விரைவில் ஆட்சி மாற்றம்.. நடிகை கௌதமி பேச்சு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த அவுரிவாக்கம் கிராமத்தில், தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக நிர்வாகியும் நடிகையுமான கௌதமி மற்றும் நடிகை மதுவந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அவர்கள் மீனவப் பெண்களுடன் இணைந்து, விறகு அடுப்பில் சர்க்கரை பொங்கலிட்டு பாரம்பரிய முறைப்படி விழாவைக் கொண்டாடினர். விழாவில் பேசிய நடிகை மதுவந்தி, மீனவர்களின் பெருமையை மகாபாரதத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். “மகாபாரதத்தை எழுதிய வியாச பெருமானே மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். […]