திருச்செங்கோடு அருகே சோகம்: பள்ளி விழாவிற்கான ஒத்திகையின் போது மாணவி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று நூற்றாண்டு விழா கொண்டாடத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக கடந்த மூன்று நாட்களாக மாணவ, மாணவிகளுக்குக் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்று வந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தபோதிலும், மாணவர்களை வரவழைத்த பள்ளி நிர்வாகம், தனியார் திருமண மண்டபம் ஒன்றில் ஒத்திகையை நடத்தியுள்ளது. நேற்று காலை 11 மணியளவில் ஒத்திகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 3-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்குத் திடீரென மயக்கம் ஏற்பட்டது. மாணவியின் […]

கோவையில் பரபரப்பு: பிரபல ஜவுளிக்கடை பார்க்கிங்கில் வளர்ந்து நின்ற கஞ்சா செடி

கோவை மாநகரின் மையப்பகுதியான 100 அடி சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை வாகன நிறுத்துமிடத்தில், மூன்று அடி உயரம் கொண்ட கஞ்சா செடி செழித்து வளர்ந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகரில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஸ்ரீதேவி ஜவுளிக்கடையின் புதிய வாகன நிறுத்துமிடத்தில் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கார் பார்க்கிங் பகுதியின் கடைசி முனையில், சுமார் 3 அடி உயரம் கொண்ட […]