100 நாய்கள் விஷம் வைத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 100 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யாச்சாராம் என்ற கிராமத்தில் 100 தெரு நாய்கள் கொலை செய்யப்பட்டார். நாய்களை விஷம் வைத்து கொலை செய்தது தொடர்பாக யாச்சாராம் கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் -அமைச்சர் மகேஷ்
திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் பல்நோக்கு அலுவலக பயன்பாட்டு கட்டிடத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திறந்து வைத்தார். அலுவலகத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. மாயபிம்பம் என எந்த தரவும் இல்லாமல் போகின்ற போக்கில் கூற முடியாது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொடக்கப்பள்ளியில் பள்ளி இடை நிற்றல் பூஜ்யமாக உள்ளது. இந்திய அளவில் உயர்நிலை மற்றும் […]
புதுவையில் 85,500 வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
புதுச்சேரி, தமிழகம், மேற்கு வங்கம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக வாக்காளர் சிறப்பு தீவி திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் அண்மையில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். முன்னதாக புதுவையில் 8,51,775 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. […]