ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- தேசிய நெடுஞ்சாலை மூடல்
ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை முதலே கனமழையும், கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. ராம்பன் மாவட்டத்தில் உள்ள ராம்சூ பகுதியிலும் சாலைகளில் வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று பனி குவிந்து கிடப்பதால், தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.மேலும் வீடுகளின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், பனியால் மூடப்பட்டன. சுமார் 3 மாத வறண்ட காலநிலைக்குப் பிறகு, தோடாவின் பலேசாவில் சமவெளிகள் மற்றும் மலைப்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதேபோல, பனிப்பொழிவு […]