இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கவர்னர் மதிப்பதில்லை… சபாநாயகர் பேட்டி
இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை மதிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்று சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “இந்திய வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவே தீர்மானிக்கிறது. இது போன்ற மோசமான நிலை இதுவரை இருந்ததில்லை. பெட்ரோல், டீசலை யாரிடம் இந்தியா வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிக்கிறது?. இந்தியாவின் மோசமான வெளியுறவுக் கொள்கையால், இந்திய தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அண்டை நாடுகள் இந்தியாவுடன் இணக்கமாக இல்லை. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஆளுநர் R.N.ரவியின் செயல்பாடுகளை […]
உக்ரைன் போர்- குண்டடிபட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு.. திருச்சி எம்பி துரை வைகோ
திருச்சியில் துரை வைகோ எம்பி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-சிதம்பரத்தை சேர்ந்த கிஷோர் சரவணன் என்ற மாணவர், மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்றார்.அங்கே ஏஜென்சிகளின் தவறான வழிநடத்தலில், வழக்கில் சிக்க வைக்கப்பட்டு ரஷ்யா குடியிருப்பு பெற்று தருவதாக ரஷ்யா -உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டு குண்டடி பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது பெற்றோர்கள் மகனை மீட்க என்னிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். நான் டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் மற்றும் 15 கட்சிகளை […]
அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும்… தஞ்சையில் எம்பி கனிமொழி பேட்டி
உடன்பாடே இல்லாதவர்கள் இணைந்து கூட்டணி உருவாக்கினால் அது எப்படி வெற்றி பெறும். அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும் என்ற கவலை எங்கள் எல்லோருக்கும் உள்ளது என தஞ்சையில் கனிமொழி பேட்டி. தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வருகிற 26 ஆம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை […]
திமுகவில் இணைவதாக வௌியான தகவல் தவறு-வெல்லமண்டி நடராஜன்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் இன்று தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் இந்த தகவலை திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மறுத்துள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் வெல்லமட்டி நடராஜன் கூறியதாவது:-சென்னையில் தி.மு.க.வில் இன்று நான் இணைவதாக வந்த தகவல் தவறானது.நான் சென்னை செல்லவில்லை. திருச்சியில் மகன், மருமகள், பேரக் குழந்தைகளுடன் இருக்கிறேன். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையை […]
விஜய்க்கு அடுக்கு மொழியில் பேச யாரோ கற்று கொடுத்திருக்கிறார்கள்”- திருமா..
தவெக தலைவர் விஜய்க்கு, தூய சக்தி, தீய சக்தி என்று அடுக்குமொழியில் பேச யாரோ சொல்லித் தந்திருக்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தவெக தலைவர் விஜய்க்கு, தூய சக்தி, தீய சக்தி என்று அடுக்குமொழியில் பேச யாரோ சொல்லி தந்திருக்கிறார்கள். மக்கள் முடிவு செய்வார்கள். இலங்கையில் இயற்றப்பட உள்ள புதிய அரசமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி முறையை கொண்டுவர இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அழுத்தம் […]
கோவை வரும் பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி… திருச்சியில் அய்யாக்கண்ணு பேட்டி
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு,விவசாய சங்க தலைவர் நாகை காவிரி தனபாலன்,தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி ஆகியோர் திருச்சி பிரஸ் கிளப்பில் அன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-காவிரியில் மாதந்தோறும் நீர் பங்கீடு செய்வதை நிறுத்தி தினந்தோறும் நீர் பங்கீடு செய்து தமிழகத்துக்கு வழங்க வேண்டும்,மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்,மரபணு திருத்தப்பட்ட பயிர்களை ஊக்குவிப்பதற்கு 500 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்ததற்கு […]
எடப்பாடி கொல்லைப்புறமாக முதல்வர் ஆனவர் – செங்கோட்டையன்..
அ.தி.மு.க.வில் இருந்து தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- * ஜெயலலிதாவால் 3 முறை முதலமைச்சராக அமர்த்தப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். * எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புறமாக முதலமைச்சர் ஆனவர். * கொடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து இதுவரை குரல் கொடுக்கப்படவில்லை. *2024 தேர்தலில் பா.ஜ.க.விற்கு ஆதரவாக இல்லாமல் கூட்டணியை முறித்தவர் இ.பி.எஸ்; கட்சிக்காக உழைத்தவர்களுக்கு கொடுக்காமல் பணம் செலவழிப்பவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் சீட் * கொடநாடு கொலை, கொள்ளை […]