டெல்லியில் தமிழ்நாடு காவல்துறை பஸ், கார் மோதி விபத்து

டெல்லியில் உள்ள ஜானக்புரி பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு காவல்துறைக்கு சொந்தமான பஸ் மீது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் இரண்டு வாகனங்களுக்கும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் பஸ் மற்றும் காரில் இருந்த அனைவரும் வெளியேறிவிட்டதால், அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து காவல்துறை […]