ரஷ்யாவில் வாட்ஸ் அப் செயலிக்கு தடை
அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘MAX’ என்ற செயலியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அந்நாடு முயற்சி செய்கிறது. தற்போது ரஷ்யாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.இதை ஒழித்துக்கட்டும் வகையில் , நாடு முழுவதும் வாட்ஸ்அப்பை தடை செய்துள்ளது. இந்த தடையை கண்டித்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: […]
ரஷ்யாவிடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்- உக்ரைன் அதிபர்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி 21 நிமிடம் உரையாற்றினார். ஏறக்குறைய 4-ம் ஆண்டை நோக்கி போர் சென்று கொண்டிருக்கும் நிலையில், உக்ரைனியர்களிடையே சோர்வு ஏற்பட்டு உள்ளது என குறிப்பிட்டார். ஆனால், அதனை வீழ்ச்சி என தவறாக கருதி விட கூடாது என்றும் கூறினார். இவ்வளவு ஆண்டுகளாக நடந்து வரும் போரை, அவர் 2-ம் உலக போரின்போது, உக்ரைனின் சில பகுதிகளை நாசி படையினர் கைப்பற்றியிருந்த கால கட்டத்துடன் ஒப்பிட்டார். அவர் ஆற்றிய […]
3ம் உலகப்போரில் தான் முடியும்-ரஷ்யா, உக்ரைன் குறித்து எச்சரிக்கும் டிரம்ப்!
உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெறும் போர் 3-ஆம் உலகப்போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்ற நவம்பர் மாதம் மட்டும் 25,000 பேர் உயிரிழந்ததாகவும், அவர்கள் பெரும்பாலும் ராணுவ வீரர்கள் என்றும் தெரிவித்தார். “இதுபோன்ற நிகழ்வுகள் 3-ஆம் உலகப்போரை நோக்கித் தள்ளும். அமெரிக்கா அதை விரும்பவில்லை” என்று டிரம்ப் கூறினார். உக்ரைன்-ரஷ்யா போர் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தொடர்கிறது. ரஷ்யா உக்ரைன் மீது […]
ஹெலிகாப்டர் விபத்து… 5 பேர் பலி
ரஷ்யாவில் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் உள்பட 5 பேர் கடந்த 7ம் தேதி ஹெலிகாப்டரில் டெகஸ்டான் நகரில் உள்ள அஷி- சு என்ற கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தனர்.கடற்கரை அருகே உள்ள நிலப்பரப்பில் ஹெலிகாப்டர் தரையிறங்க முற்பட்டது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் இரண்டு துண்டாகி கடல் அருகில் உள்ள நிலப்பரப்பில் விழுந்தது. இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்து வெடித்து சிதறி அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்தனர். […]