வேம்பாக்கம் காசி விஸ்வநாதர் கோயிலில் மர்ம நபர்கள் கைவரிசை: ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரை!

செங்கல்பட்டு அடுத்த வேம்பாக்கம் கிராமம், வேதகிரீஸ்வரர் நகரில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க மிக பழமையான காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இந்த கோயிலில், நேற்றிரவு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைத்து வழிபாடுகளும் முடிந்த நிலையில், கோயிலை அர்ச்சகர்கள் பூட்டி விட்டு சென்றனர். பின்னர் இன்று அதிகாலையில் வழக்கம் போல் கோயிலை அர்ச்சகர்கள் திறக்க வந்துள்ளனர். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. […]