புதுக்கோட்டையில் பகீர்: சாலையில் கொட்டப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காலாவதியான இருமல் மருந்துகள் – பொதுமக்கள் அச்சம்

புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள நிஜாம் காலனி பிரதான சாலையில், 500-க்கும் மேற்பட்ட காலாவதியான இருமல் மருந்து பாட்டில்கள் சமூகப் பொறுப்பின்றி கொட்டப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஜாம் காலனி நான்கு சாலை சந்திப்பில், வீடுகளில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகள் வழக்கமாகச் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று அந்த இடத்தில் கட்டுக்கட்டாகக் காலாவதியான இருமல் மருந்து பாட்டில்கள் வீசி எறியப்பட்டுக் கிடக்கின்றன. அந்த வழியாகச் செல்லும் மாடுகள், நாய்கள் மற்றும் […]

வாலிபர் பைக் ஸ்டண்ட்… வாகன ஓட்டிகள் அச்சம்-கரூரில் பரபரப்பு

கரூரில் பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் முக்கியசாலையில் பைக் ஸ்டண்ட் செய்தபடி சென்ற நபரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கரூர்-திருச்சி சாலையில், சுங்ககேட் பகுதியில் இருந்து கரூர் செல்லும் (திருமாநிலையூர் வரை.ஒரு நபர், இருசக்கர வாகனத்தை ஓட்டும்போது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் விதமாக, வாகனத்தின் மீது படுத்துக்கொண்டும், கால்களை பின்புறமாக வைத்துக்கொண்டும் ஏதோ சாகசம் செய்வதுபோல் இரு சக்கர வாகனத்தை இயக்கியுள்ளார். அந்தச் சாலையில் அருகில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கரூர்-திருச்சி […]

பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

கோவை , பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகேமேட்டுப்பதி பாறைப்பதி போன்ற பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் இருந்தது குறிப்பாக அங்குள்ள ஆடு மற்றும் கன்றுக்குட்டிகளை தொடர்ந்து அடித்து சாப்பிட்டு வந்தது இதனை அடுத்து விவசாயிகள் வனத்துறையினருக்கு சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று மூன்று இடங்களில் கூண்டு வைத்து இரவு பகலாக சுழற்சி முறையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். […]

கரூரில் நாய் தொல்லை.. பொதுமக்கள் அச்சம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை பகுதியில் 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகிறது. இரவு நேரத்தில் சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்லும்போது, தெருநாய்கள் குரைத்துக்கொண்டே துரத்துகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். அதேபோல, சாலைகளில் நடந்து செல்லும் சிறுவர்கள், முதியோர்களை தெரு நாய்கள் அடிக்கடி கடிக்க துரத்துவதாகவும். தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த கரூர் […]