திருவான்மியூர் கொலை வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து

2010ல் திருவான்மியூரில் ஏழுமலை என்பவர் கொலை வழக்கில் 9 பேரை விடுதலை செய்த கூடுதல் அமர்வு நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது . 2010ல் முன்விரோதம் காரணமாக திருவான்மியூரைச் சேர்ந்த ஏழுமலையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 16 பேரில் 5 பேர் உயிரிழந்ததால் 9 பேரை குற்றவாளி என ஐகோர்ட் அறிவித்துள்ளது . நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்டீபன்ராஜ், சந்துரு ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகாத […]

குரூப் 2, 2 ஏ தேர்வு ரத்து… மார்ச் 15ம் தேதி தேர்வு நடைபெறும்

சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 1,188 காலிபணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ மெயின் தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று(08-02-2026) நடைபெற இருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற இருந்த குரூப்-2, 2ஏ மெயின் தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. பின்னர் வேறு தேதியில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், மறுதேர்வு […]

ஏடிஜிபி மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

சென்னை ஏடிஜிபி ஜெயராம் மீதான சஸ்பென்ட் உத்தரவை தமிழக உள்துறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆள் கடத்தலுக்கு கார் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் ஏடிஜிபி ஜெயராம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். துறை ரீதியிலான விசாரணை நடந்தது வந்தது. இந்த நிலையில் தற்போது அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு உள்துறை உத்தரவிட்டுள்ளது. பணியிடம் ஒதுக்கப்படாமல் உள்ள நிலையில் ஜெயராமுக்கு இந்த வாரம் பணியிடம் ஒதுக்கி உத்தரவு பிறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற […]

கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து!

 கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு அம்மாநில அரசு விதித்திருந்த தடையை ரத்து செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம். இருசக்கர வாகனங்களை ஒப்பந்த வாகனங்களாக பதிவு செய்ய அனுமதி அளித்தும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் Ola, Uber, Rapido போன்ற நிறுவனங்கள் மீண்டும் தங்களது சேவையைத் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

டில்லியில் கடும் பனிமூட்டம்..700 விமானங்கள் ரத்து

டில்லியில் நிலவும் வரலாறு காணாத கடும் பனிமூட்டம் மற்றும் மிக மோசமான காற்று மாசுபாடு காரணமாக, இன்று (டிசம்பர் 20, 2025) வான்வழிப் போக்குவரத்து முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGI) கண்பார்வை திறன் பூஜ்ஜியமாக குறைந்ததால், விமானச் சேவைகள் முடங்கியுள்ளன. இன்று காலை வரை சுமார் 700-க்கும் மேற்பட்ட விமானங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அடர்த்தியான பனியால் 88 புறப்பாடுகள் மற்றும் 89 வருகைகள் என மொத்தம் 177 விமானங்கள் ரத்து […]

விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து

விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல தற்காலிகமாக படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் தற்போது பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், பாதுகாப்பு கருதி, விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சபரிமலை சீசன் என்பதால், கன்னியாகுமரிக்கு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். தற்போது விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவை நிறுத்தப்பட்டதால், அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.