மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவு-முதல்வர் இரங்கல்

மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர்‌ ச.சீ. இராசகோபாலன். அவரது மறைவு கல்வித்துறைக்குப் பேரிழப்பு என முதல்வர் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆசிரியராக‌த் தமது கல்விப் பணியைத் தொடங்கிய‌ முனைவர் ச.சீ. இராசகோபாலன் தமிழ்நாடு அரசு முன்னெடுத்த சமச்சீர்க் கல்விக் குழுவின் […]

அஜித் பவார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த திடீர் துயரம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகக் கூறிய பிரதமர், அஜித் பவாரின் மறைவு மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று வருத்தம் வெளிப்படுத்தினார். அரசியல் எல்லைகளைத் தாண்டி அஜித் பவார் மக்களுடன் நெருக்கமாக இருந்த தலைவர் என்று அவர் நினைவுகூர்ந்தார்.அஜித் பவார் ஒரு உண்மையான மக்கள் தலைவராகவும், மகாராஷ்டிரா மக்களின் […]

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் மகன் காலமானார்

உலக புகழ்பெற்ற கனிமம் மற்றும் சுரங்கத் தொழில் நிறுவனமான வேதாந்தா குழுமத்தின் உரிமையாளர் அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால் (49) காலமானார். வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான தல்வண்டி சபோ பவர் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவராகவும், பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினராகவும் இவர் பொறுப்பு வகித்து வந்தார். சமீபத்தில் அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, அக்னிவேஷ் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை தேறி வந்த […]

திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் மரணம்: முதல்வர் ஸ்டாலின் தலைவர் இரங்கல்

மொழிப்போர்க் களத்தில், இந்திமொழியின் ஆதிக்கத்திற்கு எதிராகப் புறப்பட்ட மாணவர் படையின் தளகர்த்தர்களில் ஒருவரும் – கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான எல்.கணேசன் அவர்கள் மறைந்த செய்தியால் பெரிதும் துயருற்றேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.சட்டமன்றம் – சட்டமேலவை – நாடாளுமன்றம் என முழங்கிய அவரை இனி நாம் காண முடியாது என்பதை எண்ணும்போதே உள்ளம் வேதனையால் துடிக்கிறது. தலைவர் கலைஞர் அவர்களின் பாசத்தைப் பெற்ற ‘எல்.ஜி.’ அவர்கள், 1989-இல் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, அவரது […]

நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு- ரஜினி இரங்கல்

நடிகர், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக கொண்ட ஸ்ரீனிவாசன் உடல்நல குறைவால் காலமானார். 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருந்த ஸ்ரீனிவாசன் 225 படங்களில் நடித்துள்ளார். உடல் நல பிரச்னையால் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்து வந்த ஸ்ரீனிவாசன் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 69. தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் […]