வார்டன் வீடியோ எடுத்து தந்தைக்கு அனுப்பியதால் விபரீதம்: பிடெக் மாணவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த உதித் சோனி (20) என்ற பிடெக் இரண்டாம் ஆண்டு மாணவர், கிரேட்டர் நோய்டாவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர் மதுபோதையில் விடுதிக்கு வந்ததாகக் கூறி, அங்கிருந்த வார்டன் அவரை வீடியோ எடுத்து மாணவரின் தந்தைக்கு அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த தந்தை, தொலைபேசி வாயிலாக மாணவரைக் கடுமையாகக் கண்டித்ததோடு, படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வருமாறு மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர், […]
மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…புதுகையில் சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் தெற்கு ஊராட்சி பூக்காரன் குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயசுந்தரம் (65). இவரது மனைவி அன்னகொடி. இவர்களுக்கு சொக்கலிங்கம், வேலு, விஜயராகவன் ஆகிய மூன்று மகன்களும் ரேணுகாதேவி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் விஜயசுந்தரம் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் உள்ள மரத்தில் மாடு ஒன்று கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்திற்கு விஜய சுந்தரத்தின் மகன் வேலு வந்துள்ளார். இதனை அடுத்து […]
மது போதை தகராறில் ரவுடி வெட்டிக்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள பால்குளத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(எ) கொண்டை மாரி ( 34). இவரது மனைவி மாரியம்மாள். இவர்கள் தற்போது கன்னியாகுமரி அருகே சுண்டன்பரப்பு நாச்சியார்குளத்தின் கரையில் வசித்து வந்தனர்.மாரிமுத்து சொந்தமாக செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனம் வைத்து வேலை செய்து வந்தார். நேற்று காலை வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து மாரியம்மாள் தனது கணவரை பல்லேறு இடங்களில் தேடினார். ஆனால் […]
மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாகக்குடையான் கிராமத்தை சேர்ந்தவர் மதன்ராஜ். இவரது மனைவி இலக்கியா. இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இலக்கியா கத்திரிக்குளம் பகுதியில் மருந்தகம் நடத்தி வருகிறார்.மதுப்பழக்கத்திற்கு அடிமையான மதன்ராஜ், மது குடிக்க பணம் கேட்டு தனது மனைவியை தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மதுபோதையில் மனைவியிடம் மதன்ராஜ் மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் இலக்கியா அருகே […]
மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. மீட்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழவெளியூர் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் 24.இவர் நேற்று இரவு மது அருந்திவிட்டு மது போதையில் வந்துள்ளார். அப்போது முருக உடையார் என்பவரின் கிணற்றில் தவறி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட பகுதி பொதுமக்கள் மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரமாக போராடி இளைஞரை உயிருடன் பத்திரமாக மீட்டனர். மதுபோதையில் இளைஞர் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் […]
மதுபோதையில் வாய்தகராறு… வாலிபருக்கு அரிவாள் வெட்டு
தஞ்சை அருகே உள்ள புதுப்பட்டினம் யாகப்பா சாவடி பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவரது மகன் சிராஜுதீன்(34). இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு சிராஜுதீன், அம்மாகுளம் பாலம் நெய்வாய்க்கால் பகுதியில் தனது நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டு இருந்தார். அப்போது அம்மாகுளம் கீழவஸ்தாசாவடி மேலத்தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பிரதீப்(29), தனது நண்பர்களுடன் மது போதையில் நெய்வாய்க்கால் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்திக்கொண்டு இருந்த சிராஜுதீன் மற்றும் அவர்களது நண்பர்களிடம் தீப்பெட்டி […]
குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநர்… ரூ.27,500 அபராதம்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நேற்று செட்டிக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி பஸ்ஸை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், மினி பஸ் ஓட்டுநரான கொடுப்பைக்குழி பகுதியைச் சேர்ந்த ஜெபர்சன் (48) என்பவர் மதுபோதையில் பஸ்சை ஓட்டியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த மினி பஸ்ஸை பறிமுதல் செய்தனர். மேலும் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஓட்டுநர் ஜெபர்சனுக்கு ரூ.17,000-ம், இதற்குப் பொறுப்பான நடத்துநருக்கு ரூ.10,500-ம் என […]
மது போதையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய மனைவி… அடித்து கொன்ற கணவர்…
ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள ராம்கார் பகுதியை சேர்ந்தவர் உபேந்திர பர்ஹியா (25). இவரது மனைவி ஷில்பி தேவி (22). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. இந்தநிலையில் உபேந்திரா தனது வீட்டில் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது வெளியில் சென்ற மனைவி ஷில்பியும் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த உபேந்திரா, குடிபோதையில் வீடு திரும்பியது குறித்து மனைவியிடம் கேள்வி கேட்டுள்ளார். இதனால் இருவரும் வாக்குவாதம் வந்துள்ளது. இதில் கடும் கோபமடைந்த உபேந்திரா மனைவியை தாக்கியுள்ளார். […]
மதுபோதையில் தாயை கொடூரமாக கொன்ற மகன்…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி (60).இவருடைய கணவர் டேவிட் உயிரிழந்த நிலையில் விஜய் (28) மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் விஜய் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதால் அடிக்கடி போதையில் வந்து தாய் ராஜலட்சுமி மற்றும் பாட்டி மல்லிகா மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரனையும் தாக்கி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜலட்சுமி தனது தாய் வீடான வேலூரில் கடந்த வாரம் சென்று […]