வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டிராவல்ஸ் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் சென்ற லாரியை முந்துகையில் லேசாக உரசவே, கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையின் நடுவே கவிழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்குள்ளான வேனில் 15 நபர்கள் பயணம் செய்ததாகவும், அதில் 6 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். […]