வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கே வாய்ப்பு- பாஜக திட்டவட்டம்

சென்னையில் RSS அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மூத்தலைவர்கள் தமிழிசை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல், பாஜக உட்கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.  இந்நிலையில் சென்னையில் நடந்த RSS – பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

அதிமுக-பாஜக கூட்டணியில் இணைகிறார் டிடிவி

அமமுக டிடிவி தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..ஜெயலலிதா ஆட்சி அமைய ஓரணியில் திரள்கிறோம். எங்களுக்குள் பங்காளி சண்டைதான். விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை. ஓரணியில் திரண்டு தமிழ்நாட்டில் மக்களாட்சி அமைய உறுதுணையாக இருப்போம். என்னதான் இருந்தாலும் இது பங்காளிச் சண்டைதான். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்று இவ்வாறு தெரிவித்தார். நாளை மறுநாள் பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ள நிலையில் கூட்டணியில் இணையும் டிடிவி தினகரன். பிரதமர் மோடியின் […]

பாஜ., புதிய தலைவர் நிதின் நபினுக்கு டிடிவி வாழ்த்து

பாஜகவின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா கடந்த 2020 ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றார். பாஜகவில் தலைவர் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிந்தபோதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.இந்த சூழலில், 12-வது தேசியத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 20-ம் தேதி (இன்று) நடைபெற்றது. இதற்கான வேட்புமனுக்கள் நேற்று பெறப்பட்டன. வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், நிதின் நபினை தவிர வேறு யாரும் வேட்புமனு […]

விஜயை சாதரணமாக எடை போடவில்லை… அண்ணாமலை

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தவெக தலைவர் விஜய்யை சாதாரணமாக எடை போடவில்லை. அவர் ஒரு சினிமா ஸ்டார். மாஸ் இருக்கிற ஸ்டார். திமுக வேண்டாம் என நினைத்தால் யார் வேண்டும் என்பதை விஜய் தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் களத்தில் யாரையும் சாதாரணமாக எடை போட வேண்டாம். பொங்கல் விழாவில் சிவகார்த்திகேயன் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது உள்ள நான்கு முனை போட்டி இருமுனை போட்டியாக மாறும். சிவகார்த்திகேயன் பராசக்தியிலும் நடித்திருக்கிறார். அமரன் படத்திலும் நடித்தார். கதை […]

பாஜகவுக்கு 33 சீட் தான்”-உடைத்து பேசிய அதிமுக நிர்வாகி!

பாஜக 30 – 33 தொகுதிகளைத்தான் கேட்டுப் பெறும். தொகுதி கண்டறிவது பற்றி இன்னும் பேசப்படவே இல்லை. அதிமுக 160 -165 தொகுதிகளில் அதிமுக போட்டியிறுவது உறுதி. மற்ற தொகுதிகளைத்தான் மற்ற கட்சிகளுக்கு பிரித்துக் கொடுப்பார்கள்.” என அதிமுகவை சேர்ந்த சேலம் மணிகண்டன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் […]

பாஜக-வின் ‘நன்கொடை ஊழல்’ குறித்து- செல்வப்பெருந்தகை பகீர் குற்றச்சாட்டு

செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இந்தியாவிலேயே காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க., உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய வைத்து தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் மீது அச்சுறுத்தல்களை பரப்பி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக ஒருங்கிணைந்து, கொள்கை சார்ந்து கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகிறது. நேற்று பா.ஜ.க. கூட்டத்தில் அமித்ஷா பேசும் போது, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் […]

நயினார் கனவு காணட்டும்.. பாஜக-விற்கு தமிழகத்தில் இடமில்லை.. கனிமொழி பதிலடி

சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பல்லடத்தில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் மகளிர் மாநாட்டில் ஒன்றரை லட்சம் மகளிர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மாநாட்டிற்கு வரக்கூடிய மகளிர் அனைவரும் பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும் என்பதற்காக, அவர்கள் மதியத்திலேயே புறப்பட்டு மாநாட்டில் கலந்து கொண்டு, இரவு முடிவதற்குள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற நோக்கில், முதலமைச்சர் மாநாட்டை விரைவில் முடிக்க வேண்டும் என்று […]

அதிமுகவினர் பாஜகவின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள்… திருமா., பேட்டி

பா.ஜ.க உடன் கூட்டணி வைத்திருந்த போதுதான் ராமர் எந்த கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார் என கேட்டார் கலைஞர். கூட்டணி வைத்திருந்த பொழுதும் கருத்தியலில் உறுதியாக இருந்தார். ஆனால் தற்போது பா.ஜ.க உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவினர் பாஜகவின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள் என்று திருச்சியில் திருமாவளவன் கூறினார்.திருச்சி விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இப்போது அவர் கூறியதாவது:- எதிர்க்கட்சிகள் கூட்டணியாக உருவாக முடியாத அளவிற்கு சிதறி கிடக்கிறார்கள். ஒருமித்த கருத்து அவர்களுக்குள் […]

பாஜக ராம்விலாஸ் வேதாந்தி மாரடைப்பால் காலமானார்

அயோத்தி ராம ஜென்மபூமி தீர்த்த சேக்ஷத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி 67 காலமானார். ராமஜென்மபூமி இயக்கத்தின் தலைவரும், பாஜகவின் EX MP-யுமான ராம்விலாஸ் வேதாந்தி (67) மாரடைப்பால் காலமானார். அவரின் இறுதிச் சடங்கு இன்று அயோத்தியில் நடைபெறவுள்ளது. BJP, RSS-ன் முக்கிய தலைவராக இருந்த ராம்விலாஸ், அயோத்தி கோயிலை கட்டுவதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். மேலும், ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் செயல் தலைவராக பணியாற்றிய அவர், 2 முறை(1996, 1998) MP-யாக இருந்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜக 53 தொகுதி

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போதும் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கபப்பட்டன. எல்.முருகன், எச்.ராஜா, அண்ணாமலை. குஷ்பு என முக்கிய நிர்வாகிகள் களம் கண்டபோதும் காந்தி (நாகர்கோவில்). நயினார் நாகேந்திரன் (நெல்லை). வானதி சீனிவாசன் (கோவை தெற்கு). சரஸ்வதி (மொடக்குறிச்சி) ஆகிய 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.இந்த நிலையில், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் மீண்டும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், இந்த முறை 53 தொகுதிகளை கேட்டுப்பெற […]

நேருவை வெறுப்பது போலவே, காந்தியையும் வெறுக்கும் பாஜக.. காங்., விமர்சனம்

ஜவஹர்லால் நேருவை தொடர்ந்து மகாத்மா காந்தி மீது ஒன்றிய பாஜக அரசு வெறுப்பு அரசியல் செய்வதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பெயரை மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொது செயலாளர் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ். ஏற்கனவே திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதில், விளம்பரப்படுத்துவதிலும் பாஜகவினர் வல்லுனர்கள் என்று விமர்சித்துள்ளார். நேருவை வெறுப்பது போலவே, மகாத்மா […]

பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்-தவெக அருண்ராஜ்

பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம் என த.வெ.க அருண்ராஜ் கூறியுள்ளார்.  சென்னையில் நேற்று (நவ., 12) தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், கூட்டணி குறித்த முடிவை தலைவர் விஜய் எடுப்பார் என்றும் அவரது சுற்றுப்பயண அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மக்களுடன் இருக்க வேண்டும் என்ற மன உறுதி விஜய்க்கு அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா – திருச்சியில் பாஜகவினர் கொண்டாட்டம்

மன்கி பாத் என்ற பெயரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி மக்களுடன் மனம்திறந்து பேசி வருகிறார். இதன் 127-வது உரையை கடந்த அக்30–ஆம் தேதி ஞாயிறன்று வழங்கிய அவர், 1896-ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் முதன்முதலாக இந்தப் அற்புத பாடலைப் பாடிய வரலாற்றையும், நாட்டுப்பற்று உணர்வை எழுப்பும் முக்கியமான ஆயுதமாக இந்தப் பாடல் தொடர்ந்து செயல்பட்டு வருவதையும் பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். மேலும் வந்தே மாதரம் என்கிற தேசபக்தி மந்திரச் சொல் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் […]