சத்தீஸ்கரில் கோர விபத்து: 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உட்பட 4 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூர் நகரில் இருந்து சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புப் பணிக்காக ராய்ப்பூர் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் தாம்தரி மாவட்டம், காப்ரி பைபாஸ் பகுதி அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கு வந்த கார் ஒன்றின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் மற்றும் வீரர்கள் என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். […]
இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தார்…இன்ப அதிர்ச்சி
இறந்தவர் மீண்டும் திரும்பி வந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு சம்பவம் அசாமில் நடந்துள்ளது. மேகாலயா சுரங்க விபத்தில் தொழிலாளி ஷியாம் பாபு உயிரிழந்ததாகக் கருதி, ஒரு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் உடலை தகனம் செய்தனர். இந்நிலையில், 3 நாள்களுக்கு பிறகு ஷியாம் பாபு உயிருடன் வீடு திரும்பி குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போ, தகனம் செய்த உடல் யாருடையது? என்பது குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் 10 மாத குழந்தை மூளைச்சாவு- 5 பேருக்கு புதிய வாழ்வு
கேரளா-சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 10 மாதக் குழந்தை அலின் ஷெரின் ஆபிரஹாமின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. 5 பேருக்கு புதிய வாழ்வு கிடைக்கவுள்ளது. இதய வால்வு, கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவை தானம். இதன் மூலம் கேரளாவில் மிக இளம் வயதில் உடலுறுப்பு தானம் செய்த குழந்தை என்ற பெயர் கிடைத்துள்ளது.
அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலி- திருச்சியில் பரிதாபம்
திருச்சி, உறையூர் தாத்தையாங்கார்ரோடு மருதப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (65). இவர் நேற்று மாலைதிருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சாலையில் நடந்து கொண்டு இருந்தார். அப்பொழுது அவரை பின் தொடர்ந்து வந்த மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்ற அரசு பேருந்து எதிர்பாராதமாக ராஜலட்சுமி மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி ராஜலட்சுமி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்டோன்மென்ட் […]
பாராமதியில் விபத்து- விமானத்தில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை
அஜித் பவார் சென்ற விமானத்தை இயக்கிய விமானி சுமித் கபூர் மிகவும் அனுபவமிக்கவர் என்று விமான நிறுவன அதிபர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “அஜித் பவார் சென்ற விமானத்தை தரையிறக்கியது விமானி சுமித் கபூர் எடுத்த முடிவுதான். முதலில் ஓடுபாதை எண் 29ல் தரையிறக்க முயன்றார், இயலாததால் ஓடுபாதை எண் 11ல் தரையிறக்கினார். விமானம் நன்றாக பராமரிக்கப்பட்டு வந்தது; அதில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
ராணுவ வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 10 வீரர்கள் பலி
நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரின் டோடா பகுதியில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. 17 ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வாகனம் சுக்குநூறாக நொறுங்கியதில், 10 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மற்ற […]
சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி
சென்னையில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். பல்லாவரத்தில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது மோதியது. லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த கோகுல்ராஜ், தனாய் மண்டல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை பள்ளிக்கரணை அருகே லாரி மோதியதில் டூவீலரில் சென்ற அருணாச்சலம் (51) என்பவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்- விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை சரமாரி தாக்கிய பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் அரியலூர் நகர் பகுதியில் சிமெண்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்பு கற்கள் ஏற்றிக்கொண்டு, அதிவேகமாக செல்லும் கனரக டிப்பர் லாரிகளால், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் படுகாயம் அடையும் நிலை தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் இன்று அரியலூர்-பெரம்பலூர் புறவழிச்சாலையில் இருந்து, அரியலூர் – ஜெயங்கொண்டம் சாலை நோக்கி சுண்ணாம்பு சுரங்கத்திற்கு சென்ற கனரக டிப்பர் லாரி, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ராயம்புரம் ஊரைச் சேர்ந்த ரங்கராஜ் மீது மோதியது. இதில் காயம் அடைந்து ரத்தம் […]
மதுபான லாரி – கார் மோதி கோர விபத்து…டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு மதுபானம் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில், லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலத்திலிருந்து இன்று அதிகாலை கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு மதுபானம் ஏற்றிச் சென்ற லாரியை, அகில் கிருஷ்ணன் (30) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் இருங்கடன்பள்ளி அருகே லாரி வந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது, எதிரே வந்த கார் மீது மோதிய லாரி, அடுத்த வினாடியே சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் […]
வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டிராவல்ஸ் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் சென்ற லாரியை முந்துகையில் லேசாக உரசவே, கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையின் நடுவே கவிழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்குள்ளான வேனில் 15 நபர்கள் பயணம் செய்ததாகவும், அதில் 6 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். […]
வேன் கவிழ்ந்து விபத்து: 13 ஐயப்ப பக்தர்கள் காயம்
சென்னை, திருவெற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பம், எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருசாமி சந்திரன் என்பவர் தலைமையில் சுமார் 24 பேர் கடந்த 28-ந் தேதி சுற்றுலா வேனில் சபரிமலை யாத்திரைக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு தரிசனம் முடித்து விட்டு நேற்று குற்றாலத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து இன்று அதிகாலை திருச்செந்தூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.சுற்றுலா வேனை திருவெற்றியூரை சேர்ந்த முருகன் (31) என்பவர் ஓட்டினார். திருச்செந்தூர் அருகே உள்ள ராணி மகாராஜபுரம் விலக்கு பகுதியில் […]
திட்டக்குடி அருகே சாலை விபத்து…அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடந்த விபத்து தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர் தாஹா அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அரசு ஓட்டுநர் தாஹா அலி மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர். திட்டக்குடி அருகே நேற்று இரவு அரசுப் பேருந்து, அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். மதுரையில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று மாலை சென்று […]
சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து…5 பேர் பலி
மெக்சிகோவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, உறவினர்கள், பாதுகாப்புப்படை அதிகாரிகள் என மொத்தம் 8 பேர் நேற்று அமெரிக்காவுக்கு பயணித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கெல்வெஸ்டான் நகர் அருகே கடற்பகுதியில் விமானம் சென்றுகொண்டிருந்தது.அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த […]
கோயம்பேடு அருகே பஸ் சென்டர் மீடியனில் மோதி விபத்து
சென்னை, பூந்தமல்லி-திருவள்ளூர் வழித்தடத்தில் செல்லும் சென்னை மாநகரப் பேருந்து, கோயம்பேடு மெட்டுக்குளம் சந்திப்பு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்திற்குள்ளானது. பணிமனைக்கு பஸ்சை ஒட்டி வரும்போது டிரைவர் பழனிக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஓட்டுநர் பழனியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து- அவசர உதவி எண்கள் அறிவிப்பு
அசாம் மாநிலத்தின் சாய்ராங் நகரில் இருந்து புது தில்லி நோக்கி சென்று கொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 20507) அசாமின் நாகான் மாவட்டம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, யானைக் கூட்டம் ஒன்று ரயில் பாதையைக் கடக்க முயற்சித்துள்ளது. ரயில் ஓட்டுநர் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தியபோதும், ரயிலை முழுமையாக நிறுத்த முடியவில்லை. இதனால் விபத்து ஏற்பட்டிருக்கிறது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானைகள் கூட்டத்தின் மீது மோதியதில், 8 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. யானைகள் மீது மோதியதன் […]
போதையில் காரை ஓட்டிய நபரால் போக்குவரத்து காவலர் பலி
சென்னை மாநகரில், சாலை விதிகள் மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கக் கடமையாற்றிக் கொண்டிருந்த ஒரு போக்குவரத்துக் காவலர், மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிச் சென்ற நபரின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து, சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இந்நிகழ்வின் விவரங்கள் மற்றும் விபத்து நடந்த இடம் சென்னை நகரின் முக்கியச் சந்திப்புகளில் ஒன்றில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த […]
திமுக நிர்வாகியின் கார் விபத்து…5 பேர் பலி..
ராமநாதபுரம் கீழக்கரை திமுக நகரமன்ற தலைவர் தனது நண்பர்கள் 7 பேருடன் காரில் ஏர்வாடியில் இருந்து கீழக்கரைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்றுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் ராமேஸ்வரம் நோக்கி காரில் சென்ற போது கீழக்கரை கடற்கரை சாலை கும்பிடாமதுரை அல்-மதின் கிராண்ட் ஹோட்டல் அருகே காரை நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த திமுக நகர மன்ற தலைவரின் கார் நேருக்கு நேர் மோதியது. […]
திருமண நிகழ்ச்சி…கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரிசா மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று காரில் சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். நள்ளிரவு லக்கிம்பூர் கேரியின் சாரதா ஷிப்ஹொன் என்ற பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். கார் டிரைவர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து […]
ஆட்டோ மீது பனைமரம் விழுந்து விபத்து… ஓட்டுநர் உயிரிழப்பு…
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆட்டோவை அப்துல் வாஹித்(38) பயணியை ஏற்றிக்கொண்டு அயனாவரம் சென்றுகொண்டிருந்தார். கீழ்ப்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள பனைமரம் ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது விழுந்தது. இதில், ஆட்டோவின் முன் பகுதி கடுமையாக சேதமடைந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் அப்துல் வாஹித் பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோவில் பயணம் செய்த பயணி காயமின்றி உயிர்தப்பினார். கரையான் அரித்ததால் பனைமரம் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டூவீலர் ஓட்டி வந்த சிறுவனால் விபத்து… எம்பி அலுவலக ஊழியர் பலி
சென்னை கொட்டிவாக்கம் அருகே பள்ளிச் சிறுவன் தவறான திசையில் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில், மற்றொரு டூவீலரில் வந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். பள்ளிச் சிறுவனின் தந்தை முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சுரேஷ் (50) ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனியின் முகாம் அலுவலகத்தில் டிரைவராக உள்ளார்.
திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-டிராக்டர் மோதி விபத்து… 11 பயணிகள் படுகாயம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பேருந்து டிராக்டர் டிப்பரின் சக்கரத்தில் மோதி அதே நேரத்தில் ஆடுதுறை நோக்கி வந்த அரசு நகர பேருந்திலும் மோதி கண்ணாடிகள் நொறுங்கியது. இதில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 11 பயணிகள் பல்வேறு இடங்களில் காயம் பட்டு ரத்த காயங்களுடன் திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்து திருவிடைமருதூர் […]