மாம்பழம் சின்னம் எங்களுக்கு தான் சொந்தம்… ராமதாஸ் பேட்டி
செங்கல்பட்டு: மாம்பழச் சின்னம் எங்களுக்குதான் சொந்தம் என செங்கல்பட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். மேலும் ‘மாம்பழச் சின்னம் தொடர்பாக நீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவாகதான் தீர்ப்பு வெளியாகும்.கூட்டணி தொடர்பான பேச்சு நடந்துவருகிறது; விரைவில் நல்ல செய்தி வரும்’ எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அனுமதி பெறாத ‘மாம்பழம்’ சின்னத்தை மேடையில் பயன்படுத்துவதா?- ராமதாஸ் சாடல்
அனுமதி பெறாத ‘மாம்பழம்’ சின்னத்தை மேடையில் பயன்படுத்துவதா? பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பிரச்சாரத் தொடக்க விழாவில், நான் நிறுவிய பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாற்றுச் சின்னமான ‘மாம்பழம்’ சின்னம் மேடையின் பின்னணியில் பயன்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தற்போது பாட்டாளி மக்கள் […]
மாம்பழம் சின்னம் எங்களுக்கு ஒதுக்க வேண்டும்… ராமதாஸ் கடிதம்
மாம்பழம் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறி அன்பிமணி தரப்பு மாம்பழம் சின்னத்தை பெற்றது. பீகார் தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மாம்பழம் சின்னத்தை தமது தரப்புக்கு ஒதுக்கக் கோரி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.