நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன. 28-ல் தொடக்கம்: பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்

மத்திய அரசின் 2026–27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 28-ம் தேதி தொடங்க உள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும், அன்றைய தினமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்குகிறது. அன்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுவார். ஜனவரி 29-ம் தேதி ‘பீட்டிங் ரீட்ரீட்’ (Beating Retreat) விழா நடைபெறுவதால் அன்று […]