5 பவுன் நகையை மீட்க கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நீலகிரி மாவட்டம் உதகை நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். கடந்த கொரோனா காலகட்டத்தில், தனது வீட்டின் அருகே வசிக்கும் சந்திரிகா என்பவரிடம் காயத்ரி 7 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்துள்ளார். அதில் 2 பவுன் நகைகள் மட்டுமே திருப்பி அளிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 பவுன் நகைகளை மீட்டுத் தரக் கோரி […]
கலெக்டர் அலுவலகத்தில் திடீரென தீக்குளிக்க முயன்ற 3 பெண்கள்- பரபரப்பு
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளிப்பதற்காகக் காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த சுமார் 3 பெண்கள், திடீரெனத் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேன்களை எடுத்துத் தங்கள் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.இதைச் சற்றும் எதிர்பாராத பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், உடனடியாகச் செயல்பட்டு அந்தப் பெண்களைத் தடுத்து நிறுத்தினர். அவர்களின் கைகளில் இருந்த […]
மலைக்கோட்டை அருகே வியாபாரிகளுக்கு உரிய இடம் வழங்க கோரி-தீக்குளிக்க முயற்சி
திருச்சி மலைக்கோட்டை பகுதியை சுற்றியுள்ள என் எஸ் பி சாலை, பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தரைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மலைக்கோட்டை அருகே உள்ள தெப்பக்குளம் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள தரைக்கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உத்தரவின் பேரில் அப்பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான கடைகள் அகற்றப்பட்டன. என் எஸ் பி சாலையில் தரை கடை வைத்திருக்கக்கூடிய வியாபாரிகள் தங்களுக்கு யானைகட்டி […]
குடிநீரில் கழிவுநீர்- திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த நபரால் பரபரப்பு
திருச்சி மாவட்டம் வேங்கூர் பகுதியில் உள்ள பெரியார் காலனியில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அப்குதியை சேர்ந்த கணேசன் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், தீக்குளிப்பதாக பெட்ரோல் கேனுடன் வந்திருந்தார். இதையறிந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து, அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.அதனைத் தொடர்ந்து கணேசன் மாவட்ட ஆட்சியர் […]