தோட்டத்தில் புகுந்த யானை கூட்டம்.. 2 யானைகள் முட்டி மோதல்- பரபரப்பு
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், கணுவாய், வரபாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அண்மை காலங்களாகவே அதிகரித்து உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன அவ்வப்போது வீடுகளிலும் ரேஷன் கடைகளிலும் வைக்கப்பட்டுள்ள அரிசி உள்ளிட்ட பொருட்களையும் தின்று செல்கிறது இதனால் அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குட்டி யானைகள் உட்பட ஏழுக்கும் […]