மோகன்லால் நடிப்பில் வெற்றி பெற்ற படத்தின் 3ம் பாகம் உருவாக்கம்
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெற்றிபெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின் 2 பாகங்களை தொடர்ந்து 3ம் பாகம் உருவாகி வருகிறது. இந்தியிலும் 2 பாகங்கள் ரீமேக் செய்து வெற்றிபெற்ற நிலையில், தற்போது அஜய் தேவ்கன் நடிப்பில் 3ம் பாகம் உருவாக்கப்படுகிறது. மலையாளத்தில் மோகன்லால் மனைவியாக மீனாவும், இந்தியில் ஸ்ரேயா சரணும் நடித்தனர். தற்ேபாது இரு மொழிகளிலும் ‘திரிஷ்யம்’ படத்தின் 3ம் பாகம் உருவாகிறது. கன்னடத்தில் ‘திரிஷ்யம்’ ரீமேக்கை ‘திரிஷ்யா’ என்ற பெயரில் 2 பாகங்களாக பி.வாசு இயக்கினார். […]
நடிகர் மோகன்லாலின் தாயார் காலமானார்
நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி எலமகாராவில் உள்ள தனது வீட்டில் காலமானார். இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான விஸ்வநாதன் நாயரின் (மறைந்தவர்) மனைவியாவார். சாந்தகுமாரி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், இன்று மதியம் காலமானார். இவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது