கோவையில் 1,206 மருத்துவ முகாம்கள்…17.83 லட்சம் பேர் பயன்
கோவை, பொள்ளாச்சியை அடுத்த ரெட்டியாரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தி.மு.க. ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.நல்லூர் யுவராஜ் தலைமையில் நேற்று நடந்தது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துகொண்ட சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பயனாளிகளுக்கு மருத்துவ அடையாள அட்டை மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட […]
பொள்ளாச்சி அருகே 3 குட்டிகளை அரவணைத்திருந்த தாய் குரங்கு
பொள்ளாச்சிஅடுத்த ஆழியார் வனத்துறை சோதனை சாவடியில் மூன்று குட்டிகளை அரவணைத்திருந்த தாய் குரங்குகள் ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி- பிப் – 11ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மான். வரையாடு. சிறுத்தை’ செந்நாய். யானை. காட்டு மாடு. கரடி .போன்ற வன விலங்குகள் அதிக அளவில் உள்ளது இவற்றை காண்பதற்காகவும் வால்பாறை செல்வதற்காகவும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடி வழியாகச் சென்று வருகின்றனர் எந்த நிலையில் […]
பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விறு விறு விற்பனை
பொள்ளாச்சி சந்தையில் நேற்று மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதன்மூலம், ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் நேற்று நடந்த சந்தை நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. மாடுகளை வாங்க கேரள வியாபாரிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால், விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. பெரும்பாலான […]
பொள்ளாச்சி அருகே வாலிபரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அண்ணா நகரை சேர்ந்தவர் தொழிலாளி ராஜா வயது 27 இவர் அதே பதிவு சேர்த்த சந்தானகிருஷ்ணன் வயது 29 என்பவரது மனைவி கிருஷ்ணவேணியிடம் பழகி வந்தார் ராஜா மற்றும் கிருஷ்ணவேணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சென்றனர் இந்த நிலையில் நேற்று ஆனைமலை மாசாணி அம்மன் குண்டம் திருவிழாவுக்கு ராஜா வந்திருப்பதாக சந்தான கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது இதனை அடுத்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே ராஜாவை […]
மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் போராட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கந்தசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய அரசு நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றியதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மீண்டும் இத்திட்டத்திற்கு ‘மகாத்மா காந்தி’ பெயரையே சூட்ட வேண்டும். ஏற்கனவே […]
தபால் நிலைய இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பொள்ளாச்சி வடுகபாளையத்தில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்
பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையம் பகுதியில் 2,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் கடிதப் பரிமாற்றம் மற்றும் சேமிப்புக் கணக்கு போன்ற பணப் பரிவர்த்தனைகளுக்காகப் பல ஆண்டுகளாக இங்குத் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தத் தபால் நிலையத்தை இங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாலிங்கபுரம் பகுதிக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அறிந்த வடுகபாளையம் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த இடமாற்றத்தைக் கண்டித்தும், தபால் நிலையம் தொடர்ந்து […]
பொள்ளாச்சியில் பானை மீது பரதம் ஆடி மாணவிகள் உலக சாதனை
பானை மீது நின்ற படி 30 நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடிய கோவை நாட்டிய கலாசேத்ராவை சேர்ந்த 51 மாணவ, மாணவிகள் குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். பாரம்பரிய கலைகளில் முக்கிய பங்கு வகிக்கும் பரத கலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொள்ளாச்சியில் பரதநாட்டிய உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள ஸ்ரீ சத்யேந்திர சித்தர் பீடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 30 நிமிடங்கள் ஒலித்த இறைவணக்க பாடல்கள், […]
ஆனைமலையில் நட்சத்திர அந்தஸ்து ‘டென்ட்’ விடுதிகள்: சுப்ரியா சாகு நேரில் ஆய்வு
தமிழகத்தில் சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் ஒரு புதிய முயற்சியாக, பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சேத்துமடையில் உள்ள ‘ஆனைமலையகம்’ வளாகத்தில் நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய நவீன ‘டென்ட்’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் முதன்முறையாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை ‘ட்ரக் தமிழ்நாடு’ (TReK Tamil Nadu) மற்றும் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் (TFC) ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகின்றன. தற்போது இந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு […]
பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த பள்ளி மாணவர்கள் -நெகிழ்ச்சி
கோவை, பொள்ளாச்சி பல்லடம் சா லையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் தங்களது பொதுத்தேர்வை சந்திக்க உள்ளனர். மாணவர்கள் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பள்ளி நிர்வாகம் ஆண்டு தோறும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களை கௌரவிக்கும் வகையிலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்காக படும் சிரமங்கள் குறித்து மாணவர்கள் புரிந்து கொண்டு நன்கு படித்து தேர்வில் வெற்றி பெற […]
பொள்ளாச்சி அருகே ஆழியார் அணையை சூழ்ந்த பணி மூட்டம்
கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை மேற்கு தொடர்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தமிழக சுற்றுலா தளங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்த 120அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணையை காண தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது மேற்கு தொடர்சி மலை பகுதியில் பனிமூட்டம் அதிகளவில் காணப்படுவதால் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் அணையின் மேல் பரப்பில் உள்ள தண்ணீரை தழுவிய படி […]
பொள்ளாச்சி அருகே நிரந்தரமாக ரயில்வே வழித்தடம் மூட முடிவு
பொள்ளாச்சி அடுத்த குஞ்சிபாளையம் பகுதியில் 100ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில்வே வழித்தடம் அமைந்துள்ளது. இந்த வழியாக வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், குஞ்சிபாளையம், கருப்பம்பாளையம், கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர்., உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர். திடீரென இந்த வழித்தடத்தை நாளை முதல் மூட மத்திய ரயில்வே துறை முடிவெடுத்த நிலையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி அதற்கான ஒப்புதலை அளித்துள்ளார். சுமார் 10,000 மக்கள் பயன்படுத்தும் இந்த வழித்தடம் மூடப்பட்டால் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்படும். சுமார் […]
பொள்ளாச்சி நகராட்சியில் பொங்கல் வைத்து வழிபாடு
பொள்ளாச்சி நகராட்சியில் தைத்திருநாள் முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்த நகராட்சி தலைவர். பொள்ளாச்சி-ஜன-14 உலகம் முழுவதும் தைத்திருநாள் பொங்கல் முன்னிட்டு கோலப்போட்டி கயிறு இழுக்கும் போட்டி கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் பொள்ளாச்சி நகராட்சி வளாகத்தில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் இதில் நகராட்சி ஆணையாளர் குமரன் துணைத் தலைவர் கௌதமன் வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி அதிகாரிகள் […]
அரசு பஸ்சில் சர்ச்சை வாசகங்கள்.. மர்ம நபர்கள் கைவரிசை..
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொது போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குக் கிராமங்களில் இருந்தும் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு செல்லும் பல தரப்பட்ட பொதுமக்கள் பயண பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் இருந்து இன்று பொள்ளாச்சி மார்க்கமாக அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. தேவாரம்,தேனி, பழனி பொள்ளாச்சி மார்க்கமாக கோவை செல்லும் அந்த குறிப்பிட்ட […]
பொள்ளாச்சி ஆழியார் அணையில் தண்ணீர் திறப்பு… மலர்தூவி வரவேற்பு
கோவை, பொள்ளாச்சி ஆழியார் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 22 ஆயிரத்து332 ஏக்கர் விளை நிலம் பயன்பெறும் வகையில் ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையைடுத்து ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டது. அதன்படி இன்று பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து பொள்ளாச்சி, வேட்டைக்காரன் புதூர், ஆழியார் ஊட்டுக்கால்வாய் வழியாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு […]
பொள்ளாச்சி சுற்றுலா சென்ற வடமாநில தொழிலாளர் 2 பேர் விபத்தில் பலி
மேற்கு வங்காளத்தை சேர்ந்த சனுமாஜி (வயது26)உஜ்ஜல்பெளவுமிக் (25)அமித்ராய் ஆகிய 3பேரும் கோவை காந்தி பார்க் ,சலீவன் வீதியில் தங்கநகை பட்டறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் தங்க நகை பட்டறை விடுமுறை காரணமாக என்பதால் பொள்ளாச்சி சுற்றுலா செல்வதற்காக கடைக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தி ல் சனுமாஜிஉஜ்ஜல்பெளவுமிக், அமித்ராய்ஆகிய 3பேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி மற்றும் பிந பகுதிகள் சுற்றி பார்க்க கிளம்பினார்கள். இருசக்கர வாகனம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் கோவை& […]
பொள்ளாச்சி கவி அருவியில் வெள்ள பெருக்கு- குளிக்க தடை
கோவை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள வால்பாறை கவர்கல் காடம்பாறை போன்ற பகுதிகளிலும் இரவு முதல் அதிக அளவில் மழை பெய்து வருகிறது இந்த நிலையில் மிகவும் பிரபலமான சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடமாக திகழும் இயற்கை எழில் சூழ்ந்த ஆழியார் கவியருவில் திடீரென இன்று அதிகாலை முதல் காற்றாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் நீர் செந்நிறமாக […]
பொள்ளாச்சி சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 85 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ராமலிங்கம் செளடேஸ்வரி கோயிலில் கடந்த 15 ஆண்டுகளாக, 1008 சங்காபிஷேக விழா நடைபெற்று வருகிறது.இந்தாண்டிற்கான சங்காபிஷேக விழா இன்று நடந்தது.இதையொட்டி கோயில் வளாகத்தில் லிங்க வடிவில் 1008 சங்குகள் அமைக்கப்பட்டு அதில் வில்வ இலைகள், புஷ்பங்களால் அலங்கரிங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. பின்னர் மூலவர் ராமலிங்கேஷ்வரர் மற்றும்செளடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகம் […]
துணை முதல்வர் பிறந்தநாள்… மாசாணியம்மன் கோவிலில் திமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு
திமுக மாநில இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 49ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டுதமிழகம் முழுவதும் திமுகவினர் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் . இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை திமுக சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாந்தலிங்ககுமார் பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி ஏற்பாட்டில் பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வேண்டியும்,மேலும் […]
செஸ் போட்டியில் கிராமப்புற மாணவர்கள் பரிசு வென்று அசத்தல்
பொள்ளாச்சியில் கோவை மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் ஈஷாCBE அறக்கட்டளையால் பயிற்சி அளிக்கப்பட்ட கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த 9 மாணவர்கள் பல்வேறு வயது பிரிவுகளில் பரிசுகளை வென்று அசத்தி உள்ளனர். அவனே செஸ் அசோசியேஷன் சார்பில் பொள்ளாச்சி உடுமலை பிரதான சாலையில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) கோவை மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர், மாணவிகள் என இருபாலருக்கும் பல்வேறு வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. […]
பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்
கோவை , பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகேமேட்டுப்பதி பாறைப்பதி போன்ற பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் இருந்தது குறிப்பாக அங்குள்ள ஆடு மற்றும் கன்றுக்குட்டிகளை தொடர்ந்து அடித்து சாப்பிட்டு வந்தது இதனை அடுத்து விவசாயிகள் வனத்துறையினருக்கு சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று மூன்று இடங்களில் கூண்டு வைத்து இரவு பகலாக சுழற்சி முறையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். […]
SIR பணிக்கு எதிராக… பொள்ளாச்சியில் ஜாக்டோ- ஜியோ கண்டனம்
கோவை, பொள்ளாச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தினை உறுதிப்படுத்திட வேண்டும். ஜாக்டோ – ஜியோ ஊழியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய – மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் […]
கன்றுக்குட்டியை கடித்து குதறிய சிறுத்தை…பரபரப்பு
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்புச்சி புதூரில் கடந்த 27 -ம் தேதி விரைவில் தனியார் தோட்டத்தில் உள்ள புகுந்த சிறுத்தை கிடா ஆடு மட்டும் கன்று குட்டியை அடித்துக் கொன்றது மாலை நேரங்களில் விவசாயத் தோட்டத்தில் தென்பட்டதால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர் இதை அடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பெயரில் பொள்ளாச்சி வனசரகர் ஞானபால முருகன் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாடும் வழித்தடத்தில் கூண்டு வைத்து ஆடு மற்றும் நாய் வைக்கப்பட்டு […]
பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்
கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அடுத்த குப்புச்சிபுதூர் பாறை மேடு அருகே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டது இதனை அடுத்து விவசாயிகள் கோரிக்கையை ஏற்று வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி வனச்சகர் ஞான பாலமுருகன் தலைமையில் இரண்டு பகுதியில் சிறுத்தை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், சத்தியமூர்த்தி என்பவர் தோட்டத்தில் கோவிலுக்கு நேர்த்திக்கடனுக்காக விடப்பட்ட ஆட்டுக்கடாவை அடித்து சாப்பிட்டது இதனை […]
SIR பணியை கைவிடக்கோரி… பொள்ளாச்சியில் கோரிக்கை மனு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாநில வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் எனப்படும் SIR பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணியில் ஊராட்சி செயலாளர்களை ஈடுபடுத்த வருவாய் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் SIR பணியில் ஊராட்சி செயலாளர்களை ஈடுபடுத்தும் முயற்சினை கைவிட வேண்டும் எனக் கூறி என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை ஊராட்சி செயலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகைட்டு கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், தனி அலுவலர் […]