணைக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்கால தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் சித்திரை தமிழ் புத்தாண்டு மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2026-ஆம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் அமைச்சர் துரைமுருகன் பெயர் இடம்பெற்றுள்ளது. திராவிட இயக்கக் கொள்கைகளில் நீண்ட கால உறுதிப்பாட்டுடன் இருப்பது, சிறந்த நாடாளுமன்றவாதியாகச் செயல்படுவது மற்றும் அவரது அரசியல் பணிகளைப் பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது 2 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப் […]

மல்லிகைப்பூ கிலோ ரூ.4000க்கு விற்பனை

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. முல்லை ரூ.2,500, பிச்சிப்பூ ரூ.2,000, கனகாம்பரம் ரூ.2,000, சம்பங்கி ரூ.150, ரோஸ் ரூ.200, செவ்வந்தி ரூ.100க்கு விற்பனையாகிறது.

நாளை முதல் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை

 பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகை, பொங்கல் பண்டிகை, சனி, ஞாயிறு என 5 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

படுத்த படுக்கையாக இருக்கும் 90 வயது மூதாட்டிக்கு பொங்கல் தொகுப்பு- நெகிழ்ச்சி

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மைக்குடியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி இருளாயி (90). கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் இருளாயி மட்டும் தனியாக வசித்து வருகிறார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் இருளாயி படுத்தபடுக்கையாக இருந்து வருகிறார். பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கனை இருளாயிக்கு உறவினர்கள் வாங்கி வந்து கொடுத்தனர். ஆனால், அவரால் ரேஷன் கடைக்குச் சென்று பொங்கல் பரிசு பெற முடியவில்லை. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ரேஷன் […]

பாஜகவுக்கு 33 சீட் தான்”-உடைத்து பேசிய அதிமுக நிர்வாகி!

பாஜக 30 – 33 தொகுதிகளைத்தான் கேட்டுப் பெறும். தொகுதி கண்டறிவது பற்றி இன்னும் பேசப்படவே இல்லை. அதிமுக 160 -165 தொகுதிகளில் அதிமுக போட்டியிறுவது உறுதி. மற்ற தொகுதிகளைத்தான் மற்ற கட்சிகளுக்கு பிரித்துக் கொடுப்பார்கள்.” என அதிமுகவை சேர்ந்த சேலம் மணிகண்டன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் […]

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் – இஸ்ரோ தலைவர் பேட்டி

பிஎஸ்எல்வி-சி 62 ராக்கெட் நாளை மறுநாள் (12ம்தேதி) காலை 10.17 மணிக்கு ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வெளியே வந்த இஸ்ரோ தலைவர் நாராயணன், நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 12ம்தேதி காலை 10.17 மணிக்கு பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்-என்1 செயற்கைக்கோளும், அத்துடன் 15 […]

எம்மி விருது வென்ற பிரபல நடிகர் காலமானார்

எம்மி விருது பெற்ற ‘சீன்ஃபீல்ட்’ தொடரின் இயக்குநரும் நடிகருமான டாம் செரோன்ஸ் (86) காலமானார். அல்சைமர் நோயுடன் நீண்டகாலமாக போராடி வந்த அவர், புளோரன்ஸில் உள்ள தனது வீட்டில் காலமானார். பல்வேறு டிவி நிகழ்சிகளை இயக்கிய அவர், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ’THE PILOT’ படத்தில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அரசு ஊழியர்களுக்குப் பொங்கல் பரிசு… ஓய்வூதிய திட்டம் அமல்.. அரசாணை வெளியீடு

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இத்தகைய சூழலில் திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அடுத்த தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவின் வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருந்ததால், 2026 ஆம் […]

பயணிகளிடம் சோதனை நடத்த சென்னை ஏர்போட்டில் புதிய காமிரா அறிமுகம்

சென்னை உள்பட பல விமான நிலையங்களில் வெளிநாடுகளுக்கு புறப்பாடு, வருகை பயணிகளுக்கு சுங்க சோதனையின்போது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதையடுத்து, அனைத்து விமான நிலையங்களிலும் அதிகாரிகளின் சட்டை பாக்கெட்டுகளில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட ‘பாடி வார்ன் காமிரா’ அணிந்திருக்க வேண்டும், அவை, அதிகாரிகளின் சோதனைகளை வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்யும். அக்காட்சிகள் கம்ப்யூட்டர்களில் தேதி, நேரம் வாயிலாக குறிப்பிடப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஏதாவது பிரச்னை ஏற்பட்டதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் அல்லது சந்தேகங்கள் வந்தால், […]

சென்னை கிண்டி கொலை வழக்கு- பாண்டியன் – பாஸ்கருக்கு ஆயுள் தண்டனை

சென்னை கிண்டியில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பரபரப்பான கொலை வழக்கில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜனவரி 10, 2026) சென்னை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை கிண்டி பகுதியில் கார்த்திக் என்பவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரும் வகையில் காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தனது இறுதித் தீர்ப்பை அறிவித்துள்ளது. 🗞️ […]

திரைப்படத் தணிக்கை வாரியமும் பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது – அமைச்சர் ரகுபதி

திரைப்படத் தணிக்கை வாரியமும் புதிதாக பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “பாஜகவுடன் ஏற்கனவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவை கூட்டணி வைத்துள்ளன. தணிக்கை வாரியம் உள்ளிட்டவற்றை கூட்டணியில் வைத்துக் கொண்டுதான் பாஜக தேர்தலை சந்திக்க உள்ளது. அதிகாரிகள் குழுக்களுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ள பாஜகவை எதிர்கொள்ள திமுக கூட்டணி தயார்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா…கோலாகலம்

பட்டுக்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி. தொண்டரணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா பட்டுக்கோட்டை காசாங்குளம் அண்ணா கலையரங்கில் நடைபெற்றது 100 பொங்கல் பானைகளை வைத்து பொங்கல் வைத்தனர் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக உயர் கல்வி அமைச்சர் செழியன் கலந்து கொண்டார் அவர்களோடு மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் அதோடு மத நல்லிணக்க அடிப்படையில் விழா […]

தேமுதிக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள்

 கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நேற்று (ஜன 10) தேமுதிக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் முழு விவரம் வருமாறு:-

தேமுதிக மாநாட்டில் மயங்கி விழுந்த நிர்வாகி பலி

கடலூர் மாவட்டம், பாசார் கிராமத்தில் இன்று தேமுதிக உரிமை மீட்பு மாநாடு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக சார்பில் நடைபெற்ற இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்காக சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. மாலை 5 மணி அளவில் தேமுதிக கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்கியது. விஜயகாந்த் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால், […]

மஞ்சள் காமாலைக்கு வாலிபர் பலி- திருவாரூரில் சோகம்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கிளரியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (38). கடந்த சில நாட்களாகக் கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவருக்கு, பரிசோதனையில் மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் உள்ளூரில் சிகிச்சை பெற்று வந்த சிலம்பரசனின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், கல்லீரல் பாதிப்பு தீவிரமடைந்த […]

ஜெயலலிதா மகள் எனக்கூறி வந்த அம்ருதா விரட்டியடிப்பு

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் வேகப்படுத்தி வருகின்றன. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக – அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.அதிமுக சார்பில் விருப்ப மனு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கியிருந்தனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்காக 10,175 […]

பொதுமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய முதல்வர்

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் பொங்கல் கொண்டாடினார். பின்னர் மாணவ, மாணவிகள், துப்புரவு ஊழியர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். அப்போது தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று அவர் தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றார். இதன்படி, இந்தாண்டு கொளத்தூர் ஜவகர் நகர் 1வது சர்குலர் சாலையில் உள்ள கொளத்தூர் […]

உதகை அருகே காட்டெருமை தாக்கி பெண் பலி

உதகை அருகே உள்ள கொதுமுடி கிராமத்தைச் சேர்ந்த மலர்க்கொடி (45) என்பவர், இன்று காலை வழக்கம் போலத் தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்காகச் சென்றுள்ளார். அப்போது புதருக்குள் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று திடீரென அவரைத் தாக்கியுள்ளது. தேயிலை செடிகளுக்கு இடையே மறைந்திருந்த காட்டெருமை, மலர்க்கொடியை எதிர்பாராத விதமாக முட்டித் தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம்பக்கத்தில் வேலை செய்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, மலர்க்கொடி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு […]

தணிக்கை சான்றிதழ் வழங்கும் முறையில் மாற்றம் தேவை…மநீம தலைவர் கமல்

தணிக்கை சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மாற்றம் தேவை என நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ‘தற்போதைய சூழல் ஒரு குறிப்பிட்ட படத்துக்கானது மட்டுமல்ல. பல்வேறு கலைஞர்களின் வாழ்வாதாரம் என்பதால் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் நேர்மையான மற்றும் காலக்கெடுவுடன் கூடிய நடைமுறை தேவை’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது; அது பகுத்தறிவால் வழிநடத்தப்பட வேண்டுமே தவிர, ஒருபோதும் தெளிவற்ற தன்மையால் […]

தவெக உடன் கூட்டணி வைப்பீர்களா? ஓபிஎஸ் சூசக பதில்

அதிமுவில் ஓ. பன்னீர்செல்வத்தைச் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதனால், அதிமுக-வை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டங்களுக்கு இடையே, தனது அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஓ.பி.எஸ். தள்ளப்பட்டுள்ளார்.அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாகக் கூறி வரும் ஓ.பி.எஸ்., விரைவில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவ்வாறு தனிக்கட்சி தொடங்கினால், அது வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-விற்குப் […]

பட்டுக்கோட்டை அருகே நெல் அரவையிலிருந்து வௌியேறும் தூசி- நோய் பரவும் அபாயம்- மறியல்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் நெல் அரவை மில்லில் இருந்து தூசி தொடர்ந்து வெளியேறி வருவதால் குடியிருப்பு பகுதி மக்களுக்கு நோய் தொற்று பாதிக்கும் அபாயம்….*! மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்……! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் பகுதியில் தனியார் நெல் அரவை மில் இயங்கி வருகிறது.இந்த அரவை மில்லில் இருந்து நீண்ட நாட்களாக தொடர்ந்து நெல் அரவையின் பொழுது மாசு படக்கூடிய […]

விஜய் பிரச்சார பஸ்சின் மேல் ஏறி சிபிஐ அளவீடு.. டிரைவரிடம் விசாரணை

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி முதல் கரூர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் […]

நெற்றியில் ‘181’ என எழுதி ஆசிரியர்கள் நூதன போராட்டம்!

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்துவரும் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வேண்டுமென கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி எண் 181-இல், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் […]

கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்த ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம்

கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம் ; சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க்க உள்ளது சர்வதேச அளவில் புகழ் பெற்ற 41-வது ‘ஷெல் ஈக்கோ-மேரத்தான்’ ஆசிய-பசிபிக் போட்டிகள், கத்தார் நாட்டில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. மிக குறைந்த எரிபொருளில் அதிக ஆற்றலுடன் இயங்கக்கூடிய வாகனங்களை உருவாக்கும் மாணவர்களுக்கான சர்வதேச போட்டி இது. மேலும் வாகனத்துறையில் வழக்கமான எரிபொருள் அல்லாது நிலைத்தன்மை கொண்ட எரிபொருள் மூலம் அதிக நேரம் திறம்பட இயங்கும் வாகனங்களை உருவாக்கும் […]

ஜூனியர் குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025- கோவை வீரர்கள் சாதனை

சமீபத்தில் நடைபெற்ற ஜூனியர் தேசிய குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், கோவை ஸ்டேபிள்ஸ் குதிரை சவாரி பள்ளியைச் சேர்ந்த எட்டு திறமையான இளம் வீரர்கள் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி நகரத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்தப் போட்டியில் நான்கு பிரிவுகளில், 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். கபிலேஷ், ஆதவ் கந்தசாமி, பிரிதிவ் கிருஷ்ணா, ஆதர்ஷ், பிரதிக் ராஜ், சோனிகா சுனில், திவ்யேஷ் ராம் மற்றும் ஹர்ஷியத் ஆகிய வீரர்கள், தங்களின் அபார திறமை, ஒழுக்கம் மற்றும் விளையாட்டு […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,03,200க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,900க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 7 உயர்ந்து ஒரு கிராம் ரூ.275க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

”ஜனநாயகன்” படத்திற்கு தடை- 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜனநாயகன் திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்தது. ஜனநாயகன் பட வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மறுதணிக்கை செய்ய உத்தரவிடப்பட்ட ஆணையை ரத்து செய்து நீதிபதி பி.டி.ஆஷா தீர்ப்பளித்திருந்தார்.

தம்பதி வெட்டிப் படுகொலை.. 8 பேர் கைது-பரபரப்பு

திண்டுக்கல் அருகே தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 8 பேரை கைது செய்துள்ளனர். பழிக்குப் பழியாக கணவன் – மனைவியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், வனப்பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் அவர்களை ஒரு மணி நேரத்தில் சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர்.

ரூ.3,000 வாங்குபவர்களை குடிகாரர்கள் என்பதா?.. அன்புமணி மீது அமைச்சர் MRK பாய்ச்சல்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவருமே குடிகாரர்களா?… எது செய்தாலும், அதில் குற்றம் எனக் கூறிக்கொண்டு இங்கே கட்சி நடத்துகிறார்கள். பாஜகவின் ஏஜெண்டாக பாமக இருந்து கொண்டு பி-டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 3,000 ரூபாய் வாங்குபவர்களை குடிகாரர்கள் என அன்புமணி கூறுவது தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. அன்புமணிக்கு வேண்டுமானால் 3,000 ரூபாய் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் நடுத்தர, ஏழை மக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய உதவியாக […]

தஞ்சை அருகே பள்ளியில் சமத்துவ பொங்கல்…கொண்டாட்டம்

பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல், பள்ளி தாளாளர் உதயகுமார் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 18 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு அனைவரும் கலந்துகொண்டு பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தனர். மாணவ மாணவிகள், ஆசிரியைகள், ஆசிரியர்கள் அனைவரும் பாரம்பரிய உடைகள் அணிந்துவந்தனர். பெற்றோர்களும் இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். பாரம்பரிய கலை நிகழ்ச்சியான கோலாட்டம், கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர். ஆசிரியர்களுக்கான கோலம் வரைதல் போட்டி, பானை உடைத்தல் போட்டி, கயிறு […]

சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி கைது… விசாரணை

 சபரிமலை துவாரபாலகர் சிலை தங்க கவச திருட்டு விவகாரத்தில் கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரருவை கைது செய்து சிறப்பு புலனாய்வுக்குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. துவார பாலகர் சிலைகள், கதவு நிலைகளில் பதித்த தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. 2019இல் தங்கத் தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அன்புமணியுடன் கூட்டணி- ஏமாந்துதான் போவார்கள்-பாமக MLA

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அன்புமணி தரப்பு பாமக, அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது. இதற்கு, ராமதாஸ் தரப்பு பாமகவினர் கடும் அதிருத்தியில் உள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் கூறுகையில், “இபிஎஸ்க்கு என்ன அழுத்தம் என தெரியவில்லை. அன்புமணியுடன் கூட்டணி வைப்பவர்கள் ஏமாந்துதான் போவார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து இன்னும் சில நாட்களில் ராமதாஸ் அறிவிப்பார்” என்றார்.

கள்ளக்குறிச்சி- புதிய காலணி தயாரிப்பு ஆலையின் 2ம் கட்ட பணி துவக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 2,325 கோடி முதலீட்டில் புதிய காலணி தயாரிப்பு ஆலையின் 2ம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 27,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய காலணி உற்பத்தியாளர்களில் ஒன்றான தைவானைச் சேர்ந்த பௌசென் குழுமம், இந்தியாவிற்காக காலணிகளை உற்பத்தி செய்வதற்காக கள்ளக்குறிச்சியில் உற்பத்தி ஆலையை அமைக்க தொடங்கி உள்ளது. சாத்தனூர் சிப்காட்டில் ரூ.2,325 கோடி முதலீட்டில் தைவான் ஆலையின் இரண்டாம் கட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் […]

திமுகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் திட்டம்- அரசியலில் பரபரப்பு

சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விருப்பு மனு பெறும் நிகழ்ச்சியை, தைலாபுரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என்று தெரிவித்த மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் இடம் பெறுவீங்களா என்ற கேள்விக்கு, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார். அதிமுக – பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியும் இணைந்துள்ளார். இந்த நிலையில் அன்புமணி நடத்தும் […]

“ஜனநாயகன்” அரசியல் காரணத்திற்காக நிறுத்தவில்லை.. சரத்குமார் விளக்கம்

கோவை அவிநாசிலிங்கம் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தடம் வாக்கத்தான்; நடிகர் சரத்குமார் கருத்துகோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மாணவிகள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தடம் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை மக்கள் சேவை மையம் நிறுவனர் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தலைமை வகிக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் சிறப்பு விருந்தினராக […]

கரூரில் வேகமெடுக்கும் சிபிஐ விசாரணை… கேமிராவுடன் ஆய்வு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் சி.பி.ஐ. விசாரணை தற்போது தீவிர வேகமெடுத்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில், சி.பி.ஐ. ஏ.எஸ்.பி. முகேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி முதல் கரூரில் உள்ள தாந்தோன்றி மலை […]

தமிழ்நாட்டின் உரிமைகளை ஆமாம் சாமி போட்டு அடகு வைத்தவர் இபிஎஸ்– முதல்வர் சாடல்

திருவள்ளூர்  மாவட்டம் பொன்னேரியில் ‘உங்க கனவு சொல்லுங்க’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தன்னார்வலர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1.90 கோடி குடும்பங்களை சந்தித்து மக்களின் கனவுகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியும் இத்திட்டம், அரசின் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேடையில் மக்களிடம் நேரடியாக கனவுகளை கேட்டறிந்த முதலமைச்சர், அவற்றை செயல்படுத்தித் தருவதாக உறுதியளித்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் பாலமாக இருக்க […]

கந்தர்வகோட்டை ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளைத் தரம் உயர்த்துவது தொடர்பான தமிழ்நாடு அரசின் சமீபத்திய அறிவிப்புகள் குறித்த விரிவான விவரங்கள் இதோ: 🏢 புதுக்கோட்டை: உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்வு – அரசாணை விவரங்கள்தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளை அடுத்த நிலைக்குத் தரம் உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளது. கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் […]

கூட்டணி குறித்து காங்., கட்சியினர் பொதுவௌியில் கூற வேண்டாம்

இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபகாலமாக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத பா.ஜ.க.வை சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி கூட்டணி அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கொண்டு வருகிறார். அந்த கூட்டணியில் சேர விரும்பாதவர்களை வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி, அச்சுறுத்தி கூட்டணியில் சேர நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க. […]

நகைக்காக பெண் கொலை வழக்கில் ஒருவர் கைது

சென்னை சூளைமேட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அமுதா என்பவர் கொல்லப்பட்டு, 14 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சாந்தகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் விபத்தில் MLA மகள் உட்பட 3 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலா பச்சன். மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய இவரது மகள் பிரேர்னா பச்சன். நேற்று இரவு பிரேர்னா தனது நண்பர்கள் மூன்று பேருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். இந்தூர் மாவட்டம் ராணாமண்டல் பகுதியில் கார் சென்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது.இந்த கோர விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பிரேர்னா பச்சன் மற்றும் […]

அரசு பஸ்சில் சர்ச்சை வாசகங்கள்.. மர்ம நபர்கள் கைவரிசை..

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொது போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குக் கிராமங்களில் இருந்தும் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு செல்லும் பல தரப்பட்ட பொதுமக்கள் பயண பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் இருந்து இன்று பொள்ளாச்சி மார்க்கமாக அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. தேவாரம்,தேனி, பழனி பொள்ளாச்சி மார்க்கமாக கோவை செல்லும் அந்த குறிப்பிட்ட […]

”உங்க கனவை சொல்லுங்க” திட்டம்…தன்னார்வலர்களுக்கு கைபேசி இணைப்பு வழங்கிய அமைச்சர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின திருவள்ளுர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு அரசின் ”உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற விழா நிகழ்வில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு கைபேசி இணைப்பு, விண்ணப்பப் படிவம், அடையாள அட்டை, தொப்பி மற்றும் கனவு அட்டைகளை வழங்கி சிறப்பான முறையில் இப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள். […]

சிப்காட் தொழிற்பூங்காவில் தூய்மை பணி- அமைச்சர் மெய்யநாதன் பார்வை

புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் மாபெரும் தூய்மைப் பணி முகாமினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா,சிப்காட் திட்ட அலுவலர்சீ. கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

தேர்தலில் போட்டியிட பாமக இன்று முதல் விருப்பமனு

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) இன்று முதல் விருப்பமனுக்களைப் பெறத் தொடங்கியுள்ளது. பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விருப்பமனு விநியோகம் மற்றும் கட்டண விவரங்கள் பின்வருமாறு:விவரம்கட்டண விவரம்பொதுத் தொகுதியில் போட்டியிட₹1,000தனித் தொகுதி மற்றும் பெண்களுக்கு₹500காலக்கெடு: விருப்பமனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஜனவரி 12, 2026 (திங்கட்கிழமை) கடைசி நாளாகும்.பெறப்படும் இடம்: தைலாபுரம் தோட்டம் அல்லது கட்சியின் முக்கிய மாவட்ட அலுவலகங்களில் […]

கனமழை எச்சரிக்கை-டெல்டாவில் பரவலான மழை

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. வரும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என்பதால் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர் , மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு […]

புகையில்லா போகியை கொண்டாடுவோம்.. தஞ்சை கலெக்டர் வேண்டுகோள்

“புகையற்ற போகியாகக் கொண்டாடுவோம்” – தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் கொண்டாடப்படும் ‘போகி’ பண்டிகையின் போது, பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் மக்களிடையே உள்ளது. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அவர்கள் இன்று ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். எரிக்கக் கூடாத பொருட்கள்:சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் பின்வரும் பொருட்களை எரிக்க வேண்டாம் […]

“ஜனநாயகன்” சென்சார் வழக்கு-உத்தரவுக்கு எதிராக உடனே தணிக்கை வாரியம் மேல்முறையீடு

தவெக தலைவர் விஜயின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’க்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க தாமதம் செய்து வந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. படத்தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, உடனடியாக U/A சான்றிதழ் வழங்குமாறு தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார். இது படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி ஆஷா, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் […]

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் ரூ.41.14 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து ரூ 41.14 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளதாக அறங்காவலர் குழு பேட்டி அளித்துள்ளது. இது குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு பேசுகையில், ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ஒட்டி கடந்த 30ம் தேதி வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு நேற்று வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். […]

”உங்க கனவை சொல்லுங்க” திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பாடியநல்லூரில் “உங்க கனவை சொல்லுங்க” – தமிழக அரசின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் பயன்பெற்ற அரசின் திட்டங்கள், எதிர்கால கனவுகளை கண்டறியும் வகையில் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் ‘மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் கைப்பேசி செயலி உருவாக்கம். […]

நாகையில் கடல் சீற்றம்- கடலுக்கு செல்லாத மீனவர்கள்

நாகப்பட்டினம்: கடல் சீற்றம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 65 கி.மீ வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரித்துள்ளதால், நாகை மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. புள்ளிவிவரங்கள்:மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரமான படகுகளைப் பாதுகாக்கப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்: சுமார் 3,500 படகுகள் அந்தந்தக் கிராமங்களின் கரையோரங்களில் பாதுகாப்பாகக் கட்டி வைக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் மற்றும் கீச்சாங்குப்பம் மீன்பிடித் துறைமுகங்களில் சுமார் 450 விசைப் […]

மோகன்லால் நடிப்பில் வெற்றி பெற்ற படத்தின் 3ம் பாகம் உருவாக்கம்

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெற்றிபெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின் 2 பாகங்களை தொடர்ந்து 3ம் பாகம் உருவாகி வருகிறது. இந்தியிலும் 2 பாகங்கள் ரீமேக் செய்து வெற்றிபெற்ற நிலையில், தற்போது அஜய் தேவ்கன் நடிப்பில் 3ம் பாகம் உருவாக்கப்படுகிறது. மலையாளத்தில் மோகன்லால் மனைவியாக மீனாவும், இந்தியில் ஸ்ரேயா சரணும் நடித்தனர். தற்ேபாது இரு மொழிகளிலும் ‘திரிஷ்யம்’ படத்தின் 3ம் பாகம் உருவாகிறது. கன்னடத்தில் ‘திரிஷ்யம்’ ரீமேக்கை ‘திரிஷ்யா’ என்ற பெயரில் 2 பாகங்களாக பி.வாசு இயக்கினார். […]

தியாகராஜர் கோயிலில் வேலைவாய்ப்பு- ரூ.58,600 வரை சம்பளம்

சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணி குறித்த விரிவான தகவல்கள் இதோ: காலியிடங்கள் மற்றும் சம்பள விவரம் மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் மாறுபடுகிறது: பணியின் பெயர் காலியிடங்கள் சம்பளம் (மாதம்) இளநிலை உதவியாளர் (Junior Assistant) 02 ₹18,500 – ₹58,600 வசூல் […]

கவியருவி அருகே சாலையில் நடந்து சென்ற காட்டுயானை… எச்சரிக்கை

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் புலி சிறுத்தை செந்நாய் காட்டு மாடு யானை போன்ற வனவிலங்குகள் அதிகமாக உள்ள நிலையில் பொள்ள பொள்ளாச்சி அடுத்த கவியருவி அருகே சாலையில் ஊசி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஆழியார் பொள்ளாச்சி சாலையில் ஒய்யாரமாக நடை நடந்து உலா வந்தது ஆழியார் அணைப்பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக சாலையில் இருந்து வெளியேறி அணை பகுதிக்கு சென்றது இதனை கண்ட சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து […]

மல்லிகைப்பூ கிலோ ரூ.7000க்கு விற்பனை

மதுரை திருமங்கலம் பூ மார்கெட்டில் இன்று மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.7000 ஆக விற்பனை ஆகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஒரு கிராம் தங்கம் விலைக்கு நிகராக ஒரு கிலோ மல்லிகைப் பூ விலை உயர வாய்ப்பு என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பனிபொழிவு, வரத்து குறைவு காரணமாக வரும் நாட்களில் இன்னும் விலை அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

செங்கோட்டையனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த டிடிவி

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-எனது அன்பிற்குரிய மூத்த சகோதரரும், முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செங்கோட்டையன் அவர்கள், நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

”ஜனநாயகன்” தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’க்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க தாமதம் செய்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தணிக்கை வாரியம் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய நடவடிக்கையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘ஜனநாயகன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்குமாறு தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது. படக்குழு தரப்பில் […]

தொகுதிப் பங்கீடு- அதிமுகவிடம் 56 தொகுதிகளை கேட்கும் பாஜக?

 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கெனவே உறுதியான இக்கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்), பாஜகவுக்கு 56 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோரியதாகக் கூறப்படும் சூழலில், இந்த விவகாரத்தை கையாளும் வகையில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இன்று (ஜனவரி 9, 2026) […]

நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும்- அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் உள்ளிட்ட 8 போர்களை நிறுத்தியிருப்பதாகவும், தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அவ்வப்போது பேட்டிகளில் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தார்.ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த ட்ரம்ப், தற்போது நோபல் பரிசு எல்லாம் தனக்கு ஒரு பொருட்டல்ல என்று பேசியுள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.268க்கு விற்பனை ஆகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி

சென்னை, மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடற்கரையை நேரில் ஆய்வும் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியின் பின்புறமுள்ள பகுதியையும் நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும் என உத்தரவிட்டு, நீலக்கொடி சான்று பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்படும் பகுதிகளில் எந்த கடைகளையும் அமைக்க கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தனர்.இந்த நிலையில் வழக்கு […]

“ஜனநாயகன்” படத்திற்காக காங்கிரஸ் பொங்கி கொண்டிருக்கிறார்கள்” – தமிழிசை

காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும் பாரத பிரதமரையும் குறை சொல்லி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில், “இந்த உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.. ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்பிற்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர் அவர்கள் தான்.. ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன்படத்திற்கு சென்சார் சான்றிதழ் […]

ஜேசிபி சர்வீஸ் சென்டரின் கதவின் பூட்டை உடைத்து திருட்டு

தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்த சாமுவேல் என்பவரின் மகன் வின்சென்ட்குமார் (38). ஜேசிபி மெக்கானிக். இவர் தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சோழா சிட்டியில் வீடு எடுத்து ஜேசிபி சர்வீஸ் செய்து வந்தார். இங்கு சர்வீஸ் செய்வதற்கு தேவையான உபரகணங்கள் மற்றும் லேப்டாப் உட்பட பொருட்களை வைத்திருந்தார். சர்வீஸ் பணிகளுக்காக அழைத்தால் இங்கிருந்து உபகரணங்களை எடுத்து செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 4ம் தேதி இரவு வழக்கம் போல் சர்வீஸ் பணிகளை முடித்துவிட்டு சோழாசிட்டியில் […]

5 நாட்களுக்குள் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும்- உதயநிதி ஸ்டாலின்

ஐந்து நாட்களுக்குள் பொங்கல் பரிசு பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாய விலை கடையில்,பொங்கல் தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை 3000 ரூபாயை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது மக்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஐந்து நாட்களில் பொங்கல் பரிசு பணம் மற்றும் […]

விஜயை வற்புறுத்தி கூட்டணி அமைக்க முடியாது”- செல்லூர் ராஜூ

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். திமுக வலுவிழந்து இருப்பதால் தான் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கேட்கிறது. மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காகவே அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. விஜய் ஒரு அரசியல் கட்சி நடத்துவதால் அவருக்கு எவ்வளவோ விதங்களில் நெருக்கடி கொடுக்கலாம். ஜனநாயகன் படத்திற்கு நெருக்கடி கொடுப்பது அரசியல் ரீதியானது அல்ல. இதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. […]

அமித்ஷா-மோடிக்கு அடுத்த 4 மாதத்திற்கு இட்லி, தோசை, சட்னி தான் பிடிக்கும்.. எம்பி கார்த்தி சிதம்பரம்

அமித்ஷா, மோடி உள்ளிட்ட பாஜகவினர் அடுத்த நான்கு மாதத்திற்கு இட்லி, தோசை, சட்னி தான் பிடிக்கும். இரவில் வேட்டி கட்டி தான் தூங்குகிறோம். பாரதியார், எம்எஸ் சுப்புலட்சுமி பாட்டு தான் கேட்கிறோம். வெளிநாட்டிற்கு போகும்போது ஹெட் போனில் கூட திருக்குறள் தான் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவர்கள் சைவம் என்பதால் செட்டிநாட்டு உணவு பிடிக்கும் என்று சொல்ல மாட்டார்கள். இல்லையென்றால் அதையும் சொல்வார்கள் என கார்த்தி சிதம்பரம் எம்பி கிண்டலடித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் […]

பிப்.22ல் பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி.. கோவை கமிஷனர் தகவல்

பெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு கோவையில் வரும் பிப்ரவரி 22ல் இரவு நேர மரத்தான் போட்டி நடைபெற உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். கோவையில் பெண்களின் பாதுகாப்பு, சுய மேம்பாடு மற்றும் பாதுகாப்பான நகரத்தை உருவாக்கும் நோக்கில், வரும் பிப்ரவரி 22ஆம் தேதி பெண்களுக்கான பிரத்தியேக இரவு நேர மரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த மரத்தான் போட்டிக்கான லோகோ அறிமுக நிகழ்ச்சி கோவை மாநகர காவல் ஆணையர் https://etamil.zevenstone.com/womens-night-marathon-competition-on-feb-22/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D நடைபெற்றது. இதில் […]

திமுக கூட்டணி அசைக்க முடியாத கூட்டணி- திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திருவரங்கம் பகுதியில் பேருந்து நிலையம் இல்லாமல் இருந்ததால் அப்பகுதி மக்கள் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்தநிலையில், கடந்த 2023 24 அரசு மூலதன மானிய நிதி மூலம் திருவரங்கம் அரசு மருத்துவமனை எதிரே ரூபாய் 11.10 கோடி மதிப்பீட்டில் கடந்த 2023ம் வருடம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு பூமி பூஜை போடப்பட்டது.இப்பணிகள் துரிதமாக […]

மல்லிகைப்பூ கிலோ ரூ.4300க்கு விற்பனை

ஈரோடு சத்தியமங்கலம் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.4,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,700 விற்பனையான நிலையில் தற்போது ரூ.4,300க்கு விற்கப்படுகிறது. முல்லை ஒரு கிலோ ரூ.1,400, கனகாம்பரம் ரூ.700, செவ்வந்தி பூ ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2 குழந்தையின் தந்தையை திருமணம் செய்வதாக அடம்- மருத்துவ மாணவி கொலை

சேலத்தில் மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமணமாகி 2 குழந்தைக்கு தந்தையாக உள்ளவரை திருமணம் செய்வேன் என அடம் பிடித்ததால் கோபம் அடைந்த தந்தை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க தனிப்படையினர் சென்னை சென்றுள்ள நிலையில், அவர் வளர்ப்பு தந்தை என்பதும் தெரியவந்திருக்கிறது. சேலம் அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு திருநெல்வேலி பக்கமுள்ள வீரவநல்லூர் பாரதிநகரை சேர்ந்த […]

வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய ஜன.,10, 11-ல் சிறப்பு முகாம்

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, 10.1.2026 (சனிக்கிழமை) மற்றும் 11.1.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் 19.12.2025 முதல் […]

இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது-சென்னையில் பரபரப்பு

சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 14-வது நாளை எட்டியுள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அரசின் “நோ ஒர்க் – நோ பே” அதிரடி: ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தொடக்கக் கல்வித்துறை தற்போது கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி, […]

தமிழகத்தில் 11ம் தேதி 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் ஜனவரி 11ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகையிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் […]

கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

கோவை: கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, முழு கரும்பு, வேட்டி சேலை, சர்க்கரை, மற்றும் 3000 ரூபாய் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கூட்டுறவு துறை சார்பில் அனைத்து நியாய விலை கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்புகள் அனுப்பி […]

புதுகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சி இரயில்வேநிலையம் அருகில் கடைஎண்26ல்குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசு ரொக்கம் ரூ.3000/-மற்றும் 1கிலோ பச்சைஅரிசி, 1கிலோ சர்க்கரை,கரும்பு,வேஷ்டி,சேவை ஆகியவற்றை ஆட்சியர் மு.அருணா தலைமையில்இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர் . நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், அவைத்தலைவர் அரு.வீரமணி, மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , சட்டமன்ற உறுப்பினர் கள்வை.முத்துராஜா,எம்.சின்னத்துரை,துணைமேயர் எம்.லியாகத்தலி, தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்தெய்வானைமற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் 9,10ம் தேதி மிக கனமழை- எச்சரிக்கை

சென்னை : 08-01-2026: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 09-01-2026: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், […]

பொங்கல் பரிசு தொகுப்பில் குறையா?… புகார் அளிக்கலாம்

‘தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை (Pongal) சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3000 ரொக்கப்பணம், பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.இதுதவிர இலவச வேட்டி, சேலையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், பொங்கல் தொகுப்பில் தரம் குறைபாடு, ரேஷன் பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் 1967 மற்றும் 18004255901 என்ற […]

நாளை கோவை பிஎஸ்ஜி.டெக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவை அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரி தனது 75 ஆண்டுகால சிறப்பைக் கொண்டாடும் வகையில், பி.எஸ்.ஜி.டெக் கல்லூரியில் பயின்ற முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜனவரி 9 ந் தேதி துவங்கி 11 ந்தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது… இந்நிலையில் நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கல்லூரி அரங்கில் நடைபெற்றது.. இதில் நிகழ்ச்சிக்கான சேர்மன் டி.நந்தகுமார், கல்லூரி முதல்வர் பிரகாசன், முன்னாள் மாணவர்கள் அமைப்பு தலைவர் வி.கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர் கே.சுரேஷ்குமார், […]

ஜனவரி இறுதியில் ராகுல்-பிரியங்கா தமிழகம் வருகை

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரப்புரை மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ஜனவரி இறுதியில் தமிழகம் வருகை தர உள்ளனர். ஜனவரி 4-வது வாரம் (ஜனவரி இறுதியில்) இவர்களின் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தி & மல்லிகார்ஜுன கார்கே: இவர்கள் இருவரும் தமிழகத்தில் உள்ள ‘கிராமக் குழு உறுப்பினர்களின் பிரம்மாண்ட கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர். இடம்: திருச்சி, […]

டிடிவியுடன் கூட்டணி?… மறுக்காத எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும் எனவும் தெரிவித்தார். டில்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .. அவர் கூறியதாவது..அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை. சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை.இனியும் பாஜகவைச் சுற்றுவதில் பலன் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும். வௌிப்படையாக பேச முடியாது. தமிழக […]

ரூ.3 ஆயிரம்- பொங்கல் பரிசுத் தொகுப்பினை முதல்வர் துவங்கி வைத்தார்

சென்னை ஆலந்தூர் ரேசன் கடையில் பொங்கல் பரிசுதொகை, தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஒரு கிலுோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஒன்று வழங்கப்பட்டது. அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 பரிசுத்தொகையுடன் பொங்கல் தொகுப்பினை வழங்கினார். ரூ. 3 ஆயிரம் ரொக்கத் தொகையை பயனாளிகள் முன்பு எண்ணி வௌிப்படையாக வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுக்கான டோக்கன் பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று தொகுப்பை […]

கோவை மருதமலை சுப்பிரமணிய கோவில் உண்டியலில் ரூ.94.84 லட்சம் காணிக்கை

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டுள்ளது. முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர் குறிப்பாக விசேஷ காலங்களிலும் விடுமுறை தினங்களிலும் அதிகப்படியான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அஅவ்வாறு வருகை புரியும் பக்தர்கள் பலரும் உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட மாத இடைவெளியில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுகிறது. அதன்படி இன்று கோவில் உண்டியல் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,02,000க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.50 ஒரு கிராம் ரூ.12,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.272க்கும் கிலோவுக்கு ரூ.5000 குறைந்து விற்பனை ஆகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் 320 உயர்ந்திருந்த நிலையில் பிற்பகலில் 560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் கிராமுக்கு ரூ.40 உயர்ந்திருந்த நிலையில் பிற்பகலில் ரூ.70 குறைந்துள்ளது.

ரூ.2 கோடி பணத்துக்காக கணவனை கொன்ற மனைவி

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் மக்லூர் மண்டலத்தில் உள்ள போர்கான் கிராமத்தைச் சேர்ந்த பல்லட்டி ரமேஷ் (35) ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது மனைவி சௌம்யா என்கிற அருணலதா ஒரு தனியார் பள்ளியில் எழுத்தராக பணிபுரிகிறார். இவர்களுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், சௌம்யாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பள்ளியில் விளையாட்டுத்துறை ஆசிரியராக பணியில் சேர்ந்த நந்திபேட்டை மண்டலம் பட்குனா கிராமத்தைச் சேர்ந்த நலேஸ்வரம் திலீப்புடன் திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு ஏற்பட்டது. இதனால் […]

புதுகை- கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு  கலை அறிவியல் கல்லூரியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.  விழாவுக்கு கல்லூரி முதல்வர்  மோகனசுந்தரம். தலைமை வகித்தார். விழாவில் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி கலந்து கொண்டு “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ்  திருமயம் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் 195 பேருக்கும், மேலைச்சிவல்புரி  கணேசர் அரசு உதவி பெறும்  கல்லூரி மாணவர்கள் 186 பேருக்கும் அரசின் விலையில்லா லேப்டாப்களை வழங்கிப்பேசினார். விழாவில் ஊரக வளர்ச்சி […]

டிரம்ப் உருவப்படத்தை எரித்து புதுகையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜன.08- வெனிசுலா அதிபர் சாவேஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவப் பொம்மையை எரித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், கி.ஜெயபாலன், டி.சலோமி, மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.அசோகன், […]

எல்ஐசி முகவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்-தீர்மானம் நிறைவேற்றம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.200க்கும் மேற்பட்ட எல்ஐசி முகவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில்,முகவர்க்கு வழங்கப்பட்ட புதிய கமிஷனில் இருந்து விலக்கு அளித்து – பழைய கமிஷனை வழங்க வேண்டும், முகவர்களுக்கான குழு காப்பீட்டுத் தொகையை 15 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு, தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.மேலும் கடந்த கூட்டத்தொடரில் அந்நிய […]

பொள்ளாச்சியில் வந்து இறங்கிய கரும்பு-ரேசன் கடைக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்

தமிழர் திருநாள் தை திருநாளாம் பொங்கல் விழாவை தித்திப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் கடைகளில் 3000 ரூபாய் ரொக்கம் மற்றும் பச்சரிசி,சர்க்கரை கரும்பு உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்க அறிவிப்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து நியாயவிலை கடைகளில் இதற்கான டோக்கன் வழங்கும் பணிகளும் மும்முறமாக நடைபெற்று வருகிறது.மேலும் டோக்கன் பெற்றவர்களுக்கு வரும் 8ம் தேதி முதல் பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளது.இந்நிலையில் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200 […]

கில்லர் படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா படுகாயம்

சென்னை பாலவாக்கத்தில் இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நேற்று நடைபெற்று வந்த நிலையில், ரோப் கயிறு உதவியுடன் சண்டைக் காட்சியில் நடித்து வந்த எஸ் ஜே சூர்யா எதிர்பாராத விதமாக இரும்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானார். கம்பி மீது விழுந்ததில் இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு 15 நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக […]

வந்தே பாரத் ரயிலில் சசி தரூரை வியக்க வைத்த 16 வயது மாணவன்!

காங்கிரஸ் எம்பி சசி தரூர் வெளியிட்டுள்ள அறிக்கை: வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தபோது, ஏஐ துறையில் நம்பமுடியாத சாதனைகளை செய்து வரும் 16 வயது ரவுல் ஜான் அஜூவை சந்தித்ததில் மகிழ்ச்சி. இருவரும் செயற்கை நுண்ணறிவு எல்லைகளைக் கடந்து, மிக முக்கியமாக, நமது பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் வட்டார மொழிகளில் பேச வேண்டியதன் அவசியம் குறித்து நாங்கள் பேசினோம். வந்தே பாரத் ரயிலில் ஏற்படும் சந்திப்புகள் பெரும்பாலும் இனிமையானவையாக இருக்கும். ஆனால் இந்த நிகழ்வு மிகவும் […]

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை வௌியிட்ட முதல்வர்

திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அவைகள்; “திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் சாலை தெரு விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ரூ.16 கோடியில் நிறைவேற்றப்படும். மாநகராட்சி பாதளா சாக்கடை, சுத்திகரிப்பு நிலையம் ரூ.8 கோடியில் சீரமைக்கப்படும். இடும்பன்குளம், சண்முகா நதி ரூ.6 கோடியில் மேம்படுத்தப்படும். புதிய நத்தம் கலை அறிவியல் கல்லூரியில் ரூ.18.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். மார்க்கம்பட்டியில் முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தெழிற்சாலை ரூ.7 கோடியில் அமைக்கப்படும். கொடைக்கானல் […]

ரூ. 3ஆயிரம்..பொங்கல் பரிசு..நாளை முதல்வர் துவங்கி வைக்கிறார்

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த திமுக, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணத்தை வழங்கியது. ஆனால், கடந்த ஆண்டு (2025) பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் வரும் ஏப்ரல் […]

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்வதற்கான அவகாசம் 2026 ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், ஆதார் கார்டை அப்டேட் செய்ய நினைப்பவர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. ஆதாரில் இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ‘MY ஆதார்’ அல்லது ‘M-ஆதார்’ செயலி வாயிலாக பொதுமக்கள் எவ்வித கட்டணமுமின்றி வரும் ஜூன் 14ம் தேதி வரை ஆன்லைனில் புதுப்பித்து கொள்ளலாம். மேலும், 7 முதல் 15 வயதுக்குட்பட்ட […]

கோவை- சாலையை கடக்க முயன்ற கார்- பள்ளி பஸ் மோதிய சிசிடிவி..

தமிழக – கேரளா தேசிய நெடுஞ்சாலை கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் அப்பகுதியில் பள்ளி மாணவர்களுடன் வாகனம் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது வேறு பகுதியில் இருந்து நெடுஞ்சாலை கடப்பதற்கு சர்வீஸ் சாலை வழியாக கார் வந்து கொண்டு இருந்தது. சர்வீஸ் சாலையை கடந்த போது வலது புறம் வரும் வாகனங்கள் கார் ஓட்டுனருக்கு தெரியவில்லை, இதனால் வேகமாக கடந்து விடலாம் […]

சேலம், பெரம்பலூர் உட்பட 4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கடந்த சில மாதங்களாகவே, நீதிமன்றங்கள், பள்ளிகளுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதும், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் படைகள் சோதனையில் ஈடுபடுவதும் வாடிக்கையாக நிகழ்ந்து வருகின்றது. இந்த நிலையில், நேற்று பெரம்பலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சேலம் ஆகிய நான்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து நான்கு நீதிமன்றங்களிலும் பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்களை அவசர அவசரமாக வெளியேற்றி போலீஸார் […]

புதுமைப் பெண் திட்டம் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டங்கள் குறித்த மாவட்ட அளவிலானகண்காணிப்புக் குழு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மு. அருணா தலைமை வகித்தார். மாவட்ட சமூகநல அலுவலர் மே. சியாமளா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ந. நந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

மகளிர் உரிமைத்தொகை ரூ. 2500.. புதுவை முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் ஏற்கனவே அறிவித்தப்படி மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். தற்பேர்து வழங்கப்பட்டு வரும் ரூ. 1000 உரிமைத்தொகையானது, வரும் 12ம் தேதி அல்லது பொங்கலுக்கு பிறகு ரூ. 2500 ஆக வழங்கப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் மகளிர் உரிமைத்தொகை உயரும் என முதல்வர் ஸ்டாலின் அரசு விழாவில் பேசியிருந்தது கவனிக்கதக்கது.

மதுரை ஜல்லிக்கட்டு-வீரர்கள்-காளைகளுக்கான ஆன்லைன் பதிவு துவங்கியது

மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு பணிகளுக்கான பந்தக்கால் இன்று நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையில் உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் வரும் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மூன்று […]

தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை

இந்திய பெருங்கடல் வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று முன் தினம் மாலை 17.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் – பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.இது நேற்று (06-01-2026) காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது.இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (07-01-2026), தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு […]

தஞ்சை-வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையை திருடிய வாலிபர் கைது…

தஞ்சாவூர் அருகே விளார் சாலையில் பாப்பா நகரில் கடந்த டிச. 19-ம் தேதி பிரியங்கா என்பவர் வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர்  21-ம் தேதி வீட்டுக்கு வந்தபோது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 13 பவுன் தங்க நகைகள், 765 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் பிரியங்கா புகார் அளித்தார், […]

இபிஎஸ் வீட்டில் அன்புமணி…உறுதியாகிறது அதிமுக-பாமக கூட்டணி?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக தலைவர் அன்புமணி இன்று (ஜன.07) சந்தித்துள்ளார். அன்புமணியுடன், பாமக வழக்கறிஞர் பாலு, திலகபாமா, பாமக சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். கூட்டணியில் பாமகவைச் சேர்க்க அதிமுக தீவிரம் காட்டிவரும் நிலையில், இபிஎஸ் – அன்புமணி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு அன்புமணி வருகை . ஜெயக்குமார், சி.வி.சண்முகம், […]

”இலவச லேப்டாப்” வழங்கியதை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்

திருச்சி 06. 01.2026 தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியதை கொண்டாடும் வகையில் ,திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்றைய தினம் பிஷப் கீபர் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு , தமிழ் மாணவர் மன்றம் சார்பாக இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ளப்பட்டதுபட்டது .மேலும் கல்லூரியில் பயிலும் 75 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் மாணவர் மன்றத்தில் தம்மை இணைத்துக்கொண்டனர்.

”கிட்சன்” துவாரத்தில் சிக்கிய திருடன்- காப்பாற்றிய போலீசார்

 ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் திருடச் சென்ற இடத்தில், சமையலறை எக்ஸாஸ்ட் ஃபேன் (Exhaust Fan) துவாரத்தில் திருடன் ஒருவன் சிக்கிக்கொண்ட வினோத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் போலீசாரே வந்து அவனை மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கோட்டாவின் போர்கேடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரதாப் நகர் பகுதியை சேர்ந்த சுபாஷ் குமார் ராவத் என்பவர், தனது மனைவியுடன் கோவிலுக்குச் சென்றுவிட்டு நள்ளிரவு ஒரு மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். அவர் தனது ஸ்கூட்டரை […]

“ஜனநாயகன்” படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கலைனா கடும் பின்விளைவுகள் – KS அழகிரி!

நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளது. படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் இன்று மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ‘ஜனநாயகன்’ பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 4 கோடி பார்வைகளைக் […]

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!

தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபெற்றது. இதில் உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், நீங்கள் வசிக்கும் தெரு, உங்களின் ஊர் எப்படி இருக்க வேண்டும்?, எந்த மாதிரியான புதிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்?, தற்போதைய திட்டங்களை மேலும் செழுமையாக்க உங்களின் ஆலோசனைகள்?, மாவட்டத்தைப் பற்றிய கனவுகள் அயலகத் தமிழர்களின் கனவுகள உள்ளிட்டவைக் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. இத்திட்டத்தை ஜனவரி 9ம் தேதி […]

சென்னையிலிருந்து வரும் 9ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்..

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து 22,792 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “ பொங்கலையொட்டி சென்னையில் இருந்து ஜனவரி 9 முதல் 14ஆம் தேதி வரை 22,797 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 12,552 பேருந்துகளுடன் 10,245 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளுக்கு முன்பதிபு செய்ய […]

காதலியை கொடூரமாக கொன்ற காதலன்.. பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் உமா (19). இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள ஒரு தனியார் காவலர் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். அதே பயிற்சி மையத்தில் திருவேங்கடம் அருகே உள்ள கொளக்கட்ட குறிச்சியை சேர்ந்த மாரிசாமி என்பவர் மகன் ராஜேஷ் (25) என்பவர் பயிற்சி பெற்று வந்துள்ளார். இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று மாலையில் 2 பேரும் டூவீலரில் தூத்துக்குடி மாவட்டம் […]

2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

தேனிமாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தண்டியன்குளம் மலை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்பெருமாள். கூலிதொழிலாளியான இவர் மது குடிக்கும் பழக்கம் கொண்டிருந்ததால் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவிலும் மனைவியிடம் மது குடித்துவிட்டு வந்து சண்டையிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயப்பெருமாளின் மனைவி தனலட்சுமி தனது இரண்டு குழந்தைகளான தேவா (7 ), நீதி (2) இருவரையும் கைகளில் தூக்கிக்கொண்டு அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது […]

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுக-பியூஷ் கோயல்

திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மலையில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சனாதனத்தை தாக்குவதையே திமுக அரசு வழக்கமாக கொண்டுள்ளது என்றும், இந்த விவகாரத்திலும் இந்து விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது. இந்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகரும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இந்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாற […]

கரூர் சம்பவம்…. விஜய்க்கு சிபிஐ சம்மன்

கரூரில் செப்.27ல் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஜன.12ம் தேதி டில்லியில் விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தவெக நிர்வாகிகள் புஸ்ஜி, ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் தவெக தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்காத நிலையில் மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கனவைச்சொல்லுங்க- திட்டம் அறிமுகம்- அமைச்சர மகேஸ்

சென்னை, தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் செய்தியார்களை சந்தித்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவுது.. 15-29 வயதில் உள்ள இளைஞர்களின் கனவுகளைக் கேட்டறிய புதிய கருத்துக் கேட்புத்திட்டம். பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்பம் சார்ந்த கனவை சொல்வதற்கான புதிய திட்டம். 50 ஆயிரம் தன்னார்வலர்கள் மூலம் கருத்து கேட்கப்படும். தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து மக்களிடம் கருத்துக்கேட்பு. இணையதளம் மூலமாகவும் கருத்துக்களைப் பதிவிடலாம். வீடு, வீடாகச் சென்று மக்களிடம் கருத்துக் கேட்கப்படும். மக்களின் […]

பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் காலமானார்..

பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் (77) இன்று காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்தது திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1970 காலகட்டத்தில் மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர், பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் (77). முக்கியமாக வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.இந்த நிலையில், வயது முதிர்வு […]

ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம்.. தஞ்சையில் விசாரணை

தஞ்சாவூர் தொம்பன்குடிசை ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் 45 வயது மதிக்கதக்கத ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து தகவல் அறித்த தஞ்சாவூர் இருப்புப்பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரித்தளர். ஆனால் இறந்தவர் யார் ? எந்த ஊர் ? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு […]

கல்லூரி மாணவியர்களுக்கு லேப்டாப் வழங்கிய புதுகை கலெக்டர்

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் உயர் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக “உலகம் உங்கள் கையில் ” என்னும் மாபெரும் திட்டத்தில் 20லட்சம் மடிக்கணிணிகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 10லட்சம் மடிக்கணினிகளை கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சி கலைஞர் கருணாநிதிஅரசு மகளிர் கலைக்கல்லூரியில்நடைபெற்ற நிகழ்ச்சியில்மாவட்ட ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு மடிக்கணிணிகளை கல்லூரி […]

61 புதிய பேருந்துகளின் சேவையை துணை முதல்வர் துவங்கி வைத்தார்

சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு அரசு விரைவுக் போக்குவரத்துக்கழகத்திற்கு 61 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். 20 வால்வோ பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது 61 அதிநவீன பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டது.

தாராபுரம் அருகே வேன் மோதி +2 மாணவி பலி..

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் பள்ளிசாலையில் உள்ள தொப்பம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் வேன் மோதியதில் 12ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நல்லிக்கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த கோபிகா தாராபுரம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்கு சாலையை கடக்க முயன்ற போது பாப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்து ஏற்படுத்திய டிராவல்சில் பயணம் செய்த 16 பேருக்கு […]

மலை உச்சி தூணில் தீபம் ஏற்றலாம் – திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு விவரம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் […]

தீராத வயிற்று வலி-வாலிபர் தற்கொலை.. கரூரில் பரிதாபம்

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர், தீராத வயிற்று வலியால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகே உள்ள புது குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (31) என்பவர் வெல்டிங் வேலை செய்து வந்துள்ளார் கடந்த இரண்டு வருடங்களாக வேலைக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படும் இவருக்கு கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலி […]

நயினாருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை… VSB பதில்

கரூர் சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு வைத்து நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில், அரசியலுக்காக, அற்பத்தனமான கருத்துக்களை சொல்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. “உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கரூர் தான்தோன்றி மலையில் […]

ஆட்டோவை கேட்டு- பாம்பை வைத்து போலீசாரை மிரட்டிய டிரைவர்

திருமலை வாகன சோதனையின்போது பறிமுதல் செய்த ஆட்டோவை தராவிட்டால் பாம்பை விட்டுவிடுவேன் என்று போலீசாரை, ஆட்டோ டிரைவர் மிரட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த சந்திராயன்கட்டா போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ உள்பட அனைத்து வாகனங்களையும் போலீசார் நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளதா? வாகனங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதா? போதையில் வாகனங்களை ஓட்டுகிறார்களா? என்று தீவிரமாக சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆட்டோ டிரைவரிடம் மது சோதனை மேற்கொண்டனர். அதில் அவர் […]

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1280 உயர்வு

தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,080 ஆக விற்பனை செய்யப்படுகிறது.இன்று காலை ரூ.640 உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் ரூ.640 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,760க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்துள்ளது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.266 க்கு விற்கப்படுகிறது.

உடல்நலம் தேறி வரும் பாரதிராஜா..எம்ஜிஎம் மருத்துவமனை

‘16 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து படம் இயக்கியவர். தொடர்ந்து பல படங்களை இயக்கிய பாரதிராஜா, ராதிகா, ராதா, கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்த பெருமையும் பெற்றவர். முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை அவர் இயக்கியுள்ளார். இயக்குனராக மட்டுமல்லாமல், […]

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் ஜன.9, 10 ஆகிய இரு நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜன.9ல் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, நாகபட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். ஜன.10ல் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் […]

செந்தில்பாலாஜி வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை

செந்தில்பாலாஜி தொடர்புடைய வேலை வாய்ப்பு மோசடி வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி வழக்கில் ஈடுபட்டதாக வழக்கு. சிறப்பு நீதிமன்றத்திழல் நடைபெறும் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை துணை மேலாளர் கணேசன் மேல்முறையீடு மனுவில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு.. பள்ளிகளில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கடந்த 3 தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22 ஆண்டுகளாக போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட‌ ஓய்வூதியத் திட்டம் அறிவித்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் உதுமான் அலி கூறியதாவது:கடந்த 2006-ல் கருணாநிதி பெறுப்பேற்ற உடன் 53 ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி எங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார். அவரது புதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026 -ல் […]

துபாயில் கார் விபத்து.. கேரளாவை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 4பேர் பலி

லிவா எனப்படும் வருடாந்திர திருவிழாவில் பங்கேற்று விட்டு, நேற்று (ஜனவரி 4) அதிகாலை துபாயில் உள்ள வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது. விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீப் – ருக்ஷானா தம்பதி மற்றும் அவர்களின் 5 குழந்தைகள் என தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் அஷாப்,14, அமார், 12, அயாஷ்,5, ஆகிய மூன்று குழந்தைகளும், குடும்ப உதவியாளர் புஷ்ரா என்பவரும் சம்பவ இடத்திலேயே […]

யாருடன் கூட்டணி? தேமுதிக ரகசிய வாக்கெடுப்பு

 தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியபோது 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரிவாக தெரிவித்தார். “அனைத்து கட்சிகளும் எங்களுக்கு தோழமைக் கட்சிகள் தான். அனைவரும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்கள். மாவட்ட செயலாளர்களின் கருத்தைப் பொறுத்தே கூட்டணி அமையும்” என்று கூறினார். ராஜ்யசபா சீட் ஏற்கனவே பேசப்பட்டது என்றும், ஆனால் கவனம் சட்டமன்றத் தேர்தலை நோக்கியே உள்ளது என்றும் தெரிவித்தார்.பிரேமலதா மேலும் கூறுகையில், “தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். பொங்கலுக்கு பிறகு […]

நிலப்பிரச்னை.. மூதாட்டியை தாக்கிய 3 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்து தீவீரமுக்கோணம் அருகே உண்ணாமலை இவர் கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது இரண்டு மகன்கள், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அதே பகுதியில் பாகம் பிரிக்கப்படாத இடத்தில் உண்ணாமலை கணவரின் அண்ணன் மகனான குமார் மற்றும் அவர் மனைவி கல்பனா மற்றும் உறவினர்கள் சேர்ந்து டிராக்டர் கொண்டு உழவு பணி மேற்கொண்டனர். அப்பொழுது தனது மகன் இல்லாத சமயத்தில் இது போன்று செய்யக்கூடாது என்று உண்ணாமலை அவர்கள் கண்டித்த […]

கிணற்றில் குதித்த மகள்- காப்பாற்ற முயன்ற தந்தை சடலமாக மீட்பு..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பாப்பக்காப்பட்டி பஞ்சாயத்து குப்பனம்பட்டியை சேர்ந்தவர் வைரப் பெருமாள் மகன் விவசாயி அண்ணாதுரை வயது 55. இவரது மகள் தனலட்சுமி வயது 19. குடும்ப பிரச்சினை காரணமாக தனலட்சுமி நேற்று இரவு அருகிலுள்ள அவர்களது விவசாய பாசன கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனை அறிந்த தந்தை அண்ணாதுரை மகளைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். அப்போது அண்ணாதுரை மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.கிணற்றில் குதித்த அண்ணாதுரை தண்ணீரில் மூழ்கினார். சம்பவம் […]

பெண்கள், குழந்தைகளை கள் குடிக்க வைத்த அதிர்ச்சி சம்பவம்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள ஆ.சப்பாணிப்பட்டி கிராமத்தில், பனைத் தொழிலாளர்கள் சார்பில் பனை மரங்களுக்குப் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் ‘பனை விழா’ நடைபெற்றது. அப்போது பாரம்பரிய முறைப்படி பனை மரத்திலிருந்து கள் இறக்கப்பட்டு படையலிடப்பட்டது. வழிபாடு முடிந்ததும், அங்கிருந்த பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்குக் கள் வழங்கப்பட்டது. சிறுவர்கள் கள்ளைப் பருகுவதைக் கண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.இந்த விவகாரம் குறித்துப் பேசிய பனைத் தொழிலாளர்கள், “கள் என்பது போதைப்பொருள் அல்ல, […]

இனி அரசு பள்ளியில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்..

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் தினமும், இனி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய உத்தரவு பல்வேறு தரப்பினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நடப்பு நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்ளவும், வாசிப்பு பழக்கத்தை வலுப்படுத்தவும், மாணவர்களிடையே மொழித்திறனை மேம்படுத்தவும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், தினசரி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிக்க வேண்டும் என்ற நடைமுறையை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியிலும் […]

உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு-வாடிவாசல் அமைக்கும் பணி

அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகப் பிரபலமானது. இதைக் காண உலகம் முழுவதிலுமிருந்து ரசிகர்கள் வருகிறார்கள். முக்கியமாக, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 15-ம் தேதியும், பாலமேட்டி 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிலையில் வரும் 15ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம் – திருப்பரங்குன்றம் சாலையில் வாடிவாசல் அமைப்பதற்கான முகூர்த்தக்கால் எனப்படும் […]

கடலூர் மத்திய சிறையில் கைதி தற்கொலை-பரபரப்பு

கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதி, சிறை வளாகத்திற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை கைதி தற்கொலை செய்து கொண்டதை கவனித்த சிறைக்காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் […]

கனிமொழிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி, இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.  இந்த நிலையில்,திமுக எம்.பி. கனிமொழிக்கு தவெக தலைவர் விஜய் தொலைபேசி மூலம் பிறந்த‌நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி’ என கூறிவரும் நிலையில் கனிமொழிக்கு விஜய் பிறந்த நாள் கூறியது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

மாந்திரீகம் செய்வதாக கூறி மருமகளை கழுத்தறுத்து கொன்ற மாமியார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே, மாந்திரீகம் செய்வதாகக் கூறி மருமகளைக் கழுத்தறுத்துக் கொலை செய்த மாமியாரின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நந்தினி (29), தனது முதல் கணவர் மறைவிற்குப் பிறகு, மரிய ரொசாரியோ என்பவரைக் காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் மரிய ரொசாரியோவின் தாய் கிறிஸ்தோப்மேரிக்கு விருப்பமில்லாததால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தனது மகனுக்கு வேறு திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்ட கிறிஸ்தோப்மேரி, மருமகளைத் தீர்த்துக் […]

தவெக-வில் இணையும் அதிமுக எம்.எல்.ஏ, முன்னாள் ஐஜி

புதுச்சேரி முன்னாள் காவல்துறை ஐஜி ராமசந்திரன் புதுச்சேரி முன்னாள் அதிமுக MLA பெரியசாமி,சென்னைமாநகராட்சி சுயெட்சை கவுன்சிலர் ராஜன் பர்ணபாஸ்,ஆகியோர் தலைவர் விஜய் மற்றும் கட்சி சீனியர் நிர்வாகிகள் முன்னிலையில் இன்று காலை தவெகவில் இணைகின்றனர் . சென்னை மாமன்ற உறுப்பினர் ராஜன் பர்ணபாஸ், புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எல்.பெரியசாமி, முன்னாள் ஐஜி ராமச்சந்திரன் ஆகியோர் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மூவரும் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அவர்களுடன் செங்கோட்டையன், ஆதவ் […]

ரூ.3000 பொங்கல் பரிசுடன் -ஜன.,8 முதல் 14 வரை விநியோகம்

பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.248 கோடி நிதியையும் ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் பொங்கல் பண்டிகை இது என்பதால், ரொக்க பணமும் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலினும் அதற்கான அறிவிப்பை […]

பெண்களிடம் செல்வாக்குமிக்க தலைவராக முதல்வர் திகழ்கிறார்.. அமைச்சர் சிவசங்கர்

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக பெண்களிடம் செல்வாக்குமிக்க தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார்: அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர் பேச்சு. அரியலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் இன்று அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்தியாவிலேயே பெண்களுக்கான மகத்தான திட்டங்களை தருவதில் சிறந்த முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சர்தான் இருக்கிறார். அதனால்தான் கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு இருந்ததைப் போன்று பெண்களின் செல்வாக்கு இன்று நம்முடைய […]

மீண்டும் களமிறங்கிய சுப்மன் கில்…

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயஸ் ஐயர் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரேயஸ் ஐயரின் பங்கேற்பு உடற்தகுதி சான்றிதழுக்கு உட்பட்டது என்று BCCI தெரிவித்துள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 11 முதல் 18 வரை வடோதரா, ராஜ்கோட், இந்தூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகிய மூத்த வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்கா தொடர் மற்றும் விஜய் ஹசாரே […]

தஞ்சை பெரிய கோவில் ஆருத்ரா தரிசனம்-4 ராஜவீதியில் வீதியுலா நடராஜ பெருமான்

தஞ்சை பெரிய கோவிலில் ஆருத்ரா தரிசனம் 4 ராஜ வீதிகளில் வீதியுலாவந்த நடராஜ பெருமான்மும்மாரி மழை பொழிய நெல்மணிகளை தூவி வழிபாடு நடத்திய பக்தர்கள். உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பெரிய கோயில் அருகே உள்ள சிவகங்கை குளத்தில் […]

புதுகை-தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு.. 71 பேர் காயம்

புதுக்கோட்டை, தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் உள்பட 71 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 71 பேரில் 15 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

”நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்.. புதுகை கலெக்டர் பார்வை

புதுக்கோட்டை ஊராட்சி செயின்ட்மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின் ” உயர் மருத்துவ சேவைமுகாமினைஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் சுகாதார அலுவலர் மரு.எஸ்.ராம்கணேஷ், புதுக்கோட்டை மாநகர் நல அலுவலர் மரு.காயத்திரி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

அமித்ஷா நாளை திருச்சி வருகை.. பிரமாண்ட ஏற்பாடு

புதுக்கோட்டை, திருச்சியில் மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்கிறார். பிறகு திருச்சியில் நடைபெறும் மோடி பொங்கல் விழாவை தொடங்கி வைத்து மத்திய மந்திரி அமித்ஷா பேசுகிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி அந்தமான் தீவுக ளின் தலைநகர் போர்ட் பிளேர் விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்புதுறைக்கு சொந்தமான விமானம் மூலம் புறப்பட்டு நாளை 4ந்தேதி (ஞாயிற் றுக்கிழமை) மாலை […]

ஷாருக்கான் மன்னிப்பு கேட்க வேண்டும்- இந்து அமைப்புகள் கொந்தளிப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டில் இந்தி நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா அணியில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமான் ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளார். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடந்து வரும் நிலையில் கொல்கத்தா அணியில் விளையாட அந்த நாட்டு வீரர் சேர்க்கப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே கூறுகையில், “வங்கதேச வீரரை கொல்கத்தா அணியில் சேர்ப்பது நாட்டின் பாதுகாப்பு விவகராம் தொடர்புடையது. ஐ.பி.எல். […]

தாயாரின் பிறந்தநாளை தங்க கேக் வெட்டி கொண்டாடிய ஊர்வசி ரவுத்தேலா

தமிழ் சினிமாவில் ‘லெஜண்ட்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஊர்வசி ரவுத்தேலா, எப்போதும் ஆடம்பரமான விஷயங்களுக்காகவே சமூக வலைதளங்களில் பேசப்படுபவர். சமீபத்தில் தனது பிறந்தநாளைத் தங்க முலாம் பூசப்பட்ட கேக் வெட்டிக் கொண்டாடி வியப்பை ஏற்படுத்திய அவர், தற்போது தனது தாயாரின் பிறந்தநாளையும் அதே பாணியில் கொண்டாடியுள்ளார். உலகின் மிக உயரமான ஹோட்டலில், 24 காரட் தங்க கிரீடம் பதிக்கப்பட்ட கேக் வெட்டித் தனது தாய்க்கு அவர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை “தூய […]

சத்தீஸ்கரில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சுக்மாவில் நடைபெற்ற மோதலில் 12 பேரும், பிஜப்பூரில் நடைபெற்ற மோதலில் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒன்றிய அரசின் இலக்கான “2026 மார்ச் மாதத்திற்குள் நக்ஸல் அற்ற இந்தியா” என்ற திட்டத்தின் கீழ், கடந்த மூன்று மாதங்களாகப் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று அதிகாலை […]

1000 அமித்ஷா வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது- திருச்சியில் சீமான்

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் : திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று தான் என திருமாவளவன் தற்போது பேசுகிறார் ஆனால் திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது என கற்பித்தவர் திருமாவளவன் தான்.தமிழ்நாட்டில் தமிழ் படிக்கவோ பேசவோ எழுதுவோ தெரியாதவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். மொழி, கலை , இலக்கியம் ,வரலாறு அரசியல் என தமிழர்களுக்கு எதுவும் இல்லாமல் போய்விட்டது.இந்தி எதிர்ப்புக்காக போராடிய மாணவர்களை துப்பாக்கியால் […]

மருமகளின் தலையை துண்டாக வெட்டி புதைத்த மாமியார்-காரணம் என்ன?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் மரியா  ரொசாரியோ என்பவர், தனது மனைவி நந்தினியை காணவில்லை என காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசா விசாரணையை தொடங்கியுள்ளனர். புகாரில், கடைசியாக தனது தாயுடன் தான் நந்தினி வீட்டை விட்டு வெளியே சென்றார் என குறிப்பிடப்பட்டு இருந்ததால், சந்தேகத்தின் பேரில் மரியாவின் தாயார் க்றிஸ்டோபர் மேரியிடம் விசாரணை செய்துள்ளார். அதில் தனது மருமகளை கொடூரமாக கொலை செய்து, தலையை துண்டாக வெட்டி, உடல் பாகங்களை […]

வேலுநாச்சியாரின் துணிச்சல்.. ராகுல் புகழாரம்..

விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தை (ஜனவரி 3) முன்னிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவருக்குத் தனது வீரவணக்கத்தைச் செலுத்தியுள்ளார். அவரது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்: ஊக்கத்தின் ஊற்று: வேலு நாச்சியாரின் துணிச்சல், தலைமை த்துவப் பண்பு மற்றும் அவரது தியாகம் ஆகியவை பல தலைமுறைகளைக் கடந்தும் இந்தியர்களுக்கு இன்றும் ஊக்கமளிப்பதாக உள்ளது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் இந்திய ராணிகளில் […]

அதிகாரத்தை மக்களுக்காக பயன்படுத்தவேண்டும்.. காவல்துறைக்கு முதல்வர் அறிவுரை

தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது என காவல் சார்பு ஆய்வாளர் பணிநியமன விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். காவலர்கள் மீதான நம்பிக்கையில்தான் மக்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். மாநிலத்தின் அமைதி, சட்டம் – ஒழுங்கை காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை காவல்துறையினர் காப்பாற்ற வேண்டும். போலீசாருக்கு பொறுப்பும் சமூக கடமையும் அதிகமாக இருக்க வேண்டும். புகார் கொடுக்க வருபவர்களிடம் காவல்துறையினர் கனிவாக இருக்க வேண்டும். காவல்துறை மக்களின் நண்பன் என்பது வாசகமாக மட்டும் […]

பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த 50 பேர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சிகயை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் திமுக உள்ளிட்ட கட்சியில் இருந்துவிலகி அதிமுக மாவட்ட செயலரரும் முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.விரமணி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நபர்களுக்கு முன்னாள் அமைச்சர் வாழ்த்துகளை தெரிவித்தார்.

போலி டாக்டரின் ஊசிக்கு பலியான தொழிலாளி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை ராஜிகவுண்டர் வட்டம் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் சக்திவேல்(34) என்பவர் அதே பகுதியில் வெல்டிங் கடையில் வேலை செய்துவருகிறார். இதனை தொடர்ந்து சக்திவேலுக்கு கடந்த இரண்டு நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சக்திவேல் வீட்டிற்கு மருத்துவம் பார்ப்பதற்காக பார்த்திபன்(35)சென்று ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட 20 நிமிடங்கள் கழித்து சக்திவேல் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதனைப் பார்த்து அவரது தாயார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் […]

விரைவில்- டெலிவரி ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஓய்வூதிய பலன்..!

‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்விகி, சொமாட்டோ, செப்டோ’ போன்ற ‘ஆன்லைன்’ தளங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களில் இருந்து உணவு, மளிகை பொருட்கள் வரை வீட்டுக்கு டெலிவரி செய்கின்றன. இந்த பணிக்காக தற்காலிக டெலிவரி ஊழியர்களை பயன் படுத்துகின்றன. இதுபோன்ற டெலிவரி ஊழியர்கள், நாடு முழுதும் 1.27 கோடி பேர் பணியில் உள்ளனர். 2029 – -30ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 2.35 கோடியாக உயரும் என நிடி ஆயோக் மதிப்பிட்டுள்ளது. இவர்களுக்கு முழுமையான சமூக பாதுகாப்பு […]

அதிராம்பட்டினம் சந்தனகூடு திருவிழா.. கோலாகலம்

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி வாசல் தர்காவில் சந்தன கூடு அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி வாசல் செய்கு நசுருதின் வலியுல்லா தர்காவில் 538 ஆம் ஆண்டு கந்தூரி விழா சென்ற 21ஆம் தேதி கொடி ஊர்வலம் நகர்வலம் வந்து தர்கா அருகாமையில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு அதிலிருந்து விழா நடந்து வந்தது .இன்று கந்தூரி விழாவை முன்னிட்டு ஜொலிக்கும் மின் அலங்காரத்தில் சந்தனக்கூடு தர்காவை சுற்றி வலம் வந்தது. பின்னர் தர்கா முன் நிறுத்தப்பட்டு தர்காவில் சந்தனம் […]

அரசு பஸ்சில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி-10 பேர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே இன்று நிகழ்ந்த கோர விபத்தில் அரசுப் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக லாரி ஒன்று பேருந்தின் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த 20 அடி ஆழப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது. அந்த லாரியில் ஏற்றப்பட்டிருந்த ஏராளமான துவரம் பருப்பு மூட்டைகள் நெடுஞ்சாலையிலும் பள்ளத்திலும் […]

தமிழகத்தில் 4 மாவட்டத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 02-01-2026: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். கோயம்புத்தூர், தேனி, தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் […]

”பராசக்தி” படம் வௌியிட தடை இல்லை… ஐகோர்ட் உத்தரவு

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10 ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், தனது செம்மொழி என்ற கதையை திருடி பராசக்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு […]

செங்கிப்பட்டியில் 19ம் தேதி திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு

தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் மகளிர் மேம்ப்பாட்டுக்கென தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து, 1.31 கோடி மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, ‘விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம்’, கல்வி கற்கும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண் திட்டம்’, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி விடுதி’, இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கான சூழல் என மகளிர் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து வரும் தமிழ்நாடு […]

திருப்பதியில் 2025ல் 13.5 கோடி லட்டுகள் விற்பனை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2025ல் 13.5 கோடி லட்டுகள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. 2024ல் திருப்பதி கோயிலில் 12.15 கோடி லட்டுகள் விற்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு 13.5 கோடி லட்டுகள் விற்பனை செய்துள்ளது. திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் லட்டு பிர​சாதம் உலக பிரசித்தி பெற்​ற​தாகும். ஏனெனில், இதன் சுவையே தனித்​து​வம் வாய்ந்​த​தாகும். அரசர் காலத்​தில் ஏழு​மலை​யான் கோயிலுக்கு வரும் பக்​தர்​களுக்கு பல வித​மான பிர​சாதங்​கள் வழங்​கப்​பட்டு வந்​தன. வெகு தூரத்​தில் […]

மீண்டும் ரீ ரிலிசாகும் ”நான் ஈ”

இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஈகா’. தெலுங்கில் வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து,தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியானது. தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரில் வெளியான இந்த படத்தில் நானி, சமந்தா, சுதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு இப்படத்தை மீண்டும் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும், மீண்டும் உலகளாவிய பார்வையாளர்களை […]

புதுகையில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைசார்பில் திருநங்கை களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஆட்சியர் மு.அருணாதலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) கே.முத்துச்சாமி, மாவட்ட சமூக நல அலுவலர் மே.சியாமளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலி.. புதுகை அருகே சோகம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள கப்பத்தான்பட்டிகிராமத்தில் உள்ளகுளத்தில் குளிக்கச்சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கிபலி…புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  தாலுகாலேணாவிளக்கை அடுத்த கப்பத்தான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகள் பாண்டிச்செல்வி(14) 9 வது படிக்கிறார்.அதே ஊரைச் சேர்ந்த சேகர் மகள் கனிஷ்கா(13). 8 வது படிக்கிறார் .இருவரும்கிராமத்தில்உள்ள வண்ணியன் கண்மாயில் குளித்த போது நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்கள். சம்பவம் தொடர்பாக நமணசமுத்திரம் போலீஸார் வழக்குபதிவு செய்து பிரேதத்தைகைப்பற்றிவிசாராணை நடத்திவருகின்றனர்.

ரஷ்யாவிடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்- உக்ரைன் அதிபர்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி 21 நிமிடம் உரையாற்றினார். ஏறக்குறைய 4-ம் ஆண்டை நோக்கி போர் சென்று கொண்டிருக்கும் நிலையில், உக்ரைனியர்களிடையே சோர்வு ஏற்பட்டு உள்ளது என குறிப்பிட்டார். ஆனால், அதனை வீழ்ச்சி என தவறாக கருதி விட கூடாது என்றும் கூறினார். இவ்வளவு ஆண்டுகளாக நடந்து வரும் போரை, அவர் 2-ம் உலக போரின்போது, உக்ரைனின் சில பகுதிகளை நாசி படையினர் கைப்பற்றியிருந்த கால கட்டத்துடன் ஒப்பிட்டார். அவர் ஆற்றிய […]

பொள்ளாச்சி ஆழியார் அணையில் தண்ணீர் திறப்பு… மலர்தூவி வரவேற்பு

கோவை, பொள்ளாச்சி ஆழியார் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 22 ஆயிரத்து332 ஏக்கர் விளை நிலம் பயன்பெறும் வகையில் ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையைடுத்து ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டது. அதன்படி இன்று பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து பொள்ளாச்சி, வேட்டைக்காரன் புதூர், ஆழியார் ஊட்டுக்கால்வாய் வழியாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு […]

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சவுந்திரநாயகி சமேத ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன மஹோற்சவ விழா ஸ்ரீ நடராஜர் ரக்‌ஷாபந்தனம், ஸ்ரீ மாணிக்க வாசகர் திருவெம்பாவை உற்சவத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து இன்று ஸ்ரீ அலங்காரவல்லி, சவுந்திரநாயகி சமேத ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வர சுவாமிக்கு […]

அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினி சாமிதரிசனம்

அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் பாலா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். சம்மந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரங்களில் சாமி தரிசனம் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அப்போது பக்தர்கள் ஐஸ்வர்யா ரஜினி மற்றும் இயக்குனர் பாலாவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

11 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 11 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மீனவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம், புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது தமிழக மீனவர்கள் அநியாயமாக கைது செய்யப்படுவது வழக்கம். அது போல் அவர்களது படகுகளை சேதப்படுத்துவது, வலைகளை அறுப்பது உள்ளிட்ட செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் இந்த நிலையில், […]

கோவை ஸ்ரீ நாக சாயி கோவிலில் சாய்பாபா பக்தர்களுக்கு காட்சி

புத்தாண்டு பண்டிகையொட்டி ஸ்ரீ நாக சாயி திருக்கோவிலில் சாய்பாபா பக்தர்களுக்கு காட்சியளித்தார் . கோவை சாய்பாபா காலனி பகுதியில் இருக்கும் ஸ்ரீ நாக சாயி திருக்கோவிலில் சாய்பாபாவிற்கு ருத்ராட்ச மாலை அணிவித்தும்,தங்க கிரீடத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இன்று அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். சுவாமி தரிசனம் மேற்கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சாய்பாபாவின் காலடியில் வைத்து பூஜை செய்யப்பட்ட பத்து ரூபாய் நோட்டு மற்றும் புகைப்படத்தை கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக […]

நடுரோட்டில் சரிந்து விழுந்த இரும்பு பைப்புகள்- பெரும் விபத்து தவிர்ப்பு

கோவை மாநகரின் மிக முக்கியமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி சாலையில் இன்று பிற்பகல் ஓடும் வாகனத்தில் இருந்து இரும்பு பைப்புகள் திடீரென சாலையில் சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நல்வாய்ப்பாக முன்னாள் சென்ற வாகன ஓட்டிகள் உயிர்த்தபினர். தொழில் நகரமான கோவையில் மூலப்பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை எப்பொழுதும் அதிகமாக இருக்கும். இன்று பிற்பகல் திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே ஒரு பொலிரோ பிக் அப் […]

6ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தென்மேற்கு வங்கக்கடலில் வருகிற 6-ம் தேதி அல்லது அந்த வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வுபகுதியால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்பு குறைவு எனவும் புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னையை பொறுத்தவரை மிதமான மழை பெய்ய […]

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.110 அதிகரிப்பு

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. 14.2 கிலோ வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை, கடந்தாண்டு ஏப்ரல் 8ம் தேதி ரூ.50 அதிகரிக்கப்பட்டு, டெல்லியில் ரூ.853, மும்பையில் ரூ.852.50, கொல்கத்தாவில் […]

ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தது. குனியமுத்தூரில் தனியார் பள்ளி ஆசிரியர் ஜெபா மார்ட்டின் வீட்டில் டிசம்பர் 25ல் 103 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்பவரை கைது செய்துள்ளனர்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 உயர்வு

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,640க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,580க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனை. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.4,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2.60 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்றிய அரசு அனைத்திலும் தோற்றுவிட்டது- சிபிஐ வீரபாண்டியன்

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்… சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் காலதாமதம் செய்ததும் அதை குடியரசு தலைவர் திருப்பி அனுப்பியது அவர் பதவிக்காக அல்ல அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஜனநாயக முறையில் போராடுகிற அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் அவர்களுடைய கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். போதை பொருள் அதிகரிப்பதாக […]

நாளை முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில்கள் நேர மாற்றம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்/ வந்து சேரும் ரயில்களின் நேர மாற்றம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்/ வந்து சேரும் ரயில்களின் நேர மாற்றம் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்/ வந்து சேரும் ரயில்களின் நேர மாற்றம்

அரியலூர்- புத்தாண்டு கொண்டாட்டங்கள்… கட்டுப்பாடுகள் அறிவிப்பு

அரியலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள். பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இளைஞர்கள் அல்லது சிறுவர்கள் சாலையில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வது, வேகமாக பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வாகன சோதனைகள் செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், […]

தமிழகம் முழுக்க 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில், தமிழ்நாடு முழுவதும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சில அதிகாரிகளுக்குப் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று Armed Force DGPயாக நியமிக்கப்பட்டுள்ளார். முக்கிய பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் ஓய்வு பெறுவதைக் கருத்தில் கொண்டு இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பணியிட மாற்ற அறிவிப்புபுத்தாண்டை முன்னிட்டு, தமிழக அரசு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முதலில் ஐஏஎஸ் […]

டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு.

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு. Armed Force DGP யாக நியமனம். ஏடிஜிபி சந்தீப் மிட்டல் பதவி உயர்வு பெற்று சைபர் கிரைம் டி.ஜி.பி.,யாக நியமனம். ஏடிஜிபி பால நாகதேவி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக நியமனம். சிபிசிஐடி ஐஜி அன்பு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமனம். ஆவடி கமிஷனர் சங்கர் தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் மொடாக் ஆகியோர் மாற்றம். தென்மண்டல ஐஜி பிரேம் […]

சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம்” வேண்டி அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் இன்று எழும்பூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை காவல்துறையினர், ஆசிரியர்களுக்கு போராடுவதற்கான இடம் மற்றும் அனுமதி கொடுக்காததன் காரணமாக பல்வேறு பொது இடங்களில் ஆசிரியர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். டிசம்பர் 26ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். டிசம்பர் 27ம் தேதி எழும்பூரில் […]

ஓட்டல், ரிசார்ட்களில் நள்ளிரவு 12.30க்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது..

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான ECR, OMR & GST மற்றும் மாவட்டத்தின் பலமுக்கிய சந்திப்புகள் உட்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவாரகள். மாவட்டத்தில் மிக முக்கிய இடங்கள், கோயில்கள், தேவாலயங்கள் போன்றவற்றிற்கு ரோந்து காவலர்கள் நியமித்து தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். மாவட்டத்தில் புத்தாண்டு SP-1, ADSP-1, DSP-7, Inspr – 25 மற்றும் 530 காவலர்கள என மொத்தம் 564 காவல அதிகாரிகள்/ஆளிநர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்களுக்கு […]

நெல்லையப்பர் கோவிலில் 2ம் தேதி வௌ்ளி தேரோட்டம்

நெல்லையப்பர் கோயிலில் ஜனவரி 2ம் தேதி வெள்ளி தேர் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. வெள்ளி தேர் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜன.2ல் மாலை 6.30 மணிக்கு வெள்ளோட்டம் நடைபெறுகிறது. 35 ஆண்டுகளுக்கு பின் நெல்லையப்பர் கோயிலில் வெள்ளி தேர் வெள்ளோட்டம் நடைபெற இருக்கிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 1991ல் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் வெள்ளித்தேர் சேதமடைந்த நிலையில் திமுக ஆட்சியில் சீரமைக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தம்… களைக்கட்டும் திருமண விழா

பிரியங்கா காந்தியின் மகன் ரையான் வதேரா தனது நீண்ட நாள் காதலியான அவிவா பெய்க்கை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் சகோதரியான எம்பி பிரியங்கா காந்தி – ராபர்ட் வதேரா தம்பதியின் 25 வயது மகனுமான ரையான் வதேரா , புகைப்படக் கலைஞராகவும் விஷுவல் ஆர்ட்டிஸ்டாகவும் பணியாற்றி வருகிறார். இவர் தனது தாத்தா ராஜீவ் காந்தி மற்றும் மாமா ராகுல் காந்தி பயின்ற டேராடூன் டூன் பள்ளியில் […]

சேலம்-கள்ளக்குறிச்சியில் ஜன.,4,5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம்

சேலம் மற்றும் கள்ளக்குறிச்சியில் ஜனவரி 4 மற்றும் 5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஜனவரி 4, 5ம் தேதிகளில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார். சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் ஜனவரி 4ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஜனவரி 5ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மகளிர் அணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

தமிழக மீனவர்கள் 3 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு ஜனவரி 13 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் 3 பேரையும் நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதை பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிகிறது… விஜய்

கடந்த 27-ஆம் தேதி திருத்தணி ரயில் நிலையம் அருகே, நான்கு சிறார்கள் கஞ்சா போதையில் வடமாநில இளைஞர் சூரஜை அரிவாளால் வெட்டி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில், “சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் […]

கேபிள் ஒயரில் சினிமா பாணியில் இறங்க முயற்சி… கீழே விழுந்த வாலிபர்

சென்னை, ஆவடி அருகே நெமிலிச்சேரி சந்திப்பில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து வாலிபர் ஒருவர் இன்டர்நெட் கேபிள் மூலம் சாலையின் கீழே இறங்க முயற்சி செய்தார். இதனை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் காவல்துறையினர் அவரை எச்சரித்தனர். இருந்த போதிலும் எதையும் காதில் வாங்காத அவர், இன்டர்நெட் கேபிள் மூலம் சாலையில் சினிமா பாணியில் இறங்க முயற்சி செய்தார். அப்போது திடீரென கேபிள் அறுந்து கீழே விழுந்ததால் அந்த இளைஞரும் கீழே விழுந்தார். […]

வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடக்கவில்லை-காவல்துறை விளக்கம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ரயிலில் பயணித்த வடமாநில இளைஞர் ஒருவர் நான்கு சிறுவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பட்டாகத்தியை வைத்து ரீல்ஸ் எடுத்த நான்கு சிறுவர்கள், அதே ரயிலில் பயணித்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிராஜ் மீது கத்தி வைத்து ரீல்ஸ் எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிராஜ் சிறுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திருத்தணி ரயில் நிலையத்தில் சிராஜை இறக்கி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்ற சிறுவர்கள், அவரை பட்டாகத்தி மற்றும் கட்டையால் […]

கரூர்- 4 போலீசார் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்.

கரூர் துயரச் சம்பவம் -சிபிஐ அலுவலகத்திற்கு, சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 காவலர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு சிபிஐ அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், […]

13 பேர் மீது ஏறி இறங்கிய பஸ்.. 4 பேர் பலி- பரிதாபம்

மும்பை பாண்டுப் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் பெஸ்ட் பேருந்து பின்னோக்கி சென்றபோது 13 பேர் மீது ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் 3 பெண்கள், 1 ஆண் என 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்; சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்துக்கு காரணமான ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மும்பை […]

முதியவர் மாயம்..வெல்டிங் தொழிலாளி தவறி விழுந்து பலி… திருச்சி க்ரைம்

காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்ற முதியவர் மாயம் திருச்சி வரகனேரி முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 65). கூலித் தொழிலாளி.கடந்த சில நாட்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்த அக்பர் அலிகாவிரி ஆறு கம்பரசம் பேட்டை படித்துறையில் குளிக்க செல்வதாக கூறி சென்றார்.அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை அதைத் தொடர்ந்து மனைவி ஜெரினா பேகம்காந்தி மார்க்கெட் போலீசில் […]

காலை உணவு திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது.உடன் மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் சத்துணவு ரேவதி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

விஜய் திரும்ப நடிக்க வருவார்.. பிரபல நடிகை ஓபன் டாக்.

தினேஷ் தீனா இயக்கியுள்ள ‘அனலி’ படம் ஜனவரி 2-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் டைரக்டர் வாசுவின் மகன் சக்தி வாசு வில்லனாக நடித்துள்ளார். சிந்தியா புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் கதையின் நாயகியாக சிந்தியா லூர்டே நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது நாயகி மற்றும் தயாரிப்பாளரான சிந்தியா லூர்டே பத்திரிக்கையாளர்களை சந்தித்து அனலி படத்தைப் பற்றியும், தனது சினிமா அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். […]

பாரதிராஜா உடல்நிலை குறித்து வைரமுத்து பதிவு

பாரதிராஜா உடல்நிலை குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலம் தேறிவருகிறார். நோய்த் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறார். உடைந்த சொற்களாயினும் உரக்கப்பேச ஆசைப்படுகிறார். ஓர் உயிர் துடிக்கும் உடல்மொழியைப் பார்த்தேன்.என் வலக்கரத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டார். அந்தப் ஸ்பரிசத்தில் எத்துணை செய்திகள்! எத்துணை உணர்வுகள். 45 ஆண்டு காலக் கலைச் சரித்திரம் எங்கள் உள்ளங் கைகளுக்கிடையே நசுங்கியது. நான் மட்டுமா?. கருவேலங்காட்டுக் கரிச்சான்களும் அவர் நலம் கேட்குமே. எங்கள் […]

கருத்து கேட்பு கூட்டத்தில் மக்கள் கல்குவாரிக்கு எதிர்ப்பு

கரூர், புன்னம் கிராமத்தில் கல்குவாரி அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம்: பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய் அருகே கல்குவாரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக புகலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி விதிகளை மீறி சில கல்குவாரிகள் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், சதீஷ்குமார் நிறுவனத்தால் 1.46.25 […]

தொழிலாளர்களை போராட்டத்திற்கு தூண்டும் இடைத்தரகர்கள்.. உஷார்.. அமைச்சர் மாசு

தேர்தல் நெருங்குகிறது என்பதால் தொழிலாளர்களின் உணர்வுகளை ஏமாற்றி போராட்டத்திற்கு தூண்டும் இடைத்தரகர்கள் அதிகரித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் உஷாராக இருக்க வேண்டும் எனவும் கடந்தாண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் டெங்கு உயிரிழப்புகள் கடுமையாக குறைந்துள்ளது, இது பொது சுகாதாரத் துறையின் நடவடிக்கைக்கும், டெங்கு விழிப்புணர்வுக்கும் கிடைத்த வெற்றி எனவும் கஞ்சா தமிழ்நாட்டில் ஜீரோ என்ற நிலையில் உள்ளது, போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளது, போதைப்பொருள் குறித்து குற்றச்சாட்டு சொல்லும் எதிர்க்கட்சித் […]

திருத்தணியில் வடமாநில வாலிபரை தாக்கிய சம்பவம் .. தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னையில் மின்சார ரயிலில் சுராஜ் என்ற இளைஞனின் மீது கஞ்சா குடியர்கள் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இது போன்ற மோசமான சம்பவங்கள் பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. நான்கு சிறார்களும் கைது செய்யப்பட்ட நிலையில், படுகாயமடைந்த வடமாநில இளைஞர் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.27.12.2025 அன்று, திருத்தணி ரயில்வே குடியிருப்பு அருகே. சில நபர்களால் ஒருவர் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில், திருத்தணி காவல் […]

விளைநிலத்தில் புகுந்து யானை கூட்டம் அட்டகாசம்

திருநெல்வேலி மாவட்டம், விகேபுரத்தில் விளைநிலங்களில் புகுந்து யானை கூட்டம் நெற்பயிர்கள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, கரடி, மிளா உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது குடியிருப்பு பகுதி மற்றும் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் விளைவிப்பதும், வளர்ப்பு பிராணிகளை கடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அனவன்குடியிருப்பைச் சார்ந்த விவசாயி கல்யாணராமன் (57) என்பவரது விளைநிலங்களில் புகுந்து […]

மது அருந்த பணம் தராத பாட்டியை கொன்ற பேரன்- அதிர்ச்சி சம்பவம்

கடலூர் மாவட்டம் அருகே மது குடிக்கப் பணம் தராத ஆத்திரத்தில், தனது சொந்தப் பாட்டியையே அடித்துக் கொன்ற பேரனின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அருகே உள்ள வீ. காட்டுப்பாளையத்தில் இரும்பு பெட்டியில் இருந்து மூதாட்டி சின்னப்பொண்ணு சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் பேரனிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.தனது பாட்டியிடம் மது குடிக்கப் பணம் கேட்டு அந்த இளைஞர் தகராறு செய்துள்ளார். […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3,360 குறைவு

தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதல் சுமார் 72% வரை உயர்ந்துள்ளது. அமெரிக்க பணவியல் கொள்கை, டாலர் பலவீனம், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் மத்திய வங்கிகள் தொடர்ச்சியா தங்கத்தை வாங்கி குவித்தது ஆகியவை இதற்குக் காரணமாகும். தங்கத்தை மிஞ்சும் அளவுக்கு வெள்ளி விலையும் இந்தாண்டு உயர்ந்தது. வெள்ளி விலை இந்தாண்டு சுமார் 181% உயர்ந்துள்ளது.. தங்கம் விலை இந்த மாதம் ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கி புதிய உச்சத்தைத் தொட்டது. இந்தச் சூழலில் தான் இன்றைய […]

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கு.. மேலும் ஒருவர் கைது

 சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமாரை கேரள சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலையில் இருந்து 4.54 கிலோ தங்கம் திருடப்பட்டது. தங்கம் திருட்டு வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரிப்பு!

 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் மற்ற பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது. முல்லைப் பூ ரூ.850க்கும் கனகாம்பரம் ரூ.1000க்கும் பிச்சிப்பூ ரூ.130க்கும் அரளி ரூ.300க்கும் விற்பனை ஆகிறது.

கோவை- ரூ.9.67 கோடியில் சர்வதேச ஹாக்கி மைதானம்.. துணை முதல்வர் திறந்து வைத்தார்

கோவையில் ரூபாய் 9.5 கோடியில் ஹாக்கி மைதானம் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் கோவையில் ரூ9.5 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள ஹாக்கி மைதானம் மற்றும் வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, பத்தாயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். வட கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் தமிழ்நாடு வனப்படை நவீன மையமாகக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த […]

கோயில்களில் முதல் மரியாதை-எப்போதும் தெய்வத்துக்கு தான்… உத்தரவு

கோயில்களில் முதல் மரியாதை என்பது எப்போதும் தெய்வத்துக்கு தான் கொடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில், தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு 1992 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பஞ்ச முத்திரை முதல் மரியாதை 2023 ஆம் ஆண்டு முதல் திடீரென நிறுத்தப்பட்டதை எதிர்த்து ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் […]

வடமாநில நபரை அரிவாளால் தாக்கி ரீல்ஸ்- 4 சிறுவர்கள் கைது

திருத்தணி, திருவள்ளூர் ரயில்வே ஸ்டேசனில் ரீல்ஸ் எடுத்ததை தட்டிக்கேட்ட வட மாநில வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 சிறார்கள். தனது கழுத்தில் கத்தியை வைத்து ரீல்ஸ் எடுத்ததை தட்டி கேட்ட வடமாநில இளைஞரின் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தை அவர்களே தன் இன்ஸ்டாவில் வீடியோ எடுத்து அப்லோடு செய்திருக்கிறார்கள். இச்சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் திருத்தணி ரயில்வே குடியிருப்பு அருகே வடமாநில நபரை […]

17 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு விவாகரத்து..

தெலங்கானா மாநிலத்தில் 17 ஆண்டுகள் நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பிறகு ஒரு தம்பதி விவாகரத்து பெற்றுள்ளனர். தெலங்கானாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் – விஜயலட்சுமி தம்பதிக்கு 2002-ல் திருமணம் நடந்தது. 2003-ல் பெண் குழந்தை பிறந்த நிலையில், அந்த ஆண்டு முதலே கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்து வாழ தொடங்கினர். 2008-ம் ஆண்டு மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் ஸ்ரீகாந்த் குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் மகளின் நலனுக்காக கணவருடன் சேர்ந்து […]

லாரி மோதி கல்லூரி மாணவர்கள் பலி.. புதுகை அருகே சம்பவம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளகண்டனூர் புதுவயல் முஸ்லீம்தெருவைச் சேர்ந்தவர்கள் முகமது (18) , முகம்மது இப்ராஹீம் . இவர்கள் இருவரும் திருமயம் அரசம் பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இவர்கள் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டுபைக்கில் காரைக்குடி யைநோக்கிசென்றபோது திருமயம் தாமரைக்கண்மாய் அருகில்டாரஸ்லாரி மோதி சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானார்கள். இதுதொடர்பாகதிருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுகை- மூத்த தம்பதிகளுக்கு மங்கல பொருட்கள் வழங்கி மரியாதை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த நிகழ்வில் திருக்கோகர்ணம் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தம்பதியர்களுக்கு மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி மாலை அணிவித்து வேஷ்டி, சேவைகள் உள்ளிட்ட மங்கல பொருட்களை வழங்கி மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா, மாநகரமேயர் திலகவதி செந்தில், அறங்காவலர் குழு த்தலைவர் தவ.பாஞ்சாலன்,மாநகராட்சி கவுன்சிலர் கனகம்மன்பாபுமற்றும் அறநிலையத்துறையின் அலுவலர்கள் பங்கேற்றனர்.

மின் ஊழியர் கூட்டமைப்பு , மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

அணு மின் நிலையம் மூலம் தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்க அனுமதியளித்த அணு மின் உற்பத்தி மசோதா சாந்தி – 2025 ஐ திரும்பப்பெற வேண்டும்.மின்சார வினியோகத்தை முற்றிலும் தனியாரிடம் ஒப்படைக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதா 2025 ஐ ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பு மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று திருச்சி மிளகுபாறையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு […]

ஓடும் காரில் பெண் அதிகாரியை வன்கொடுமை செய்த CEO

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனத்தின் பெண் மேலாளர், அதே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) மற்றும் சக ஊழியர்களால் ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 20ம் தேதி இரவு ஒரு பிறந்தநாள் விருந்தில் பாதிக்கப்பட்ட பெண் கலந்துகொண்டுள்ளார். அங்கு அனைவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. நள்ளிரவு 1:30 மணியளவில் அந்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், […]

பாஜக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கூட்டணிக்குள் இணைக்க முடியாது- டிடிவி

திருச்சியில் நிருபர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசினார். “தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே கூட்டணி குறித்து அறிவிப்பேன். பாஜக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கூட்டணிக்குள் இணைக்க முடியாது” என்று தெரிவித்தார். கொள்கைக்கு உடன்படும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்று உறுதியாக கூறினார். தவெகவில் இருந்து வெளியேறிய செங்கோட்டையன் “விஜய்க்காக உயிரையும் விடுவேன்” என்று கூறியது குறித்து பேசிய தினகரன், “அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்த போது தனக்கு ஒரு […]

10 அமைச்சர்கள் முன்னிலையில் நெல் கொள்முதல் குறித்த ஆலோசனை

10 அமைச்சர்கள் முன்னிலையில் சம்பா நெல் கொள்முதல் தொடர்பான ஆலோசனை கூட்டம். 8 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்பு. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பா நெல் கொள்முதல் தொடர்பாக முத்தரப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நேரு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், மகேஷ் பொய்யாமொழி, மெய்ய நாதன், கோவி.செழியன் உள்ளிட்ட 10 அமைச்சர்களும், டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், 8 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டனர். தமிழ அரசின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். […]

அன்புமணிக்கு ஒரு தகப்பனாக அனைத்தையும் செய்தேன்… கதறி அழுத ராமதாஸ்

ஒரு கும்பல் என்னை தூற்றுகிறது. என்னையும் கவுரவத் தலைவரைவும் ஒரு கும்பல் மிகக் கேவலமாக தூற்றுகிறது என ராமதாஸ் கண்ணீர் மல்க பேசினார். சேலத்தில் நடக்கும் பாமக செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேச்சு… உலகத்தை ஒரு பிள்ளைக்கு தந்தை என்ன செய்வாரோ அதைவிட அதிகமாக நான் செய்துள்ளேன். நான் வளர்த்தவர்களை வைத்து ஒவ்வொரு நாளும் என்னை அவமானப்படுத்துகிறார்கள். என்னை வெட்டிகூட வீசியிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் அவமானப்படுத்துகின்றனர். என்னை விட ஜி.கே. மணியை அவமானப்படுத்துகின்றனர். […]

விஜய்க்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்? -செல்லூர் ராஜு எச்சரிக்கை!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான செல்லூர் ராஜூ, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் அரசியல் பிரவேசத்தை ஏளனமாக பார்த்த அவர், “தவெகவுக்கு கடையை விரித்து வைத்துவிட்டு வியாபாரம் ஆகாமல் போகப் போகிறது. பரப்புரைக்கு நயன்தாரா வந்தால்கூட கூட்டம் கூடும். நடிகருக்கு கூடுதலாக ரசிகர்கள் இருக்கலாம். எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது” என்று கூறி ரசிகர் கூட்டத்தை மட்டும் வைத்து அரசியல் வெற்றி பெற […]

பேராவூரணி அருகே எல்கை பந்தயம்-அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

பேராவூரணி அருகே மாவடுகுறிச்சியில் இன்று மாபெரும் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடந்தது – இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த மாடுகளை ஏராளமான பந்தய ரசிகர்கள் சாலைகளின் இருபுறமும் நின்று கைதட்டி ஆரவாரம் செய்து பார்த்து ரசித்தனர் – 2 அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர் தஞ்சை மாவட்டம், பேராவூரணி அடுத்த மாவடுகுறிச்சியில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலினின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவடுகுறிச்சி‌ திமுக நிர்வாகிகள் மற்றும் கிராமத்தார்கள் […]

இந்த செய்தியில் வரும் படங்கள் அனைத்தும் தவெகவிற்கு சமர்ப்பணம்…

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் திமுக தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. கட்சியின் அமைப்பு பலத்தையும், மக்கள் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாநாடுகள், விழாக்கள், கூட்டங்கள் என தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம், கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழா, திருவண்ணாமலையில் நடந்த வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு ஆகியவை அதன் முக்கிய எடுத்துக்காட்டுகளாகும். திமுக […]

விஜயகாந்த் 2ம் ஆண்டு குருபூஜை விழா.. அன்னதானம் வழங்கல்

அதிராம்பட்டினம் அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது இதில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.. தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த இரண்டு முன் மரணமடைந்தார் அவருடைய இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை தமிழக முழுவதும் அனுசரித்து வருகின்றனர் இதேபோன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள காரங்குடா மீனவர் கிராமத்தில் விஜயகாந்த் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான […]

புதுக்கோட்டை DSP ஆக பிருந்தா பொறுப்பேற்பு

புதுக்கோட்டை உட்கோட்டகாவல் துணைக் கண்காணிப்பாளர் ஆக பொறுப்பேற்றுள்ளஇரா.பிருந்தா (DSP) ஆக புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு வருகைதந்து அங்கு பத்திரிகை யாளர்களைசந்தித்தார். அப்போது அவர் மாநகர உட்கோட்டத்தில் சட்டம் , ஒழுங்கு பிரச்சினை கள், போதைப் பொருட்கள் நடமாட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்புகுறித்த பிரச்சினை களை என்னிடம் தைரியமாக கூறலாம். அதற்கான நடவடிக்கைகள்உடனடியாக எடுக்கப்படும். தொடர்பு கொள்வதற்கு 9789918079 என்ற வாட்ஸ்அப்எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் தகவல் தெரிவிக்கலாம் . இவ்வாறு கூறினார்.

பொங்கலுக்கு பிறகு மேலும் பல பிரபலங்கள் தவெக-வில் இணைவார்கள்- செங்ஸ் தகவல்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை முதலமைச்சராக ஏற்றுக்கொள்கிறவர்கள் மட்டுமே கூட்டணிக்கு வர முடியும் – செங்கோட்டையன் தகவல் .. பொங்கலுக்கு பிறகு மேலும் பல பிரபலங்கள் த.வெ.க வில் இணைவார்கள் பொறுத்து இருந்து பாருங்கள் – செங்கோட்டையன் உடைத்த ரகசியம் !!! எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு திரண்ட கூட்டம் போல் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு கூடுகிறது – கோவையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நெகிழ்ச்சி !!! 18 வயது முதல் அனைத்து தரப்பினரும் தமிழக […]

புதுகை அருகே 26ம் ஆண்டு ஐயப்ப ரத ஊர்வலம்..

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்தில் சுவாமி ஐயப்பன் பக்தர்கள்பக்தர்களால் 26ம் ஆண்டு ஐயப்ப ரத ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஐயப்ப சுவாமி படத்தை அலங்கரித்து சுப்பிரமணியர் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கியவீதிகளின் வழியாக உலா வந்தது. திரளான ஐயப்ப பக்தர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர். குருசாமி ஜெயப்பிரகாஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தலைமை வகித்து நடத்தினார். நிறைவில் அறுசுவை அன்னதானம் நடந்தது.

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் கட்டாயம்- ஜன.,12 முதல் அமல்

ரயில்வே நிர்வாகம், ஐஆர்சிடிசி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஏற்கனவே இந்த விதிமுறை அமலில் உள்ள நிலையில், ஜனவரி 12 முதல் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படுகிறது. டிசம்பர் 29 முதல் நேரக் கட்டுப்பாடுகளுடன் ஆதார் இணைப்பு சரிபார்க்கப்படும். ஜனவரி 12 முதல், ஆதார் இணைத்தவர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

அமித்ஷா முன்பு செய்தியாளர்களிடம் பேச அஞ்சும் எடப்பாடி.. அமைச்சர் ரகுபதி

அமித்ஷா முன்பு செய்தியாளர்களிடம் பேச அஞ்சும் எடப்பாடி, சூனா பானா வேடம் தரிக்கிறாரா என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கினால் மட்டும் போதுமா? அதனை நிர்வகிக்க கட்டடம் வேணாமா?. சட்டமன்றத்தில் முதல்வர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தராமல் வெளிநடப்பு செய்யும் பழனிசாமிக்கு ஓபன் சேலஞ்ஜ் தேவையா? என்று “இவ்வாறு தெரிவித்தார்.

பிப்.17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு

பிப்.17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். ஏற்கெனவே திரட்டப்பட்ட விவரம் மூலம் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிச. 19ம் தேதி வெளியிடப்பட்டது.

மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கான ஆர்டரை கலெக்டர் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின்சார்பில்நடைபெற்ற மாவட்ட மீன்வளர்ப்போர்முகமை மேலாண்மை குழு கூட்டத்தில்ஆட்சியர் மு.அருணா கருணை அடிப்படையில் மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு நேரடிபணிநியமன ஆணைகளை வழங்கினார் . உடன் திருச்சி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் வெ.பிரபாவதி, புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைஉதவி இயக்குனர் ந.பஞ்சராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

2026-ல் மீண்டும் இணையும் முன்னாள் ஊழியர்கள்-கூகுள் அதிரடி

2025ம் ஆண்டில் கூகுள் புதிதாகப் பணியமர்த்திய AI மென்பொருள் பொறியாளர்களில் 5-ல் ஒருவர் (சுமார் 20%) அந்த நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றி வெளியேறியவர்கள் ஆவர். ஓபன்ஏஐ , மெட்டா, மற்றும் ஆந்தோபிக் போன்ற நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், அனுபவம் வாய்ந்த திறமையாளர்களைத் திரட்ட கூகுள் இந்த வியூகத்தைக் கையாண்டுள்ளது. கூகுளின் துணை நிறுவனர் செர்ஜி பிரின் நேரடியாகவே பல முன்னாள் ஊழியர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களை மீண்டும் நிறுவனத்தில் இணைய அழைப்பு விடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. ஏன் […]

கணவன் கண்முன்னே பஸ்சில் சிக்கி மனைவி பலி.. பரிதாபம்

கோவை NH சாலை மரக்கடை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவர் தனது மனைவி ராபியத்துல் பஷிரியாவுடன் நேற்று மாலை கோவை பாலக்காடு சாலை சுண்ணாம்புகாளவாய் வழியாக குனியமுத்தூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக பயணிகளை ஏற்றி மதுக்கரை நோக்கி அதிவேகமாக சென்ற கோகுலம் என்ற தனியார் பேருந்து, இருசக்கர வாகணத்தின் பக்கவாட்டில் மோதியதில் கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயனித்த ராபியத்துள் பஷிரியாவின் தலையில் ஏறியது. இதில் இருசக்கர வாகனத்தை […]

ராமநாதபுரத்தில் 30 ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்… எடப்பாடி அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, ஆட்சியில் அமர்ந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கடந்த 55 மாத காலமாக மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றித் தராமலும்; மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தராமலும்; வெற்று விளம்பரங்களையும், பொய்யான வாக்குறுதிகளையும் அளித்து, தனது குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.அந்த வகையில், இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் […]

அதிமுகவினர் பாஜகவின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள்… திருமா., பேட்டி

பா.ஜ.க உடன் கூட்டணி வைத்திருந்த போதுதான் ராமர் எந்த கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார் என கேட்டார் கலைஞர். கூட்டணி வைத்திருந்த பொழுதும் கருத்தியலில் உறுதியாக இருந்தார். ஆனால் தற்போது பா.ஜ.க உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவினர் பாஜகவின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள் என்று திருச்சியில் திருமாவளவன் கூறினார்.திருச்சி விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இப்போது அவர் கூறியதாவது:- எதிர்க்கட்சிகள் கூட்டணியாக உருவாக முடியாத அளவிற்கு சிதறி கிடக்கிறார்கள். ஒருமித்த கருத்து அவர்களுக்குள் […]

எங்க கூட்டணி நல்ல வலுவான கூட்டணி மெகா கூட்டணியா உருவாகும்– அன்புமணி

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேசினார். “விரைவில் கூட்டணியை அறிவிப்போம். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பலமான, மெகா கூட்டணி அமையும்” என்று அவர் தெரிவித்தார். தமிழக அரசியலில் திமுகவுக்கு எதிரான வலுவான மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் பாமக தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அன்புமணி, “ஆன்மிகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது. நீதிமன்ற […]

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு-ஜன.17ம்தேதி அனுமதி கோரி மனு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு தமிழகத்தின் முக்கிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு விழாக்குழு நிர்வாகிகள் மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர். அத்துடன் ஜனவரி 17-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கக் கோரி மனுவும் சமர்ப்பித்தனர். போட்டியின் பாதுகாப்பு, அனுமதி […]

கைதியிடம் கள்ளத்துப்பாக்கி வாங்கிய விவகாரம்.. வக்கீல் உட்பட 4 பேர் கைது

கைதியிடம் கள்ளத்துப்பாக்கி வாங்கிய விவகாரத்தில் வக்கீல், பைனான்சியர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருக்கும் கைதியை போலீசார் விசாரணைக்காக கஸ்டடி எடுக்க உள்ளனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் இ.காட்டூரைச் சேர்ந்தவர் வக்கீல் பாஸ்கர்(32). இவரிடம் ஒரு கைத்துப்பாக்கி இருப்பதாகவும், அதை தனக்கு தெரிந்த ஒருவரிடம் அடமானம் வைத்து பணம் பெறுவதற்கு முயல்வதாகவும், பள்ளிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி கவுதம் தலைமையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்ஐ ரஞ்சித்குமார், வெற்றிவேல் ஆகியோர், நேற்று அதிகாலை […]

இந்திய கம்யூ., கட்சி அதிக இடத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்- முத்தரசன் பேட்டி

தமிழகத்தில் 234 தொகுதி உள்ளது இந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறைய இடங்களில் நிற்கும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் பேட்டி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பிலே இந்த சங்கத்திற்கான தனி ஒரு மாத இதழ் கிராமப்புற பாட்டாளி என்கிற இதழ் வெளியிட்டு விழா நடைபெறுகிறது இந்த நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் கலந்து கொண்டார்பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி […]

நாதக மாநிலப் பொதுக்குழு- ‘தனித்துப் போட்டி’.. சீமான் உறுதி!

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அக்கட்சியின் முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வின் கூடுதல் சிறப்பம்சங்கள். சீமான் தனது உரையில், “எந்தக் கொம்பனுடனும் கூட்டணி இல்லை” என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்றும், வழக்கம் போல் 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு (117 பெண் வேட்பாளர்கள்) வழங்கப்படும் என்றும் அறிவித்தார். […]

சேற்றில் சிக்கி குட்டி யானை பலி- சோகம்

கூடலூர் அருகே சேற்றில் சிக்கி குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர் சோலையை அடுத்த முறம்பிலாவு பகுதியில் தனியார் தோட்ட சதுப்புநிலம் உள்ளது. இப்பகுதிக்கு அடிக்கடி யானைகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு நேற்று முன்தினம் மாலை யானை கூட்டத்துடன் வந்த ஒரு குட்டி யானை சேற்றில் சிக்கியது. அந்த குட்டியை மீட்க தாய் யானை மற்ற யானைகள் முயன்றன. ஆனால், சேற்றில் இருந்து வெளியே இழுக்க முடியாததால், குட்டி யானை இறந்துள்ளது. […]

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி.. முதல்வர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி, உழவர் நல சேவை மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உழவர் நலத்துறையின் சார்பில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.வேளாண் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரியலூர்-பசுபதீஸ்வரர் கோவிலில் அம்மன் தாலிகள் திருட்டு-பரபரப்பு

அரியலூர் மாவட்டத்தில் வரலாற்று புகழ் பெற்ற சூரியன் ஆண்டுக்கு இரண்டு முறை சிவபெருமானை வழிபடும் தலமான காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர்கோவிலில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலிகள் திருட்டுபோன சம்பவம் பெண் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது பசுபதீஸ்வரர் சிவன் கோயில். இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். ஆண்டுக்கு இரண்டு முறை சூரிய ஒளி கோயில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது பட்டு ஒளிவீசுவதால், சூரிய […]

இன்றும்-நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம், இன்றும் நாளையும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட தகுதி உடைய வாக்காளர்கள், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் படிவம் 6ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். மீண்டும் ஜனவரி 3, 4ம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன

ஸ்ரீரங்கம் பகல் பத்து 8ம் நாள்.. இரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி நம்பெருமாள் சேவை

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாபகல் பத்து 8ம் திருநாளான இன்று அர்ஜுன மண்டபத்தில் இரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி ; அதில் சிறிய நெற்றி சுட்டித்தொங்கல் அணிந்து; சிகப்புக் கல் அபய ஹஸ்தம் சாற்றி; கண்டாபரணம்; திருமார்பில் சிகப்புக் கல் சூர்ய பதக்கம் அணிந்து; இருபுறமும் ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம் – அழகிய மணவாளன் பதக்கம் சாற்றி; சிகப்புக் கல் மகர கண்டிகைகள் அணிந்து – அதன் மேல் சிகப்புக் கல் […]

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள்

ரிஷிவந்தியத்தில் ரூ.6.50 கோடி மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றியம் கட்டடம் கட்டப்படும். உளுந்தூர்பேட்டையில் புதியதாக உருவாக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரிக்கு ரூ.18 கோடி ரூபாயில் புதிய கல்லூரி கட்டடம் கட்டப்படும். உளுந்தூர்பேட்டை சேந்தநாடு கிராமத்தில் 50 ஏக்கரில் ரூ.10 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும். சங்கராபுரம் மக்களுக்காக புதுபாலப்பட்டில் ரூ.18.50 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். சின்னசேலம் வட்டத்தில் ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் புதிய தீயணைப்பு மீட்பு பணிகள் கட்டடம் […]

தங்கம் விலை கிடு கிடு உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,000க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.20 விலை உயர்ந்து ரூ.274க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அஜிதா விவகாரம்.. விஜய் கேட்டிருந்தால் பிரச்னை வந்திருக்காது.. சரத்குமார்

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, “தென்காசி தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? தேர்தல் அறிவிக்கப்பட்டு மாநில நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து எத்தனை இடத்தில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப் போகிறோம் என்று தெரிந்த பின்பு முடிவெடுக்கப்படும். மேலும், நான் நிற்பதை விட […]

விஜய் ஆண்டனி ரசிகனாக மாறிய சிவராஜ்குமார்

சென்னையில் நடைபெற்ற தமிழ்ப் பதிப்பு முன் வெளியீட்டு நிகழ்ச்சியில், பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். டாக்டர் சிவராஜ்குமார் அவர்களின் அர்ப்பணிப்பு, உபேந்திரா மற்றும் ராஜ் B. ஷெட்டியின் நடிப்பு, அர்ஜுன் ஜான்யாவின் இயக்கம் ஆகியவற்றை விஜய் ஆண்டனி பாராட்டினார். நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது… நான் விஜய் ஆண்டனி ரசிகன். அவர் சினிமாவில் எல்லா வேலையும் செய்துள்ளார். அவரின் பிச்சைக்காரன் படத்தின் ரீமேக் வாய்ப்பு […]

திருப்பரங்குன்றம் மலைமீது பிரியாணியுடன் சென்ற இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தம்

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பழனியாண்டவர் கோவில் வழியாக 700க்கும் மேற்பட்ட பக்தர்களும் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள படிக்கட்டு பாதையில் 240க்கு மேற்பட்டவர்களும். மலைக்கு மேல் சென்றுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என சர்ச்சை ஏற்பட்டு வந்த நிலையில் போலீசார் மலை முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டு கடந்த 3 ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்ல அனுமதி தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி சிக்கந்தர் பாஷா […]

யார் தீய சக்தி-நல்ல சக்தி என 2026ல் தெரியும்-விஜய் வசந்த்

யார் தீய சக்தி – நல்ல சக்தி என 2026 தேர்தலில் தெரியவரும். ஆட்சியில் பங்கு என்பது ஒவ்வொரு தொண்டனின் கோரிக்கையாக உள்ளது என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேட்டி. தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறுகையில், 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் மாநில அரசு 40% – மத்திய அரசு 60% நிதி பங்கீடு என […]

 தந்தை- மகன் உறவை சீர்குலைக்கிறார் ஜி.கே.மணி… கே.பாலு

 தந்தை- மகன் உறவை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் ஜி.கே.மணி என்று பாமக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். குடும்ப நல்லுறவை கெடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் ஜி.கே.மணி என்றும் கட்சியை சீர்குலைக்க பல்வேறு நாடகங்களை நடத்தினார் ஜி.கே.மணி என்றும் கே.பாலு தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்… ஜெயக்குமார்

ஓ. பன்னீர்செல்வத்தை கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் அதிமுகவின் உட்கட்சி பிளவு நீண்டகாலமாக தொடரும் ஒரு முக்கியமான விவகாரமாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி இரு அணிகளாகப் பிரிந்தது. ஒன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்றொன்று ஓ. பன்னீர்செல்வம் தலைமையில். 2017-இல் இரு அணிகளும் இணைந்து இரட்டைத் தலைமை அமைப்பை உருவாக்கினாலும், 2022-இல் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு […]

நடைபயிற்சி சென்ற ஆசிரியர் கொலை.. உபியில் சம்பவம்

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏபிகே உயர்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியராக ராவ் டானிஷ் அலி (45) என்பவர் கடந்த 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன் தினம் (24ம் தேதி) இரவு சுமார் 9 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மவுலானா ஆசாத் நூலகம் அருகே தனது சக ஊழியர்கள் இருவருடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம […]

ஸ்டாலின் இருக்கும் வரை- மதவெறி ஆட்டத்துக்கு இடம் இல்லை- முதல்வர் பேச்சு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,773 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில்; “திராவிட மாடல் அரசு என்பது சாதனை திட்டங்களின் அரசு. சிலர் வாயிலேயே வடை சுடுவது போன்ற அரசு அல்ல இது. மக்களை நேரடியாக சந்திக்கக் கூடிய திறன் கொண்டது திமுக அரசு. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் தனிக்காட்டு ராஜா. பொருளாதார வளர்ச்சி, […]

ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தை பூட்டியதால் பரபரப்பு… போலீஸ் குவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை தமிழகத்திலே அமமுக கைப்பற்றியது. அதில் அப்போது அமமுகவில் இருந்த மா.சேகர் பேரூராட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அண்மையில் அவர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் பேரூராட்சிக்கு உரிய நிதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.‌ இதனால் கடந்த நான்கரை ஆண்டு காலமாக எந்த ஒரு பணிகளும் செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து அதிமுக மத்திய மாவட்ட செயலாளரும் ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவருமான மா.சேகர் தலைமையில் […]

சிவகங்கை தொகுதியில் போட்டியா?- சீமான் விளக்கம்

 நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போகிறாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு வித்தியாசமான முறையில் பதிலளித்தார். செய்தியாளரின் கன்னத்தை கிள்ளியபடி சிரித்துக்கொண்டே பதிலளித்த சீமான், இதுபோன்ற கேள்விகளுக்கு இப்போது பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்தார். இந்த நடத்தை செய்தியாளர்களிடையே சிரிப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. சிவகங்கை தொகுதியில் சீமான் போட்டியிடவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவிய நிலையில், இந்தக் கேள்வி எழுந்தது. ஆனால் சீமான் அதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லாமல், […]

மன்மோகன் சிங் நினைவு நாள்- காங்., சார்பில் மரியாதை

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் மறைந்த இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் நினைவு நாள் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முருகேசன் (வடக்கு) ராம. சுப்புராம். Ex MLA ( தெற்கு) ஆகியோர் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன் மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் இப்றாஹீம் பாபு வட்டார காங்கிரஸ் தலைவர் சூர்யா பழனியப்பன் ஆகியோர் முன்னிலையில் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் […]

அதிமுக விருப்ப மனுக்கள் பெற கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை அதிமுக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யும் கால அவகாசம் மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிசம்பர் 15 முதல் 23 வரை விருப்ப மனு தாக்கல் நடைபெற்ற நிலையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகளின் தொடர் வேண்டுகோளை ஏற்று இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு வேட்பாளர் தேர்வு பணியை மேலும் விரிவாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாகும். புதிய அறிவிப்பின்படி, […]

கூட்டு குடிநீர் குழாய் 2வது முறையாக உடைப்பு-சரிசெய்யும் மாநகராட்சி

கோவை – பில்லூர் 2 கூட்டு குடிநீர் திட்ட குழாய் இரண்டாவது முறையாக உடைப்பு : சாலையில் வெள்ளம் போல் சென்ற குடிநீர் – சரி செய்யும் பணியில் மாநகராட்சி தீவிரம்… கோவை நகருக்கு பில்லூர், சிறுவாணி, ஆழியார் ஆகியவற்றின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை, திட்டம் குடிநீர் குழாய் மற்றும் சாலை அமைப்பதற்கு போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நகரில் பெரும்பாலான பகுதிகளுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் […]

ஜன.20ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர்…

தமிழக சட்டப்பேரவையின் 2026ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 20ம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் மு. அப்பாவு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, கூட்டத்தொடர் குறித்த விவரங்களை வெளியிட்டார்- ஜனவரி 20-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றுவார். தமிழக அரசின் கொள்கைகள் மற்றும் புதிய திட்டங்கள் […]

ஆண்கள் விடுதியில் புகுந்து லேப்டாப் திருடும் மர்ம நபர்

கோவையில் ஆண்கள் தங்கம் தனியார் விடுதியில் சர்வ சாதாரணமாக புகுந்து லேப்டாப் திருடும் நபர் : அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் – மாணவர்கள் மத்தியில் அச்சம் !!! கோவை, காந்திபுரம் இரண்டாவது வீதியில் உள்ள ராஜேஸ்வரி மேன்சன் என்ற ஆண்கள் தங்கும் விடுதியில் அதே பகுதியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர் ரமணன் என்பவர் அங்கு தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் ரமணன் அறை […]

பிள்ளையார் நோன்பு விழா.. 1Kg உப்பு.. ரூ.26 ஆயிரத்திற்கு ஏலம்

கரூரில் நடைபெற்ற 39-ஆம் ஆண்டு பிள்ளையார் நோன்பு விழாவில் 1 கிலோ உப்பு 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன ருசிகர நிகழ்வு நடைபெற்றது. கரூரில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்களின் உலகளாவிய சமுதாய நோன்பு விழாவான பிள்ளையார் நோன்பு விழாவானது 39-ம் ஆண்டாக, கரூரில் உள்ளதனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் செம்மல் மேலை பழநியப்பன் நோன்பின் மாண்பினை விளக்கிக் கூறி வரவேற்புரை ஆற்றினார். இதையடுத்து விழாவில் கூடியிருந்த 200 பேருக்கும் ஏலம் […]

விவாகரத்து கேட்ட ஆத்திரம்… மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (40) மற்றும் மகேஷ்வரி (39) தம்பதியினர், கடந்த 2011-ல் திருமணமான நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வந்தனர். பாலமுருகன் ஐ.டி நிறுவனத்திலும், மகேஷ்வரி தனியார் வங்கியில் துணை மேலாளராகவும் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் பாலமுருகன் தனது வேலையை ராஜினாமா செய்த நிலையில், தம்பதி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பாலமுருகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மகேஷ்வரி தனது குழந்தைகளுடன் […]

ஒன்றிய-பாஜ அரசை கண்டித்து… திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துமகாத்மாகாந்திபெயரைநீக்கி உழைக்கும் மக்களை வஞ்சிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்தலைமையில் புதுக்கோட்டை யூனியன் அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் ,சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாநகர செயலாளர்கள் எம்.லியாகத்தலி,ராஜேஷ், மு.க.ராமகிருஷ்ணன், சண்முகம் , மணிமாறன் , (திமுக) , பெனட்அந்தோனிராஜ் (காங்கிரஸ்) […]

சென்னையில் மதி உணவுத் திருவிழா- டிச.28 வரை நீட்டிப்பு!

பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்று வரும் மதி உணவுத் திருவிழா டிச.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகரில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மதி உணவுத் திருவிழா நடைபெறுகிறது. உணவுத் திருவிழா இன்றுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிச.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்தை மேலும் வளப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழிகாட்டுதலின் கீழ் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு […]

MGR பாதையில் எந்நாளும் பயணித்திட உறுதியேற்போம்- டிடிவி

எம்.ஜி.ஆர் காட்டிய பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38வது நினைவுநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது; பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனியாக, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கும் கொடை வள்ளலாக, உலகமெங்கும் வாழும் […]

மக்கள் திலகத்திற்கு செங்கோட்டையன் மலரஞ்சலி

தமிழக முன்னாள் முதலமைச்சரும், ‘புரட்சித் தலைவர்’ என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் அவருக்குத் தங்களது மரியாதையைச் செலுத்தி வருகின்றனர்.சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மரியாதை செலுத்த உள்ள நிலையில், அரசியல் களம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், தமிழக முன்னாள் அமைச்சரும், தற்போது தமிழக வெற்றிக் […]

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. மீட்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழவெளியூர் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் 24.இவர் நேற்று இரவு மது அருந்திவிட்டு மது போதையில் வந்துள்ளார். அப்போது முருக உடையார் என்பவரின் கிணற்றில் தவறி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட பகுதி பொதுமக்கள் மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரமாக போராடி இளைஞரை உயிருடன் பத்திரமாக மீட்டனர். மதுபோதையில் இளைஞர் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் […]

வீட்டு கடனை செலுத்தாததால்.. வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்

கரூர் அருகே குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டுக் கடன் தவணைகள் செலுத்ததால் வீட்டிற்கு சீல் வைத்த தனியார் நிறுவனம். குழந்தைகள் தேர்வு எழுத முடிவில்லை, சாப்பாட்டிற்கு வழியில்லை என பணத்தை திருப்பி செலுத்த கால அவகாசம் கேட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு. கரூர் மாவட்டம், கடவூர் அருகே ராஜலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, ஜானகி தம்பதியினர் இவர்களுக்கு மூன்று பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை உள்ளது. சொந்த ஊரில் […]

ராமேஸ்வர மீனவர்கள் 12 பேர் கைது- டிச.26ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வர மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளதைக் கண்டித்து, நாளை மறுநாள் (டிசம்பர் 26, வெள்ளிக்கிழமை) ராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களை, நெடுந்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது இலங்கையின் மயிலிட்டி […]

விடுதலை போராட்ட வீரர் திருவுருவ சிலைக்கு அமைச்சர் ராஜா அடிக்கல்

பட்டுக்கோட்டையில் விடுதலைப் போராட்ட வீரர் திரு நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருஉருவச் சிலை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் விடுதலைப் போராட்ட வீரர் நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருஉருவ சிலை அமைப்பதற்கான பணிகள் துவங்குவதற்கு கட்டுமான பணிகளை துவக்கி வைப்பதற்கு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைத்தார். அவர்களோடு தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி எம்எல்ஏ அண்ணாதுரை மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் […]

புதுகையில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்ட கிறிஸ்துவ நல்லிணக்க பேரவை சார்பாக நடத்தப்பட்ட சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. விழாவில் அனைத்து சமுதாய மத குருமார்களும் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இந்நிகழ்வில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட கழக செயலாளர்கேகே. செல்லபாண்டியன் முன்னிலை வகித்தார், இந்த   நிகழ்வில் மாநகர மேயர் திருமதி. திலகவதி செந்தில்,மாநகர […]

சேலம் வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் நடிகர் அருண்விஜய் சாமிதரிசனம்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “ரெட்டை தல” திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் அருண்விஜய் மற்றும் நடிகை சித்தி இதானி சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நடிகர் அருண் விஜய், நடிகை சித்தி இதானி வந்ததை அறிந்த ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண் விஜய், […]

தங்கம் விலை மேலும் உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,02,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,800-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.244-க்கும் விற்பனையாகிறது.

தமிழ் மகன் உசேன் உடல்நிலையில் முன்னேற்றம்

அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ ஃபர்ஸ்ட் மெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ரூ.56 லட்சம் ஹவாலா பணத்தை டூவீலரில் கடத்தியவர் கைது

தமிழக கேரள எல்லையான வேலந்தாவளம் சோதனை சாவடியில் கந்தேகவுண்டன் சாவடி போலீசார் இன்று காலை வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் கோவையில் இருந்து கேரளாவை நோக்கி வந்த நபர், போலீசாரை பார்த்ததும் வேகமாக திரும்பி சென்றார். இதனையடுத்து போலீசார் இரு சக்கர வாகனத்தில் திரும்பிச் சென்ற நபரை விரட்டி பிடித்து அவரது வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது வாகனத்தின் இருக்கை மற்றும் பெட்ரோல் டாங்கில் ரகசிய அறை அமைக்கப்பட்டு அதில் கட்டுகட்டாக […]

எடப்பாடி-ஓபிஎஸ்- டிடிவி குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒத்தக்கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினாலும், டிடிவி தினகரன் அல்லது ஓபிஎஸை சேர்க்க தயாரா என்பதில் தெளிவில்லை. இதனால் அதிமுகவில் ஒற்றுமை இல்லை என விமர்சித்தார். பியூஸ் கோயல் தமிழக அரசியல் நிலை அறியாமல் பேசுவதாகவும், அவரது முயற்சி வெற்றியடையாது என்றும் கூறினார்.

தடாலடியாக காபி தூள் விலை உயர்வு

தமிழகத்தில் காபி தூள் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் கிலோவிற்கு ரூ.980-லிருந்து ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளதால் காபி பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச அளவில் காபி உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகளான பிரேசில் மற்றும் வியட்நாமில் இயற்கை பேரிடர்களால் தோட்டங்கள் அழிந்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு ஒரு கிலோ காபி தூள் ரூ.500-க்குள் இருந்த நிலையில், தற்போது அதன் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

41 பேரை கொன்ற விஜய்.. தூத்துக்குடி பாதிரியார் பரபரப்பு பேச்சு

திருச்செந்தூர் மாவட்ட தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி முதல்வர் காட்வின் பேசிய கருத்துகள் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. வன்முறையாக நடிக்கும் நடிகர்களுக்கு (நடிகர் விஜய்) மாணவர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவது குறித்து அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார். “கரூரில் 41 பேரை கொன்ற ஒருவனுக்கு ஆதரவு அதிகரிப்பது ஏன்?” என கேள்வி எழுப்பிய அவர், இளைஞர்கள் சினிமா மோகத்தை தவிர்த்து பாரம்பரிய விழுமியங்களை போற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் அறை முன் மாந்திரீக பூஜை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமாண்டப்பட்டியில், ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஓமலூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள்  இங்கு கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ கென்னடி உட்பட  30- ஆசிரியர்கள் இங்கு  பணியாற்றுகின்றனர். இந்த பள்ளி தலைமை ஆசிரியர் அறை முன்பாக கரி தூள் கொண்டு நட்சத்திர வடிவில் கோலமிட்டு,  அதன் நடுவில்  மஞ்சள், குங்குமம், மரக்கட்டை  பொம்மை  மற்றும் முட்டை  வைத்து மாந்திரீக பூஜை […]

டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் ரூ. 28 ஆயிரம் பறிப்பு- திருச்சி க்ரைம்

டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் ரூ. 28 ஆயிரம் பறிப்பு திருச்சி புத்தூர் சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (55) இவர் கரூர் பைபாஸ் சாலை அருகே உள்ள டாஸ்மாக்கில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார் .இவர் நேற்று வேலையை முடித்துவிட்டு தன் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு புத்தூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மூன்று மர்ம நபர்கள் இவரை வழிமறித்து அவரிடம் இருந்த பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அந்தப் […]

புதுகையில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீய விளைவு குறித்து விழிப்பணர்வு

புதுக்கோட்டை மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை ஆகியவை சார்பில் மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருட்கள்ஆகியவற்றால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். உடன் உதவி கலால் ஆணையர் திருமால், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

மீனவர்களை விடுவிக்க… பிரதமர் மோடிக்கு முதல்வர் அவசர கடிதம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது சிறையிலுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து முதல்வர் தனது கடிதத்தில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்: கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 14-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களின் […]

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை

ரேஷன் கார்டு (Ration Card) வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது முதல் வழங்கப்படும், என்னென்ன பொருட்கள் வழங்கப்படுமா? ரொக்கப்பணம் கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புகளும் மேலோங்கியிருக்கிறது. இம்முறை சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் பொங்கல் பரிசுத் தொகுப்பில் (Pongal Gift) ரொக்கப் பணம் 3000 கொடுக்கப்படும் என்றும், 5000 கொடுக்கப்பட கூட வாய்ப்பு இருக்கிறது என்றும் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தமிழ்நாடு அரசிடமிருந்து இன்னும் வெளியாகவில்லை. அதேநேரத்தில் பொங்கல் பரிசுத் […]

எத்தனையோ கட்சிகள் வரலாற்றின் குப்பை தொட்டியில்- முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. “தீரர்கள் கோட்டம் தி.மு.க”, “திராவிட அரசியல் – திராவிட அரசு இயல்”, “முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர்” ஆகிய நூல்களை வெளியிட்டு வைத்த இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூல் வெளியீட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “தீரர்கள் […]

பனிப்பொழிவு-பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

கோவையில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை கிடு , கிடு என உயர்ந்து காணப்பட்டது. மல்லிகை கிலோ ரூபாய் 2 ஆயிரத்திற்கு விற்பனையானது. கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் வெயில் நிலவுவதாலும், இரவில் பனிப்பொழிவு காணப்படுவதாலும், பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் மலரும் முன்பே பனியால் கருகி விடுகிறது. இதனால் பூக்களின் உற்பத்தி குறைந்ததால் விலை அதிகரித்து காணப்படுகிறது. இது தவிர தற்பொழுது […]

யாருக்கு எவ்வளவு வாக்கு… விஜய் மீது கனிமொழி தாக்கு..

கோவை விமானநிலையத்தில் கனிமொழி எம்பி பேட்டியில் கூறியதாவது.. சென்னையில் இருந்து கோவை வந்த திமுக மகளிரணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி அவர்களுக்கு கோவை விமானநிலையத்தில், கழக மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில் […]

SIR வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 92,626 பேர் விண்ணப்பம்!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision – SIR) நவம்பர் 4, 2025 அன்று தொடங்கி டிசம்பர் 14, 2025 அன்று முடிவடைந்தன. இதன் நோக்கம் வாக்காளர் பட்டியலை தூய்மையாக்குவதாகும். இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள், இரட்டைப் பதிவு செய்தவர்கள் போன்ற தவறான அல்லது தேவையற்ற பெயர்களை நீக்குவது இதன் முக்கிய நோக்கம். SIR பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19, 2025 அன்று […]

பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். இணை பொறுப்பாளர்களாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால், சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி முரளிதர் மொகல் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இந்த நிலையில், தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று (செவ்வாய்க்கிழமை) வருகை தருகிறார். தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் […]

தங்கம் விலை சவரன் ரூ.1,02,160க்கு விற்பனை

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.1,02,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,770-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.234-க்கும் விற்பனையாகிறது.

தவெக ஒரு கலப்பட கட்சி- இபிஎஸ் பேட்டி

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஊரக வேலைத் திட்டத்தில் 100 நாள் வேலை என்பதை திருத்தம் செய்து 125 நாட்களாக மத்திய அரசு அதிகரித்திருக்கிறது. முதலமைச்சருக்கு பாராட்ட மனமில்லாமல் அதிமுகவை குற்றஞ்சாட்டுகிறார். 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயரே நீடிக்க வேண்டும். ரயில் கட்டண உயர்வை பரிசீலித்து மத்திய அரசு குறைக்க வேண்டும். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.5000 வழங்க நடவடிக்கை வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக வைத்த அதே […]

போலீஸ் SI-க்கு மிரட்டல்- தவெக நிர்வாகிகள் கைது

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஆலம்பாடி பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு முறையாக அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது குறித்து காங்கேயம் எஸ். ஐ சரவணன் உள்ளிட்ட காவலர்கள் கேட்டுள்ளனர்.அப்போது, அங்கிருந்த தவெக நிர்வாகிகள் எஸ். ஐக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து எஸ். ஐ சரவணன் அளித்த புகாரின் பேரில் தவெக நிர்வாகிகளான ஆலம்பாடி கிளை செயலாளர் நடராஜ் (51), செயற்குழு உறுப்பினர் பிரதீப் குமார் ( […]

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்..எம்பி கனிமொழி

‘தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., “தமிழகத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே தேர்தல் அறிக்கை அமையும்” என்று உறுதி அளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, 2026 தேர்தல் அறிக்கையில் பின்வரும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்: தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திமுக தேர்தல் அறிக்கை […]

வீடற்றோருக்கான இரவு நேர காப்பம்-துணை முதல்வர் திறந்து வைத்தார்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (22.12.2025) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை மண்டலம், மெரினா கடற்கரை, அண்ணா பூங்கா அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 86.40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வீடற்றோருக்கான இரவுநேர காப்பகத்தினை திறந்து வைத்து, காப்பகத்தில் தங்கிடும் 86 நபர்களுக்கு பாய், தலையணை, படுக்கைவிரிப்பு உள்ளிட்ட நல உதவி தொகுப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; சென்னை மெரினா கடற்கரையில் தங்கி, கைவினைப் […]

மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம்..

தமிழக்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, 12,570க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் 640 உயர்ந்தது. மீண்டும் மாலையில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1360 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,560க்கு விற்பனையாகிறது. ஒரே நாளில் 2 முறை தங்கம் உயந்ததால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உணவில் விஷம்- 5வயது குழந்தை பலி- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சீரியஸ்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பி.முதுகானப்பள்ளி கிராமத்தில் பெங்களூரை சேர்ந்த ஜெய்பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் பீகாரைச் சேர்ந்தவர்கள் ஒரே குடும்பத்தினர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அனைவரும் உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது மயக்கம் ஏற்படவே அருகே உள்ள பாகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். தொடர்ந்து இன்று காலை மயக்கத்துடன் வாயில் நுரை தள்ளியவாறு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர். […]

தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஜாமினில் விடுதலை

தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவராக இருப்பவர் பி.ஆர் பாண்டியன்.இவர் திருவாரூரில் மத்திய அரசுக்கு சொந்தமான ஓஎன்சிசி நிறுவனத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.பின்னர் இந்த வழக்கில் திருவாரூர் நீதிமன்றம் அவருக்கு 13 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது .அதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் அதில் நீதிமன்றம் அவரது தண்டனையைநிறுத்தி வைத்தது. அதை தொடர்ந்து இன்று பிஆர் பாண்டியன் திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது தேசிய […]

குடும்ப தகராறு.. கணவனை உயிரோடு எரிக்க முயன்ற மனைவி கைது

திருச்சி கீழ சிந்தாமணி பூசாரி தெரு இந்திரா நகரை சேர்ந்தவர் பிரகாஷ்( 39). ஏசி மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரமணமணி (34). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்நிலையில் பிரகாஷ் தனது மனைவியின் நகையை அடகு வைத்து பணம் பெற்றார். பின்னர் அந்த பணத்தை வைத்து வீட்டை குத்தகைக்கு எடுத்தார். பிறகு அடகு வைத்த நகையை மீட்பது தொடர்பாக இருவருக்குள் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]

கரூர் அருகே பெண்மணியை அடித்து தாக்குதல்- கலெக்டரிடம் புகார்

கரூர் அருகே பண தேவைக்காக நிலத்தினை கிரையம் வைத்து கடன் வாங்கிய பிரச்சனையில் பெண்மணியை அடித்து கீழே தள்ளிய சிசிடிவி வீடியோவை வெளியிட்டு பாதிக்கப்பட்ட பெண்மணி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். கரூர் மாவட்டம், தென்னிலை அடுத்த வைரமடை கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி இவரது கணவர் பெரியசாமி இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் . ரேவதி தனக்கு சொந்தமான 1.60 ஏக்கர் நிலத்தை பண தேவைக்காக கருக்கம்பாளையத்தை சேர்ந்த ராஜா மணி என்பவரிடம் […]

செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.. அமைச்சர் மாசு

சென்னை :  ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களின் போராட்டம் 5-வது நாளை எட்டியுள்ளது. சம ஊதியம், பணி நிரந்தரம், ஓய்வூதிய உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிண்டி எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கான செவிலியர்கள் கலந்துகொண்டு, வெயில், மழை என எந்த வானிலையிலும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் போராட்ட குழுவினருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர் மற்றும் […]

விஜய்க்கு நல்லவர் யார்? கெட்டவர் யார் ? என தெரியல.. சரத்குமார் ஸ்பீச்

சென்னை : பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார், நெல்லையில் நிருபர்களிடம் பேட்டி அளித்தபோது, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் குறித்து கடுமையான விமர்சனம் வைத்தார். சரத்குமார் கூறியதாவது: “2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். ஆனால், பிரசாரம் மேற்கொண்டு ஆட்சியை மாற்றியமைக்க பாடுபடுவேன். எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும் பிறருக்கு விட்டுக் கொடுத்து விடுவேன். அதனை தொடர்ந்து விஜய் குறித்து அவர் பேசுகையில் ” அவருக்கு நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் […]

நிச்சயம் ஒரு ஔி பிறக்கும்.. கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பேச்சு

தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தவெக கட்சித் தலைவர் விஜய் அவர்கள் கிறிஸ்மஸ் மரத்திற்கு ஒளி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். பேராயர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசு வழங்கினார் விஜய். இந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றுள்ள பொதுமக்களுக்கு தவெக தலைவர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும் விழாவில் பங்கேற்றுள்ள முக்கியஸ்தர்களுக்கு விஜய் […]

பட்டுக்கோட்டை அருகே கந்தூரி விழா- கொடி ஊர்வலம்..பக்தர்கள் தரிசனம்

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் கந்தூரி விழாவை முன்னிட்டு கொடி ஊர்வலம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற காட்டுப்பள்ளி வாசல் காரணக்கடல் கருணை மகான் ஹஜ்ரத் சம்சுல் உழும் செய்து நசுருதீன் வலியுல்லாஹ் அவர்களின் தர்கா 5 38 ஆம் ஆண்டு மாபெரும் பெரிய கந்தூரி விழாவை முன்னிட்டு தர்காவிலிருந்து பல்லக்கு ஊர்வலமாக புறப்பட்டது அதில் மயிலாட்டம் புலியாட்டம் வேடம் அணிந்து ஊர்வலத்தில் வந்தனர் அதோடு நாட்டிய குதிரைகள் […]

பொள்ளாச்சியில் திமுகவினர் அரங்கேற்றிய மேடை நாடக நிகழ்ச்சி…பாராட்டு

தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியில் விளையாட்டு மேம்பாடு அணி மற்றும் பொள்ளாச்சி வடக்கு நகர திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்,சமுதாய சமபந்தி விருந்து,கிரிக்கெட் போட்டி உள்ளிட்டவைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது . இந்நிலையில் பொள்ளாச்சி – பல்லடம் சாலையில்,பொள்ளாச்சி வடக்கு நகர பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், பொதுமக்களிடையே திமுக அரசின் […]

68 நூலக கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை- ரூ.17.82 கோடியில் கட்டப்பட்டுள்ள 68 நூலகக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். கடலூர், தஞ்சை, நாகையில் ரூ.1.9 கோடியில் கட்டப்பட்டுள்ள 3 கிளை நூலகக் கட்டடங்கள் திறக்கப்பட்டது. உத்திரமேரூர், வேளாங்கண்ணி, பள்ளிப்பாளையம் ஆகிய 3 புதிய காவல் உட்கோட்டங்கள் திறக்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் 20 மாவட்டங்களில் உள்ள 60 அரசுப் பள்ளிகளில் 96.49 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 392 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 4 […]

MGR-ஐ போல் எல்லோரும் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்து விட முடியாது- நயினார்

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை முறையாக செய்ய வேண்டியது முதல்-அமைச்சரின் கடமை. விஜய் கட்சி தூய சக்தியா என்பதை தேர்தலில் மக்கள் தான் சொல்ல வேண்டும். விஜய்யின் நோக்கம் தி.மு.க. இருக்கக்கூடாது என்பதுதான். தேர்தலில் எத்தனை முனை போட்டி இருந்தால் தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்பதை உணர்ந்து விஜய் செயல்பட்டால் நல்லது. எம்.ஜி.ஆரை போல் எல்லோரும் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்து விட முடியாது. வரும் தேர்தல் எங்களுக்கு […]

நண்பரே மன்னிக்கவும் தப்புதான் – செல்லூர் ராஜு பதிவு

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் செல்பி எடுத்தது போன்ற வீடியோவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “நண்பர்களே இன்றைய அறிவியல் வளர்ச்சி என்னுடைய இதயதெய்வங்களோடு நான் செல்பி எடுப்பதுபோல்” என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அந்த பதிவுக்கு கீழே, “ஏ.ஐ.-ல் விளையாடும் செல்லூரார், அவ்வளவுதூரம் போய்விட்டு அண்ணாவை சந்திக்காதது […]

போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிட்) திருச்சி மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் வே. சரவணன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் , வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சுரேஷ் பாபு, நடராஜன்,துணை மேலாளர் கள் ராமநாதன், புகழேந்தி ராஜ், கார்த்திகேயன், உதவி பொறியாளர் ஹரித்,சாலை போக்குவரத்து நிறுவனம் செல்வம், மற்றும் போக்குவரத்து […]

திமுக மண்டல மகளிர் அணி மாநாடு… பணிகள் துவக்கம்

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வரும் 29ம் தேதி , “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுவதையொட்டி, விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. கழக மேற்கு மண்டல பொறுப்பாளர் வி. செந்தில் பாலாஜி, வீட்டு வசதித் துறை அமைச்சர் அண்ணன் சு.முத்துசாமி , செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் , மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், மக்களவை உறுப்பினர்கள், கழக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற […]

நாடு முழுவதும் ரயில் பயண கட்டணம் உயர்வு!

டில்லி இந்திய ரயில்வே துறை நாடு முழுவதும் பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வருகிற டிசம்பர் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரயில்வேயின் அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்கும் நோக்கில் இந்த கட்டண உயர்வு முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ரயில்வே ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. 2024-25 நிதியாண்டில் மொத்த செலவு இரண்டு லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், குறைந்த அளவிலான […]

நாதகவில் போட்டியிடும் 234 வேட்பாளர்களும் இளைஞர்கள் தான் – சீமான்

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை, மாநில கலந்தாய்வு கூட்டம், நேற்று திருச்சியில் நடந்தது. இதில், சீமான் பேசியதாவது: பெண்களுக்கான விடுதலை, உரிமை ஆகியவற்றை போராடித்தான் பெற வேண்டும். அதற்கான களமே அரசியல். அதனால்தான், சட்டசபை தேர்தலில், சரிபாதியாக 117 இடங்களை, பெண்களுக்கு நாம் தமிழர் கட்சி வழங்குகிறது.போட்டியிட, தங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லையே என வருத்தம் இருக்கலாம். களத்தில் உள்ள சிக்கலை புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மை சமூகத்துக்கும் இடம் கொடுக்க வேண்டும். கொடுக்காமல் விட்டால், விமர்சனங்கள் […]

இபிஎஸ், பாஜகவிடமிருந்து அதிமுகவை பாதுகாக்க வேண்டும்.. உதயநிதி பேச்சு

சென்னை-புளியந்தோப்பில் உள்ள டான் பாஸ்கோ பாலிடெக்னிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அங்கு கூடியிருந்த கிறிஸ்தவ சமூகத்தினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்த அவர், அரசியல் எதிரிகளை கடுமையாக விமர்சித்து பேசினார். “2026-ல் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும் என்ற உறுதியுடன் தேர்தல் திருவிழாவுக்கு தயாராவோம்” என்று அழைப்பு விடுத்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பாஜக […]

கோயம்பேடு அருகே பஸ் சென்டர் மீடியனில் மோதி விபத்து

சென்னை, பூந்தமல்லி-திருவள்ளூர் வழித்தடத்தில் செல்லும் சென்னை மாநகரப் பேருந்து, கோயம்பேடு மெட்டுக்குளம் சந்திப்பு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்திற்குள்ளானது. பணிமனைக்கு பஸ்சை ஒட்டி வரும்போது டிரைவர் பழனிக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஓட்டுநர் பழனியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தங்கம் விலை சவரன் ரூ.99,840க்கு விற்பனை

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.12, 480-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.231-க்கும் விற்பனையாகிறது.

தமிழகத்தில் மொத்தம் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்..

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் மூலமாக 97,37,832 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெயர் விடுபட்டவர்கள், மீண்டும் சேர்க்க ஜனவரி 18ம்தேதி வரை அவகாசம் உள்ளது. இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உட்பட மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முதல்கட்டமாக பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட […]

BHEL தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி- துரை வைகோ எம்பி கோரிக்கை

திருச்சி BHEL நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்ய கோரி கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமியிடம் திருச்சி மதிமுக எம்பி துரை வைகோ கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறியதாவது… ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். திருச்சி BHEL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி (WP 20302 of 2023, dated 05.12.2025) பணி நிரந்தரம் செய்ய வேண்டி […]

நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனி எச்சரிக்கை!

சென்னை, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.20-12-2025 மற்றும் 21-12-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 22-12-2025 முதல் 24-12-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.25-12-2025 மற்றும் 26-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]

தமாகாவுடன் இணைந்த காந்திய மக்கள் இயக்கம்

காந்திய மக்கள் இயக்கம் தலைவராக இருந்த தமிழருவி மணியன் பின்னாளில் தனது இயக்கத்தை காமராஜர் மக்கள் கட்சி என மாற்றம் செய்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ஈரோட்டில் இன்று (டிச., 20) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழருவி மணியன் தனது காமராஜர் மக்கள் கட்சியை, ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் அதிகாரப்பூர்வமாக இணைத்துள்ளார். தமாகா தற்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது- சீமான் தாக்கு

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (டிச., 20) செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது வாக்குரிமையையே காப்பாற்ற போராட வேண்டிய நிலை உள்ளது. உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர். மிக குறுகிய காலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடித்துள்ளனர். களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது.களத்திற்கு வராதவர் களத்தை பற்றி பேசுவதா? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் நின்றவர் யார்? என்று கேள்வி எழுப்பினார்.

கோவை- கொட்டும் பனியில் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது செவிலியர்களை கைது செய்ததை கண்டித்து, கோவையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த (தொகுப்பூதிய) செவிலியர்கள், நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்று அவர்கள் இரவு பகலாக தற்பொழுது வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் வருகின்றனர். இந்த போராட்டத்தில், தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை–3 […]

தூய சக்தி-தீய சக்தி சினிமா டயலாக்கை பேசும் விஜய்-அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை அருகே வடவாளம் பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை தமிழக கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். அதன் பிறகு பேட்டி அளிக்கையில் .. சினிமா துறையில் வசனம் பேசுவது போல் தவெக தலைவர் விஜய் திமுகவை தீய சக்தி என பேசி வருகிறார் ஆனால் மக்கள் சக்தி எங்களிடம் மட்டுமே உள்ளது எனவும் சிலப்பதிகாரத்தைப் பற்றி விஜய்க்கு என்ன தெரியும் எனவும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 1972 ஆம் ஆண்டு […]

வருவாய்துறை பி. அமுதாவிடம் அறந்தாங்கி எம்எல்ஏ கோரிக்கை மனு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்டி. ராமச்சந்திரன், சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ,வருவாய்த்துறை பி. அமுதாவை சந்தித்து தனதுதொகுதி சம்மந்தமாக மனு கொடுத்து பேசினார். அறந்தாங்கி தொகுதி மணமேல்குடி ஒன்றியம் அம்மாபட்டினத்தை தனி வருவாய் கிராம மமாக அறிவிக்க வேண்டு மெனவும். இது குறித்து வருவாய் துறை அமைச்சரிடமும், சட்டப்பேரவையிலும் தான் பேசியதாகவும், அதனை விரைந்து நிறைவேற்றி தர அதில் கோரியிருந்தார்.

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கரூரில் காத்திருப்பு போராட்டம்

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் 2-வது நாளாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் மாவட்ட செயலாளர் தேவி தலைமையில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதை போல அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல்முறையீட்டை கைவிட்டு செவிலியர்களுக்கு […]

விஜய் பாஜகவின் பி-டீம்- முஸ்லீம் லீக் கருத்து

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விஜய் இதுவரை எதுவும் பேசவில்லை, திமுக கூட்டணி வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதற்கான அவரது முயற்சி வெற்றி பெறாத – விஜய் பாஜகவின் பி-டீம் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் கரூரில் பேட்டி. கரூரில் உள்ள தனியார் விடுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முகமது […]

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பஸ் விபத்து-35 பேர் படுகாயம்

விழுப்புரம், விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து சங்கராபரணி ஆற்றின் பாலத்தில் மோதியதில் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற ஆம்பி பேருந்து விக்கிரவாண்டி அருகே ஆற்றுப்பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் படுகாயமடைந்த 35 பேரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சங்கராபரணி ஆற்றின் பாலத்தில் இரு சாலைகளுக்கு இடையே உள்ள தடுப்பு கட்டையில் மோதி பேருந்து தொங்கிய நிலையில் பயணிகள் மீட்கப்பட்டனர். சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் பாயும் […]

கள்ளக்காதல் விவகாரம்.. வீட்டுக்குள் சிக்கிய தவெக நாமக்கல் மா.செ

தமிழக வெற்றிக்கழக நாமக்கல் மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் ராசிபுரம் ஜெஜெ செந்தில்நாதன் இவர் 18.12.2025 அதிகாலை 2.00 மணியளவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்ந்த எஸ்.முனிரா பானு வீட்டிற்கு சென்றுள்ளார் . அவர் 2 கை குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் அவரது கணவர் சென்னையில் பணியில் உள்ளார் இந்த நிலையில் இதை தெளிவாக அறிந்த மாவட்ட செயலாளர் முனிரா பானுவியிடம் ஆசிய வார்த்தை கூறி அடுத்த மாவட்ட மகளிர் அணி தலைவி […]

அரியலூர்-நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…உயிர் தப்பிய வாலிபர்

அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவரது மகன் சாமி வாசன். இவர் சாத்தமங்கலத்தில் இருந்து திருமானூர் ஸ்ரீராம் நகரில் உள்ள தனது வீட்டிற்கு, தந்தை ராஜீவ் காந்தியின் காரை எடுத்துக்கொண்டு சாமி வாசனே ஓட்டிச் சென்றுள்ளார். ஏலாக்குறிச்சி ஆர்ச் வளைவு சாலையில் சத்திரத்தேரி முனியாண்டவர் கோவில் அருகே சென்றபோது, காரின்முன் பகுதியில் உள்ள இன்ஜினில் இருந்து லேசாக புகை வரத் தொடங்கியதை கண்டு, காரை சாலையின் ஓரமாக நிறுத்தி, எஞ்சின் பேனட்டை சாமிவாசன் […]

தங்கம் விலை விலை சவரனுக்கு ரூ. 160 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.226க்கு விற்பனையாகிறது.

ஓபிஎஸ் தொகுதியில் 1,25,739 வாக்காளர்கள் நீக்கம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேனி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், போடி கம்பம், ஆண்டிபட்டி உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலில் இன்று அனைத்துக் அரசியல் கட்சியினர் முன்னிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் வெளியிட்டார் . ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1,22,051 ஆண் வாக்காளர்களும், 1,26,955 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் 29 வாக்காளர்களும் என மொத்தம் […]

செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதி விவாகரத்து?

பிரபல இயக்குநர் செல்வராகவன், மனைவி கீதாஞ்சலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இன்ஸ்டாகிராமில் இருந்து புகைப்படங்களை நீக்கியது விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில், ‘திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

கடன் தகராறு… வாலிபர் வெட்டிபடுகொலை- ஒருவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (34). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.‌ இதேபோல் கீழவஸ்தாசாவடி பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (29). இவர் சிராஜ் கடையில் கடனுக்கு பொருட்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கடன் தொகையை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி நெய் வாய்க்கால் பகுதியில் பிரதீப் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த […]

கரூரில் 79,690 வாக்காளர்கள் நீக்கம்

கரூர் மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வௌியிட்டார் கலெக்டர் கரூரில் SIR மூலம் 79,690 பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் 8,18,672 வாக்காளர் பட்டியலில் உள்ளதாக கலெக்டர் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். கரூர் மாவட்டம் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு நீக்கப்பட்டவாக்காளர்கள் எண்ணிக்கை – 79,690 கரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை முழுவிபரம்: […]

புதுகை- பள்ளி மாணவர்களுக்கான ரோபோடிக் ஆய்வகம் திறப்பு

புதுக்கோட்டை மச்சுவாடியில் அமைந்துள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகமானது (Robotic)துவங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் செயல்முறை அடிப்படையிலான கற்றலின் மூலம் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த கருத்துக்களை வலுப்படுத்தவும் பிரச்சனைகளைத் தீர்க்கும் திறனை வளர்க்கவும் குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனை கற்றுக் கொள்ளவும் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் இந்த ஆய்வகமானது ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி சென்னை, கோவை ,சேலம் மற்றும் புதுக்கோட்டை […]

ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்!

மார்கழி மாத அமாவாசை அன்று மூல நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்த நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.இதனை தொடர்ந்து, 18 அடி உயரத்தில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தியையொட்டி […]

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

காவிரி டெல்டா பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக ஆழ்துளை கிணறுகளை அமைப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான பி.ஆர்.பாண்டியன் தலைமையில் திருவாரூர் மாவட்டம், கரியமங்கலத்தில் 2015-ம் ஆண்டு போராட்டம் நடந்தது.அப்போது ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சொத்துக்களை சேதப்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன், முன்னாள் பஞ்சாயத்து தலைவரான செல்வராஜ் உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக விக்கிரபாண்டியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் அமர்வு நீதிமன்றம், பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜூக்கு மட்டும் […]

இனி பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1,00,000 அபராதம்

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கழிவறைகளுடன் கூடிய ஓய்வறைகள் 200 வார்டுகளிலும் ரூ.25.95 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் (டிச. 20) தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. […]

பசுமை நெடுஞ்சாலை திட்டம்… ஒன்றிய அமைச்சருடன் எம்பி துரைவைகோ கடிதம்

பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் திருச்சி மதிமுக எம்பி துரை வைகோ இன்று சந்தித்து கோரிக்கை கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது. சாலைப் போக்குக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்கரி இன்று (19.12.2025) பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து திருச்சி – கரூர் – கோவை பசுமை நெடுஞ்சாலைத் திட்டம், 2. சென்னை – திருச்சி – தூத்துக்குடி பசுமை […]

கணவன் கண்முன்பே- மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளம் பகுதியில் செயல்படும் ஒரு கல் குவாரிக்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு, திருநெல்வேலியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது மஹ்புல் ஹுசைன் (27) என்பவர், கல் குவாரி உரிமையாளரிடம் கமிஷன் தொகை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி கொடுத்துள்ளார். இருப்பினும், போதிய அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான சம்பளம் இல்லாத காரணத்தால், அசாம் தம்பதியர் வேலையில் […]

பெண்ணிடம் ரூ.60 லட்சம் அபேஸ்.. கைதான 6 பேரும் கூலாக போஸ்

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில், சைபர் க்ரைம் காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், டிஜிட்டல் அரெஸ்ட் (Digital Arrest) மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 6 பேர் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 10-ஆம் தேதி, பாதிக்கப்பட்ட நபரைத் தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை மும்பை காவலர் விஜய் கண்ணா என அறிமுகப்படுத்தியுள்ளார். மனுதாரரின் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கி […]

புதுகை- ரூ.3000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ஒரு ஊராட்சியைச் சேர்ந்தவர் . இதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டு மனையை வரன்முறைப்படுத்துவதற்காக ஊராட்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். லஞ்சக் கோரிக்கை: அந்தச் சான்றிதழை வழங்குவதற்கு ஊராட்சி தலைவர் ரூ.3,000 லஞ்சமாக தர வேண்டும் என வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இப்புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், ஊராட்சி தலைவரைப் பிடிக்கத் […]

சிவகங்கை -ஆக்கிரமிப்பு வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு- பொதுமக்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டிக்கும் மின்வாரியத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகளைக் காலி செய்யுமாறு வருவாய்த்துறை சார்பில் ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. காலக்கெடு முடிந்தும் வீடுகள் […]

ஏழைகளின் பாதுகாப்பு அரணை அழிக்க விடமாட்டோம்- ராகுல் ஆவேசம்!

மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றவும், அதன் கட்டமைப்பை மாற்றியமைக்கவும் கொண்டு வந்துள்ள புதிய மசோதாவிற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஏழைகளின் பாதுகாப்பு அரணாகத் திகழும் இந்தத் திட்டத்தை அழிக்க விடமாட்டோம்” என்று அவர் சூளுரைத்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ‘விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ மசோதா குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது… பிரதமர் மோடிக்கு […]

100 நாள் வேலை திட்டம்- டிச.24ல் திமுக கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்காதது மற்றும் நிதி ஒதுக்கீட்டைக் குறைத்த ஒன்றிய அரசைக் கண்டித்து, டிசம்பர் 24-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் (காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்டவை) முன்வைக்கும் குற்றச்சாட்டுகள். கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் […]

125 மின்சார பஸ் சேவையை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனப்படுத்தும் மற்றும் சுற்றுச்சூழுலைப் பாதுகாக்கும் முயற்சியாக, இன்று (டிசம்பர் 19, 2025) பூந்தமல்லி பணிமனையில் இருந்து மேலும் 125 புதிய மின்சார பேருந்துகளின் இயக்கத்தைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த 125 மின்சார பேருந்துகளும் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த 125 பேருந்துகளில் 45 பேருந்துகள் முழுமையான ஏசி வசதி கொண்டவை. மீதமுள்ள 80 பேருந்துகள் குளிர்சாதன வசதி இல்லாத தாழ்தளப் பேருந்துகளாகும். முதியவர்கள், […]

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுக..டிடிவி

தமிழகத்தில் நீண்ட காலமாகப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் செவிலியர்களுக்கு ஆதரவாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். செவிலியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது… கொரோனா காலக்கட்டத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய தற்காலிகச் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக […]

கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 160 பயணிகள் பயணித்தனர். இந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானத்தின் லேண்டிங் கியர் மற்றும் டயரில் பழுது ஏற்பட்டது. இதனைக் கண்டறிந்த விமானி, உடனடியாக அவசரமாக தரையிறக்க விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டார். உரிய அனுமதி கிடைத்ததும் விமானம், கொச்சி ஏர்போர்ட்டில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த […]

ஆடு-கோவில் உண்டியல் திருட முயற்சி.. சிக்கிய 2 பேர்- 2 பேர் எஸ்கேப்

கரூர் அருகே அய்யம்பாளையத்தில் இரவு நேரத்தில் ஆடு மற்றும் கோவில் உண்டியல் திருட காரில் வந்தால் நான்கு பேர்,இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து போலீசிடம் ஒப்படைப்பு. இருவர் காரில் தப்பி ஓட்டம். கரூர் மாவட்டம், ஜெகதாபி ஊராட்சி அய்யம்பாளையம் பகுதியில் நேற்று இரவு நேரத்தில் மக்கள் உறங்கும் சமயத்தில் காரில் வந்த நான்கு மர்ம நபர்கள், பட்டியில் இருந்த ஆடுகள் மற்றும் பிள்ளையார் கோவில் உண்டியலை திருடவும் முயற்சித்துள்ளனர். அப்பொழுது சத்தம் கேட்டு, […]

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

 டிசம்பர் 19 தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலின் தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision – SIR) முடிந்த நிலையில், இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அடிப்படையாக அமையும். புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது, தவறான பதிவுகள் நீக்கப்பட்டது, முகவரி மாற்றங்கள் புதுப்பிக்கப்பட்டது உள்ளிட்ட மாற்றங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை உடனடியாகச் சரிபார்க்கலாம். தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான voters.eci.gov.in-க்கு சென்று, வாக்காளர் […]

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்- விசாரணை நிறைவு- தீர்ப்பு தள்ளிவைப்பு!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழக வக்பு வாரியம், இந்து முன்னணி உள்ளிட்ட பலர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்றுறு 5-வது நாளாக […]

எச்.ராஜா ஹீரோவாக நடித்த படம் இன்று ரிலீஸ்..!!

திருப்பரங்குன்றம் மலை குறித்து ‘கந்தன் மலை’ என்று திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார். திருப்பரங்குன்றம் மலை அருகே உள்ள ஒரு கிராமமே கதைக்களம். இங்குள்ள நாடக காதல், கோயில்களில் அறநிலையத்துறையின் செயல்பாடுகள் போன்ற கருத்துக்களை கொண்டதாக கதை அமைந்துள்ளது. முறுக்கிய மீசையுடன் எச்.ராஜா பஞ்சாயத்து தலைவர் வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு எதிராக வில்லன் கேரக்டரில் நடிகர் சேரன்ராஜா நடித்துள்ளார்.பா.ஜ., மாநில ஆன்மிகம் மற்றும் கோயில்கள் மேம்பாட்டு பிரிவு செயலாளர் […]

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைமாவட்டதேர்தல்அலுவலர்/மாவட்ட கலெக்டர் மு.அருணா அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவு.. முதல்வர் இரங்கல்

புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள இரங்கல் குறிப்பில், செம்பனார்கோயில் சகோதரர்களில் இளையவரும், புகழ்பெற்ற நாதஸ்வர வித்வானுமான S.R.G. ராஜண்ணா மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். தமது அண்ணன் S.R.G. சம்பந்தமுடன் இணைந்து, 70 ஆண்டுகளுக்கும் மேலாக இசையுலகில் தனிப்புகழுடன் வலம் வந்தவர் ராஜண்ணா. தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதீனங்கள், மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட பல முக்கிய ஆன்மீக நிலையங்களில் ஆஸ்தான வித்வானாகப் பணியாற்றிய சிறப்புக்குரியவர். […]

மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு செய்க… வைகோ அறிக்கை

மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு மேற்கொள்ள செயலி முறையை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த பெரு மழை மற்றும் திட்வா புயலால் 2,11,239 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தமிழக அரசு […]

விஜய் வருகை- எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.. அமைச்சர் சாமிநாதன்

கோவை விமான நிலையத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் விஜயின் வருகை எந்த அளவிற்கு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் 2026 இல் திமுக தான் ஆட்சி அமைக்கும் முதல்வர் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆவார் என தெரிவித்தார்.விஜயின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தாது கூட்டத்திற்கு வருபவர்களுக்கு தாகத்தை தான் ஏற்படுத்தும் அதற்கு தண்ணீர் […]

இலங்கைக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்… திருமா.,

இலங்கையைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு முதல்வரை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்தனர் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இலங்கையில் உருவாக்கப்பட உள்ள புதிய அரசியல் அமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி முறை இணைக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என இவ்வாறு தெரிவித்தார்.

ஜனவரியில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் – உதயநிதி ஸ்டாலின்

சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி அங்காடியிம் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கிடும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வாடிக்கையாளர் அட்டைகளை அறிமுகப்படுத்தினார். மேலும் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் சுய உதவிக் […]

தமிழகத்தில் 22ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று, நாளை மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது.மேலும் இன்று முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-3 C இயல்பைவிட குறைவாக இருக்கக்கூடும் என்றும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

புதுகையில் நூலகத்தில் புரவலராக இணைத்துகொண்ட ஓய்வு அதிகாரி..

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் (ஓய்வு) பா. இளவரசன் புதுக்கோட்டை மாவட்டம் மைய நூலகத்தில் ரூ 5ஆயிரம் செலுத்தி பெரும் புரவலராக இணைத்துக்கொண்டார். அதற்கான ரசீதை உடன் மாவட்ட மைய மூன்றாம்நிலை நூலகர் எஸ். கண்ணன் வழங்கினார். உடன் மூன்றாம் நிலை நூலகர் குமுதா,எஸ் ஆர். அரங்கநாதன் நூலக நிர்வாகி கோ. சாமிநாதன் உள்ளனர்.

அரியலூர்- பல கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் கொள்ளை- பக்தர்கள் அதிர்ச்சி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூர் கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, பிரசித்தி பெற்ற அருள்மிகு காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர், ஆலயம் உள்ளது. கோவிலின் சிறப்பு மரகத லிங்கத்திற்கு நடத்தப்படும் வழிபாடு ஆகும்.நேற்று இரவு பிரதோஷத்தை கோவில் பூசாரி கலியபெருமாள் சிறப்பாக நடத்தினார். மரகதலிங்கத்திற்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகாதீபாரதனை மற்றும் ஆராதனை நடைபெற்றதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இரவு கோவில் பூசாரி கலியபெருமாள், கோவிலின் கதவை பூட்டிவிட்டு, கோவி […]

விஜய் கை காட்டுபவர்தான் எம்எல்ஏ – செங்ஸ் பேச்சு

புதுச்சேரியில் மக்கள் சந்திப்பை நடத்திய விஜய், இன்றைய தினம் ஈரோட்டில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக பெருந்துறை தாலுகாவிற்கு உட்பட்ட விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு – கொச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சரளை பகுதியில் தான் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே நெடுஞ்சாலையில் இருந்து உட்புற சாலை வழியாக வருவோருக்கு வழிகாட்டும் வகையில் போக்குவரத்து போலீசார் முக்கிய ஏற்பாடுகளை செய்துள்ளனர். குறிப்பாக குன்னத்தூர் […]

அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து.. விஜய் பேச்சு..

ஈரோடு, விஜயமங்கலம் பெருந்துறை, சுங்கச்சாவடி அருகே உள்ள 16 ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் ஏராளாமான மக்கள் குவிந்தனர். பொதுமக்களின் நடுவில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது… மஞ்சள் என்றாலே மகத்தானது, அதிர்வை ஏற்படுத்தும் மஞ்சள் நகர்ததிற்கு எனது வணக்கம். மஞ்சள் என்றாலே தனி VIBE தான்.. அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அன்றைக்கும், இன்றைக்கும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுபவர் பெரியார். என்னை வீழ்த்த என்னவெல்லாம் அவதூறு பரப்பலாம் என […]

தல – தளபதிக்கு நடிகர் அருண் விஜய் வாழ்த்து..

கார் ரேஸில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கும், அரசியல் களத்தில் செயல்படும் நடிகர் விஜய்க்கும், நடிகர் அருண் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘ரெட்ட தல’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்த படத்தில் அருண் விஜய், சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை பிடிஜி யூனிவர்சல் சார்பில் பாபி […]

ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு திட்டம்

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே ரூ.5,000 வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தொகை ரூ.3,000-ஆக வழங்க வாய்ப்புள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில வாரங்களில் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால், இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பயனாளிகள் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதலமைச்சரால் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டுக்கோட்டை அருகே கல்லூரி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு கோரி…போராட்டம்

பட்டுக்கோட்டை அருகே ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் தொடர்ந்து 17 வருடங்களாக பணியாற்றிவரும் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி கல்லூரிப் பேராசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் 17 வருடங்களாக பணியாற்றி வரும் கல்லூரிப் பேராசிரியைகளை தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ராஜாமடத்தில் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தொடர்ந்து 17 வருடங்களாகபணியாற்றிவரும் பேராசிரியர்களுக்கு (சிஏஎஸ்) என்கிற பணி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பதவி உயர்வு உரிய நேரத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. உடனடியாக […]

ஊருக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்- பொதுமக்கள் அச்சம்

கரூர் அருகே மகிளிப்பட்டி கிராமத்தில், வனபகுதியிலிருந்து வந்த 100க்கு மேற்பட்ட குரங்குகள் ஊருக்குள் புகுந்து சேட்டைகள் செய்வதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பள்ளி மாணவர்கள் கொண்டு செல்லும் உணவு பைகளை பிடுங்கிக் கொண்டும். ஓட்டு வீடுகளை சேதப்படுத்தி உள்ளே சென்று உணவுப் பொருட்களை சூறையாடி வருவதால் பொதுமக்கள் வேதனை. வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மகிளிப்பட்டி, உடையான்தோட்டம், எலுமிச்சைபண்ணை, தொட்டியப்பட்டி, லாலாபேட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன. […]

டில்லியை குளிர்விக்க ஈபிஎஸ் அறிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

தமிழக அரசியலில் ஆளும் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இடையே அவ்வப்போது அறிக்கைப் போர் வெடிப்பது வழக்கம். தற்போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டில்லி விவகாரங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார். சமீபத்தில், மத்திய அரசின் சில திட்டங்கள் மற்றும் டெல்லி பயணம் குறித்துப் பேசிய இபிஎஸ், தமிழக அரசு மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதால் மாநில உரிமைகள் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, 100 நாள் […]

விஜய் கூட்டத்திற்கு வந்த வாலிபருக்கு வலிப்பு- பரபரப்பு

ஈரோடு சரளை பகுதியில் தவெக மக்கள் சந்திப்புக் கூட்டத்திற்கு நடந்து வந்துகொண்டிருந்த இளைஞருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம்  போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தவெக தலைவர் விஜய் இன்று காலை 11.30 மணி முதல் 1 மணிக்குள் உரையாற்ற உள்ள நிலையில், காலை முதலே தொண்டர்கள், பொதுமக்கள் அதிகளவில் திரண்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈரோடு புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்- குவிந்த மக்கள்!

ஈரோடு : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் பொதுக்கூட்டம் இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் நடைபெற உள்ளது. காலை 8.40 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவைக்கு புறப்பட்ட விஜய், காலை 10 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக விஜயமங்கலம் செல்கிறார். காலை 11.30 மணிக்கு பொதுக்கூட்ட மைதானத்தை சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிவதால் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் உடனடி […]

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதில், அமெரிக்க வரி விதிப்பால் தமிழ்நாட்டில் ஏற்றுமதி துறைகளில் நெருக்கடி அதிகரித்து வருகிறது. திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் ஏற்றுமதித் துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் உள்ள காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் இதேபோன்ற மோசமான சூழ்நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள், குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது. ஏற்றுமதி துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு இருதரப்பு […]

விஜய் பிரச்சாரம்…நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்

கரூர் சம்பவத்திற்கு பிஈரோட்டில் நாளை நடைபெற உள்ள தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பை முன்னிட்டு, அந்தப் பகுதியில் மாலை 4 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  றகு தமிழகத்தில் முதல் முறையாக வெளியே (open ground) நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் நாளை விஜய் பங்கேற்கிறார். கே.ஏ.செங்கோட்டையன் இணைந்ததற்குப் பிறகு மேற்கு மாவட்ட பகுதியில் நடைபெறும் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி செல்வாக்கை நிரூபிக்க செங்கோட்டையன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் […]

தமிழ்நாட்டின் முன்னணி சுற்றுலா தளங்களில் திருச்சி முதலிடம்

2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி மாவட்டம் தமிழ்நாட்டின் முன்னணி சுற்றுலா தலமாகத் திகழ்ந்தது. சுற்றுலாத் துறையின் கூற்றுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி 23.09 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது. திருச்சிக்கு வந்த மொத்த பார்வையாளர்களில், 22.94 லட்சம் பேர் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 14,706 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர். மதுரை மாவட்டம் 21.65 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் 2வது இடத்தைப் பிடித்தது.

உடல் எடைக் குறைப்பு ஊசிகள்.. 50க்கும் மேற்பட்டவர்கள் பலி

உலகளவில் பிரபலமடைந்துள்ள ஒஸெம்பிக், மௌன்ஜரோ போன்ற உடல் எடை குறைப்பு ஊசிகளை பயன்படுத்தியதில், 2024-ம் ஆண்டு முதல் 50-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நேரிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த ஊசிகளின் பக்க விளைவுகளால் உறுப்புகள் செயலிழத்தல், கணைய பாதிப்பு உள்ளிட்ட அபாயங்கள் ஏற்பட்டுள்ளதால், சுகாதார நிபுணர்கள் மருந்தைச் சந்தையிலிருந்து திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதிப் பிரச்னை – அன்புமணி

தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தப்பட்டது. பாஜகவின் கரு.நாகராஜன், கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன்மூர்த்தி, அமமுகவின் செந்தமிழன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், “சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு சமூகநீதி பிரச்சனை, இதன்மூலம் இட ஒதுக்கீடு வரும். சாதியை வைத்துதான் நூறாண்டுகளாக அடக்குமுறை நடந்தது. அதை சரிசெய்ய வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக […]

லிப்ட் கேட்டு டூவீலரில் சென்ற பெண் பஸ் மோதி பலி

திருவள்ளூர் அடுத்த சித்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சாந்தி(53) இவர் திருவள்ளூர் பகுதியில் உள்ள ஸ்ரீ குமரன் டெக்ஸ்டைல்ஸ்-யில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் இன்று சித்தம்பாக்கம் பகுதியில் இருந்து வேலைக்கு செல்வதற்காக சாலையில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மாரியப்பன் என்பவரிடம் லிஃப்ட் கேட்டு திருவள்ளூருக்கு சென்றுள்ளார். அப்போது திருவள்ளூர்- செங்குன்றம் சாலையில் ஈக்காட்டில் வளைவில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து தடம் எண் 505 செங்குன்றம் நோக்கி […]

ஜல்லிக்கட்டு…இதையெல்லாம் கடைப்பிடிக்கனும்… தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாகவும், விலங்குகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையிலும் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல், வடமாடு, மஞ்சு விரட்டு, எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது. போட்டிகளை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு முழுமையாக இணங்கி போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. […]

தமிழகத்தில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு!

 கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-12-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18-12-2025: தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.19-12-2025 முதல் 21-12-2025 […]

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிப்பு

2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளது. டி.கேஎஸ் இளங்கோவன், கோவி. செழியன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் எம்எம் அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கார்த்திகேயன சிவசேனாபதி, எழிலன் நாகநாதனுக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையையும் […]

திருப்பத்தூரில் 51 ரேசன் கடைகள் திறப்பு..

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மொத்தம் 51 நியாய விலை கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம், 30-வது வார்டு சிவசக்தி நகரில், திருப்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் செயல்படும் பகுதி நேர நியாய விலை கடையை, குத்துவிளக்கு ஏற்றி எம்.எல்.ஏ நல்லதம்பி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் பொதுமக்களின் வசதிக்காக 51 நியாய விலை […]

கரூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை 16வது நாளாக புறக்கணிப்பு

நீதிமன்ற வழக்கை ஆன்லைன் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் பழையை நடைமுறையையே பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி தொடர்ந்து 16-வது நாளாக நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்து கரூரில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈபில்லிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்த நாளை மறுநாள் சென்னையில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளும் மிகப் பெரிய போராட்டம் நடைபெற உள்ளதாகதமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் பேட்டி. கீழமை நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்குகளை ஆன்லைனில் […]

ஹெல்மெட்டுக்குள் 4 அடி நல்ல பாம்பு… எச்சரிக்கும் வனத்துறை

கோவை கொடிசியா அருகே உள்ள லூலு மால் waer house பார்க்கிங்கில் புல்லட் வாகனம் நின்று கொண்டு இருந்தது. அந்த வாகனத்தில் பக்கவாட்டில் ஹெல்மெட் தொங்கவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வந்து நல்ல பாம்பு அந்த ஹெல்மெட்டுக்குள் புகுந்து உள்ளது. இருசக்கர வாகன உரிமையாளர் சங்கர் திடீரென்று பார்த்த பொழுது உள்ளே பாம்பு இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக பாம்பு பிடிக்கும் வீரருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்து அவர் லாபகமாக அந்த 4 […]

சுவர் இடிந்து பள்ளி மாணவன் பலி.. தலைமையாசிரியர் மீது வழக்கு

திருத்தணி அருகே பள்ளியில் சுவர் விழுந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே. பேட்டை தாலுகா, கொண்டாபுரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் மோகித் என்ற மாணவன் ஏழாம் வகுப்பு பயின்று வந்தார். இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற போது பள்ளிக் கட்டடத்தின் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் மாணவர் படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் […]

திருப்பூர் ரயில்வே ஸ்டேசனிற்கு வெடிகுண்டு மிரட்டல்

கடந்த 14-ஆம் தேதி சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், திருப்பூர் ரயில்வே ஸ்டேசனில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். இத்தகவலை அடுத்து, திருப்பூர் ரயில்வே போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு வெடிகுண்டு எதுவும் சிக்காததால், அது வெறும் வதந்தி என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் […]

தமிழகத்தில் டிசம்பர் 19-ல் வரைவு பட்டியல் வெளியீடு- 13 லட்சம் பெயர்கள் நீக்கம்?

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகத்தின் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்தத் தீவிர நடவடிக்கையின் நோக்கம், குளறுபடிகள் இல்லாத ஒரு தூய்மையான வாக்காளர் பட்டியலை உருவாக்குவதாகும். கடந்த சில வாரங்களாக நடைபெற்ற சரிபார்ப்புப் பணிகளில், இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் […]

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் நிலவும் புதிய வானிலை மாற்றங்கள் காரணமாகத் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மேகமூட்டமும், மழையும் நீடிக்கிறது. இந்தச் சுழற்சியின் நகர்வு காரணமாக ஈரப்பதம் மிக்க காற்றுக் கடலோரப் பகுதிகளில் இருந்து உள் மாவட்டங்களுக்கு நகர்வதால் மழைப் பொழிவு […]

டிச.,22ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம்… திருமா அறிவிப்பு

திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-கார்த்திகை மாதத்தின் போது திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள வழக்கமாகும். அதற்குப் பதிலாக அந்த மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சமூகப் பிரிவினைவாத சனாதன சக்திகள் பிரச்சினைகளை எழுப்பி வருகின்றன. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் 1996 இல் தள்ளுபடி செய்துவிட்டது. “எங்கே தீபம் ஏற்ற வேண்டும் என்பதை இந்து […]

தங்கம் விலை சவரன் ரூ.99,200க்கு விற்பனை

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து சவரன் ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து கிராம் ரூ.12,400க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ஒரு கிராம் ரூ.222க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.11,000 உயர்ந்து கிலோ ரூ.2.22 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 2 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,16-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 17-12-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18-12-2025: […]

சிவகங்கையில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அசிஸ் நகர் பகுதியில், வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்ததில், லூசியா (48) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் இன்று அதிகாலையில் நடந்துள்ளது. சிவகங்கை, அசிஸ் நகர் லூசியா தனது வீட்டில் அன்றாடத் தேவைக்காகத் தண்ணீர் நிரப்புவதற்காக மின் மோட்டாரின் ஸ்விட்ச்-ஐ ஆன் செய்துள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக, ஸ்விட்ச் பாக்ஸ் அல்லது மோட்டார் இணைப்புகளில் […]

நெல்லையில் டிச.,20,21ல் முதல்வர் சுற்றுப்பயணம்.. அமைச்சர் கே.என்.நேரு

நெல்லையில் டிச.20, 21ல் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு பேட்டி அளித்துள்ளார். நெல்லையில் டிச.21ம் தேதி 44,900 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்குகிறார். ரூ.356 கோடியில் திட்டங்கள், ரூ.110 கோடி மதிப்பில் நூலகழ் அமைக்கும் பணியை தொடங்கி வைக்கிறார் முதல்வர். மழைக்காலம் முடிந்தது சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

வங்கி கணக்கில் ரூ.2,000… இதை மறக்காதீங்க.. தமிழக அரசு

PM KISAN திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா 2,000 வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த தவணை 2026 பிப்ரவரியில் டெபாசிட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைய விவசாய அடையாள எண்ணை பதிவு செய்யுமாறு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆதார் அட்டை, நில உரிமை ஆவணங்களுடன் தோட்டக்கலைத் துறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளது.

திமுக கூட்டணியை மக்கள் வெற்றி பெற செய்வார்கள்- வீரபாண்டியன் பேச்சு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழாவில் முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. மாநகர செயலாளர் மதிவாணன் வரவேற்றார்.தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த முகாமில் சி.பி.ஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டு ரத்த தான முகாமை தொடக்கி வைத்து, ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வி […]

தஞ்சையில் வீட்டில் பூத்து நறுமணம் வீசிய பிரம்ம கமலம் பூ

தஞ்சையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இரவில் பூத்து மலர்ந்து நறுமனம் வீசி விடிந்ததும் உதிர்ந்துவிடும் பிரம்ம கமலம் பூக்கள் மலர்கொடி என்பவரின் வீட்டில் வெள்ளை வெளேரென பூத்து மலர்ந்ததால் குடும்பத்தினர் தீபம் ஏற்றி மகிழ்ந்தனர்: இமய மலை பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ செடியை தஞ்சை புதிய பேருந்து நிலையம் பகுதியில் வசித்து வரும் மலர்கொடி எனும் பெண் செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர் அவர் தனது வீட்டில் பிரம்ம […]

திருவையாறு-குடிநீர் கேட்டு சாலை மறியல்- வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே இலுப்பக்கோரை கிராமத்தில் சுமார் 200-குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நான்கு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையால் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த கிராமத்துக்கு செல்லும் குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டதாகவும்.. நான்கு மாதங்களுக்கு மேலாகி இலுப்பக்கோரை கிராமத்திற்கு குடிநீர் வசதி இல்லாமல், குடிநீர் எடுப்பதற்கு நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை குடிநீர் கேட்டு மனுக்கள் […]

மகாத்மா காந்தி பெயர் நீக்கம் ஏன்? மக்களவையில் பிரியங்கா காந்தி ஆவேச கேள்வி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (MGNREGS) மகாத்மா காந்தியின் பெயரை நீக்க மத்திய அரசு திட்டமிடுவதாக எழுந்த சர்ச்சைகள் குறித்து, இன்று மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி அவர்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்விஊரக ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தின் பெயரில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதற்கான காரணம் என்ன? […]

சுவர் சரிந்து பள்ளி மாணவன் பலி.. பரிதாபம்

திருவள்ளூர் அருகே சுவர் சரிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மோகித் என்ற மாணவன் நடைமேடையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தான். அப்போது போது கைப்பிடி சுவர் சரிந்து விழுந்ததில் உடல் நசுங்கி பரிதாபமாக மோகித் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போரூர் மெட்ரோ திட்ட விழாவில் பிரதமர் மோடி,முதல்வர் பங்கேற்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவையின் அடுத்த விரிவாக்கமான பூந்தமல்லி-போரூர் தடத்தில் ரயில் சேவை தொடக்க விழா அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ரூ.26,000 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தடம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டாமை’ டீச்சர் மகள் ஹீரோயினாக அறிமுகம்

சரத்குமாரின் ‘நாட்டாமை’ படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ராணி (எ) ரக்ஷாவின் மகள் தார்ணிகா தற்போது, ‘கொம்புசீவி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக தார்ணிகா நடித்துள்ளார். இந்தப்படம் வரும் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப்படத்திலும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சரத்குமாருடன் ரக்ஷா நடித்த நிலையில், அவரது மகளும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மெரினா கடற்கரையில் வீடற்ற நபர்களுக்கு இரவு நேர காப்பகம்

சென்னை மெரினாவை பொறுத்தவரை இரவு 10 மணிக்கு மேலாக கடற்கரைக்கு உள்ளே செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது. இருப்பினும் சென்னை கடற்கரையின் மணல் பரப்பில் இரவு நேரங்களில் ஏராளமான வீடில்லாத பொதுமக்கள், குடும்பம் குடும்பமாக படுத்து உறங்கும் நிலை வெகு நாட்களாக நிலவி வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர், சாலையோரங்களில் தானம் கேட்பவர்கள், ஆதரவில்லாத முதியவர்கள், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் ஆவர். பொது வெளியில் உறங்கும் இவர்களுக்கு பாதுகாப்பாற்ற சூழல் நிலவி வந்தது. இதனை கவனத்தில் கொண்டு சென்னை […]

பைக்-கார் மீது லாரி மோதி விபத்து-4 பேர் பலி- பரிதாபம்

தருமபுரி தொப்பூர் அருகே பைக், கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதி மலைப்பகுதிக்குள் செல்ல கூடிய தேசிய நெடுஞ்சாலையாகும். இப்பகுதியில் விபத்துகள் அதிகளவு ஏற்படுவதால் 900 கோடி மதிப்புள்ள பாலங்கள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. பாலங்கள் கட்டும் பணிக்காக அந்த பகுதி ஒருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் நோக்கி செல்ல கூடிய கனரக வாகனம் முன்னாள் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் மற்றும் […]

100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் பாஜ.,அரசு.. முதல்வர் குற்றச்சாட்டு

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பாஜ அரசு! தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்! 100% மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்! இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழகம் தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத […]

டிச.27ம் தேதி நாதக பொதுக்குழு கூட்டம்- சீமான்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 27-12-2025 அன்று காலை 10 மணியளவில் சென்னை திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் (GPN Palace) அரங்கில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இப்பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்பு கிடைக்கப்பெறும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இனி செங்கோட்டையன் போடும் ரூட்டில் விஜய் பயணிப்பார்“- என். ஆனந்த்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் வரும் 18ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெறும் பரப்புரை மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு தொடர்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு உரையாற்றிய தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், “தங்கமான அண்ணன் கிடச்சிருக்காரு… இனி […]

தூண் இருக்கும் இடமெல்லாம் தீபமேற்ற வேண்டுமென்றால் எப்படி?… அறநிலையத்துறை

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு, இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது தர்கா தரப்பு வாதங்களை முன்வைத்தது. அப்போது, “நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்தபோது, இந்து முன்னணி அமைப்பினர் அங்கு தொழுகை நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ’ஆடு, கோழி பலியிட்டதாக எந்த ஆதாரமும் இல்லை; உரிமையியல் நீதிமன்றத்தில் போய்தான் நிவாரணம் பெற முடியும்’ என்றும் அவர்கள் கூறினர்; இதே கருத்துதானே தீபம் ஏற்றுவதற்கும் பொருந்தும். இந்த […]

அதிமுக சார்பில் 3 தொகுதியில் போட்டியிட விருப்பமனு பெற்ற பா.சவரணன்

என்டிஏ கூட்டணியில் அதிமுக உள்ள நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை இன்று (டிச.15) முதல் பெறலாம் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில், அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர்.பா.சரவணன் அதிமுக சார்பில் மதுரை வடக்கு, மதுரை மத்தியம் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுவை வாங்கியுள்ளார்.

ஈரோடு பொதுக்கூட்டத்தில் பெண்களுக்கு தனி வழி

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் வரும் 18ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெறும் பரப்புரை மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு தொடர்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. டிச.18ல் ஈரோட்டில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்வில், பெண்களுக்கு தனிவழி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் விஜய்யை பார்ப்பதற்கு […]

வருங்கால தமிழகத்தை வழி நடத்தும் வல்லமை உதயநிதிக்கே- பொன்முடி

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை வளாகத்தில், 3000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைப்பதற்கு மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தலங்கள் அமைக்க 4 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் […]

ஒரு லட்சத்தை தாண்டியது தங்கம் விலை

ஒரு லட்சத்தை தாண்டியது தங்கம் விலை. ஒரு கிராம் தங்கத்தின் விலை 12, 515 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 1,00,120ஆக உயர்ந்துள்ளது. வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்ததால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஞானசேகரன் மீதான குண்டாஸ்-ஐ ரத்து செய்தது ஐகோர்ட்

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. குண்டர் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி ஞானசேகரன் தாயார் கங்காதேவி மனுவை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மத்திய அரசை கண்டித்து.. த.மா.வி.தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பெயரை மாற்றவுள்ள மத்திய அரசை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றி, அதற்குப் பதிலாக ‘புஸ்யா பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா’ என்று பெயர் சூட்ட முயற்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து,கரூரில் தமிழ் […]

பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்..

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக மத்திய தலைமை முக்கிய நியமனங்களை அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது. தேர்தல் துணைப் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் தமிழ்நாட்டில் பாஜகவின் தேர்தல் உத்தியை வலுப்படுத்தும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். பியூஷ் கோயல் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். அர்ஜூன் ராம் மேக்வால் சட்டம் மற்றும் நீதித்துறை […]

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10ஆம் தேதி வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த திறப்பு, டெல்டா பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்ததை கருத்தில் கொண்டு நேற்று (டிச., 14) முதல் வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி 90 மெகாவாட்டாக […]

ஈரோடு தவெக பரப்புரை.. “ரூ.50 ஆயிரம் தரனும்- நிபந்தனை

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், வரும் டிசம்பர் 18 அன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே சரளை என்ற இடத்தில் மக்கள் சந்திப்பு பரப்புரை கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பரப்புரை செய்யும் இடத்திற்கு உரிமை கொண்டாடக்கூடாது, நிலத்தை எப்படி கொடுக்கப்பட்டதோ அதே நிலையில் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பிரச்சாரத்திற்கு வைப்புத் தொகையாக ரூ.50,000 மற்றும் அனுமதிக் […]

தமிழக பாஜகவின் ‘டார்கெட் 50’.. அமித்ஷாவுடன் நயினார் அதிரடி ஆலோசனை

அதிமுகவிடம் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட உள்ளதால் அதிக செல்வாக்கு உள்ள தொகுதிகளில் தீவிரமாக கட்சியினர் பணியாற்ற நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 2-வது வாரத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாஜக வெல்ல வாய்ப்புள்ள 50 தொகுதிகளின் பட்டியலை அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பரமக்குடி, சாத்தூர், பட்டுக்கோட்டை, பாளையங்கோட்டை, நாங்குநேரி தொதிகளும், மேற்கு […]

வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம்..டிடிவி பேச்சு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும் என்று கணித்துள்ளார். “எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது, ஆனால் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம்” என்று தெரிவித்தார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி தொடர்பான முடிவை பிப்ரவரி மாதம் வரை எடுக்க அவகாசம் உள்ளதாகவும் கூறினார். டிடிவி தினகரன், “2026 தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, பாஜக உள்ளிட்டவை தனித்தனியே போட்டியிடும் சூழல் உருவாகலாம். […]

சிறுபான்மையினருக்கு ஆதரவாக நின்றவர் முதல்வர் ஸ்டாலின்- மதிவதனி புகழாரம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் திராவிடம் 2.0, ஏன் எதற்கு, வெல்லட்டும் திராவிடம் வீழட்டும் பாசிசம் என்ற கருத்தரங்கு நடைபெற்றது.கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் திராவிட கழக துணை பொதுசெயலாளர் மதிவதனி, பேசுகையில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும், பொது மக்களுடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திமுகவின் நல்லாட்சி குறித்தும் மேடையில் பேசினர்.மேலும் […]

அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு

தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபை பொதுத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கட்சி நிர்வாகிகள், தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 23-ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுக்கலாம்…முதல் நாளான இன்று மட்டும் நண்பகல் 12 மணி முதல் அதற்கான படிவங்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.720 உயர்ந்து சவரன் ரூ.99,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.90 உயர்ந்து கிராம் ரூ.12,460க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.213க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3,000 உயர்ந்து கிலோ ரூ.2.13 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்… முதல்வர் அழைப்பு

75 ஆண்டுகளைக் கடந்து தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திமுகவுக்கு பக்கபலமாக இருப்பது இளைஞரணி என்று தொண்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று இருக்கிறார். இளைஞரணி நிர்வாகிகளின் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் நடக்கும் நிலையில் திமுக இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கிராம அளவில் நடைபெறும் அறிவுத் திருவிழா என்றும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எல்லாரையும் கொள்கை அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் கூறினார். வடக்கு மண்டல […]

திருவனந்தபுரம் வெற்றிக்கு பிரதமர் மோடி நெகிழ்ச்சி

கேரள உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் ஜனநாயகக் கூட்டணிக்கு பலத்த அடி விழுந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இருப்பினும், தலைநகர் திருவனந்தபுரத்தில் பாஜகவே வெற்றி பெற்றது. திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி நன்றி தெரிவித்து, “கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரள மக்களுக்கு எனது நன்றி. […]

ஜனவரி முதல் வாரத்துக்குள் மாணவர்களுக்கு லேப்டாப்- அமைச்சர் மகேஸ்

டிசம்பர் இறுதி (அ) ஜனவரி முதல் வாரத்துக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக திட்டங்களை செயல்படுத்தவில்லை, திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் என்றும் அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.

100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தி பெயரை நீக்குவதா?.. செல்வபெருந்தகை கண்டனம

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மன்மோகன்சிங் தலைமையில் 2004-ம் ஆண்டு அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற வகையில் கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் வறுமையை ஒழிக்கின்ற நோக்கத்தில் 2006-ம் ஆண்டில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு அக்டோபர் 2009 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்று பெயர் […]

பட்டுக்கோட்டை அருகே 4 மாதத்திற்குள் பள்ளமான தார்சாலை

பட்டுக்கோட்டை அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து போடப்பட்ட தார் சாலைபோடப்பட்டு நான்கு மாதத்துக்குள்ளையே பள்ளம் ஏற்பட்டு சேதம் அடைவதாக பொதுமக்கள் புகார் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஒன்றியதுக்கப்பட்ட கல்யாண ஓடை ஊராட்சி பகுதியில் உள்ள கல்யாணஒடை வடக்குத்தெரு பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்ட மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு சாலை போடப்பட்டதாக கூறப்படுகிறது போடப்பட்ட சாலை நான்கு […]

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான.. நன்றி தெரிவித்த ரஜினி

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளை நேற்று (டிசம்பர் 12) கொண்டாடினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், ஊடகத்தினர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு ரஜினிகாந்த் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் வெளியிட்ட நன்றி செய்தியில், “என்னுடைய பிறந்தநாளில் வாழ்த்துத் தெரிவித்த அருமை நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், […]

காங்., வெகு முன்னேற்றம்..ஆளும் மார்க்- கம்யூ., படுதோல்வி! சர்ப்ரைஸ் தரும் பாஜக!

கேரள உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான பகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியே முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ்: மொத்தம் 6 மாநகராட்சிகளில் 4லும், 86 நகராட்சியில் 54லும், 938 கிராம பஞ்சாயத்தில் 495லும், 14மாவட்ட பஞ்சாயத்தில் 7லும் முன்னிலை வகிக்கிறது. ஆளும் சிபிஎம்: ஒரு மாநகராட்சிட்சியிலும், பாஜக திருவனந்தபுரம் மாநகராட்சியிலும் முன்னிலை வகிக்கிறது. ஆளும் சிபிஎம்: 86 நகராட்சியில் 28லும், 938 கிராம பஞ்சாயத்தில் 344லும், 14மாவட்ட பஞ்சாயத்தில் 7லும் முன்னிலை வகிக்கிறது. மொத்தத்தில் காங்கிரஸ் அமோகம்; […]

உச்சம் தொட்ட முட்டை விலை

முட்டை விலை கடந்த 22 நாட்களாக ரூ 6.10 காசுகளாக இருந்து தற்போது 5 பைசா உயர்ந்து ரூபாய் 6.15 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  குளிர்காலம் என்பதால் முட்டைகளை அதிக விரும்பி சாப்பிடும் எண்ணிக்கை அதிகம் உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இந்த முட்டை விலையை அறிவித்துள்ளது.மற்ற மண்டலங்களின் விலை உயர்வு, உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பு, குளிர்காலம் என்பதால் வடமாநிலங்களுக்கு செல்லும் முட்டைகளின் எண்ணிக்கை அதிகம் என பல காரணங்களை கூறி […]

ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு

 அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையில் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 15-ல் அறிவிப்பதாக ஓபிஎஸ் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது கூட்டமே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், உள்கட்சி ஆலோசனைகள் தொடர்வதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தக் கூட்டம், அவரது அரசியல் எதிர்காலம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என்று […]

நடமாடும் இலவச மருத்துவ முகாம்.. அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் நடமாடும்  இலவச மருத்துவ முகாம்  நடத்த வந்துள்ள மருத்துவ சேவை பிரச்சார வாகனத்தை  தெற்கு மாவட்ட திமுக. செயலாளரும், இயற்கை வளங்கள்துறை அமைச்சருமான எஸ். ரகுபதி தொடங்கி வைத்தார்.உடன் மாநில திமுக. மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி உள்ளார்.

தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்- ஆர்.எஸ்.பாரதி

தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மூலம் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம். எஸ்.ஐ.ஆர். பணிகளின் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் வலுவாக எதிர்த்தது திமுகதான். டிச.19ம் தேதிக்கு பிறகு எஸ்ஐஆர் பணிகள் குறித்த முழு விவரங்கள் தெரியவரும். தகுதியான வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபடுவோம். வாக்குச்சாவடி […]

புதுகை-திருப்புனவாசல் சிவன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா  திருப்புனவாசல் அருள்மிகு பெரிய நாயகி உடனுறை அருள்தரும் பழம்பதிநாதர் எனும் விருத்தபுரீஸ்வரர்  ஆலயத்தில் உலக நலன் வேண்டியும், ஒவ்வொருவர் குடும்பமும் உயர்வு பெற வேண்டியும் கூட்டுப் வழிபாடு திருவிளக்கு பூஜை   திருவருள் கருணையால் சிறப்பாக நடைபெற்றது, முத்துக்குடா ,புதூர் தீர்த்தாண்டம் ,மீமிசல்,தீயத்தூர்  சுற்று வட்டார  600க்கும் மேற்பட்ட அன்பர்கள்  கலந்து கொண்டனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு… விமானப்படை வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தஞ்சாவூர் விமானப்படை அலுவலகத்தின் மூலம் இந்திய விமானப்படையில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் உயர்கல்வி படிப்புகள் குறித்து பள்ளி வளாகத்தில் இன்று மாலை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை தாம்பரம் இந்திய விமானப்படை ஆள் சேர்ப்பு மையத்தின் விமானி பைண்ட் தலைமையில் 5 பேர் கொண்ட இந்திய விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டு இந்திய விமானப்படையில் உள்ள உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, ஆள் […]

சிறுபட்ஜெட் படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கொடுக்கனும்” -பாக்யராஜ் பேச்சு

ஆஷ்னா கிரியேஷன்ஸ் சார்பில் சையத் தமீன் தயாரிக்க, சந்தோஷ் ரயான் எழுதி இயக்கியுள்ள இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம், ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’. இதில் ஆஷிகா அசோகன், சான்ட்ரா அனில், ஐஸ்வர்யா, சினான், பிட்டு தாமஸ், ரேகா, ஹரீஷ் பெராடி, நிழல்கள் ரவி நடித்துள்ளனர். வீரமணி ஒளிப்பதிவு செய்ய, கவுதம் வின்சென்ட் இசை அமைத்துள்ளார். சந்தீப் நந்தகுமார் எடிட்டிங் செய்ய, பாலாஜி அரங்கம் அமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேசுகையில், ‘மிகப்பெரிய வெற்றிப் படமாக […]

உண்மை சம்பவ கதைதான் ”சிறை”படம்.. கோவையில் டைரக்டர் சுரேஷ் தகவல்

உண்மை சம்பவமான சிறை படத்தை இயக்கும் போது உண்மைக்கு நெருக்கமான காட்சிகளை உருவாக்கும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கை கொடுத்ததாக சிறை பட இயக்குனர் சுரேஷ் கோவையல் தகவல் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் எல்.கே. அக்‌ஷய் குமார் நடிப்பில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள சிறைபடம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் […]

தொடரும் வேலை நிறுத்தம் : அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு

4-வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அனைத்து துறைமுக டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறும்போது, “உயர்த்தப்பட்ட சரக்கு வாகனங்களுக்கான வாகன தர சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை திரும்ப பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும். சென்னை துறைமுகத்தில் அனைத்து டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய போவதில்லை. அந்த வகையில் 5 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள் ஓடாது” என்றனர். இந்த […]

+1 மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை- சோகம்

திருவள்ளூர் மாவட்டம், தோக்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தங்கமணி. இவரது மகன் பூவரசன் (17),அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற பூவரசன், மாலை வீடு திரும்பாமல் ஆரம்பாக்கம் ரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு, அவர் மின்சார ரயில்கள் வந்து செல்லும் நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் ஆரம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. நடைமேடையில் நின்று […]

தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

தூய்மை பணியாளர்கள் தலைமைச் செயலகத்தில் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு சென்னை தலைமைச் செயலகத்தில் எதிரே உள்ள காமராஜர் சாலையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முழங்க சாலை மறியல் ஈடுபட்டனர் பின்பு போலீசார் வந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர் பணியில் ஈடுபட்ட போலீசார் தூய்மை பணியாளர்களை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர் இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதுஇவர்கள் தலைமை செயலகத்திற்கு எதிரே வந்து ஆர்ப்பாட்டத்தில் […]

அதிமுகவாக மாறுகிறதா தவெக?- பொள்ளாச்சி ஜெயராமன் பதில்

மறைந்த முன்னாள் அதிமுக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஸ்மார்ட் சிட்டி, மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 4 வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திருப்பூருக்கு பெற்று தந்தவர் […]

இண்டிகோ நிர்வாக குளறுபடி- பயணிகள் அவதி- 4000 விமானங்கள் ரத்து

இந்திய உள்நாட்டு விமான சேவையில் இண்டிகோ நிறுவனத்தின் நிர்வாகக் குளறுபடிகளால் லட்சக்கணக்கான பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் 4,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானிகள், துணை விமானிகளுக்கான வாராந்திர ஓய்வு மற்றும் ஏர்பஸ் 320 விமானங்களின் பாதுகாப்பு மென்பொருள் மேம்பாடு போன்ற இந்திய விமானப் போக்குவரத்து இயக்ககத்தின் உத்தரவுகளை இண்டிகோ நிறுவனம் பின்பற்றத் தவறியதே இதற்குக் காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி மகன் பலி.. சோகத்தில் தந்தை தற்கொலை

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்த மண்டபம் மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் களஞ்சியம் (28). மீன்பிடி தொழில் செய்து வரும் இவர் கடலுக்கு சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்த மீனவர் களஞ்சியம் தனது வீட்டில் மீன் மோட்டார் ஓடவில்லை என மின் வயரை சரி செய்வதற்காக வயரை வாயால் கடித்த போது மின்சாரம் பாய்ந்து நெஞ்சில் காயம் ஏற்பட்டு விழுந்தவரை மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வந்து பரிசோதனை […]

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்வு

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை உயர்ந்ததை அடுத்து ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த நிலையில் மீண்டும் மாலை ரூ.960 உயர்ந்துள்ளது. அதன்படி 1 சவரன் தங்கம் – ரூ.98,960-க்கும், 1 கிராம் தங்கம் – ரூ.12,370-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டிச.,18ம் தேதி ஈரோட்டில் விஜய் பிரச்சாரம்… செங்ஸ் தகவல்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், ஈரோட்டில் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கிறார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை என்ற இடத்தில் டிசம்பர் 18 அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் என்று தவெக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கரூர் ஸ்டாம்பேட் சம்பவத்திற்குப் பிறகு விஜய்யின் முதல் பெரிய பொதுக்கூட்டமாக இது அமையும். போலீஸ் விதிகளின்படி 84 நிபந்தனைகளை நிறைவேற்றி அனுமதி பெறப்பட்டுள்ளது. […]

டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 12-12-2025 மற்றும் 13-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 14-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]

திமுகவில் இணைந்த நடிகர் விஜய்யின் மேலாளர் பரபரப்பு பேட்டி

நடிகர் விஜய்க்கு கடந்த 27 ஆண்டுகளாக மேலாளராகப் பணியாற்றி வந்தவரும், கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவருமான பி.டி.செல்வக்குமார், நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் (தி.மு.க.) இணைந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பி.டி.செல்வக்குமார், தனது இந்த அரசியல் மாற்றம் குறித்து பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்தார். தனது இந்தப் பயண மாற்றம் குறித்து பேசிய அவர், “விஜய் ஒரு நடிகராக சிறப்பாகப் பணியாற்றியதால் அவருடன் பயணித்தேன். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) […]

சிறகடிக்க ஆசை… சின்னதிரை நடிகை ராஜேஸ்வரி தற்கொலை

‘சிறகடிக்க ஆசை’ உள்ளிட்ட பல மெகா தொடர்களில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (39), கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.  சென்னை பிராட்வேயைச் சேர்ந்த நடிகை ராஜேஸ்வரி, சதீஷ் என்பவரைக் காதலித்து 24 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நிலையில், கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் குடும்பப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. […]

ஜெயங்கொண்டம்- வீட்டுக்குள் புகுந்த கார்- உயிர் தப்பிய வீட்டு உரிமையாளர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செந்துறை பகுதியை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரான நடராஜன் என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பாண்டிச்சேரி சென்று விட்டு மீண்டும் செந்துறை செல்வதற்காக சென்று கொண்டு இருந்தனர். அப்போது மருதூர் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் இடது புறமாக இருந்த விஜயலட்சுமி என்பவரது ஓட்டு வீட்டின் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் வீட்டிலிருந்த விஜயலட்சுமி, கார் ஓட்டி வந்த நடராஜன் மற்றும் அவரது மனைவி குழந்தைகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் […]

தவெகவுக்கு மோதிரம் சின்னம் ?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் சின்னத்தை மோதிரம் (Ring) என்று தேர்ந்தெடுக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் கட்சி முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த மாதம் தேர்தல் ஆணையத்தில் சின்னம் கோரி மனு அளித்த தவெக, ஆட், கிரிக்கெட் பேட், விசில் உள்ளிட்ட 10 சின்னங்களை பட்டியலிட்டது. அதில் இருந்து ஒரு சின்னம் இறுதி செய்யப்பட்டதாகவும், விரைவில் அறிவிப்பு வரலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தவெக சின்னம் […]

என் நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து…முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.இதுதொடர்பாக அவருடைய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரை நூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் #SuperStar @rajinikanth அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்! மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, […]

வேளாங்கண்ணியில் மணமகளை கடத்திய குடும்பத்தினர் கைது

வேளாங்கண்ணியில் மதம் மாறி மணம் முடித்ததால் மணமகனை வெட்டிவிட்டு மணமகளை கடத்திய குடும்பம் கைதாகியுள்ளனர். பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணி வந்து ராகுல்- கீர்த்தனா திருமணம் செய்துள்ளனர். மணமகன் ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரி வெட்டிவிட்டு பெண்ணை தூக்கி சென்றுள்ளனர் மணமகளின் குடும்பத்தினர். காயமடைந்த மணமகன் ராகுல், அவரது தாய், தந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு தப்பிச் செல்ல முயன்ற பெண்ணின் தாய், தந்தை உள்பட குடும்பத்தினர் 9 […]

கரூர்-பாலியல் ரீதியாக திட்டியதாக கல்லூரி பேராசிரியர் மீது புகார்

கரூர் அரசு கல்லூரி பேராசிரியர் தன்னை பாலியல் ரீதியாக திட்டியதாக மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த மாணவி – கல்லூரி வாயில் முன்பு சக மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலையில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் தலைமுடியை பின்னலிடாமல் வந்ததால் மாணவியை பேராசிரியர் ஜாஹிர் ஹீசைன் என்பவர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பேராசிரியர் தன்னை […]

தங்கம் விலை சவரன் ரூ. 98,000க்கு விற்பனை

தமிடிகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.98,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,250க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ஒரு கிராம் ரூ.215க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.6,000 உயர்ந்து கிலோ ரூ.2.15 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி-நயினார் சந்திப்பு

நேற்று அதிமுக பொதுக்குழு நடந்த நிலையில் அதில் வரும் தேர்தலில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது. கூட்டணி குறித்து முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் அளித்து ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில் தேமுதிக மற்றும் பாமக இன்னும் எந்த அணியோடு கூட்டணி என்றே தெரியவில்லை. இதில் பாமகவிலேயே தந்தை […]

மன கோட்டை மண் கோட்டையாகும்-விஜயை சீண்டிய வைகோ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். “கலைத்துறையில் இருந்து வந்த அந்த சகோதரர் ஆகாயத்தில் மனக்கோட்டை கட்டுகிறார். காகிதக் கப்பலில் கடலை கடக்க முயல்கிறார். அது வெறும் மண்கோட்டையாகத்தான் போகும். அவரின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நனவாகாது” என்று வைகோ தெரிவித்தார். கரூர் ஸ்டாம்பேட் சம்பவத்தில் 41 உயிரிழப்பு ஏற்பட்டும் விஜய் உடனடியாக அனுதாபம் தெரிவிக்கவில்லை என்றும், பொறுப்புணர்ச்சி இல்லாமல் இரவோடிரவாக சென்னை சென்றுவிட்டார் என்றும் வைகோ குற்றம் சாட்டினார். […]

அதிக லாப ஆசைகாட்டி பண மோசடி செய்த நபர் கைது

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் வசிக்கும் பார்த்திபன் (வயது 30) த/பெ ஜெய்சங்கர் என்பவரிடம் இணைய வழியில் Matrimonial website-ல் profile-ஐ பார்த்து வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் போல் நடித்து பழகிய நபர், வர்த்தக வாயிலாக அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூபாய் 17,50,000-னை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்து ஏமாற்றி உள்ளார்.இது குறித்து பார்த்திபன் அரியலூர் மாவட்ட இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் […]

சற்று உயர்ந்த தங்கம் விலை

தமிழகத்தில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,050க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.209க்கும், ஒரு கிலோ ரூ.2,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தேர்தலுக்கு ஆயத்தமாகும் தமிழகம்… வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் பயன்படுத்த தற்போது 1.30 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. அனைத்து மாவட்டங்களில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கிடங்குகளில் மின்னணு வாக்குப்பதிவு வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களில்  முதல் நிலை சரிபார்ப்பு பணி நாளை முதல் தொடங்க உள்ளது. பெல் நிறுவன பொறியாளர் இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள் முன்னிலையில் இந்தப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான அரசியல் […]

திருப்பரங்குன்றம்- மலைமேல் உள்ள தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்திருக்கும் தர்காவுக்கு மின்னஞ்சல் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து, காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் தர்கா பகுதியில் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுமியை பலாத்காரம் செய்த 61வயது முதியவர்

புதுக்கோட்டை மாவட்டத்தில், 13 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து 61 வயது முதியவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமயம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 61 வயது நபர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 13 வயது சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில், மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கிறிஸ்துமஸ்-புத்தாண்டு.. தூத்துக்குடி-மைசூருக்கு சிறப்பு ரயில்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி – மைசூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இம்மாத இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையும், அதன் பின்னர் புத்தாண்டு பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. மேலும் அரையாண்டு விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் குடும்பத்தோடு தென்மாவட்டங்களுக்கு திரும்புவர். இதையொட்டி தெற்கு ரயில்வேயில் பல்வேறு சிறப்பு ரயில்கள் இம்மாத இறுதியில் இயக்கப்பட உள்ளன. அந்த அடிப்படையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாட வருவோருக்கு மைசூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் […]

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 10-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக உள் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 11-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக உள் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் […]

புலம்பல் பழனிச்சாமி.. ஆர்.எஸ்.பாரதி காட்டமான அறிக்கை

கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வௌியிட்டுள்ளார். அவற்றில் கூறியிருப்பதாவது.. நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்துங்கள் என்று அதிமுக பொதுக்குழுவில் ஒன்றிய அரசுக்கு நேரடியாக ஒரு கோரிக்கை வைப்பதற்குகூட “போலி விவசாயி” எடப்பாடி பழனிசாமிக்கு துணிவில்லை. 10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தருவார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அண்ணா திமுக அமித்ஷா திமுகவாக மாறி விட்டதை மறைக்க முயற்சித்தாலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பாஜகவின் அடிமை பழனிசாமி என்பதை தமிழ்நாட்டு […]

போக்சோவில் கைதான வடமாநில வாலிபர் தப்பி ஓட்டம்-புதுகையில் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி யில் தனியார் ஹாலோ பிளாக் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தவர் ஒடிஷா மாநிலம் ராமகட்டா மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரா கமங்கா வயது 23,இவர் அப்பகுதியில் 15வயதுசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் ஆலங்குடி அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மகேந்திர கமங்காவைக்கைது செய்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி 15காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து போலீஸார் புதுக்கோட்டை […]

ரூ.332.46 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு வளாகம்.. முதல்வர் அடிக்கல் நாட்டினார் 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.12.2025) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம் – சேந்தமங்கலம், நீலகிரி மாவட்டம் – பந்தலூர், திருவண்ணாமலை மாவட்டம் – கீழ்பெண்ணாத்தூர் ஆகிய வட்டங்களில் 7000 மெட்ரிக் டன் கொள்ளளவில் 13.97 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்களை திறந்து வைத்தார். மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய […]

2026ல் அதிமுக தனி பெரும்பான்மை ஆட்சி… எடப்பாடி பேச்சு

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.. 2021 தேர்தலில் 2% வாக்குகள் வித்தியாசத்திலேயே 43 தொகுதிகளில் அதிமுக தோற்றது. 2011ல் திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். அதிமுக கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. கருணாநிதி இருக்கும்போதே திமுகவால் எதிர்கட்சி அந்தஸ்து பெற முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக சேர்ந்து பெற்ற வாக்குகள் 41.33 […]

அமமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் துவக்கம்

 2026 தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளோருக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள், புதுச்சேரியில் அமமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விருப்ப மனு விநியோகம் துவங்கியது. தமிழ்நாட்டில் போட்டியிட ரூ.10,000, புதுச்சேரியில் போட்டியிட ரூ. 5,000 செலுத்தி விருப்ப மனுவை பெறலாம். இன்று முதல் டிசம்பர் .18 வரை விருப்ப மனுவை பெற்று ஜனவரி.3க்குள் அமமுக அலுவலகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது

டிச.,14-ம் தேதி திமுக இளைஞரணி மண்டல மாநாடு

தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி இலக்கை முன் வைத்து வியூகம் வகுத்து செயல்படுகிறார். தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடி முகவர்களை முழுமையாக நியமித்து அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார். இப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெறுவதால் அதில் விடுபடும் வாக்காளர்களை கண்டறிந்து அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி என் […]

அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதனைதொடர்ந்து அதிமுக பொதுக்குழுகூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.. கனமழை பாதிப்பு. தமிழக அரசை கண்டித்து அதிமுக […]

செங்கோட்டையனை தொடர்ந்து தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்…?

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் இருந்து வருகிறார். இந்நிலையில் அங்கிருந்து விலகி வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. வைத்திலிங்கம், 2001-2006 மற்றும் 2011- 2016 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இப்போது அவர் ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். கடந்த மாதம் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் […]

தமிழ் திறனறி தேர்வு- தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 100 பேர் தேர்ச்சி

தமிழ்நாடு அரசு திறனறிதல் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த கரூர் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 100 பேருக்கும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா, ஒரு கோடியே 60 லட்சத்துக்கும் மேல் ஊக்கத்தொகை பெற்று சாதனை. தமிழ்நாடு அரசு தமிழ் திறனறிதல் – 2025 தேர்வில் கரூர், வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள (பரணி பார்க் வித்யாலயா) தனியார் பள்ளியில் இருந் து மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர். இதில் 100 பேர் தேர்வில் […]

தங்கம் விலை உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.96,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.12,030க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.207க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.8,000 உயர்ந்து கிலோ ரூ.2.07 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது

இனி என் பெயர் – படத்தை பயன்படுத்தக் கூடாது -ராமதாஸ்..!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தைலாபுரம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தேர்தல் ஆணையத்தை எதிர்த்துத் தாங்கள் வழக்குத் தொடுத்ததாகவும், ஆனால் “தானாகவே முன் வந்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் அன்புமணி தரப்பு ஆஜராகி வாதிட்டார்கள்” என்றும் தெரிவித்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வந்துள்ளதாகவும், பாமகவைத் தான் உருவாக்கியதாகவும், எனவே கட்சியின் பெயரைச் சொல்லவோ, சொந்தம் கொண்டாடவோ யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், “சொந்த தந்தையே எதிர்க்கும் […]

நெஞ்சுவலி- பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலியால் அனுமதிக்கப்பட்ட டிஜிபிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது  அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்றுள்ளார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பிற விவரங்கள் குறித்து மருத்துவமனை தரப்பில் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், அரசு ஊழியருக்கு கீழ்படியாமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு கடந்த 4-ந்தேதி பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா காரில் சென்று கொண்டிருந்தார். திருப்பத்தூர் அருகே கும்மங்குடியில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையிலான போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.மேலும் திருப்பரங்குன்றம் பகுதியில் 144 […]

தங்க நகை பட்டறையில் கொள்ளை… 24 மணி நேரத்தில் சிக்கிய 2 பேர்

கோவை வெரைட்டி ஹால் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாமியார்ஐயர் வீதியில் நவநீதகிருஷ்ணன் என்பவர் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை நவநீதகிருஷ்ணனை தொடர்பு கொண்ட பக்கத்து வீட்டார் உங்கள் பட்டறை கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் உடனடியாக நவநீதகிருஷ்ணன் சென்று பார்த்த பொழுது பட்டறையில் வைத்திருந்த ஒரு கிலோ 15 கிராம் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். […]

தொண்டையில் ”சிக்கன்” சிக்கி டிரைவர் பலி…

தெலுங்கானாவை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 45). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இவர், தனது மனைவியிடம் கோழிக்கறி குழம்பு வைப்பதற்காக சிக்கன் வாங்கி கொடுத்துள்ளார். அதன்படி, அவரது மனைவி கோழிக்கறி குழம்பு வைத்து விட்டு கணவருக்காக காத்திருந்தார். அதிக பசியோடு வந்த சுரேந்தர், கோழிக்கறி என்பதால் மிகுந்த ஆசையோடு அவசர அவசரமாக சாப்பிட்டுள்ளார். அப்போது, அவரது தொண்டையில் கோழிக்கறி சிக்கி கொண்டது. அவர், எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் உணவுக்குழாய் வழியாக சிக்கன் வயிற்றுக்குள் செல்லவில்லை. தொண்டையில் […]

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை கடல்பகுதி நோக்கி இத்தாழி நகரக்கூடும். தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் இன்று (09.12.2025) வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலை தொடர்பான முக்கியமான தகவலை டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இன்று மாலை/இரவு நாகப்பட்டினம், […]

எதிரிகளை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது- முதல்வர் அறிவுரை

 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தீவிர தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மதுரையில் நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், “நமக்கு சாதகமான சூழ்நிலை இருந்தாலும், எதிரிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது. CBI, ED, IT, தேர்தல் ஆணையம் அனைத்தையும் நமக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள். தினந்தோறும் ஏராளமான பொய்கள் பரப்புவார்கள், போலி பிம்பங்களை உருவாக்குவார்கள். இவற்றை எதிர்கொள்ள நமது பலத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார். கூட்டம் காணொலி வழியாகவும் நேரடியாகவும் நடைபெற்றது. […]

சபரிமலையில் கடலூர் பக்தர் மாரடைப்பால் பலி

18-ம் படி ஏறி கொடி மரத்திற்கு அருகே சென்ற தமிழக பக்தர் ஒருவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடலூரை சேர்ந்த சுந்தர் (66) என்ற பக்தர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார். 18 ஆம் படி ஏறி கொடி மரத்திற்கு அருகே செல்லும்போது முதியவர் சுந்தருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை சன்னிதானத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். சபரிமலையில் மாரடைப்பு, உடல்நலக்குறைவு […]

தமிழகத்தில் 14-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு

 கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 08-12-2025 முதல் 14-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரையில், இன்று (08-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (09-12-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். […]

அதிராம்பட்டினத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதிஸ்டாலினின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி, அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. சிறப்பு முகமை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு […]

SIR பணியை பொறுத்தவரை பாதி கிணறு தாண்டியுள்ளோம்- முதல்வர்

 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் தேர்தல் இயந்திரத்தை முழு வேகத்தில் இயக்கும் வகையில், முதலமைச்சரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று காலை காணொலி வழியாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் இருந்து நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முக்கிய நோக்கமே “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற திட்டத்தை […]

திருப்பத்தூர் அருகே வெண்கல சிலை கண்டெடுப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அன்சாகரம் பாறை வட்டம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (41) ருக்கு தம்பதியினர் திருப்பதி மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் புதியவீடு கட்டுவதற்காக பணி தொடங்கப்பட்ட நிலையில் தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக இன்று காலை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பள்ள ம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் ஐந்து அடி ஆழம் பள்ளம் தோண்டிய நிலையில் அப்போது தோண்டப்பட்ட பள்ளத்தில் சுமார் 7 இன்ச் அளவிலான […]

குடிநீரில் கழிவுநீர் கலப்பு- காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் திருமால் நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல், நோய் தொற்று அச்சம் தீவிரம்! திருப்பத்தூர் மாவட்டம், 36-ஆம் வார்டு திருமால் நகர் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த பல வாரங்களாக தொடர்ந்து நீடித்து வரும் இந்த பிரச்சனை தற்போது தீவிரமடைந்ததால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருமால் நகர் பகுதிக்கு பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை முறையாக தூர்வாரப்படாததே […]

இன்றைய தங்கம் விலை

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்தவித மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.96,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12,040க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.198க்கு விற்கப்படுகிறது.

இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த முதல்வர் ஸ்டாலின்

டிட்வா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ஆறுதலாக, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1.19 கோடி மதிப்பிலான 950 டன் நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் அனுப்பி வைத்தார். “தமிழ்நாடு மக்களிடம் இருந்து அன்புடன்” என்று எழுதப்பட்ட பேனருடன் கூடிய கப்பலை முதலமைச்சர் தொடங்கி வைத்து, இலங்கை மக்களுக்கு தமிழ்நாட்டின் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார். இந்த நிவாரணப் பொருட்கள் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை விரைவில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுப்பப்பட்ட […]

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 06-12-2025: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07-12-2025: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08-12-2025 முதல் […]

நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்த முதல்வர் ஸ்டாலின்

 டிட்வா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ஆறுதலாக, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1.19 கோடி மதிப்பிலான 950 டன் நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் அனுப்பி வைத்தார். “தமிழ்நாடு மக்களிடம் இருந்து அன்புடன்” என்று எழுதப்பட்ட பேனருடன் கூடிய கப்பலை முதலமைச்சர் தொடங்கி வைத்து, இலங்கை மக்களுக்கு தமிழ்நாட்டின் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார். இந்த நிவாரணப் பொருட்கள் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை விரைவில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுப்பப்பட்ட […]

SIR பணி முழுமை அடையவில்லை எனில் ரத்து செய்யனும்-அமைச்சர் ஐ.பெரியசாமி

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என்பதால் ஒன்றிய அரசு ரத்துசெய்ய வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ஆத்தூர் தொகுதியில் ஒரே அறையில் அமர்ந்து 22,000 வாக்காளர்களை நீக்கியுள்ளனர். பிஎல்ஓ-க்கள் வாக்காளரை சரிபார்க்க வீடு வீடாகச் செல்லாமல் ஒரே அறையில் அமர்ந்தே நீக்கிவிட்டனர். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் கூறுவது தவறு, எந்த ஊரிலும் ஆய்வு செய்யவில்லை என தெரிவித்தார்.

நாஞ்சில் சம்பத்துக்கு தவெக பரப்புரை செயலாளர் பொறுப்பு

தவெக தலைவர் விஜய் முன்னிலையில் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே விஜய்க்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் பேசி வந்த நிலையில், நேற்று நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்திற்கு பரப்புரை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

டிச.9ம் தேதி ”அரசன்” படப்பிடிப்பு தொடக்கம்

நடிகர் சிம்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ‘அரசன்’ படத்தின் பூஜை வரும் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் புரோமோ வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், மலேசியாவில் கடை திறப்பு விழாவுக்குச் சென்றிருந்த சிம்பு பேசியதாவது:வரும் டிச.9ஆம் தேதி மதுரையில் அரசன் […]

குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாட்டில் சாலைகள், சிக்னல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் குழந்தைகளை கையேந்த வைத்து பிச்சை எடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து பல ஆண்டுகளாகக் கவலைகள் எழுப்பப்பட்டு வந்தன. இது குழந்தை உரிமைகள் மீறலாகவும் மற்றும் சட்டவிரோத நடவடிக்கையாகவும் கருதப்படுவதால், இதுதொடர்பான பொதுநல வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தற்போது ஒரு மிக முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழிமுறைகளை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக […]

தவெகவில் இணைகிறார் நடிகர் ஜீவா ரவி

நடிகர் விஜய்யின்  தமிழக வெற்றிக் கழகம், வரும் தேர்தலில் கிட்டத்தட்ட தனித்துப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.சமீபத்தில் அந்த கட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார்.அதன் தொடர்ச்சியாக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார் . இந்நிலையில் இன்று நடிகர் ஜீவா ரவி விரைவில் தவெக-வில்  இணைகிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.  கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில் செங்கோட்டையனை  சந்தித்த பிறகு நடிகர் ஜீவா ரவி செய்தியாளர்களிடம் பேசியதாவது, தற்போது தான் உயிரோடு இருக்க காரணமே […]

விரைவில் விஜய் சுற்றுப்பயணம்… செங்ஸ் தகவல்

தமிழக வெற்றிக் கழக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது உருவபடத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனைதொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழகம் முழுவம் மாவட்ட அலுவலகங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாமேதை அம்பேத்கரின் நினைவு நாள் இன்று ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நினைவுநாளில் அவரது புகழை போற்றும் வகையில் அவரது புகைப்படத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்து […]

அம்பேத்கர் நினைவு தினம்- முதல்வர் ஸ்டாலின் X-தள பதிவு

அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் X-தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:- எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி.அவரது வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்! அண்ணல் அம்பேத்கர் […]

அம்பேத்கர்-கலைஞர் பெயரில் லண்டன் பல்கலை-யில் ஆய்வுப் படிப்பு

அம்பேத்கர் – கலைஞர் பெயரில் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பு!தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்! லண்டன் பல்கலைக்கழகத்தின் பிரிவான எஸ்ஓஏஎஸ் (கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகளுக்கான பள்ளி) ஒரு புதிய ஆய்வுப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு அம்பேத்கர்-கலைஞர் சமூக நீதி மற்றும் கூட்டாட்சி வருகை ஆய்வாளர் படிப்பு (Ambedkar Kalaignar Visiting Fellowship for Social Justice and Federalism) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் லண்டனில் மூன்று மாதங்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ளலாம். அம்பேத்கர் […]

அனில் அம்பானி குழுமத்தின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்

 கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அனில் அம்​பானிக்கு சொந்​த​மான நிறு​வனங்​களில் யெஸ் வங்கி ரூ.2,965 கோடி முதலீடு செய்​தது. பின்​னர் இந்த முதலீடு வாராக் கடன்​களாக மாறின. இதுகுறித்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் ரூ.11,000 கோடி பொது நிதி, யெஸ் வங்கி மூல​மாக அனில் அம்​பானி குழு​மத்​தின் நிதி நிறு​வனங்​களுக்கு வந்​துள்​ளது தெரிய​வந்​தது. இதையடுத்து அனில் அம்​பானி​யின் 18 சொத்​துக்​களை அமலாக்​கத் துறை தற்போது முடக்​கியது. இவற்​றின் மதிப்பு ரூ.1,120 கோடி ஆகும். கடந்த […]

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டும் மழையில் கையில் தட்டுடன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் பனகல் பில்டிங் அருகில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கைகளில் தட்டு ஏந்தி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை கிளப்பியது. மாற்றுத் திறனாளிக்கான இட ஒதுக்கீட்டை பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அரசாணை எண் 24ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கைகளில் தட்டு ஏந்தி கொட்டும் மழையில் நனைந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து, தஞ்சை பனகல் […]

அரசு வக்கீல் வெட்டிக் கொலை – பட்டப் பகலில் அதிர்ச்சி சம்பவம்

தென்காசி அருகே உள்ள ஊர் மேனியழகியான் என்ற ஊரைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி இவர் செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவரது அலுவலகம் தென்காசி கூலக்கடை பஜாரில் செயல்பட்டு வந்தது. இன்று பகல் 12 மணிக்கு இவர் அலுவலகத்தில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் இவரை அரிவாளால்  சரமரியா வெட்டிவிட்டு ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த சிவசுப்பிரமணியன் சிகிச்சைக்காக தென்காசி அரசுருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆயினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். தென்காசி மாவட்ட […]

டிடிவிக்கு பாஜகவின் கோரிக்கை- TVK கூட்டணியை தவிர்க்க அழுத்தம்?

தமிழ்நாட்டில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, தேசிய அரசியலின் முக்கியக் கட்சியான (பாஜக), தனது கூட்டணிப் பலத்தை (National Democratic Alliance – NDA) அதிகரிப்பதில் தீவிர முனைப்புக் காட்டி வருகிறது. இந்தச் சூழலில், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் அணுகியதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக தலைவர்கள், டி.டி.வி. தினகரனை நேரில் அல்லது தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விடுத்த முக்கிய வலியுறுத்தல், அவர் தனது அமமுக கட்சியை […]

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் குழு வருகை… பலத்த போலீஸ் பாதுகாப்பு

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், அமைப்புகள் கண்காணிப்பு குழுவிடம் நேரடியாக மனுக்கள் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், பொதுமக்கள் மனுக்கள் வழங்க ஏதுவாக சாமியான பந்தல் அமைக்கப்பட்டு இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மகா தீபத்திற்காக 50,000 லட்டுகள் தயார்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையில் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத்தினை காண்பதற்கு லட்சகணக்கானோர் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தீபத்தை காண்பதினால் மோட்சம் கிட்டும் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.  திருவண்ணாமலையில் நடைபெறும் பரணி தீபத்தின் போது […]

எடப்பாடி பெரிய தலைவர் இல்ல-தவெக செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். கோபி பொதுக்கூட்டத்தில் தன்னை “சுயநலவாதி” என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு செங்கோட்டையன், “அவர் பெரிய தலைவர் அல்ல. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,” என்று பதிலளித்தார். கட்சி மாறவில்லை, பிரான்ச் மட்டுமே மாறியுள்ளார் என உதயநிதி ஸ்டாலின் கூறிய விமர்சனம் குறித்து அவர், “யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். என்னைப் பொறுத்தவரை […]

வாணியம்பாடி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக திறக்ககூடாது.. விசிக மனு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள ஆம்பூரிலிருந்து வாணியம்பாடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அந்த டாஸ்மாக் கடையில் அருகில் வழிப்பாட்டு தளங்கள், தோல் தொழிற்சாலை, பள்ளிகள் உள்ளதால் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதி ஆகும். இதனால் டாஸ்மாக் கடையினால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என கூறி விடுதலை சிறுத்தைகள் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆர்பாட்டம் நடத்தியதின் பேரில் […]

கூட்டணிக்கு 2 கட்சிகளிடம் மாறி மாறி பேசி வருகிறோமா?- பிரேமலதா பதில்

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் ஆலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நேரில் பார்வையிட்டு பதிப்புகள் குறித்து கிராம மக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆலைக் கழிவுகளால் மக்களின் அடிப்படை உரிமைகளான நிலம் நீர் காற்று ஆகியவை மாசு அடைந்திருக்கின்றன இதில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும், 2023ல் தமிழக அரசு அறிவித்த பொது சுத்திகரிப்பு நிலையத்தை  உடனடியாக நிறைவேற்ற வேண்டும் சிப்காட் பிரச்சனைக்கு ஆளும் கட்சி ஆண்ட கட்சி […]

தென்னாப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா.. த்ரில் வெற்றி

டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்து ஏமாற்றத்தை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி, ODI தொடரில் சிறப்பான திரும்பி அடியை கொடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் (நவம்பர் 30) இந்தியா 349/8 ரன்கள் என நல்ல ஒரு டார்கெட்டை வைத்தது. விராட் கோலி 135 ரன்கள் (120 பந்துகள்) உட்பட அபாரமாக விளையாடி, 52வது ODI சதத்தை அடைந்தார். ரோஹித் ஷர்மா 57 ரன்கள் (50 பந்துகள், 5 சிக்ஸ்) அடித்து ODIயில் அதிக சிக்ஸ் அடி […]

டில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டின் கதவை உடைத்து நகை -பணம் கொள்ளை- தஞ்சையில் பரபரப்பு

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் தி.மு.க விவசாய அணி மாநில செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ். விஜயன் வீடு தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சேகரன் நகரில் அமைந்துள்ளது . இந்த நிலையில் நேற்று வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் அங்கு சென்று வீட்டின் முன்பக்க கிரில் கேட்டை உடைத்தனர். பின்னர் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் . பீரோவை உடைத்து அதிலிருந்து தங்க நகை, […]

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் ஓய்வு நீதிபதியிலான குழு கரூர் வருகை

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவில் இன்று கரூர் சிபிஐ அலுவலத்திற்கு சுமித் ஷரன் ஐபிஎஸ் வந்துள்ளார். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், சம்பவத்தில் இறந்தவர்களின் […]

எலான் மஸ்க் மகனுக்கு இந்திய-அமெரிக்க விஞ்ஞானியின் பெயர்

தொழிலதிபர் எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மனைவி ஷிவான் சிலிஸ் (Shivon Zilis) மற்றும் குழந்தைகள் குறித்துப் பேசியுள்ளார். அப்போது, தனது மனைவி ஷிவான் சிலிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், இவர்களுக்குப் பிறந்த மகன்களில் ஒருவருக்கு நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகரின் நினைவாக ‘சேகர்’ என்று பெயரிட்டுள்ளதாகவும் மஸ்க் கூறியுள்ளார். ஷிவான் சிலிஸ், தான் கைக்குழந்தையாக இருக்கும்போதே தத்துக்கொடுக்கப்பட்டதாகவும், அவர் கனடாவில் வளர்ந்ததாகவும் மஸ்க் மேலும் தெரிவித்துள்ளார். ஷிவானின் தந்தை […]

குட் நியூஸ்- இந்த மாதம் அறிவிக்கப்படும் 3 மெகா திட்டங்கள்..!

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான தேதி பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு பிறகு புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது. எனவே, அதற்கு முன்னதாக 3 மெகா திட்டங்களை அறிவிக்க தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர், ஏசர், டெல், எச்.பி. ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது இந்த 3 நிறுவனங்களும் 20 லட்சம் லேட்டாப்களை தயாரித்துவிட்டது. இந்த […]

புதிய திராவிட கழக” 6வது மாநில மாநாடு- உதயநிதி பங்கேற்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் புதிய திராவிட கழகத்தின், ‘ வெல்லட்டும் சமூக நீதி’ – 6வது மாநில மாநாடு, நேற்று ஈரோடு, மொடக்குறிச்சி எழுமாத்தூரில் சிறப்பாக நடைபெற்றது.. புதிய திராவிட கழகத்தின் தலைவர், கே.எஸ்.ராஜ் கவுண்டர் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி பங்கேற்றனர். இவ்விழாவில் மாவட்டச் செயலாளர்கள், கூட்டணி கட்சி […]

தங்கம் விலை சவரன் ரூ.96,560க்கு விற்பனை

தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ரூ.12,070க்கும், சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ.96,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.4 உயர்ந்து, ரூ.196க்கும், கிலோவுக்கு ரூ.4,000 உயர்ந்து ரூ. 1,96,000க்கும் விற்பனையாகிறது.

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டது

வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணத்துள்ளார். இதுதொடர்பாக கூறியுள்ள தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், “தமிழ்நாட்டு கடற்கரையைவிட்டு டிட்வா புயல் விலகி சென்றது. கடற்கரையில் இருந்து 25 முதல் 50 கிலோமீட்டர் தள்ளி வங்கக் கடலில் டிட்வா புயல் பயணித்து வந்தது. தற்போது 30 முதல் 70 கிலோ மீட்டர் விலகி கடலுக்குள் பயணிக்கும். வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டது. மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று […]

டிட்வா புயல் எதிரொலி… கொந்தளிக்கும் கடல்

வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் வேதாரண்யத்திற்கு கிழக்கு வடகிழக்கு மற்றும் சென்னை தெற்கு கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது  டிட்வா புயல் காரணமாக நேற்று காலையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு  மாவட்டங்களில் மற்றும் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில் டிட்வா புயல் கரையை நெருங்குவதால் புதுச்சேரியில் கடும் சீற்றத்துடன் கடல் கொந்தளிக்கிறது. அலைகளின் ஆக்ரோஷத்தால் கடற்கரை […]

டாஸ்மாக் பணியாளர்கள் 3ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம்

தமிழ் நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு மாநில அமைப்பாளர் கு.பாலகிருஷ்ணன் இன்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…. காலி டாஸ்மாக் பாட்டில்களை குடித்துவிட்டு எறிந்து விடுவதால் சுற்றுப்புற சூழல் விவசாய நிலங்கள் விலங்குகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு அமல்படுத்தும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் இதனை செயல்படுத்தி வருகிறது. டாஸ்மாக்கில் காலி மதுபான பாட்டில்களை டாஸ்மாக் பணியாளர்கள் தான் சேகரிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. தொழிற்சங்கங்கள் போராட்டம் வாயிலாகவும், […]

படகு,பயிர் சேதம் -30ம் தேதிக்கு பின் கணக்கெடுத்து இழப்பீடு- அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவரசகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் டெல்டா மற்றும் வடகடலோர மாவட்ட ஆட்சிகள் உடன் காணொளி காட்சி வாயிலாக ஆலேசானை மேற்கொண்டார்.நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் இன்று அமைச்சர் ராமசந்திரன் மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டார். டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் திருவாரூர்,நாகப்பட்டினம்,மயிலாடுதுறை புதுக்கோட்டை மற்றும் கடலூர் விழுப்புரம் ராமநாதபுரம் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலமாக அமைச்சர் ஆலோசனை […]

ரூ.4,000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம்- தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.4000 கோடி மதிப்பில் ரூ.1000 கோடி மதிப்புள்ள 7 ஆண்டுக்காலப் பிணையப் பத்திரம், ரூ.1000 கோடி மதிப்புள்ள 8 ஆண்டுக்காலப் பிணையப்பத்திரம், ரூ.1000 கோடி மதிப்புள்ள 10 ஆண்டுக்காலப் பிணையப்பத்திரம் மற்றும் ரூ.1000 கோடி மதிப்புள்ள 30 ஆண்டுக்காலப் பிணையப்பத்திரம் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் டிசம்பர் 02, […]

புதுச்சேரி தவெக ரோடு ஷோவுக்கு காவல்துறை மறுப்பு

புதுச்சேரி- தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் அரசியல் பிரச்சாரம் தொடர்ந்து சவால்களை சந்தித்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திட்டமிட்டிருந்த டிசம்பர் 5 அன்று புதுச்சேரியில் நடைபெற விருந்த ரோடு ஷோவுக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. கலாப்பேட்டை முதல் கண்ணியாக்கோயில் வரை அஜந்தா சிக்னல், உப்பலம், அரியங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம் போன்ற இடங்களைத் தொடும் இந்த ரோடு ஷோவுக்கு தவெக புதுச்சேரி அலகு தலைவர்கள் முதல்வர் என். ரங்கசாமி மற்றும் போலீஸ் டிஜிபி […]

தென்காசி-சங்கரன்கோவிலில் 1 கிலோ மல்லிகை ரூ.7,500

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மட்டும் அதே பகுதியில் ரூ.3,500-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ ஒரே நாளில் விலை இரட்டிப்பாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே மல்லிகை விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்றைய திடீர் உயர்வு வியாபாரிகளையும் வாடிக்கையாளர்களையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக வியாபாரிகள் கூறுவது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக மல்லிகை செடிகளின் […]

கதண்டு கடித்ததால் பாதிப்பு.. கரூர் தொழிலாளர்களுக்கு VSB ஆறுதல்

கரூர் மாவட்டம், நெரூர் கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள், கதண்டு கொட்டியதால் பாதிக்கப்பட்ட 6 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கதண்டு கொட்டிய தொழிலாளர்களை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உடல் நலம் குறித்தும் விசாரித்தார்.

நெருங்கும் டிட்வா புயல்… செங்கல்பட்டு மாவட்டம் உதவி எண்கள் அறிவிப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் வலுப்பெற்று வரும் டிட்வா (Ditwah) புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) சமீபத்திய தகவலின்படி, புயலின் மையம் தற்போது சென்னைக்கு 400 கி.மீ. தென்கிழக்கே, புதுச்சேரிக்கு 300 கி.மீ. தென்கிழக்கே, காரைக்காலுக்கு 190 கி.மீ. தென்கிழக்கே உள்ளது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (நவம்பர் 30) […]

இனி CBSE- 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 7 பாடங்கள்

மத்திய இடைநிலை கல்வி வாரியமானது ( சி.பி.எஸ்.இ.) மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி செயல்படுகிறது. தங்களது இணைப்பு பள்ளிகளுக்கான வரையறைகளை, மத்திய கல்வி அமைச்சக ஆலோசனைப்படி, அவ்வப்போது மாற்றி அமைக்கிறது. இதற்கான பாடப்புத்தகங்களை, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி., வாயிலாக வழங்கி வருகிறது. புதிய கல்வி கொள்கையின்படி, இந்த ஆண்டு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்ச்சி திட்டம் கைவிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பில் 2 முறை பொதுத்தேர்வு […]

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தான்.. தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்

பாமகவின் தலைவராக அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணி தான் தொடர்வார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் ராமதாஸ் தரப்பு பாமகவினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் முதலே அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனால் இருவரும் தனித்தனியாக தங்களின் ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே பாமகவை கைப்பற்றும் நோக்கில் இருவருமே தனித்தனியாக முயற்சிகளை மேற்கொண்டனர். ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற, அன்புமணி மாவட்ட வாரியாக […]

டிட்வா புயல் – 10 மாவட்டத்திற்கு பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

 டிட்வா புயல் காரணமாக இன்று (29.11.2025) 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் வடக்கு- வட மேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை (30ம் தேதி) அதிகாலையில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகம்-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1120 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1, 120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 95,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,980க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.192க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆம்னி பஸ் உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

தமிழ்நாட்டில் இருந்து பயணிகளின் வசதிக்காக கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரி செலுத்தாமல் இயக்கப்படுவதாகக் கூறி, கடந்த வெள்ளிக்கிழமை தமிழக பதிவெண் கொண்ட 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்த கேரள போக்குவரத்துத் துறை, தலா ரூ.2 முதல் ரூ.3 லட்சம் என ரூ.70 லட்சம் வரை அபராதம் விதித்தது. கேரள அரசின் இத்தகைய நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

பறிமுதல் வாகனங்களை வைத்து சிவகங்கை போலீஸ் விழிப்புணர்வு

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 10ம் மாதம் 27ம் தேதி நடைபெற்ற மாமன்னர் மருது பாண்டியர் நினைவு தினத்தையும், 30/10/25 அன்று நடைபெற்ற தேவர் குரு பூஜையையும் முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில், சிவகங்கை நகர் & தாலுகா, மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர் நகர், கீழச்சீவல்பட்டி, திருக்கோஸ்டியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலையில் ஸ்டண்ட் செய்த வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது, பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தியதாக மொத்தம் 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், இதில் 96 […]

கோவை, வேலந்தாவளம் சோதனை சாவடியில் 40 லட்சம் பறிமுதல்… ஒருவர் கைது

தமிழக – கேரளா எல்லைகளான கோவை வாளையார் மற்றும் வேலந்தாவளம் வழியாக கேரளாவிற்க்கு பணம் மற்றும் தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது.இதனைத் தொடர்ந்து தமிழக கேரளா எல்லை பகுதியான சோதனை சாவடிகளில் காவல் துறையின் அவ்வபோது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கோவையில் இருந்து வேலந்தாவளம் வழியாக கேரளா நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தை வேலந்தாவளம் சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த இருசக்கர வாகனத்தில் மறைத்து […]

செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல்… அமைச்சர் ரகுபதி

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நேற்றைய தினம் புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஏற்பாட்டின் பேரில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி மோதிரம் வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறுகையில்: திமுகவும் அதிமுகவும் இணைந்து தான் செயல்படுகிறார்கள் என்று கூறும் செங்கோட்டையனுக்கு நேற்று வரை புத்தி எங்கே போனது. யாரை வைத்தும் யாரும் […]

டிட்வா புயல்- 17 மாவட்டங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

டிட்வா புயல் தற்போது சென்னைக்கு 530 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு 430 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டு இருக்கிறது. இந்நிலையில் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல் தற்போது 10 கி.மீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது வருகிற 30-ந்தேதி அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் என ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தநிலையில் […]

நடிகர் சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கல்

நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு ஆகியோருக்கு தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் சார்பில் ஆகியோருக்கு மதிப்புமிக்க டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது . சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை அவருக்கு வழங்குகிறார். கடந்த 1965-ம் ஆண்டு வெளியான ’காக்கும் கரங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார். 1967-ல் வெளியான ’கந்தன் கருணை’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது. இவர் கடைசியாக 2001-ல் வெளியான […]

‘பாண்டியரே’ பாட்டுக்கு உற்சாகமாக கைதட்டி ரசித்த பிரேமலதா

2026-ல் மக்கள் விரும்பும் கூட்டணி, அமைச்சரவையில் தே.மு.தி.க.வுக்கு அங்கம்! செங்கோட்டையன் குறித்து கருத்து கூற முடியாது, எங்கள் கட்சியின் இதுபோல் பல தடவை நடந்துள்ளது மக்கள் விரும்பினால் சூலூர் தொகுதியில் போட்டி பிரேமலதா பேட்டி தே.மு.தி.க. சார்பில் கோவை மாவட்டம் சூலூர் பகுதிகளில் நடைபெற்ற கேப்டன் ரத யாத்திரையில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். சூலூர் அரசு மருத்துவமனையில் இருந்து சீரணி கலையரங்கம் வரை நடைபெற்ற இந்த ரத […]

மணிக்கு 10கி.மீ வேகத்தில் நகரும் ”டிட்வா புயல்”

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள டிட்வா புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்கு 530 கி.மீ தூரத்தில் தெற்கு திசையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. டிட்வா புயல் நகரும் வேகம் அதிகரிக்கும். 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயலின் வேகம் அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து 430 கி.மீ தெற்கு, தென்கிழக்கில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.

அதிகனமழை எச்சரிக்கை… 6 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்புக்குழு

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மீட்புப் பணிகளுக்காக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்தனர். ஒரு அணிக்கு 30 பேர் வீதம் தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், திருவாரூருக்கு தலா 1 அணி மற்றும் புதுச்சேரிக்கு 2 அணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சூறைக்காற்று வீசுவதால்… பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்

இன்று (வெள்ளிக்கிழமை) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக ராமேசுவரத்தில் பலத்த சூறைக் காற்று மணிக்கு 50 கி.மீ வேகத்தில் வீசுவதால் பாம்பன் பாலம் வழியே […]

95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை நெருங்கி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விtலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.11,770க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.94,160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, நேற்று குறைந்தது சாமானிய மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியது. இதனால் இன்றும் […]

டித்வா புயல்… நாளை 4 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

இலங்கை அருகே வங்கக்கடலில் டித்வா புயல் இன்று உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், மழை இருக்கும் எனவும் ரெட் அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளது.5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர். நாளை மறுநாள் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் , விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம் தெரிவி்த்தது. இந்தநிலையில் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்ததால் கண்காணிப்பு […]

போலீசாரை கண்டித்து… கோவையில் CITU ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தம் அமைக்க அனுமதிக்க கோரி கடந்த அக்.31 ஆம் தேதி சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் போலீஸாரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சமாதானம் ஏற்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் கலைந்துச் சென்றனர். இந்நிலையில் கடந்த நவ.17 ஆம் தேதி நள்ளிரவில் சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவர் ஹனிபா உள்ளிட்ட ஆட்டோ […]

நாளை 4 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

வங்கக்கடலில் இந்தியபெருங்கடலில் உருவாகிய இருக்க கூடிய தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இந்த புயல் டித்வா என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் நாளை புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், மழை இருக்கும் எனவும் ரெட் அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளது. இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.

நடிகை சம்யுக்தா 2வது திருமணம்… கோலாகலம்

பிக் பாஸ்  4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் சம்யுக்தாஷான். மாடல் அழகியான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் படு பிசியானார். வாரிசு, காஃபி வித் காதல், துக்ளக் தர்பார், மை டியர் பூதம் போன்ற படங்களில் நடித்த சம்யுக்தாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் கணவரை விவாகரத்து செய்த சம்யுக்தா, தற்போது இரண்டாவது திருமணத்தை சத்தமில்லாமல் எளிமையாக செய்துமுடித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரும், முன்னாள் சிஎஸ்கே கிரிக்கெட் வீரருமான அனிருதா […]

7 துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வுமண்டலமாக இன்று வலுவடைகிறது. இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வருகிற 28, 29, 30-ந் தேதிகளில் மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை, புயல் சின்னம் எதிரொலியாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதைபோல பாம்பன், […]

தவெகவில் செங்கோட்டையனுக்கு முக்கிய பதவி..

அதிமுகவில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்றைய தினம் விஜய்-ஐ சந்தித்து சுமார் 2 மணி ேநுரம் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில் சென்னை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் வந்தார். அங்கிருந்த தவெக தலைவர் விஜய்-ஐ சந்தித்து முறைப்படி அக்கட்சியில் இணைந்தார். இந்தநிலையில் தவெகவில் சேர்ந்த செங்கோட்டையனுக்கு கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், 4 மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

வாலிபர் பைக் ஸ்டண்ட்… வாகன ஓட்டிகள் அச்சம்-கரூரில் பரபரப்பு

கரூரில் பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் முக்கியசாலையில் பைக் ஸ்டண்ட் செய்தபடி சென்ற நபரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கரூர்-திருச்சி சாலையில், சுங்ககேட் பகுதியில் இருந்து கரூர் செல்லும் (திருமாநிலையூர் வரை.ஒரு நபர், இருசக்கர வாகனத்தை ஓட்டும்போது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் விதமாக, வாகனத்தின் மீது படுத்துக்கொண்டும், கால்களை பின்புறமாக வைத்துக்கொண்டும் ஏதோ சாகசம் செய்வதுபோல் இரு சக்கர வாகனத்தை இயக்கியுள்ளார். அந்தச் சாலையில் அருகில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கரூர்-திருச்சி […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.94,160க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.11,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.180க்கு விற்பனையாகிறது.

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் ‘தித்வா’ புயல்..

இந்தோனேசியாவில் கரையைக் கடந்த சென்யார் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என்றும், இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை அருகே அடுத்த 12 மணி […]

என் பதவியை விட்டு நீக்குவது பிசிசிஐ கையில் இருக்கு-கவுதம்கம்பீர்

டில்லியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-2 என்ற தோல்வியை (whitewash) சந்தித்துள்ளது. முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் 30 ரன்கள் தோல்வி, இரண்டாவது கவுகாத்தியில் 7 விக்கெட்டுகள் தோல்வி. இது இந்தியாவின் வீட்டு டெஸ்ட் சாதனைக்கு பெரும் தாக்குதல். கடந்த 6 வீட்டு டெஸ்ட்களில் 4 தோல்வி, நியூசிலாந்துக்கு தொடர் தோல்வி போன்றவை கம்பீரின் தலைமையில் நடந்தன. இந்தியாவின் வீட்டில் 25 ஆண்டுக்கு பின் தென்னாப்பிரிக்காவுக்கு தொடர் வெற்றி.கம்பீரின் தலைமையில் பேட்டிங் அணுகுமுறை […]

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

SIR பணி….திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் ஆய்வு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய கழகம், பி.கே.அகரம் ஊராட்சியில் நடைபெற்று கொண்டிருக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அப்பகுதியில் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மற்றும் கழகம் சார்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர் -2 (BLA-2) அவர்களிடம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் நடைபெற்றுக் கொண்டிருக்கும் SIR பணி விபரங்களை கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில் நிகழ்வில் புள்ளம்பாடி […]

வில்லனாக நடிக்க தான் ஆசை… திருச்சியில் நடிகர் முனீஸ் காந்த்

நடிகர் முனீஸ்காந்த் நடிப்பில், இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான மிடில் கிளாஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை திருச்சி எல் ஏ சினிமாஸில் மிடில் கிளாஸ் திரைப்படத்தை காண வந்த ரசிகர்களை சந்தித்து கதாநாயகன் முனீஸ்காந்த், இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் உரையாடினர். ரசிகர்கள் அவர்களுக்கு மாலை, சால்வை அணிவித்தனர். திரைப்படத்தின் இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கத்திற்கு படத்தின் கதாநாயகன் முனீஸ் காந்த் ஒரு சவரன் தங்க சங்கிலியை பரிசளித்தார். மேலும் […]

செஸ் போட்டியில் கிராமப்புற மாணவர்கள் பரிசு வென்று அசத்தல்

பொள்ளாச்சியில் கோவை மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் ஈஷாCBE அறக்கட்டளையால் பயிற்சி அளிக்கப்பட்ட கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த 9 மாணவர்கள் பல்வேறு வயது பிரிவுகளில் பரிசுகளை வென்று அசத்தி உள்ளனர். அவனே செஸ் அசோசியேஷன் சார்பில் பொள்ளாச்சி உடுமலை பிரதான சாலையில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) கோவை மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர், மாணவிகள் என இருபாலருக்கும் பல்வேறு வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. […]

பஞ்சப்பூர்-கருமண்டபம் வரை… புறவழிச்சாலை அமைக்கும் பணி… மேயர் ஆய்வு..

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை பணிகளை மேயர் அன்பழகன் இன்று (26.11.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பஞ்சபூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை தொகுப்பு-I – கோரையாறு மற்றும் உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரை பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி ரூ.81.72 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை அமைக்கப்படுகிறது.சாலையின் மொத்த நீளம் – 2 […]

கடலோர மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும்..தமிழக அரசு எச்சரிக்கை

கடந்த 24-ந்தேதி குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நேற்று) இலங்கைக்கு தெற்கே வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இந்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து தமிழ்நாட்டின் கடலோரமாக வடக்கு நோக்கி நகரக் கூடும் என்பதால் டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். எனவே, தமிழ்நாடு […]

தங்கம் விலை சவரன் ரூ.94,400 க்கு விற்பனை

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.94,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.176 க்கு விற்பனை ஆகிறது.

தவெகவில் இணையும் கே.ஏ.எஸ்.. நாளை எம்எல்ஏ பதவி ராஜினாமா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு இருந்து வந்தது.  அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டுமென செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார்.இதன் காரணமாக செங்கோட்டையனின் அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். கடந்த மாதம் நடைபெற்ற தேவர் ஜெயந்தி நிகழ்வில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் […]

தவெக புஸ்ஸி, ஆதவ், நிர்மல், மதியிடம் சிபிஐ 2வது நாளாக விசாரணை

கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொது நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் இரண்டாவது நாளாக விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் […]

”நெல்லை பாய்ஸ்” படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஹேமா ராஜ்குமார்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சமீபத்தில் தாவிஇருக்கும் நடிகை ஹேமா ராஜ்குமார். பல சீரியல்களில் நடித்து வரும் ஹேமா,தற்போது கமல் இயக்கத்தில் ‘நெல்லை பாய்ஸ்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். அறிவழகன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.சென்னையில் நடந்த பட விழாவில் ஹேமா பேசும்போது, ‘‘எந்த ஒரு டைரக்டரும், நினைத்த கதையைச் சமரசம் இல்லாமல் படமாக்குவது தான் உண்மையான வெற்றி.அதேவேளை நிறைய புதுமுகங்களுக்கும் டைரக்டர்கள் வாய்ப்பு தரவேண்டும். தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். பொதுவாக ஆடிஷனில் கலந்துகொள்ளும்போது, சீரியல் நடிகை […]

ரயிலில் அடிப்பட்டு நர்சிங் மாணவர்-மாணவி பலி- பரிதாபம்

பெங்களூரு சிக்கபானவரா ரெயில் நிலையத்தின் அருகே இளம்பெண், வாலிபர் பிணமாக கிடந்தனர். அவர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 2 பேரும் பெலகாவியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த வந்தே பாரத் ரெயிலில் அடிபட்டு பலியானது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். […]

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக இருந்தது. இந்நிலையில், தென்குமரிக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. மீண்டும் புயல் சின்னம் உருவாகியிருக்கிறது. இதனால் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1600 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து 93ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து 11ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராம் ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 174க்கு விற்பனையாகிறது

நான் பணக்காரன் இல்லை என கூறிய விஷால்.. ஐகோர்ட் கேள்வி

2019-ல் நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான “விஷால் பிலிம் ஃபாக்டரி” மூலம் “பீரமே வாகை சூடும்” படத்தை எடுத்தார். இதற்காக “கோபுரம் ஃபிலிம்ஸ்” என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.21.29 கோடி கடன் வாங்கினார். அந்தக் கடனை லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions) திருப்பிச் செலுத்தி, விஷாலிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொள்ள ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. ஆனால் விஷால் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்று லைகா குற்றம் சாட்டியது. அதனால் 2021-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. […]

தஞ்சை மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை…

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவசத்திரம், கீழ தோட்டம் ஏரிப்புறக்கரை உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் இருந்து நாட்டுப்படடகு மற்றும் விசைப்படகுககளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் ( 24.11.2025 ) இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத் துறை மற்றும் கடலோர் காவல் படை சார்பில் எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது […]

கடல் போல் காட்சியளிக்கும் விலை நிலங்கள்… நீரில் மூழ்கிய பயிர்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவிடாமல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,466 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இந்த தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நாற்று நடவு செய்து 15 நாட்களே ஆன இளம் சம்பா – தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பல்வராயன் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான விளைநிலங்கள் கடல் போல் காட்சியளிக்கிறது. தொடர்ந்து மழை பெய்து […]

டூவீலர் மீது கார் மோதி விபத்து… 4 பேர் காயம்

சாலை ஓரம் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கார் மோதி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயம்!. போலீசார் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம், அனுமந்தஉபாசகர் தெரு பகுதியைச் சேர்ந்த ஶ்ரீதர் (40) என்பவர் அவருக்கு சொந்தமான காரில் ஊத்தங்கரை சென்று விட்டு வீடு திரும்பும் போது திருப்பத்தூர், அண்ணாநகர் அருகே அதிவேகமாக கார் சென்ற நிலையில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் சாலை ஓரம் நிறுத்தி உள்ளார் அப்போது அந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி […]

தக்காளி கிலோ.ரூ.70க்கு விற்பனை.. .இல்லதரசிகள் ஷாக்

தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை கடந்த வாரத்தைவிட இருமடங்காகியுள்ளது. பல இடங்களில் சில்லறை விலையில் தக்காளி கிலோ 70 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் தக்காளியின் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் தக்காளியின் விலை அதிரடியாக உயரத் தொடங்கி உள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 15க்கு விற்கப்பட்டது. நவம்பர் மாத தொடக்கத்தில் அதிகபட்சமாக ரூ.20 ஆக உயர்ந்தது. இந்நிலையில் சென்னை […]

எந்த ‘குறி’யாக இருந்தாலும் கவலையில்லை- விஜய் பேச்சுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

 தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், சமூக வலைதளங்களில் த.வெ.க. ஆதரவாளர்களை “தற்குறிகள்” என்று விமர்சிக்கும் நெட்டிசன்களை கடுமையாக சாடினார். “அதென்னப்பா அது… தற்குறியா!” என்று சிரித்துக்கொண்டே கேப் விட்ட விஜய், “நமது கட்சிக்கு ஆதரவு தரும் லட்சக்கணக்கான தொண்டர்கள், Gen Z தலைமுறை இளைஞர்களை ‘தற்குறிகள்’ என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். இப்போது அவர்களே மாற்றிப் பேசுகிறார்கள்” என்று விமர்சித்தார். இது திமுக ஆதரவாளர்களின் […]

அஜித்துக்கு ”இந்த ஆண்டின் ஜென்டில்மேன்” விருது

 ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருது பெற்ற நடிகர் அஜித்துக்கு வாழ்த்து என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்ததாவது; பிரெஞ்சு தொழிலதிபரும், கார் பந்தய வீரருமான மறைந்த பிலிப் சாரியோல் (Philippe Charriol) நினைவாக இத்தாலியின் வெனிஸ் நகரில் வழங்கப்படும் ‘ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025’ (Gentleman Driver of the Year 2025) விருதை பெற்றிருக்கும் நடிகர் […]

சிபிஐ விசாரணை-ஆதவ், புஸ்ஸி, நிர்மல் ஆஜர்

கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொது நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு […]

22 மாவட்டங்களில் மழை… 17 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக, பெய்த கனமழையால் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, கோவை, கள்ளக்குறிச்சி, குமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 17 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை […]

நாம் பிறக்கும்போது எந்த பதவியுடனும் பிறக்கவில்லை… இழப்பதற்கு”- ஓபிஎஸ்

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும். அதிமுக தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கின்ற குழுவாக செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களது கருத்து, தமிழக மக்களின் கருத்து. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பதற்கான பூர்வ பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேர்வதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜயின் வாக்குறுதி கனவுகள் நிறைவேறட்டும்* ஒவ்வொருவர்களுக்கும் தனியாக விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விவரங்கள் கேட்டுள்ளனர். அதனை பூர்த்தி […]

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், கனமழை எதிரொலியாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாளை (24-11-2025) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட […]

SIR பணியை ஆய்வு செய்த புதுகை கலெக்டர் அருணா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் மு.அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், திருமயம் வட்டாட்சியர் ப.வரதராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

தமிழகத்தில் 25 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று (21-11-2025) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (22-11-2025) காலை மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு […]

திமுகவுடன் காங்.,பேச்சு வார்த்தை… 5 பேர் பெயர்கள் அறிவிப்பு

 காங்கிரஸ் தலைமை கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த 5 பேர் கொண்ட குழுவை நியமித்திருப்பதாக செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை மாண்புமிகு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் அவர்கள் தலைமையில் அமைத்திருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் […]

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. தெடந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் வலுவடையக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்படை விட 6% குறைவாக […]

போதை ஒழிப்பு.. திருச்சி-மதுரை நடைப்பயணம்-மதிமுக வைகோ தகவல்

வைகோ தலைமையில் ‘சமத்துவ நடைப்பயணம்’ — போதை ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு கோரிக்கையுடன் ஜனவரி 2 முதல் 12 வரை திருச்சி–மதுரை 180 கி.மீ நடைபயணம்.. தவெக தலைவர் விஜய்–கரூர் சம்பவம் குறித்து கடும் விமர்சனம்.. போதைப் பொருள் ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி.. சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சாதி மோதல் தடுப்பு குறித்து […]

1 கிலோ மல்லிகைப்பூ ரூ. 4, 200… கிடுகிடுவென உயர்ந்த விலை!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது குறிப்பாக மல்லிகைப்பூ பிச்சிப்பூ முல்லைப் பூ கனகாம்பரம் மரிக்கொழுந்து போன்ற மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது அங்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக மல்லிகை பூவின் விலை கிலோ ஒன்று 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது இன்று காலை மலர் சந்தையில் திடீரென மல்லிகைப் பூவின் விலை கடும் […]

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் இதனால் தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும். இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, […]

திமுகவுடன் பேச்சுவார்த்தை- குழு அமைத்த காங்கிரஸ்

2026 சட்டமன்றத் தேர்தல் திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த 5 உறுப்பினர் குழு நியமனம்.தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 5 உறுப்பினர் குழுவை நியமிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு காட்டுகிறது.தங்களைவிட்டு காங்கிஸ் எங்கும் செல்லாது என சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அரசல் புரசலான கருத்துகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன். தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவாரத்தை நடத்தி வருவதாக தகவல் […]

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் பாத்திமா போஷ்

2025ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ் வென்றார். கடந்த ஆண்டு வெற்றியாளரான டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கஜேர் தீல்விக்கிடமிருந்து பாத்திமா போஷ் கிரீடத்தைப் பெற்றார். தாய்லாந்தின் வீணா பிரவீனர் சிங் முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தார். இவர் முதல் ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டார். மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற, பாத்திமா போஷ்க்கு வாழ்த்துகளை பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த […]

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்

ஆந்திராவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை ஜனாதிபதி திரெளபதி முர்மு  4 மணியளவில் ரேணிகுண்டா வந்திறங்கினார். அங்கு, ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஆந்திர மாநில மந்திரி வங்கலப்புடி அனிதா, திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கடேஸ்வர், போலீஸ் ஐ.ஜி.ராஜகுமாரி, திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு, திருப்பதி தொகுதி எம்.பி. குருமூர்த்தி, ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பொஜ்ஜல.சுதீர்ரெட்டி ஆகியோர் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். அதன்பிறகு ஜனாதிபதி ரேணிகுண்டா விமான […]

தவெக பிரச்சாரத்துக்கு அனுமதி கொடுக்காதது ஏன்?-..சேலம் காவல்துறை விளக்கம்

சேலம் மாநகர காவல்துறை, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) டிசம்பர் 4-ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்த பிரச்சார நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து, அதிகாரப்பூர்வ விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளது. கடிதத்தில் மறுப்புக்கான முக்கிய காரணங்களாக இரண்டு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், ஒன்று, டிசம்பர் முதல் வாரத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பெரும்பாலான போலீஸார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுவதால், சேலத்தில் போதிய போலீசை ஒதுக்க முடியாது என்பது. இரண்டாவது, தவெக தாக்கல் செய்த மனுவில் […]

போதை பொருளுடன் சிக்கிய அதிமுக தேர்தல் பணி நிறுவன ஊழியர்

கடந்த 19-11 -25 அன்று சென்னை காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அண்ணா நகரை சேர்ந்த தியானேஸ்வரன் என்பவரை பிடித்து அவரிடம் இருந்து எல் எஸ் டி ஸ்டாம்ப் போதைப்பொருள் கைப்பற்றி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் படி, போதை பொருள் வைத்திருந்த சரத், சீனிவாசன் மற்றும் சர்புதீன் ஆகியோர் பிடித்து அவர்களிடம் இருந்து உயர்ரக கஞ்சா மற்றும் போதைப்பொருள் பறிமுதல் செய்துள்ளனர். இதில் பிடிக்கப்பட்ட சர்புதீன் என்பவர் அதிமுக […]

யாரும் இங்கே எடுத்த உடனே வந்துவிட முடியாது! பிரேமலதா ஓபன் டாக்..

 தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற “மக்களைத் தேடி மக்கள் தலைவர்” நிகழ்ச்சியில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக வலுவான கூட்டணி அமைத்து வெற்றி பெறும் என உறுதியாக அறிவித்தார். காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பெரியார் சிலை பகுதியிலிருந்து ரோட் ஷோவுடன் அவர் வரவேற்பைப் பெற்றார். பிரேமலதா, “2026 தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அமையும். தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். […]

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை

சமீப நாட்களாகவே தமிழகம் முழுவதும் மழை கொட்டி வரும் நிலையில், இன்று அதிகாலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் இன்றைய தினம் 10 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (சனிக்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது […]

தங்கம் விலை மேலும் குறைவு

தமிழகத்தில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,460க்கும், சவரனுக்கு ரூ. 320 குறைந்துரூ.91, 680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து, ரூ.169க்கும், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.1,69,000க்கும் விற்பனையாகிறது.

6 மாதத்திற்கு முன்பு நாய் கடித்த நபர் பலி…வேலூரில் சோகம்

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (45), இவர் கூலி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி யமுனா(40) இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பாக ( ஜூன் 9-ந் தேதி) வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தபோது சரவணனை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் அவரை உறவினர்கள்  அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சரவணன் […]

தந்தையுடன் போட்டோ எடுத்த முதல்வர் ஸ்டாலின்- திமுக நிர்வாகி மகிழ்ச்சி

தனது தந்தை புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பபடுவதாக மகன் வைத்த கோரிக்கையை ஏற்று மூத்த திமுக தொண்டரை நேரில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை தனித்தனியாக ஒன் டூ  ஒன் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்த போது தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் […]

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம்,தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் ,தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையில் செயல்படுத்திடும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் யு.ஏ.டி.டி. 2. ஓ,உழவர்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள் இணைப்பினை கைவிட வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கத்தின் தலைவர் தனசேகர்,தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா ஆகியோர் தலைமை தாங்கி பேசினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்டக்கலை […]

ஆட்டுகுட்டியை காப்பாற்ற கிணற்றில் குதித்து சிக்கிய நபர்- பத்திரமாக மீட்பு

திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் பெருமாள் வட்டம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான 70 அடி ஆழம் 20 அடி தண்ணீர் கொண்ட விவசாய கிணற்றில் ஒரு ஆட்டுக்குட்டி தவறி விழுந்தது. அதை மீட்க கிருஷ்ணமூர்த்தியின் உறவினர் ஆசைத்தம்பி 52 கிணற்றுக்குள் இறங்கி ஆட்டுக்குட்டியை பாதுகாப்பாக மேலே அனுப்பினார். ஆனால் பின்னர் ஆசைத்தம்பி தனியாக மேலே ஏற முடியாமல் கிணற்றின் உள்ளே ஆபத்தான நிலையில் சிக்கிக் கொண்டார். இதையறிந்த கிருஷ்ணமூர்த்தி உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்பு […]

மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மசோதா தொடர்பாக ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வாசித்து வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்தது தொடர்பாக ஜனாதிபதி விளக்கம் கேட்ட மனு மீது தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது. நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்தூர்கர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வாசிக்கிறது. மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மசோதாக்கள் மீது 3 மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் […]

கார்-டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து.. 3 பேர் பலி

ராணிப்பேட்டை அருகே கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ராணிப்பேட்டை அருகே நவல்பூர் காரை கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் வேகமாக வந்த கார் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. கர்நாடக மணிலா பதிவெண் கொண்ட கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற தினேஷ் (20), சாஜன் (26), பாலமுருகன் (19) ஆகிய 3 பேரும் […]

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும், திமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருபவர் துரைமுருகன் (வயது 87). துரைமுருகனுக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட காது வலி காரணமாக சென்னை காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி மையத்தில் நேற்று முன்தினம் (நவ., 18) அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் துரைமுருகனுக்கு தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திடீரென காதில் வலி ஏற்பட்டது வயது மூப்பின் காரணமாக ஏற்படும் பாதிப்பு தான் எனவும் இப்போது நலமுடன் இருப்பதாகவும் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைவு

தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்க விலை இன்று (நவம்பர் 20, 2025) கணிசமான சரிவை காட்டியுள்ளது. சவரனுக்கு (8 கிராம்) ரூ.800 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்று (நவம்பர் 19) மாலை விலையான ரூ.92,800-இலிருந்து ஏற்பட்ட சரிவு. கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,500-க்கு விற்கப்படுகிறது.

கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு.. மத்திய அரசு தமிழ்நாடு மீது பாரபட்சம்

கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் பணிகளுக்கு அனுமதி இல்லை என ஒன்றிய அரசு கூறியுள்ளது தமிழ்நாட்டின் மீது பாரபட்சமாக நடந்து கொள்வதையே காட்டுகிறது – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி திருச்சி கலையரங்கத்தில் இன்று, 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்களான ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், பழனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இவ்விழாவில் […]

நவ.24ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது

 நவ.24ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (19-11-2025) காலை லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக் கடலில் நவ. 22ல் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடையும். காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் நவ.24ல் தாழ்வு […]

10வது முறையாக முதல்வராக பதவி ஏற்கும் நிதிஷ்குமார்

ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் உள்ள நிதிஷ் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒருமனதாக நிதிஷ்குமார் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யபட்டார். இந்தநிலையில் நிதிஷ்குமார் தலைமையில் புதிய அரசு நாளை பதவியேற்கிறது. 10வது முறையாக முதல்வராக பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்.

பிரதமருக்கு கருப்புக்கொடி- வீட்டு காவலில் வி.ச.மா.தலைவர் பழனியப்பன்

கோவையில் நடக்கும் இயற்கை வேளாண் மாநாட்டை தொடக்கி வைக்க வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட திட்டமிட்டு இருந்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனியப்பன் நேற்று இரவு முதல் தஞ்சாவூரில் உள்ள அவரது வீட்டுக்காவில் வைக்கப்பட்டுள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய வேளாண் மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்று கோவைக்கு பிரதமர் மோடி […]

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

19-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.  20-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 21-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் […]

மெட்ரோ விவகாரம்- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரெயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் […]

சவுதி அரேபியா- பஸ் விபத்து.. 45 பேர் பலி- காதர் மொகிதீன் இரங்கல்

சவுதி அரேபியாவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்டஐதராபாத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் 45 பேர் பேருந்து விபத்தில் உயிரிழப்புஇ.யூமுஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரங்கல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது :சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவுக்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்ட ஐதராபாத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் 45 பேர், பேருந்து விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் […]

பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் RED ZONE அறிவிப்பு

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் பல்வேறு பகுதிகள் தற்காலிகமாக Red Zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19″ம் தேதி பிரதமர் மோடி கோவை கொடிசியாவில் நடைபெற உள்ள இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை துவக்கி வைக்க வருகை புரிய உள்ளார். அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடி வேளாண் விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க உள்ளார். விமான மூலம் கோவை வரும் பிரதமருக்கு விமான நிலைய பகுதி மற்றும் கொடிசியா சாலையில் இருபுறங்களிலும் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு […]

புதுச்சேரி கனமழை எதிரொலி- மத்திய பல்கலை தேர்வு ஒத்திவைப்பு!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை முதல் மிக கனமழை வரை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் அ. நமச்சிவாயம் உத்தரவின்படி இன்று (நவம்பர் 18, திங்கள்) புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமும் இன்று அனைத்து வகுப்புகளையும் ரத்து செய்துள்ளது. பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில், “இன்று […]

வஉசியின் நினைவு நாள்- திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

இந்திய சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 89-நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி கோர்ட் எதிரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்குகழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில்மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

தமிழகத்தில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு… சீமான் ஸ்பீச்

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) வாக்காளர் பட்டியல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் SIR-ஐ கடுமையாக கண்டித்துள்ளன. ஏற்கனவே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்று தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் SIR எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைப்போல, இன்று (நவம்பர் 17, 2025) நாம் தமிழர் கட்சி (NTK) சார்பாக SIR-ஐ உடனடியாக நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியது. […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு

தமிழகத்தில் இன்று ஆபரண தங்க விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.91,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.11,400-க்கு விற்பனையாகிறது. 

உணவு கொண்டு வர தாமதம்.. அடித்து நொறுக்கப்பட்ட ஓட்டல்

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையம் அருகே உள்ள பெப்சி என்ற உணவகத்தில் இன்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவர் உணவருந்த சென்றுள்ளார். அங்கு ப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்து காத்திருந்த நிலையில் தனக்கு பிறகு வந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாகவும் தனக்கு உணவு வழங்கவில்லை என கௌதம் உணவகத்தில் இருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த கௌதம் தனது நண்பர்களை செல்போன் மூலமாக அழைத்தார் உடனடியாக ஆறு பேர் அங்கு வந்த நிலையில் உணவகத்தின் […]

8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு-

சென்னை- 17-11-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 18-11-2025: தமிழகத்தில் அநேக […]

தமிழகத்தில் தொழில் துவங்க இடவசதி இல்லை- ஆனாலும் இடம் தருகிறோம்

திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் தேர்தல் ஆயத்த பணிகள் வாக்காளர் பட்டியல் பிறப்பு தீவிர சீராய்வு பணிகள் குறித்த நிர்வாகிகளான ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வப் பெருந்தகை….. தமிழகம் தொழில்துறை வளர்ச்சியில் முன்னேறி உள்ளது என எடப்பாடி பழனிச்சாமியிடம் சவால் வீட்டுள்ளீரகளே, எந்த வகையில் தமிழகம் முன்னேறியுள்ளது என கேட்டபோது…. எல்லா வகையிலும் முன்னேறியுள்ளது, கடந்த 4 ஆண்டுகளில் எடப்பாடி […]

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பகல் 1 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

நம்ம எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் போகும்…விஜய்

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிரமான பட்டியல் திருத்தம் (Special Intensive Revision – SIR) பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் நடிகர் விஜய், இது வாக்காளர்களின் உரிமையை பறிக்கும் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று எச்சரித்துள்ளார். நவம்பர் 15 அன்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட 9 நிமிடங்கள் 20 வினாடிகள் நீளமுள்ள வீடியோவில், விஜய், “நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நமது ஓட்டுரிமை பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது பயமுறுத்தல் அல்ல, […]

மதுபான கடையை மூட கோரி-தவெகவினர் திடீர் மறியல்-130 பேர் கைது

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகில் நேற்று தனியார் மதுக்கடை பார் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திறக்கப்பட்ட கடையை மூட வலியுறுத்தியும் , இன்று தமிழக வெற்றி கழகத்தினர் உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள மது கடையை முற்றுகையிட முயன்றனர். காவல்துறையினர் தடுப்புகள் ஏற்படுத்தியதால் , தமிழக வெற்றி கழகத்தினர் Bar க்கும் முன்னதாகவே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர் . அங்கு தமிழக அரசுக்கு எதிராக தமிழக வெற்றி கழகத்தினர் முழக்கங்கள் […]

வி.சேகர் உடலை பார்த்ததும்! கண்ணீர் விட்டு கதறிய சிவக்குமார்!

கடந்த 10 நாட்களுக்கு மேலாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். “நீங்களும் ஹீரோதான்” படத்தின் மூலம் 1990-இல் இயக்குநராக அறிமுகமான வி.சேகர், ‘பொண்டாட்டி சொன்னா கேட்கணும்’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ உள்ளிட்ட குடும்ப படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்தவர். வடிவேலுவையும் விவேக்கையும் ஒரே படத்தில் நடிக்க வைத்த பெருமைக்குரியவர். திருவண்ணாமலை […]

போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் விற்பனை… 2 பேர் கைது

சென்னை மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த பாரதிராஜா, ஜஹபர் சாதிக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நிலத்தின் உரிமையாளர்கள் இறந்தது போல போலி வாரிசு சான்றிதழ்கள் பெற்று மோசடி செய்வதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

மக்களே உஷார்- காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 8.30 மணியளவில் உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளனது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பப்பாளி பழத்தில் காட்சியளித்த விநாயகர் உருவம்.. விவசாயிகள் வழிபாடு

உலக அதிசயம் என்பது உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் அதிசய பொருள் கிடைக்கும் அல்லது அதிசய நிகழ்வுகள் நடைபெறும். இதே போல தான் உலகத்தில் வேறு எங்கும் கிடைத்தற்கு அரிய விநாயகர் உருவம் கொண்ட பப்பாளி பழம் கிடைத்தது. இந்த அரிய பொருள் கோவை மாவட்டம் போள்ளாச்சி அடுத்த திவான்சாபுதூர் பகுதியைச் சார்ந் சுப்பிரமணியம் என்ற விவசாயிக்கு கிடைத்தது. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் வழக்கம்போல தனது தோட்டத்தில் பப்பாளியை பரிக்கச் சென்றபோது பப்பாளியில் விநாயகர் […]

தேமுதிக யாருடன் கூட்டணி? ஜன. 9ல் தெரியும்.. பிரேமலதா

தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தேர்தல் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, 2026 தேர்தல் கூட்டணி, மாநாடு ஏற்பாடு, நிதி திரட்டல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “வரும் ஜனவரி 9-க்கு முன்பு கூட்டணி அறிவிக்கலாம் அல்லது சூழ்நிலைக்கு […]

அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன்

அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் வா.மைத்ரேயன், கடந்த ஆகஸ்ட் மாதம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.  இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மைத்ரேயன் திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து மைத்ரேயனுக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.  யார் இந்த மைத்ரேயன்? – பிரபல மருத்துவரான வா.மைத்ரேயன் கடந்த 1991-ல் பாஜகவில் இணைந்து, மாநில செயற்குழு உறுப்பினர், மாநில அறிஞர் அணி தலைவர், பொதுச் செயலாளர், மாநில துணை […]

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2400 உயர்வு

தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் இன்று ஒரே நாளில் ரூ.2400 விலை உயர்ந்து 95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தங்கம் விலை இன்று காலை (நவ., 13) ஒரு கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.11,800-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.94,400-க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது மேலும் ரூ.800 அதிகாரித்து ஒரு சவரன் ரூ.95,200-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,900-க்கும் விற்பனையாகிறது. இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.9 உயர்ந்த நிலையில் பிற்பகலில் […]

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், 16 லட்சம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் பயன்பெறுவார்கள். இதனால், தமிழக அரசுக்கு ரூ.1,829 கோடி கூடுதலாக செலவாகும். கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் […]

பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்-தவெக அருண்ராஜ்

பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம் என த.வெ.க அருண்ராஜ் கூறியுள்ளார்.  சென்னையில் நேற்று (நவ., 12) தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், கூட்டணி குறித்த முடிவை தலைவர் விஜய் எடுப்பார் என்றும் அவரது சுற்றுப்பயண அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மக்களுடன் இருக்க வேண்டும் என்ற மன உறுதி விஜய்க்கு அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 13, 2025) காலை வெளியிட்ட எச்சரிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை தொடரும் என்று தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் […]

கன்றுக்குட்டியை கடித்து குதறிய சிறுத்தை…பரபரப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்புச்சி புதூரில் கடந்த 27 -ம் தேதி விரைவில் தனியார் தோட்டத்தில் உள்ள புகுந்த சிறுத்தை கிடா ஆடு மட்டும் கன்று குட்டியை அடித்துக் கொன்றது மாலை நேரங்களில் விவசாயத் தோட்டத்தில் தென்பட்டதால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர் இதை அடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பெயரில் பொள்ளாச்சி வனசரகர் ஞானபால முருகன் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாடும் வழித்தடத்தில் கூண்டு வைத்து ஆடு மற்றும் நாய் வைக்கப்பட்டு […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.11,800க்கும் சவரன் ரூ.94,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.9 உயர்ந்து ரூ.182க்கு விற்பனையாகிறது.

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் பலி

நெல்லை மாவட்டம், வள்ளியூரில் நாய் கடித்து ரேபிஸ் பாதித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-டிராக்டர் மோதி விபத்து… 11 பயணிகள் படுகாயம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பேருந்து டிராக்டர் டிப்பரின் சக்கரத்தில் மோதி அதே நேரத்தில் ஆடுதுறை நோக்கி வந்த அரசு நகர பேருந்திலும் மோதி கண்ணாடிகள் நொறுங்கியது. இதில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 11 பயணிகள் பல்வேறு இடங்களில் காயம் பட்டு ரத்த காயங்களுடன் திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்து திருவிடைமருதூர் […]

அறிவுத் திருவிழாவா…அவதூறு திருவிழாவா..விஜய் காட்டம்

தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்று தெரிவித்துள்ள விஜய் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது சமூக நீதிக் கொள்கை? என எழுப்பி உள்ளார். இதுகுறித்து விஜய் இன்று வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது… “சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி […]

தூய்மை பணியாளர்களுக்கு நவம்பர் 15 முதல் இலவச உணவு

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை கல்விக்கும், மருத்துவத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கல்வி நிலையங்களின் கட்டடங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் முடுக்கி விடப்படுகின்றன. பள்ளிகளின் கல்வித் தரமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமுதாய […]

மாம்பழம் சின்னம் எங்களுக்கு ஒதுக்க வேண்டும்… ராமதாஸ் கடிதம்

மாம்பழம் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறி அன்பிமணி தரப்பு மாம்பழம் சின்னத்தை பெற்றது. பீகார் தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மாம்பழம் சின்னத்தை தமது தரப்புக்கு ஒதுக்கக் கோரி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.92,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ரூ. 173க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.220 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.93,600க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,700க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.170க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செங்கோட்டையன் வைத்த குற்றச்சாட்டு- இ.பி.எஸ் விளக்கம்

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் விமர்சனங்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். செங்கோட்டையன் அதிமுகவில் குடும்ப அரசியல் நடப்பதாகக் கூறியதை “வேறு குற்றச்சாட்டு இல்லாததால்” என்று கூறி நிராகரித்தார். “என் மகனை யாராவது கட்சி நிகழ்ச்சியில் பார்த்துள்ளீர்களா?” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, வாரிசு அரசியல் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்தார். அதிமுக ஆட்சியை குறை சொல்ல முடியாததால் பாஜகவுடனான கூட்டணியை திமுக விமர்சிப்பதாகவும், திமுக ஆட்சியில் […]

ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார்.. டி.டி.வி

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விரக்தி காரணமாக என்னை ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மனநலம் குன்றியவர் போல் ஆர்.பி.உதயகுமார் உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சுயநலத்தால் அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது என்று இவ்வாறு கூறினார்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை தொடரும்

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

தமிழக பதிவெண் ஆம்னி பஸ்களுக்கு கேரள அதிகாரிகள் லட்சகணக்கில் அபராதம்

தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கேரள வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதுடன் பேருந்துகளை பறிமுதல் செய்வதாக குற்றம் சாட்டி 15க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழக கேரள எல்லையான கோவை வாளையார் பகுதியில் பயணிகளுடன் நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படக்கூடிய ஆம்னி பஸ்கள் தமிழகத்தின் கோவை மாவட்டம் வழியாக கேரளாவிற்குள் சென்று வருகிறது. குறிப்பாக தமிழக கேரள எல்லையில் உள்ள வாளையார் பகுதி கேரள […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.11,300க்கு விற்பனையாகிறது.

நடிகர் ஸ்ரீகாந்திற்கு ED மீண்டும் சம்மன்..

போதைப் பொருள் வாங்கியதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஸ்ரீகாந்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 28ம் தேதி அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஆஜராகாத நிலையில், வரும் 11ம் தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

டாக்டர் வீட்டில் நகை திருட்டு… குடும்ப தகராறு… இளம்பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.49 லட்சம் கையாடல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்களில் அதிக அளவிலான சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் அந்த சுமைக்கான தொகையை ரொக்கமாக வசூலிப்பது வழக்கம். இதனை வசூல் செய்யும் பணியை தனி யார் நிறுவன ஒப்பந்தபணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் ரூ.3.8 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக தெரியவந்தது. இந்தநிலையில் சந்தேகத்தின் பேரில் பெண் பணியாளர் ஒருவரை பிடித்து விமான நிறுவனத்தின் விஜிலென்ஸ் பிரிவினர் கடந்த மூன்று நாட்களாக விசாரணை நடத்தி […]

எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது…முதல்வர் ஸ்டாலின்

சென்னை : இன்று (நவம்பர் 7, 2025) ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். விழாவில் பேசிய அவர் “திமுகவை அழித்துவிடலாம், ஒழித்துவிடலாம் என சிலர் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர். எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது” என்று தனது பேச்சில் தெரிவித்தார். திமுகவின் வலிமையையும், மக்கள் ஆதரவையும் நினைவுபடுத்தும் வகையில் அவர் உரையாற்றினார். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான எஸ்.ஐ.ஆர். (SIR) பணிகள் தமிழ்நாட்டில் […]

SIR பணிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு 11ம் தேதி விசாரணை

எஸ்.ஐ.ஆர். பணிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நவ.11ல் விசாரணைக்கு வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை என்பது வாக்குரிமையை பறிப்பதாக அமையும். தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என திமுக வழக்கு தொடர்ந்தது. திமுக தொடர்ந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி கவாய் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் முன்னாள் எம்.பி. உள்பட 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்பட்ட செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக நவம்பர் 31ம் தேதி எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 12 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ; […]