ஸ்ரீரங்கம் பகல் பத்து 8ம் நாள்.. இரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி நம்பெருமாள் சேவை

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாபகல் பத்து 8ம் திருநாளான இன்று அர்ஜுன மண்டபத்தில் இரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி ; அதில் சிறிய நெற்றி சுட்டித்தொங்கல் அணிந்து; சிகப்புக் கல் அபய ஹஸ்தம் சாற்றி; கண்டாபரணம்; திருமார்பில் சிகப்புக் கல் சூர்ய பதக்கம் அணிந்து; இருபுறமும் ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம் – அழகிய மணவாளன் பதக்கம் சாற்றி; சிகப்புக் கல் மகர கண்டிகைகள் அணிந்து – அதன் மேல் சிகப்புக் கல் […]