நடிகை ஸ்ரேயா சரண்போல் சமூக வலைத்தளங்களில் மெசேஜ் அனுப்பிய நபர்.
தன்னைப்போல் போலி மெசேஜ் அனுப்பிய நபர் குறித்து ஸ்ரேயா காட்டம். மற்றொருவரை போல நடிக்க வேண்டாம், உங்கள் வாழ்க்கையை பாருங்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார். போலி மெசேஜ் அனுப்பிய முட்டாள் யார் என தெரியவில்லை என தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ரேயா , சிவாஜி, அழகிய தமிழ்மகன், த்ரிஷம் என தமிழ் படங்களில் நடித்தவர் ஆவார்.
