5 பவுன் நகையை மீட்க கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நீலகிரி மாவட்டம் உதகை நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். கடந்த கொரோனா காலகட்டத்தில், தனது வீட்டின் அருகே வசிக்கும் சந்திரிகா என்பவரிடம் காயத்ரி 7 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்துள்ளார். அதில் 2 பவுன் நகைகள் மட்டுமே திருப்பி அளிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 பவுன் நகைகளை மீட்டுத் தரக் கோரி […]