பாஜக இளைஞரணி நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
பாஜக மேலிடம் வழங்கிய பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சொந்தக் கட்சி நிர்வாகியின் வீட்டை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் இளைஞரணி மாநிலத் தலைவர் அமர்நாத் யோகேஸ்வரனை பொறுப்புகளில் இருந்து பாஜக தலைமை விடுவித்தது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில்; “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநிலத் துணைத்தலைவர் அமர்நாத் யோகேஸ்வரன் (காஞ்சிபுரம் மாவட்டம்) கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலிலும் ஈடுபட்டதால் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். […]
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி தரப்பு அறிவிப்பு
பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளராக செயல்பட்டு வரும் ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஜி.கே.மணி அவர்கள் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், அதற்காக கட்சியின் அமைப்பு விதி 30&இன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி […]
தமிழகத்தில் மொத்தம் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்..
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் மூலமாக 97,37,832 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெயர் விடுபட்டவர்கள், மீண்டும் சேர்க்க ஜனவரி 18ம்தேதி வரை அவகாசம் உள்ளது. இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உட்பட மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முதல்கட்டமாக பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட […]
தனுஷின் ‘D55’ படத்தில் சாய் பல்லவி – பூஜா ஹெக்டே நீக்கம்!
தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி இணையும் ‘D55’ திரைப்படத்தில், நடிகை பூஜா ஹெக்டே-க்கு பதிலாக இப்போது சாய் பல்லவி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘மாரி 2’ திரைப்படத்தின் ‘ரவுடி பேபி’ கூட்டணி மீண்டும் திரையில் இணைவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியை படக்குழு அணுகியுள்ளதாகவும், தயாரிப்பு நிறுவனம் (Sun Pictures) மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.