திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் நாளை கடையடைப்பு போராட்டம்..

23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும்,டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை 58 யில் இருந்து 60 ஆக உயர்த்த வேண்டும்,காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் என்ற பெயரில் ஊழியர்களுக்கு வேலைப் பளுவை திணிப்பதை கைவிட்டு, மாற்றுத் திட்டத்தை உருவாக்கி அமுல்படுத்த வேண்டும்,8 மணி நேரத்துக்கு மேல் பணி புரியும் கடை ஊழியர்களுக்கு கூடுதல் நேரத்திற்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும், பணி இடமாறுதல், மீண்டும் பணி வழங்குதல் ஆகிய செயல்முறை […]

ஊதிய உயர்வு வழங்ககோரி-திருச்சியில் மின் ஊழியரர்கள் போராட்டம்

மின்வாரியத்தில் 1.12.23 .ல் இருந்து பணி புரியும் பொறியாளர் தொழிலாளர்கள் , கேங்மேன் பணியாளர்கள் உட்பட 80 ஆயிரம் பேருக்கு ஊதிய உயர்வை தொடர் பேச்சுவார்த்தை நடத்தி அறிவித்திட கேட்டு தமிழகம் முழுவதும் கோரிக்கை பேட்ஜ் அணிந்து, பிரிவு அலுவலகங்களில் ஒலி முழக்க போராட்டம் நடைபெற்றது. திருச்சி தென்னூர் மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இன்ஜினியர் சங்கம், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், சி.ஐ.டி.யு.தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, எம்ளாய்ஸ் பெடரேஷன் […]

இடைக்கால பட்ஜெட்.. வைகோ பாராட்டு

தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட் மக்களின் காதில் பொன் ஆபர்ணத்தை குத்தியுள்ளது – காது குத்தும் வேலை என்கிற அதிமுக வின் குற்றச்சாட்டுக்கு வைகோ பதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திகைக்க வைக்கும் வகையில் 36 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தாக்கல் செய்து வருகிறார்.அனைத்து தரப்பினரையும் கவருவதாகவும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு வரும் வகையில் அறிவிப்புகள் […]

திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாடு பணிகள் மும்முரம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரம்மாண்ட மாநில மாநாடு மார்ச் 8-ந் தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற உள்ளது. திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்கிற தலைப்பில் மாநாடு மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. திருச்சி சிறுகனூரில் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். தற்போது இதற்கான பிரம்மாண்ட மேடை பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன. […]

திருச்சி மன்னார்புரம் அருகே விபத்து: முதியவர் பலி

திருச்சி மன்னார்புரம் அருகே இன்று அதிகாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் உடல் சிதைந்து அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து எடமலைப்பட்டி புதூர் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் அளித்த புகாரின் பேரில், தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். […]

திருச்சி கிரைம்…தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூர், குட்டி மலை ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், சிறப்புச் சார்பு ஆய்வாளர் கிறிஸ்டோபர் ராஜ் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த அன்பிலார் நகரைச் சேர்ந்த அஷ்ரப் அலி என்பவரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். இதையடுத்து அவரை கைது […]

திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

திருச்சி இபி ரோடு, லூர்துசாமி பூங்கா அருகே போதை மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகக் கோட்டை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கமல நேரு பகுதியை சேர்ந்த காளிமுத்து (19) என்பது தெரியவந்தது. அவர் அந்தப் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததை […]

திருச்சி மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: கைதான பெண்ணின் திக் திக் பின்னணி

திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்த வர் விக்னேஷ். இவரது மனைவி சுகன்யா (23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. சுகன்யாவை பிரசவத்துக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவம னையில் சேர்த்தனர். அங்கு கடந்த 11ம்தேதி அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பிரசவ வார்டில் தாய்க்கும், சேய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு உதவியாக உறவுக்கார பெண் ஒருவர் இருந்தார். அவர் நேற்று காலை வெளியில் […]

திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு!.. பாராட்டு

திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி சுகன்யா. கர்ப்பிணியான சுகன்யா கடந்த 11ம் தேதி பிரசவத்திற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஅழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். கடந்த 4 தினங்களாக சுகன்யா மருத்துவமனையில் இருந்து வரும் நிலையில் அவருக்கு அறிமுகமான பெண் ஒருவர் நட்புடன் பழகி குழந்தைக்கு தடுப்பூசிசெலுத்தி விட்டு வருவதாக கூறி குழந்தையை கடத்திச் சென்று விட்டார். இதுகுறித்து சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடி […]

திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா-அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இந்நிகழ்வில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழம் மற்றும் பொன்னான ஆயிரம் நாட்கள் குறித்த மடிப்பேடு […]